377 வழக்கில் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து கல்வி வல்லுனர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
பிப்ரவரி 7, 2011:ஜூலை 2, 2009 அன்று தில்லி உயர்நீதிமன்றம், நாஸ் பவுண்டேஷன் மற்றும் தில்லி அரசாங்கம் இவர்களுக்கிடையிலான வழக்கில், “வயதுவந்த இருவரின் விருப்பதுடன் தனிமையில் நடக்கும் பால் சமந்தப்பட்ட உறவு குற்றமல்ல” என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கி, ஒருபாலீர்ப்பை குற்றமற்றதாக ஆக்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இப்பொழுது இந்திய உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.
ஒருபாலீர்ப்பு (Homosexuality) என்றால் என்ன என்று சரியான விஞ்ஞான புரிதல் இல்லாத பலர், தாங்கள் எல்லாம் தெரிந்த மேதாவிகள் என்ற இறுமாப்புடன், ஒருபாலீர்ப்பு தவறானது என்று கூறுவதோடு மட்டுமல்லாமல், தில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். இதில் பலர் தாங்கள் சொல்லுவது தான் சரி என்றும், உச்சநீதிமன்றம் தங்களுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று வலியுறத்தி வருகிறார்கள். இந்த எதிர்ப்புக்கு சவாலாக, இந்தியாவில் பல பகுதிகளிலிருந்து, ஒருபாலீர்ப்பை குற்றமற்றதாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல கல்வி வல்லுனர்கள் ஒன்றாக இணைந்து, ஒரு மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். உச்சநீதிமன்றமும் இரண்டு தரப்பு மனுக்களையும் பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
அறிவியல், விஞ்ஞாயனம், சமூகவியல், சர்வதேச சட்டம், அரசியல், பாலியல், போன்ற துறைகளில் வல்லுனர்களான இந்த கல்வி வல்லுனர்கள், முக்கியமான இந்த வழக்கில் தங்களது கருத்துக்களையும் உச்சநீதி மன்றம், கருத்தில் கொள்ளவேண்டும் என்று தங்கள் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்கள். இது போன்ற சமூகமாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சட்டங்கள் மாற்றியமைக்க படும்போது, கல்வி அறிவும், அனுபவமும் கொண்ட எல்லோர் கருத்துக்களும் கேட்கப்பட வேண்டும் என்றும், மதவாதிகளும், மத தலைவர்களும் சொல்லும் வார்த்தையே கடைசி வார்த்தையாக கொண்டு, சமூகத்தில் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களை அமைக்க கூடாது என்றும் கல்வி வல்லுனர்கள் இந்த மனுவில் வலியுறுத்திகிறார்கள்.
“ஏட்டு சுரக்காய், கறிக்கு உதவாது” என்பது போன்றதல்ல இந்த கல்வி வல்லுனர்களின் கருத்துக்கள். தீர்ப்பை எதிர்க்கும் பலர், தங்களது வாழ்க்கையில் ஒருபாலீர்ப்பாலர்களை கண்டிராதவர், அவர்களை பற்றி ஒன்றும் அறிந்திராதவர். ஆனால் இந்த கல்வி வல்லுனர்களோ, தங்களது அன்றாட வாழ்க்கையில் நூற்றுக்கணக்கான ஒருபாலீர்ப்பாளர்கள் மற்றும் பல மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களை சந்தித்தவர்கள், சந்தித்துக் கொண்டிருப்பவர்கள். பாலியல் சிறுபான்மையினர், எப்படி இந்த சமூகத்தால் ஏச்சுக்கும், பேச்சுக்கும், வேற்றுமைபடுத்துதலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள் என்று தினசரி கண்டு வருபவர்கள் இந்த கல்வி வல்லுனர்கள்.
கல்லூரிகள், பல்கலைகழகங்கள் போன்ற கல்வி நிலையைங்களில் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள், பிற வேலையில் உள்ளவர்கள் போன்ற பலர் எப்படி பல கஷ்டங்களுக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள் என்றும் நேரடியாக அறிந்தவர்கள் இந்த மனுதாரர்கள். ராகிங், கல்லூரியை விட்டு நீக்கம், பணிநீக்கம், பதவிநீக்கம் போன்ற கொடுமைகளுக்கு மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் ஆளாக்கப்படுகிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. 377 சட்டப்பிரிவு, இது போன்ற மனிதநேயமற்ற தீயசெயல்களுக்கு ஊக்கம் அளிக்கிறது என்று வருத்தத்துடன் கூறுகிறார்கள் இந்த கல்வி வல்லுனர்கள். கல்வி நிலையங்கள் எல்லோரும் தயக்கமின்றி, கலக்கமின்றி, வந்து சுதந்திரமாக, திறந்த மனத்துடன், கற்க வேண்டிய கூடங்கள் என்றும், 377 சட்டம் இந்த சூழலுக்கு பங்கம் விளைவிக்கிறது என்றும் கூறுகிறார்கள் இவர்கள்.
மேலும் விவரங்களுக்கு :
விக்ரம் டாக்டர் 98213-29037
மனுதாரர்கள் :
Professor Nivedita Menon, School of International Studies, JNU.
Professor Shohini Ghosh, Sajjad Zaheer Chair, AJK Mass Communication Research Centre, Jamia Millia Islamia,
Ms.Shilpa Phadke, Assistant Professor, Centre for Media & Cultural, Studies, Tata Institute of Social Sciences,
Dr.Aditya Nigam, Fellow, Centre for the Study of Developing Studies
Dr.Ranjani Mazumdar, Associate Professor, School of Arts and Aesthetics, JNU
Professor Kamal Mitra Chenoy, School of International Studies, JNU.
Professor Anuradha M. Chenoy, School of International Studies, JNU
Ms.Ankita Pandey, Assistant Professor, Lady Shri Ram College, Delhi University
Mr.Partha Pratim Shil, Assistant Professor, Hindu College, Delhi University
Professor K.P.Jayasankar, Centre for Media & Cultural Studies, Tata Institute of Social Sciences,
Professor Satish Deshpande, Department of Sociology, University of Delhi,
Ms.Janaki Srinivasan, Assistant Professor, Dept. Of Political Science, Punjab University
Dr.Shoba Venkatesh Ghosh, Professor of English, University of Mumbai
Professor Mary E.John, Director, Centre for Women’s Development Studies,
Professor Anjali Monteiro, Centre for Media & Cultural Studies, Tata Institute of Social Sciences,
Dr.Janaki Abraham, Associate Professor, Department of Sociology, University of Delhi