கவிதை: புணரும் உணர்வுகள்
உன் மார்பின் ரோமக் கீற்றுகளில்
தொலைந்துப் போகின்றது
என் மனம்…
உன் இதழின் ருசியிடம்
காட்டுத் தேனும்
ஊற்று நீரும் கூட
தோற்றுப் போகின்றன…
உன் எச்சிலின்
சுவையின் முன்
அட்சயப் பாத்திரமும்
பிச்சை வாங்குகிறது…
கருவிழியிரண்டும்
கருப்பு வானவில்
கண நேரத்தில்
கோடி மாயம் செய்கிறது…
மதுவுண்ட வண்டைப் போல
உன் வியர்வை வாசத்தில்
திளைத்த நானும்..
உன் தேகத் தழுவலில்
மாயமாய்ப் போகின்றன
என் யோக பலன்கள்…
தீண்டும் விரல்களில்
திரளுது ஒரு மின்சாரப் பிரளயம்…
உன் பார்வையின் சிணுங்கலில்
பலமுறை சல்லாபிக்கிறது
கற்பனைப் பட்டாம்பூச்சி…
உன் நாபிக்கமலத்தில்
நர்த்தனமாடத் துடிக்கின்றன
என் கையும் வாயும் மெய்யும்…
உன் காலடி ஸ்வரத்தில்
கிளர்ந்தெழுகின்றன
மோக மேகங்கள்…
புணரும் இதழ்கள்
படரும் மேனி
இறுகும் அணைப்பு
இடையின் சினுங்கல்
மார்பின் முனங்கல்
ஹ்ம்ம்
பகலின் மடியில் பள்ளியுறங்கி
இரவின் தொட்டிலில் துயிலெழுந்து
நேரம் காலத்தையும்
செய்யும் தொழிலையும் மறந்து
பேச்சிழந்து
விழிப்பார்வையிழந்து
உணர்விழந்து
மூச்சு விடவும் மறந்து…
பள்ளியறையில்
வேள்வி வளர்த்து
ஐந்தாம் வேதம் சமைக்கின்றேன்…
புகைபடம்: அருண் கீதா விஷ்வநாதன் (8.5pixels)
ஆங்கில மொழிபெயர்ப்புக்கு, இங்கே சொடுக்கவும் (For English, click here).
Nice, kavithai. Congratulations! Words are amazing. All the best!