சட்ட வளங்கள்
ஜூலை 2, 2009 அன்று தில்லி உயர்நீதிமன்றம் நாஸ் பவுண்டேஷன் ஐ.பி.சி 377 ஐ எதிர்த்து தொடுத்திருந்த வழக்கில் “வயதுவந்த இருவரின் விருப்பதுடன் நடக்கும் பால் சமந்தப்பட்ட உறவு குற்றமல்ல“ என்ற தீர்ப்பினை வழங்கி மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்கள் அனைவரும் சம உரிமைகளுடனும், மதிப்புடனும் வாழ வழி செய்தது.
முன்பை வீட மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட இந்தியர்கள், இன்று கௌரவத்துடனும், மரியாதையுடனும் வாழ முடிகிறது என்றாலும், பல விதங்களில் நமக்கு இன்றும் சட்ட சங்கடங்கள், உரிமை மறுப்புக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நம்மை பாதிக்கும் சட்டங்கள் என்ன, நமது உரிமைகள் என்ன, அரசாங்க வழிமுறைகள் என்ன, இவையெல்லாம் அறிந்துகொள்வது அவசியம்.