நீ காட்டிய வழி!
அன்று,
பக்கத்து வீட்டுப் பையனின் தாயார்,
வேலைக்குச் செல்பவர், படித்தவர் என்றெல்லாம்
உன் அருமை நண்பன் கூறிய நேரத்தில்,
நீ,
‘என் அம்மா கூட நன்றாக சமைப்பாள்,
தெரியுமா’ என்று என்னிடம் குறை இல்லை
என்பது போல் கூறிய பொழுது,
என் மனம் மகிழ்ந்தது.
இன்று,
நீ
உனது பாலடையாளம் பற்றி கூறிய பொழுது,
எனது மனம் உன்னை எனது மகனாகத்தான்்
பார்த்ததே தவிர மற்றதை அல்ல.
இது நீ காட்டிய வழி!
இப்படிக்கு,
உன் அன்புத் தாய்.