Mukesh – ஓரினம் https://new2.orinam.net வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Fri, 26 Apr 2013 03:31:28 +0000 ta-IN hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://new2.orinam.net/wp-content/uploads/2024/03/cropped-imageedit_4_9441988906-32x32.png Mukesh – ஓரினம் https://new2.orinam.net 32 32 வயது 18 https://new2.orinam.net/ta/age-18-ta/ https://new2.orinam.net/ta/age-18-ta/#comments Fri, 26 Apr 2013 03:29:44 +0000 https://new2.orinam.net/?p=8731 RK

மூச்சுக் காற்றால்
கன்னங்களை வேக வைத்து,
வியர்வை துளிகளால்
மயிர்த் தேகத்தில் கோலம் போட்டு,
உச்ச வேகத்தால்
தொடையிடுக்கில் ஏக்கத்தை மூட்டிவிட்டு,
எங்கடா போனாய்?

மார்பு மொட்டுகளில்
நீ பதித்த எச்சத்தின்
ஈரம் காயுமுன்னே
வந்துவிட்டுப் போ

]]>
https://new2.orinam.net/ta/age-18-ta/feed/ 1
வயது 14 https://new2.orinam.net/ta/age-14-ta/ https://new2.orinam.net/ta/age-14-ta/#comments Sat, 13 Apr 2013 01:07:59 +0000 https://new2.orinam.net/?p=8606 Muththam

செம்புழுதியை ஆவியாய்க் கொப்பளிக்கும்
மைதானத்தின் யாருங்காணா ஓரத்தில்
வேப்ப மரத்தின் கீழ்
மறைவாய்
ஒற்றைக் காலை ஒடுக்கிக் காத்திருந்தேன்.

காய்ந்த சரகுகள் சரசரக்க
வெள்ளைச் சட்டையில் தொப்பலாய் ஓடி வநதவன்
காற்றுபுகா நெருக்கமாய் எனதருகில் ஒடுங்கினான்.
இருவரின் பார்வைகள்
கண்களை மட்டும் தவிர்த்து
அங்குமிங்கும் ஊசலாடியது.

சில நிமிடங்கள்
பொய்க் கதைகளை
பொருத்தமில்லாமல் அங்கலாய்த்ததை
உதவியற்று கேட்டவன்
நகக்கீறல்களால் அடிமரத்தில்
தன் பொறுமையை சிராய்த்துக் கொண்டிருந்தான்.
உள்ளும் வெளியும் கொதிப்புத் தாளாமல்
வாயில் எஞ்சிய ஈரத்தை, அவன்
நெஞ்சு துடிக்கும் வேகத்திற்குத்
தாளமாய், விழுங்கிக் கொண்டருந்தேன்.

காக்கி அரைக் காற்சட்டையின் கீழ்
தோல் விறைத்த அவன் தொடைகள்
தகிப்பில் நீர்வார்ப்பதை
நெருடலாய் பார்த்துக் கொண்டிருந்த என்னை
நிமிர்த்தி
தவிப்பில் உலர்ந்த உதடுகளால்
சுருக்கங்களைக் கவ்வி வறண்டிருக்கும்
எனதுதடுகளை இமைப்பொழுதில்
உராய்ந்து விட்டு ஓடினான்.

முதல் முத்தம்.

பள்ளியே ஒன்றுசேர்ந்து
அந்தரங்கமாய் சிறப்புப் பரிசொன்று
அளித்ததாக எண்ணி பூரித்து நின்றேன்.

]]>
https://new2.orinam.net/ta/age-14-ta/feed/ 2
வயது 7 https://new2.orinam.net/ta/age-7-ta/ https://new2.orinam.net/ta/age-7-ta/#respond Fri, 22 Mar 2013 03:15:17 +0000 https://new2.orinam.net/?p=8460 எச்சரிக்கை: இந்த பதிவு சில வாசககர்களிடம் கடினமான, கசப்பான நியாபகங்களை தூண்டலாம் .


Image courtesy: http://pixabay.com/

 

கருவறை நிசப்தத்திற்கும்
இருட்டறை களங்கத்திற்கும்
வித்தியாசம் தெரியாமல்
தாய்ப் பாலை சற்றே மறந்திருந்த
உதடுகள்
கிழவனின் வலுவில்லா எழுச்சிக்கு
மண்டியிட்டு, மூச்சிரைத்து, இளஞ்சூட்டோடு
இதம் கொடுத்துக் கொண்டிருந்தன.

அந்த
வியர்வை, நாற்றம், அழுக்கு
எதுவும் தனதல்ல என்று நம்ப,
பிஞ்சு உடம்பு
தன் உள்ளக் கிடங்கை
நாள் முழுவதும்
குளியல் அறையில்
கழுவிக் கொண்டிருந்தது.

இரவின் தனிமையில்
இச்சையின் காட்சிகளை மறக்க
போராடித் துவண்டிருக்கும்
கண்கள்
தம் பச்சைக் கனவுகளை
தலையணை ஈரத்தில்
நனைத்துக் கொண்டிருந்தன.

]]>
https://new2.orinam.net/ta/age-7-ta/feed/ 0