Grace Banu கிரேஸ் பானு – ஓரினம் https://new2.orinam.net வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Wed, 31 Aug 2016 03:42:04 +0000 ta-IN hourly 1 https://wordpress.org/?v=6.7 https://new2.orinam.net/wp-content/uploads/2024/03/cropped-imageedit_4_9441988906-32x32.png Grace Banu கிரேஸ் பானு – ஓரினம் https://new2.orinam.net 32 32 மத்திய அரசின் தலைமை அமைச்சரான மாண்புமிகு திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு https://new2.orinam.net/ta/gracebanu-to-pm-modi-tamil/ https://new2.orinam.net/ta/gracebanu-to-pm-modi-tamil/#respond Wed, 31 Aug 2016 03:33:51 +0000 https://new2.orinam.net/ta/?p=12700 மத்திய அரசின் தலைமை அமைச்சரான மாண்புமிகு திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு,

உலகில் இயங்கும் ஜனநாயக தேசங்கள் எதுவும் இதுவரை மாற்றுப்பாலினத்தோரின் உடல் இயங்கியலையும் அவர்களின் வாழ்வியல் அவலங்களையும் களைய பொறுப்பற்று கிடக்கும் இந்த 21ஆம் நூற்றாண்டிந் துவக்கத்தில்,மாற்றுப்பாலினத்தோராகிய எங்களின் உடல்,வாழ்வியல் அனைத்தையும் கணக்கில் கொண்டு ,எங்கெளுக்கென்று ஒரு தனி மசோதாவை தங்கள் தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதில் மகிழ்வுறுகிறேன்.

    அதே நேரத்தில் தங்கள் அரசு இயற்றிட இருக்கிற இந்த மசோதாவோடு தொடர்புடைய ,அதற்கு அடிப்படையாக அமைந்த மூன்று விஷயங்களுடன் மாற்றுபாலினத்தோர் (உரிமைகள் பாதுகாப்பு) மசோதா 2016 யை பொருத்திப்பார்க்கையில் எங்கள் பாலினம் மிக நுண்ணிய முறையில் கொடூரமாக ஏமாற்றப்பட்டதாகவே நான் உணர்கிறேன்,

எங்களுக்கு கல்வி ,வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வேண்டுமென 2013ல் தங்கள் உரிமைகளை வீரியத்தோடு இத்தேசம் முழுவதும் எங்கள் பாலினம் முழங்கியது .தமிழகத்தில் நானும் கூட எம் பாலினத்தினவர்களின் உரிமைகளுக்காக போராடி காவல்துறையால் தாக்கப்பட்டிருக்கிறேன் ,பலமுறை கைதுசெய்யப்பட்டும் இருக்கிறேன் .இரண்டாவதாக எங்கள் சமூகம் அரசிடம் முறையிட்டு அடக்குமுறைக்கு உள்ளாவதை தவிர்க்க உச்சநீதிமன்றத்தை நாடினோம் மக்கள் பிரதிநிதிகள் புரிந்துகொள்ள முடியாத எங்கள் வலியை உச்சநீதிமன்றம் புரிந்துகொண்டு வேலைவாய்ப்பில் ,கல்வியில் முன்னுரிமை உட்பட எங்கள் விடுதலைக்கான சில தீர்வுகளை தீர்ப்பாக 2014 ஏப்ரல் 15 அன்று உரத்து கூறியது.

மூன்றாவதாக நீதிமன்றத்தின் அக்குரலை முழுமையாக உள்வாங்கிய தமிழகத்தைச்சேர்ந்த திரு. திருச்சி சிவா அவர்கள் கல்வி,வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு உட்பட பல்வேறு நல் அம்சங்களை உள்ளடக்கி கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் மாற்றுபாலினத்தோருக்கான தனிநபர் மசோதாவை முன் வைத்தார்.தேசத்தின் முழுமையிலிருந்தும் அங்கு குழுமியிருக்கும் அனைத்து பிரதிநிதிகளால் அம்மசோதா எவ்வித எதிர்ப்பும் இன்றி ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

மேற்கூறிய இந்த மூன்று விஷயங்களை முழு பூசணியை சோற்றில் மறைப்பது போல மறைத்து விட்டு தங்கள் அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் மூலமாக மாற்றுப்பாலினத்தோர்(உரிமைகள் பாதுகாப்பு) மசோதா 2016 யை மக்களவையில் தாக்கல் செய்துள்ளீர்கள்.

தங்கள் அரசு தாக்கல் செய்துள்ள மசோதாவை முழுமையாக படித்தேன் அதில் எங்கள் சமூகத்தின் இடஒதுக்கீடு கோதிக்கையும் ,உச்சநீதிமன்றத்தின் அக்கறைமிக்க தீர்ப்பும் ,திரு.திருச்சி சிவா அவர்களின் நல்லெண்ண உழைப்பும் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுறுப்பதை கண்டு ம வெதும்பினேன்.அந்த மசோதாவில் நாங்கள் மானுடமாக மட்டுமே அங்கிகரிக்கப்பட்டுள்ளதை கண்டு நகைக்காமல் என்னால் இருக்க முடியவில்லை .காரணம் உலகில் ஆதிக்கங்களை எதிர்த்து அதிகமாக ரத்தம் சிந்தியதேசம் நம்தேசமாகதான் இருக்கமுடியும்.அத்தகைய ரத்தத்தில் பூத்த “ஜனநாயத்தில்” நாங்கள் மானுடமாக அங்கீகரிக்கப்படவே 69 ஆண்டுகாலம் ஆயிற்று எனில் இன்னும் எங்கள் இடஒதுக்கீடு கோரிக்கையை வென்றிட இன்னும் எத்துனை ஆண்டுகள் ஆகிடுமோ?? அந்த சிந்தனையின் போது என் மன சோகம் சிறு புன்னகையாக முகத்தில் வெளிப்படும் .இந்தப்சிறு சோக புன்னகையை உங்கள் ஆசிற்கு பரிசளிக்கிறேன்..

இந்த மசோதாவை படித்த முடித்தவுடன் அரசியலமைப்பின் தந்தை அண்ணல் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஒரு முறை கூறிய வார்த்தைகள் என்னுள் எழுந்தது’கால் உடைந்த குதிரையையும் ஆரோக்கியமான குதிரையையும் ஒன்றாக பந்தயத்தில் கலந்துகொள்ள செய்வது கொடும் அநீதி’என்பார் அவர்.அவரின் வார்த்தைகளையே நான் உங்களுக்கு பரிசளிக்கிறேன். இந்த மசோதாவின் மூலம் அத்தகைய கொடும் அநீதியை எம்பாலினதவர்கு நீங்கள் இழைக்காது இருப்பீர்களாக…

இறுதியாக…

விலங்குகளாக திரியும் எங்களை 21ஆம் நூற்றாண்டின்  காலைப்பொழுதில் இயங்கும் உங்கள் ‘ஜனநாயக அரசு’ மனிதர்களாக அங்கீகரித்ததற்கு நன்றி …

மேலும் நாங்கள் கண்ணிய  மனிதர்களாகவும் இயங்கிட கல்வி,வேலைவாய்ப்பு,அரசியலில் எங்களுக்கான இடம் பங்கிடப்பட்டால் ,எம் சமூகத்தின் சோகமற்ற முழு புன்னகையை உங்கள் அரசிற்கு பரிசளிக்க நாங்கள் கடமை ப்பட்டுள்ளோம்.எங்களை புன்னகை சிந்த அனுமதியுங்கள் !!மீண்டும் முழக்கமிட வைக்காதீர்கள் .

 நன்றி
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள,

கிரேஸ் பானு

Click here for English

]]>
https://new2.orinam.net/ta/gracebanu-to-pm-modi-tamil/feed/ 0
அன்புள்ள அம்மாவுக்கு https://new2.orinam.net/ta/my-dear-mother/ https://new2.orinam.net/ta/my-dear-mother/#respond Sat, 14 Nov 2015 13:58:07 +0000 https://new2.orinam.net/?p=12154 இவ்வுலகில் மிகவும் தூய்மையானது தாயின் நல் இதயமே என்பதாக ருஷ்யக்கவிஞன் சின்கிஷ் ஜத்மேத்தேவ் கூறியிருப்பார். அம்மா! இது உண்மைதான். என் இளம் வயதில் அதை உன்னுடன் இருந்து உணர்ந்திருக்கிறேன். இப்போது தொலைவில் இருந்து அறிகிறேன். என்னுடைய தம்பிகளுக்கும், அண்ணனுக்கும் கிடைத்த உன்னுடைய தூய இதயப்பாசம் எனக்கு கிடைக்காததைக் கண்டு, நான் எந்த கோபமும் கொள்ளப்போவதில்லை அம்மா!  அதே நேரத்தில் என் மீதும் கோபம் கொள்ளாதே. மகனாக என்னை நீ பெற்றெடுத்த மகிழ்ச்சியில் திளைத்திருப்பாய். நானோ உன்னுடைய மகளாகவே வளர்ந்த்தேன், மகளாகவே வாழ்வேன், மகளாகவே இறப்பேன்.

அம்மா! உனக்கும், எனக்கும் இடையே இருக்கிற பிரிவுக்கு நீயும், நானும் காரணம் அல்ல. உண்மையான காரணம் இத்தேசம். உண்மைதான் அம்மா! நம் இருவரைப் பிரிப்பதில் இத்தேசம் உள்ளூர மகிழ்வதாகவே நான் உணர்கிறேன். உன்னைச் சுற்றி கட்டியெழுப்பப் பட்டிருக்கும் போலியான கௌரவத்திற்கு கடந்த கால ஆட்சி முறைகளைப் போலவே இந்த “ஜனநாயக” ஆட்சி முறைக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது.

நான் பாலினம் மாறி பிறந்தது உன் தவறோ, என் தவறோ, நம் தலைமுறை தவறோ அல்ல. அது இயற்கை விதி. இவ்விதியை இவ்வுலகிற்கு சொல்லவேண்டிய இத்தேசம் தன் கடமையிலிருந்து நழுவுகிறது. இதனால் உன் மகளைப் போன்ற பாலினம் அனுபவிக்கும் கொடுமை எழுத்தில் அடங்காதது. பிச்சையெடுத்தலும், பாலியல் தொழிலும் என் பாலினத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கும் கொடுங்கோண்மை. அதிலிருந்து என் சமூகத்தை மீட்கவே நாங்கள் விரும்புகிறோம். என்னைப் போலவே என் சமூகம் அனுபவிக்கும் துக்கங்கள் ஏராளம்.

அம்மா! நாம் வாழுகின்ற இந்த மனிதச் சமூகம் ஆதிக்கத்தை எதிர்த்து போர்களினால், போராட்டங்களினால் தன்னை புதுப்பித்துக்கொண்டே வந்திருக்கிறது என்பது வரலாறு. அந்த வரலாறு நெடுக அடிமைப்பட்ட சமூகங்கள், ஆளும் கொடுங்கோண்மையை எதிர்த்து மானுட நியாயம் தாங்கிய பதாகையைத் தான் உயர்த்திப் பிடித்தது. அந்தப் பதாகையை இப்போது எங்கள் சமூகமும் உயர்த்திப் பிடிக்கிறது .

ரோம் சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராய் ஸ்பார்டகஸ் ஜீசஸ், உழைப்புச் சுரண்டலுக்கு எதிராய் கார்ல் மார்க்ஸ், சாதிய ஆதிக்கதிற்கெதிராய் க்ளாரோ ஜெட்கின், அண்ணல் அம்பேத்கர், பெரியார் ஆகியோர் உயர்த்திப் பிடித்த மானுட நியாயத்தை பேசும் அந்தப் பதாகையை இப்போது நாங்கள் உயர்த்திப் பிடிக்கின்றோம். நாங்களும் மானுடமே என்பதனை இந்த உலகத்திற்கு உரக்கச் சொல்கின்றோம்.

அம்மா! என் பாலினச் சமூகம் துவங்கியிருக்கிற விடுதலைக்கான இந்தப்போரட்டம் நம் குடும்பத்தை சுற்றி எழுப்பப்பட்டிருக்கும் போலி கௌரவச் சுவரை தகர்த்தெறியும் என்ற நம்பிக்கையுடனே நான் போராட்டங்களில் கலந்து கொள்கிறேன். அப்போதெல்லாம் நான் காணும் கனவு இதுதான்,

“என் சமூகம் நிச்சயம் விடுதலையடையும். அப்போது நீ என்னை ஏற்றுகொள்வாய். இதுவரையில் உன் இதயத்தில் நீ அடக்கி வைத்திருந்த தூய பாசத்தை என் மீது பொழிவாய். நான் உன்னைக் கட்டியணைப்பேன். உன்னை முத்தமிடுவேன். உன்னோடும், அப்பாவோடும் ,அண்ணனோடும், தம்பிகளோடும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பேன். உனக்கும் அப்பாவுக்கும் நான் மகளாக இருந்து பணிவிடை செய்வேன்”.

இந்தக் கனவே என்னை இயக்குகிறது.இந்த கனவே என்னைப்போராட வைக்கிறது.

இந்தக் கனவு எழுந்து மறைந்த அடுத்த கணமே இந்த ஜனநாயக தேசத்தின் மீது உச்சபட்ச அருவருப்புத்தோன்றும். இது ஜனநாயக தேசம் தானா? என்ற சந்தேகமும் எழும். நிச்சயமாக எங்களின் விடுதலையெல்லாம் நீயும், நானும் சேராமல் முழுமையடையாது.

உழைப்பைச் சுரண்டுவது மட்டுமல்ல, உணர்வைச் சுரண்டுவதும் சுரண்டலே என்று நாவலாசிரியர் ஜெயகாந்தன் கூறியதாக எங்கோ படித்த ஞாபகம். உண்மைதான்! உணர்வுச் சுரண்டலில் அதிகம் சுரண்டப்படுவது எங்கள் பாலினமே! எங்களின் உணர்வுகள் சுரண்டப்பட்டு வெறும் நடைபிணங்களாகவே நாங்கள் இத்தேசத்தில் அலைகின்றோம் அம்மா!

அம்மா!
எனக்கு நீ வேண்டும். உன்னுடைய பாசமும், அப்பாவின் நேசமும் வேண்டும். அண்ணன், தம்பிகளோடு கூடி விளையாட வேண்டும். யாரும் என் பாலினத்தை கொச்சைப்படுத்தாமல் இருக்கவேண்டும். அதற்கு இந்த ஜனநாயகம் முழுமையடைய வேண்டும்.
திருநங்கையர், திருநம்பியர்க்கு இடஓதுக்கீட்டை வழங்கவேண்டும்.

]]>
https://new2.orinam.net/ta/my-dear-mother/feed/ 0