Hari Chennai – ஓரினம் https://new2.orinam.net வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Fri, 01 Dec 2017 12:05:41 +0000 ta-IN hourly 1 https://wordpress.org/?v=6.7 https://new2.orinam.net/wp-content/uploads/2024/03/cropped-imageedit_4_9441988906-32x32.png Hari Chennai – ஓரினம் https://new2.orinam.net 32 32 கவிதை: மழலைக்குரல் https://new2.orinam.net/ta/mazhalaikkural-poem/ https://new2.orinam.net/ta/mazhalaikkural-poem/#comments Fri, 01 Dec 2017 11:28:48 +0000 https://new2.orinam.net/ta/?p=13521 கள்ளம் கயமை தீண்டாத
சூழ்ச்சி சூனியம் அண்டாத..
தூய உலகத்தின் மன்னர்கள் நாங்கள்..!
நண்பர்களின் சிரிப்புச் சத்தம்
குறும்புகள் கொஞ்சும் நித்தம்..
இதுவே எங்கள் ராஜாங்கக் கொள்கை..!
இதழுரியாச் சிறுமொட்டைத் தழுவும் பனித்திட்டைப் போல்…
குளிர்ந்த மணம் எங்களுடையது..!
ஆனால்…
இன்றோ…
பதற்றம் அப்பிய பார்வையும்..
விம்மல் கவ்விய வார்த்தையும்..
கூட்டம் நிறைந்த தனிமையும்..
எங்கள் அடையாளங்கள்.!
இது உங்களால்..!
ஆம் உங்களால்..!
தொட்டிலிறங்காப் பருவத்தில் எங்களைக் கட்டிலில் இட்டுச் சிதைத்த உங்களால்..!
பால் பேதம் அறியாப் பச்சிளங் கண்டு சபலம் தட்டிய உங்களால்..!
கண்டவுடன் துள்ளத் துடிக்கும் துவாரம்தான் உங்களுக்கும் பிறப்பிடம் என்று உணராத உங்களால்..!
கேளுங்கள்..!
எங்களுள் சிலர் ஊர் துறந்தோம்..!
இன்னும் சிலர் உலகத்தையும்..!
இருக்கும் சிலரோ உள்ளம் செத்த உடல்கள்..!
தினமிருட்டில் மிருகம் இழுத்துச் செல்லும் கனவுகளில் இருந்து இன்னும் நாங்கள் எழவில்லை..!
சொல்லத் தெரியாத அந்தப் பயத்தின் கறைகள் எங்கள் வாழ்வில் இருந்து இன்னும் வெளுக்கவில்லை..!
திருத்தியெழுதுங்கள்..!
“மனிதன் ஒரு சமூக விலங்கு” எனும் கூற்றை..!
அறவே இல்லை.. ஆடைதுறந்த விலங்கினத்தில்
“குழந்தைப் பாலியல் வன்கொடுமை ”

IMG_8080-673x1030


Image credit: http://dailytrojan.com/

]]>
https://new2.orinam.net/ta/mazhalaikkural-poem/feed/ 1