How to Tell A Trans Person They are Beautiful
“A short poem I wrote when my dysphoria was pretty bad. I finally got up the courage to read it on my youtube account.” – Kaia. நீ அழகாய் இருக்கிறாய்! – Tamil Translation by Shri, with the author’s permission All rights with Kaia. Thanks Deen (SALGA NYC) for the Hattip.
நீ அழகாய் இருக்கிறாய்! – ஸ்ரீதர் சதாசிவன்
‘நீ அழகாய் இருக்கிறாய்’ – என்று என் நண்பனே என்னிடம் நீ சொல்ல நினைக்கும் பொழுது, நன்கு யோசித்துச் சொல்! நாவளவில் சொல்லாதே!
‘நீ அழகாய் இருக்கிறாய், திருநங்கை என்றே நம்பமுடியவில்லை’ – என்ற எண்ணத்துடன் சொல்லாதே, நான் அழகாய் இருக்கிறேன் என்று!
‘நீ அழகாய் தானே இருக்கிறாய், எதற்காக உன் உடலை மாற்ற வேண்டும்?’ – என்ற நிபந்தனையுடன் சொல்லாதே, நான் அழகாய் இருக்கிறேன் என்று!
‘நீ அழகாய் இருக்கிறாய்’ என்று சொன்னவுடன் அதை நான் நம்புவேன் என்ற எதிர்ப்பார்ப்புடன் சொல்லாதே, நான் அழகாய் இருக்கிறேன் என்று!
நம்பமாட்டேன், நம்பமுடியாது, என்னால். என் உடல், என் உருவம், என் குரல் என்று எல்லாம் அருவெறுக்க வைக்கிறது என்று என்னிடம் தினம் சொல்பவர்கள் ஏராளம்!
பரவாயில்லை. இருந்தாலும் எனக்கு வேண்டாம், ‘நீ அழகாய் இருக்கிறாய்’ என்ற வெறும் உன் உதட்டளவு தாராளம்.
‘நீ அழகாய் இருக்கிறாய்’ – என்று என் நண்பனே என்னிடம் நீ சொல்ல நினைக்கும் பொழுது, நன்கு யோசித்துச் சொல்! உதட்டளவில் சொல்லாதே! உண்மையெனில் சொல். உள்ளம் உணர்ந்து சொல். –‘நீ அழகாய் இருக்கிறாய்’ – என்று என் நண்பனே என்னிடம் நீ சொல்.
‘நன்றி’ என்று முகம்மலர என்னால் ஏற்றுக்கொள்ள முடியும் என்று நினைக்கிறன்
‘நீ அழகாய் இருக்கிறாய்’ – என்று நீ சொன்னாலும், என்னால் பல சமயங்களில் அதை ஏன் உணர முடிவதில்லை என்று வியக்கிறேன்.
‘நீ இப்பொழுது அழகாய் இருக்கிறாய்’ என்று சொல்லாதே என் நண்பனே, எப்பொழுதும் அழகாய் இருந்திருக்கிறேன், அழகாய் இருப்பேன் என்று சொல்.
‘நீ அழகாய் இருக்கிறாய்’ – என்று என் நண்பனே என்னிடம் நீ சொல்லும் பொழுது, உறுதியுடன் சொல். என்னால் உன் வார்த்தைகளை உதறித் தள்ள முடியாத உறுதியுடன் சொல்.
நாளை நிலைக்கண்ணாடியின் முன் நான் நிர்வாணமாக நிற்கும் பொழுது, என்னால் உன் வார்த்தைகளை உதறித் தள்ள முடியாத உறுதியுடன் சொல். —
‘நீ அழகாய் இருக்கிறாய்’ – என்று என் நண்பனே, நான் ஆச்சரியப்படும் படி சொல்.
‘நீ அழகாய் இருக்கிறாய்’ – என்று என் நண்பனே, நான் சிறிதும் எதிர்பாராத தருணங்களில் சொல்.
‘நீ அழகாய் இருக்கிறாய்’ – என்று என் நண்பனே, பெண்ணாக உன் பார்வையில் பாஸ்மார்க் வாங்கிவிட்டேன் என்பதால் சொல்லாதே!
‘நீ அழகாய் இருக்கிறாய்’ – என்று என் நண்பனே நான் நானாக இருக்கும் பொழுது சொல்.
‘நீ அழகாய் இருக்கிறாய்’ – என்று என் நண்பனே என்னை முழுமையாக ஏற்றுக் கொண்டு சொல்.
‘நீ அழகாய் இருக்கிறாய்’ – என்று என் நண்பனே என்னிடம் நீ சொல்ல நினைக்கும் பொழுது, நன்கு யோசித்துச் சொல்! உதட்டளவில் சொல்லாதே! உள்ளம் உணர்ந்து சொல்!
This video from Kaia (and translation) has a strong message. I really agree! Kaia keep going! ( Shri – Please pass this message to her)
My native language is Tamil 🙂 Shri you have done a great job in translating it. Dang, you are the best translator!
Beautiful!
Absolute joy! Wonderful translation.
Thanks Ganesh, Anir and Kalki 🙂