வயது 7

எச்சரிக்கை: இந்த பதிவு சில வாசககர்களிடம் கடினமான, கசப்பான நியாபகங்களை தூண்டலாம் .

கருவறை நிசப்தத்திற்கும்
இருட்டறை களங்கத்திற்கும்
வித்தியாசம் தெரியாமல்
தாய்ப் பாலை சற்றே மறந்திருந்த
உதடுகள்
கிழவனின் வலுவில்லா எழுச்சிக்கு
மண்டியிட்டு, மூச்சிரைத்து, இளஞ்சூட்டோடு
இதம் கொடுத்துக் கொண்டிருந்தன.
அந்த
வியர்வை, நாற்றம், அழுக்கு
எதுவும் தனதல்ல என்று நம்ப,
பிஞ்சு உடம்பு
தன் உள்ளக் கிடங்கை
நாள் முழுவதும்
குளியல் அறையில்
கழுவிக் கொண்டிருந்தது.
இரவின் தனிமையில்
இச்சையின் காட்சிகளை மறக்க
போராடித் துவண்டிருக்கும்
கண்கள்
தம் பச்சைக் கனவுகளை
தலையணை ஈரத்தில்
நனைத்துக் கொண்டிருந்தன.