அன்புடையீர்,
வணக்கம்.
தில்லியில் சமீபத்தில் நடைபெற்ற கொடூரமான பாலியல் வன்கொடுமை, இதுபோன்ற வன்முறைகளை கண்டித்து நாடெங்கிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும் தூண்டிவிட்டுள்ளது என்பது நீங்கள் அறிந்ததே. இது குறித்து, டிசம்பர் 29 ஆம் தேதி, மாலை 4 மணிக்கு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நடைபெறவுள்ள கண்டன போராட்டத்திற்கு வருமாறு உங்களை அழைக்கிறோம்.
தில்லியில் நடைபெற்ற சம்பவம் தனித்துவம் வாய்ந்தது அல்ல. அருவெருக்கத்தக்க செய்கைகள், கேவலமான வார்த்தைகள், உரசல்கள், தீண்டுதல்கள் ஆகியவற்றில் தொடங்கி, மிகவும் கேடுவிளைவிக்க கூடிய மற்றும் பாதகமான பல வகையான பாலியல் வன்முறைகளை குழந்தைகள், பெண்கள், மற்றும் பாலியல் ‘பிறழ்வு கொண்டோர்’ [“Sexually deviant”]என்று கருதப்படுபவர்கள் அன்றாடம் அனுபவிக்கிறார்கள். கண்டிக்கத்தக்க இந்த நடத்தைகள் தினசரி வழக்கமாகிவிட்டன. குடும்பத்தினர், அண்டை வீட்டார், சமூகத் தலைவர்கள், நீதி காக்கவேண்டிய அமைப்புகளான காவல்துறை மற்றும் இராணுவம் அனைவரும் பாலியல் வன்முறைகளை மேற்கொண்டதற்கு மறுக்க இயலாத ஆதாரங்கள் இருக்கின்றன.
பாலியல் வன்கொடுமை அதிகாரத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. கீழ்சாதியின் மேல் மேல்சாதி; சிறுபான்மையினர் மீது வலதுசாரி பெருபான்மையினர்; தங்களது அதிகாரத்துக்கு அடங்காத, பயம்விளைவிக்க கூடிய குடியினர் மீது அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்தினர் – என்று பல நேரங்களில் இது அதிகாரத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. பாலியல் ரீதியாக வலு குறைந்த எந்தப் பிரிவினர் மீதும் நடத்தப்படலாம் என்றாலும், பெண்கள் மீது ஆண்கள் நடத்தும் பாலியல் வன்முறை பரவலாகக் காணப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு பாலியல் வன்முறையை பற்றி கீழ்கண்ட கேள்விகளை கேட்கவேண்டியுள்ளது.
இப்படிக்கு,
மனித சங்கிலி ஒருங்கிணைப்புக் குழு
மேலும் தகவலுக்கு: சிவகுமார் – 9840699776 | அனிருத்தன் – 8939609670
RSVP on Facebook: HumanChainDec29Chennai
Thanks: Sneha Krishnan, V Geetha and Shri Sadasivan for draft and Tamil translation
]]>உங்கள் வாரமலர் இணையதளத்தில் 12 ஜூன் 2009 அன்று வெளியாகியுள்ள “அன்புடன் அந்தரங்கம்” பகுதியில் எழுத்தாளர் அனுராதா ரமணன் ஒருபாலீர்ப்பு பற்றிய தன்னுடைய அறியாமையை பிரகடனப் படுத்தியுள்ளார். மனநல அறிவுரை வழங்க இவரைப்போன்ற முற்றிலும் பயிற்சியும் தேர்சசியும் அற்றவர்கள் முனைவது கண்டிக்கத்தக்கது. மாற்றுப்பாலியல் பற்றி Dr.விஜய் நாகசாமி போன்ற மனநல நிபுணர்களும் Dr. நாராயண ரெட்டி போன்ற பாலியல் நிபுணர்களும் தெளிவாகப் பேசியும் எழுதியும் வருவதை அனுராதா ரமணன் அறிய வேண்டும். உலகெங்கிலும் மட்டுமன்றி இந்தியாவிலும் மாற்றுப் பாலியல் கொண்டவர்களின் குரல்கள் பொதுத் தளங்களில் இன்று ஒலித்துக் கொண்டிருப்பதை அவர் அறியாமலிருப்பதும், பால் விழைவு பற்றிய எத்தகையத் தெளிவுமின்றி மற்றொருவருக்கு அறிவுரை வழங்க அவர் முன்வருவதையும் நாங்கள் கண்டிக்கிறோம். வெறும் பெயரும் விற்பனையும் கருதி வாரமலர் இதுபோன்ற கற்பிதங்களைப் பிரசுரிப்பதைக் கைவிட வேண்டும். பாலியல் போன்ற நுண்ணுணர்வு மிக்க கேள்விகளுக்கு நீங்கள் தெளிவுடன் பதிலளிக்க விரும்பினால், உங்கள் வாசகர்களின் நலனை நீங்கள் உண்மையிலேயே கருத்தில் கொண்டிருப்பின், தேர்ந்த மனநல நிபுணரை அணுகித் தெளிவு பெறவும்.
இப்படிக்கு,
அனிருத்தன் வாசுதேவன்