அணில் வெளியே வந்த கதை
இதோ நான் என் அண்ணன் கிட்ட வெளியே வந்த கதை. என் அண்ணன் கிட்ட நான் யாஹூ மெசஞ்சர் மூலமா சொன்னேன். முக்கால்வாசி நான் எல்லார்கிட்டயும் யாஹூல தான் சொன்னேன் .. ரெண்டு காரணம் …
1) நான் எல்லாரயும் விட்டு தள்ளி இருக்கேன்
2) எனக்கு யாஹூ ல சொல்றது இசியா இருக்கு
என் அண்ணன் என்ன விட ஒரு வயசு மூத்தவன்…. அவனுக்கு வயசு 24.
அனில் : உன்கிட்ட ஒன்னு சொல்லணும்… சரியான டைம் கிடைக்கல சொல்றதுக்கு..
அனிலின் அண்ணன் : என்னடா சொல்லு , எதாவது பொண்ணுங்க மேட்டர் ஆ?
அனில் : ஹே , கொஞ்சம் பர்சனல் ஆனா விஷயம் …. உன் பக்கத்துல யாரும் இல்லாதப்போ சொல்லு
அனிலின் அண்ணன் : யாரும் இல்ல டா…. போன் ல பேசனுமா.. கால் பண்ணு
அனில் : வேண்டாம்
அனிலின் அண்ணன் : சரி சொல்லு டா …. டென்ஷன் அ கிளப்பாத .. என்ன விஷயம் ?
அனில் :டென்ஷன் ஆகாத , இது உன்ன பத்தி இல்ல டா.
அனிலின் அண்ணன் : சரி சொல்லு
அனில் :சொல்ல தைரியம் வரமாட்டேன்குது ..
அனிலின் அண்ணன் : டே …சொல்லு டா
அனில் :நான் சொல்லிடுவேன் … நீ அப்பறம் ஏன்டா கேட்டோம்னு நினைப்ப
அனிலின் அண்ணன் : கடவுளே! கடிக்காத! சொல்லு …. என்னால என்னனு யோசிக்க முடியல …. சொல்லு ப்ளீஸ்
அனில் :கண்டிப்பா நீ கேக்க ரெடி ஆ ?
அனிலின் அண்ணன் : டேய் உன்னக்கு சொல்ல இஷ்டம் இல்லேன்னா விடு ….. வேண்டம்
அனில் :இல்ல டா … இன்னைக்கு இல்லைனாலும் என்னிக்காவது சொல்லித்தான் ஆகணும்
அனிலின் அண்ணன் : சரி அப்போ இப்போவே சொல்லு..
அனில் :ஹ்ம்ம்.. நான் ரெடி.. கேளு.. நான் கே (தன்பால் ஈர்ப்பு உள்ள ஆண் )
அனிலின் அண்ணன் : டேய்.. என்ன சொல்ற ? விளையாடறியா ?
அனில் :நான் சொன்னேன்ல ….. நீ இத கேட்டா டென்ஷன் ஆவேன்னு
அனிலின் அண்ணன் : கே (தன்பால் ஈர்ப்பு உள்ள ஆண் ) அப்படினா என்னடா ? எனக்கு தெரியாது
அனில் :நல்லதா போச்சு !
அனிலின் அண்ணன் : சொல்லு டா…. எனக்கு என்னனு தெரியனும்
அனில் :ஹ்ம்ம் எப்படி சொல்றது. எனக்கு பொண்ணுங்க மேல ஈர்ப்பு இல்லை.. பசங்க மேல தான் ஈர்ப்பு
அனிலின் அண்ணன் : எனக்கு தெரிஞ்சதெல்லாம் … கே ன்னா ….பசங்களும் பசங்களும் உறவு வெச்துக்கறது. நீயும் அதெல்லாம் செய்யறயா ?
அனில் :ஹி ஹி … அதெல்லாம் இல்லடா …இன்னும் இல்ல..
அனிலின் அண்ணன் : டேய்.. பொண்ணுங்களுக்கு என்னடா கொறைச்சல் இங்க?
அனில் :சரி நீ ரொம்ப சீரியஸ் ஆயிட்ட … கொஞ்சம் டைம் குடு … அப்பறம் யோசி..
அனிலின் அண்ணன் :ஹே! இல்ல, இல்ல.. அதனால பரவாயில்லை நீ சொல்லு… இட்ஸ் ஒகே
அனில் :ஏன்டா கேட்டோம்னு இருக்குல்ல ?
அனிலின் அண்ணன் :ஹ்ம்ம் நீ எப்போவது பசங்களோட செக்ஸ் வெச்சுபியா? அதுக்கு சான்ஸ் இருக்கா ?
அனில் :தெரியல டா ஆனா என்னால ஒரு பொண்ணை கல்யாணம் செஞ்சுக்க முடியாது .. கண்டிப்பா முடியாது
அனிலின் அண்ணன் : பிற்காலத்து ல கூடவா ?
அனில் :ஆமாம்.. அம்மா அப்பா உன் கல்யாணத்த பத்தி மட்டும் கவலை பட்டா போதும்
அனிலின் அண்ணன் : டேய் … பாவம் டா…. அவங்களால இத எதுக்கமுடியாது டா , நீ இத பத்தி கொஞ்சம் டைம் குடுத்து யோசிச்சு பாருடா
அனில் :தெரியும் டா… ஆனா எனக்கு வேற வழி இல்ல டா
அனிலின் அண்ணன் : சரி விடு !
அனில் :நான் நல்ல யோசிச்சு தான் டா சொல்றேன்… ரொம்ப வருஷமா இத பத்தி யோசிச்சிருக்கேன்….
அனிலின் அண்ணன் : உனக்கு இத பத்தி எப்போடா தெரியும் ?
அனில் :எப்போன்னு சரியாய் ஞாபகம் இல்ல ..என்னகு சின்ன வயச்லேர்ந்தே சந்தேகம் டா..
அனிலின் அண்ணன் : சரி.. நான் ஒரு அட்வைஸ் சொன்ன கேப்பியா ?
அனில் :என்ன சொல்லு
அனிலின் அண்ணன் : ஒரே ஒருதரம் ட்ரை பண்ணி பாரேன்
அனில் :என்ன ? பொண்ணுங்க கூட செக்ஸ் ஆ?
அனிலின் அண்ணன் : ஆமாம் … கரெக்ட்! அத தான் சொல்ல வந்தேன்
அனில் :ஹி ஹி ….. நான் பாஸ்ட் ! என்னால உறுதியா சொல்ல முடியாது…. நீ இத ஏத்துக்க முயற்சி பண்ணு டா
அனிலின் அண்ணன் : ஹே .. நான் பண்றேன் டா …. என்னால முடியும்… ஆனா அப்பா அம்மா பாவம் டா . அவங்க கிட்ட என்ன சொல்றது
அனில் :தேங்க்ஸ் டா … நீ ஏத்துக்க முயற்சி பன்றேன்னு சொல்றது எனக்கு பெரிய விஷயம் டா
அனிலின் அண்ணன் : ஆனா அப்பா அம்மா கிட்ட சொல்றது சரியில்லை டா
அனில் :ஹ்ம்ம் சரி பாக்கலாம் .. நான் இன்னும் ஒன்னும் முடிவு செய்யல்லடா … பிற்காலத்துல என்ன செய்யறதுன்னு அப்பறம் யோசிக்கலாம்
அனிலின் அண்ணன் : ஒன்னு தெரியுமா ..?
அனில் :என்ன?
அனிலின் அண்ணன் : நீ ஒரு முடிவெடுத்தா அத யாராலும் மாத்தமுடியாது …..நீயா மாறினா தான் உண்டு. அதான் எனக்கு கவலையா இருக்கு
அனில் :அதான் நீங்க என்ன புரிஞ்சுக்கணும்னு நான் எதிர்பார்கறேன் டா
அனிலின் அண்ணன் : நீ நல்ல டைம் குடுத்து முடிவெடுடா… நான் சொன்னதையும் ட்ரை பண்ணி பாறு ”
அனில் :சரி டா
அனிலின் அண்ணன் :நீ என்ன முடிவெடுத்தாலும் குடும்பத்துல யாரும் உன்னை கட்டாய படுத்த மாடோம் டா . ஆனா உன் முடிவு எங்க எல்லாரையும் பாதிக்கும் டா. அதனால யோசிச்சு முடிவெடு
அனில் :சரி டா.. நான் அப்பா அம்மா கிட்ட உடனே சொல்லபோரதுஇல்லை …. யோசிச்சு செய்வேன் … நீ டென்ஷன் ஆகாத
அனிலின் அண்ணன் : ஹ்ம்ம் அதான் நல்லது டா
அனில் :நீ எப்போ சொல்றியோ அப்போ தான் நான் அவங்க கிட்ட சொல்வேன்.. ஓகே யா ?
அனிலின் அண்ணன் : தேங்க்ஸ் டா , சரி நான் கிளம்பறேன்
அனில் :சரி டா…
அனிலின் அண்ணன் : நெஜமா ….நீ இப்படி சொல்லாம இருந்துருக்கலாம் …..நான் இத இப்போவவே மறந்துடுவேன் ..
அனில் :ஹ்ம்ம் நாம நினைக்கிறோம் ….நெறைய விஷயங்கள் நடக்காம இருந்திருக்கலாம் ..நம்ம கைல என்ன இருக்கு … நீ மறக்க வேண்டாம் …. ஏத்துக்க முயற்சி பண்ணு
அனிலின் அண்ணன் : நீயாச்சேனுதான்… நான் இந்த விஷயத்த எத்துகறேன் டா
அனில் :தேங்க்ஸ் டா … நம்ம அப்பொறம் பேசலாமா
அனிலின் அண்ணன் : சரி டா.. டா டா
annan than ella thambigalukum mudhal best fnd. . .
Nammada nammaiya than annan edir parpan i mis my anna