Appandairaj A – ஓரினம் https://new2.orinam.net வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Sun, 29 Jan 2023 17:26:29 +0000 ta-IN hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://new2.orinam.net/wp-content/uploads/2024/03/cropped-imageedit_4_9441988906-32x32.png Appandairaj A – ஓரினம் https://new2.orinam.net 32 32 [புதுக்கவிதை] அவனும் இவனும் (கோவிடும் என்னவனும்) https://new2.orinam.net/ta/covid-and-my-man-ta/ https://new2.orinam.net/ta/covid-and-my-man-ta/#respond Sun, 29 Jan 2023 17:16:11 +0000 https://new2.orinam.net/?p=16151 அவனும் இவனும் (கோவிடும் என்னவனும்)

அவன் ஊஹானின் ஆய்வகத்தில் தோன்றினான்… இவனோ தமிழ்நாடு என்னும் தாயகத்தில் வேரூன்றினான்;

அவன் என் முகத்தின் துளைகளில் காமம் கொண்டு உட்புகுந்தான்… இவனோ என் அகத்தின் துளைகளில் காதல் கொண்டு உள்நிறைந்தான்;

அவன் என் உடம்பெனும் சிறையுனுள் அகப்பட்ட போது மட்டுமே மூச்சு முட்டுகிறது… இவனோ என் உடம்பெனும் கூட்டினுள் கூடாமல் தனித்திடும் போது சுவாசம் விம்முகிறது;

அவன் என்னுள் பிரவேசித்த பிறகே என்னூன் வெப்பம் கொள்கிறது… இவன் என்னை விட்டு நீங்கினால் என்னூனுயிரெலாம் வெந்து வெந்து ஊதுகனல் ஆகிறது;

அவனால் நான் கொண்ட மயக்கம் மருந்து உண்ணத் தெளியும்… இவனால் நான் கொண்ட மயக்க நோயும் இவனே மருந்தும் இவனே;

அவனால் என் புலன்கள் சில ஆற்றல் இழந்தன… இவனால் என் ஐம்புலனும் செயல் மறந்து நிற்கின்றன;

அவன் என்னை அண்டாமல் அகல அறிவியல் கண்ட தடுப்பூசிகள் உண்டு… இவன் என்னை விட்டு அகல அறவியல் மாண்ட திருமணம் என்ற தடுப்பூசி உண்டு;

அவன் என்னை ஆட்கொண்டால் தற்காலிக உடல் நோயாளி என உலகம் என் மேல் பரிதாபம் கொள்கிறது… இவன் என்னை ஆட்கொண்டால் நிரந்தர உள நோயாளி உலகம் என் மேல் வெறுப்பைக் கக்குகிறது;

அவன் இயல்பாக என்னைத் தீண்டினால் சில வாரங்களுக்கு மட்டுமே வனவாசம்… இவன் இயல்பாக என்னைத் தீண்டினால் பல நாடுகளில் வாணாள் சிறைவாசம்;

அடிக்கடி உருமாறும் அவனுக்கு ஏற்றவாறு உலகம் அவனைச் சமாளிக்கிறது… உருவும் திருவும் அறவே மாறா இவனுள் இருக்கும் என்னை உலகம் ஏனோ ஏற்க மறுக்கிறது;

அவனால் பிறர்க்கு ஏற்படும் நெடுந்துயர் கொடிதினும் கொடிது…என்னுள் இருக்கும் இவனால் எனக்கு ஏற்படும் அருந்துயர் இம்மையிலும் இனிது.

 


குறிப்பு:

– இந்தக் கவிதை சனவரி 29 2023 அன்று நடந்த 64வது quilt இலக்கிய அமர்வின் போது ஆசிரியரால் எழுதப்பட்டு வாசிக்கப்பட்டது.

– படம்: திறந்தவெளி செயற்கை நுண்ணறிவு இயங்குதளம் (OpenAI) மூலம் உருவாக்கப்பட்டது.

]]>
https://new2.orinam.net/ta/covid-and-my-man-ta/feed/ 0
[கவிதை] பால் புதுமையினர்? https://new2.orinam.net/ta/poem-paalpudhumaiyinar/ https://new2.orinam.net/ta/poem-paalpudhumaiyinar/#respond Wed, 25 Nov 2020 08:12:39 +0000 https://new2.orinam.net/?p=15275

ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் என்ற ஓரினக் கனிமங்களின் ஓரினச்சேர்க்கையே நம் வானில் ஞாயிறாக ஒளிரக் காண்கிறோம்;

புவி மற்றும் நிலவு என்ற ஓரினக் கோள்களின் தற்பாலீர்ப்பே நம் கடல்களின் ஓதங்களாக ஆர்ப்பரிக்கக் காண்கிறோம்;

ஓரினம் சார் ‘நிம்பஸ்’ முகில்களின் தன்பால் காதற் கூடல்களே மாமழையாக இப்பூவுலகை நனைக்கக் காண்கிறோம்;

இக்காதற் கூடல்களே ஊடல்களாக மாறுமிடத்து மின்னல்களாகவும் இடிகளாகவும் அம்பரத்தில் கர்ஜிக்கக் காண்கிறோம்;

இங்ஙனம், ஞாயிறு, முகில், மழை என ஓரினர்களின் சங்கமமே நம் நீள்நெடுவானின் மாயா ‘வானவில்‘ ஓவியமாக மிளிரக் காண்கிறோம்.

ஓரினராகிய யாம்,

மெசொப்பொத்தேமியாவின் கில்கமெஷ் என்க்கீடு ஆக இருந்திட்டோம்;

இசுரயேலின் தாவீது யோனத்தான் ஆக இருந்திட்டோம்;

யவனத்தின் அலெக்ஸாண்டர் ஹெஃபேஸ்ட்டியன் ஆக இருந்திட்டோம்;

தமிழகத்தின் பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழன் ஆக இருந்திட்டோம்;

சேரளத்தின் ஐயப்பன் வாவர் ஆக இருந்திட்டோம்;

ஹிந்துஸ்தானத்தின் மாலிக் கஃபூர் அலாவுதீன் கில்ஜி ஆக இருந்திட்டோம்;

இவ்வாறாக வரலாற்றின் முழுமையிலும் வாழ்ந்திட்ட யாம் பால் புதுமையினர் ஆவது எங்ஙனம்

காதல் தோன்றிட்ட காலம் முதல் இருந்திட்ட எம் காதல் பழைமையே அன்றி புதுமையன்று;

யாம் பால் பழைமையினரே அன்றி பால் புதுமையினர் அல்லோம்.

‘பரிசுத்த தேவாகமம்’ அங்கீகரிக்கும் உம் எதிரினக் காதலோ –

சாதி-மத-இனம் பார்க்கும்,

சந்தான பாக்கியம் தேடும்,

சொத்து சம்பத்து கடத்தும்.

‘பரிசுத்த தேவகாமம்’ ஆகிய எம் ஓரினக் காதலோ –

மாந்தரிடையே மாறுபாடு ஒழிக்கும்,
மக்கட்பேறுக்காக மட்டுமென்பதை மறுதலிக்கும்,

மாட்சிமை மனிதத்தில் மீநிறுத்தும்.

மனிதனை மெய்யுள்ளத்தோடு மனிதனாக மட்டும் நேசிக்கும் எம் ஓரினச் சேர்க்கை இயற்கையே;

சாதி-சொத்து-சந்ததி வேண்டி சமூகத்திற்காக உடன்படிக்கை செய்யும் உம் எதிரினச் சேர்க்கை செயற்கையே.

மொழிக்கிறுக்கன்.


Acknowledgents:
Image source: https://newstm.in/

]]>
https://new2.orinam.net/ta/poem-paalpudhumaiyinar/feed/ 0