Orinam – ஓரினம் https://new2.orinam.net வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Mon, 08 May 2023 04:07:58 +0000 ta-IN hourly 1 https://wordpress.org/?v=6.8.3 https://new2.orinam.net/wp-content/uploads/2024/03/cropped-imageedit_4_9441988906-32x32.png Orinam – ஓரினம் https://new2.orinam.net 32 32 திருமண சம உரிமை: தமிழ்நாடு LGBTQIA+ சமூக மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான அறிக்கை https://new2.orinam.net/ta/marriage-equality-letter-to-tn-govt-from-lgbtqia-communities-ta/ https://new2.orinam.net/ta/marriage-equality-letter-to-tn-govt-from-lgbtqia-communities-ta/#respond Sat, 06 May 2023 05:14:14 +0000 https://new2.orinam.net/?p=16301 Click here for English

மே 3, 2023

பெறுநர்: தமிழ்நாடு அரசு

பொருள்: தமிழ்நாடு  மாற்று பால்-பாலின-பாலீர்ப்பு (LGBTQIA+) சமூக மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான “திருமண சம உரிமை” அறிக்கை

இந்திய உச்ச நீதிமன்றத்தில் திருமண சம உரிமை மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்று வரும் தருணத்தில், கடந்த ஏப்ரல் 23. 2023 அன்று சென்னையில் இந்த விவகாரம் தொடர்பாக கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் LGBTQIA+ சமூக மக்களுக்காகச் செயல்படும் குழுக்களான கட்டியக்காரி, Queerbatore,  நிறங்கள் சாரிட்டபிள் டிரஸ்ட், ஓரினம், சாத்தி (SAATHII), சகோதரன், தமிழ்நாடு LGBTIQ இயக்கம், திருநர் உணவுக் கூடம் (சென்னை), தோழி, டிரான்ஸ் ரைட்ஸ் நவ் ஆகியவற்றின் உறுப்பினர்கள், தனிநபர் சமூக செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், மனநல நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் தமிழ்நாடு வானவில் கூட்டமைப்பின் அங்கமாவர். 2009-ஆம் ஆண்டு சென்னை வானவில் கூட்டமைப்பு என ஆரம்பிக்கப்பட்ட இந்த முறைசாரா அமைப்பு தற்போது தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. 

இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட எடுக்கப்பட்ட முடிவுகளை அரசின் பார்வைக்குச் சமர்பிக்கிறோம். திருமண சம உரிமை வழக்கு விசாரணையில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தனது பதில் மனுவைத் தாக்கல் செய்யும்போது இதில் உள்ள கோரிக்கைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

  • அறிமுகம் 
  • திருமணமும் அதன் பலன்களும் – LGBTQIA+ சமூக மக்கள் தங்கள் திருமணத்திற்குச் சமூகப் பாதுகாப்பு கோருவது ஏன்? 
  • LGBTQIA+ சமூக மக்களை உள்ளடக்கும் வகையில் தற்போது இருக்கும் தனிப்பட்ட சட்டங்களில் (Personal laws) மாற்றங்கள் செய்ய முடியுமா? 
  • சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழான அறிவிப்புக் கால முறையை மாற்றுதல் 
  • தனிப்பட்ட சட்டங்களை மேம்படுத்துவதற்கான அடுத்த படி – சுயமாகத் தேர்ந்தெடுத்த குடும்பத்திற்கான உரிமை

அறிமுகம்: 

1.1 தமிழ்நாடு அரசு திருநர் மக்களைச் சட்டரீதியாக அங்கீகரித்ததுடன் அவர்களுக்கான நலவாரியத்தையும் 2008-ஆம் ஆண்டில் இருந்து செயல்படுத்தி வருகிறது. நால்சா (NALS) vs ஒன்றிய அரசு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு இதைச் செய்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், அருண் குமார் மற்றும் பிறர்  vs பதிவுத்துறை தலைவர் மற்றும் பிறர் வழக்கில் திருநங்கைக்கும் ஆணுக்கும் இடையிலான திருமணம் இந்து திருமணச் சட்டத்தின் கீழ் செல்லுபடியாகும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. எஸ். சுஷ்மா  vs காவல்துறை ஆணையர் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் LGBTQIA+ சமூக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்ததுடன், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களையும் வழங்கியது. 

1.2 கொள்கை மாற்றம், நீதிமன்றத் தீர்ப்புகள், அரசு வழிகாட்டுதல் போன்றவற்றின் மூலம் LGBTQIA+ சமூக மக்களை அங்கீகரித்து, ஆதரித்து வரும் மாநிலம் என்ற முறையில் மற்றும் சுய மரியாதை/சீர்த்திருத்தத் திருமணத்தை இந்து திருமணச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்காக 1968-ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்த மாநிலம் என்ற முறையில்,  திருமண சம உரிமை விவகாரத்திலும், பாலின பாகுபாடின்றி (ஆண், பெண், திருநர்) LGBTQIA+ சமூக மக்கள் அதிகாரப்பூர்வமாகத் திருமணம் செய்து கொள்வதற்கான உரிமையை வழங்கும் விவகாரத்திலும் தமிழ்நாடு அரசு LGBTQIA+ மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். 

1.3 இந்திய உச்ச நீதிமன்றத்தில் தற்போது சமர்பிக்கப்பட்டுள்ள மனுக்கள் (இனி முதல் “திருமண சம உரிமை மனுக்கள்” எனக் குறிப்பிடப்படும்) மீதான விசாரணையின்போது, சிறப்புத் திருமணச் சட்டம் (Special Marriage Act) மற்றும் மத ரீதியான தனிப்பட்டச் சட்டங்களின் (Religious Personal Laws) கீழ் LGBTQIA+ மக்கள் திருமணம் செய்து கொள்வதற்குத் தமிழ்நாடு அரசு ஆதரவு தெரிவிக்க வேண்டும். 

2. திருமணமும் அதன் பலன்களும்

2.1 திருமணம் என்பது பெரும்பான்மை சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் வயது வந்த இருவருக்கு இடையேயான சமூக ஒன்றிணைவு ஆகும். திருமண சம உரிமை மனுக்களிலும் இது குறித்து மனுதாரர்களால் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். 

2.2 திருமணத்தின் மூலம் கிடைக்கும் சமூக பாதுகாப்பைத் தமிழ்நாடு அங்கீகரித்துள்ளது. இதன் காரணமாகவே ஏழைப் பெற்றோரின் பெண் பிள்ளைகள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்து கொள்ளும் விதவைகள், விதவைகளின் மகள்கள், சாதி மறுப்பு/கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் ஜோடிகள் ஆகியோருக்கு உதவும் வகையில் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவைமகள் திருமண உதவித்திட்டம், அன்னைதெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம், டாக்டர். முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்புத்திருமண உதவித்திட்டம் போன்ற திருமண உதவித் திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

.2.3 திருமணம் என்பது LGBTQIA+ சமூகத்தினருக்குத் தேவையானதோ முக்கியமானதோ இல்லை, திருமணம் செய்து கொள்ளாததால் அவர்களின் அடிப்படை உரிமைகள் எதுவும் மறுக்கப்படவில்லை என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் தற்போது இருக்கும் திருமணச் சட்ட கட்டமைப்பில் உள்ள தடைகளையும் எடுத்துக் காட்டியுள்ளது. ஒன்றிய அரசின் வாதம் பின்வருமாறு – “அவர்கள் இந்த நாட்டில் வாழலாம், ஆனால் தற்போதைய சட்டக் கட்டமைப்பின் கீழ் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது. இவ்வாறு திருமணம் செய்துகொள்ள முடியாத நிலை காணப்படுவது அவர்களின் அடிப்படை உரிமையை மறுப்பதாக அமையாது.” சட்டத்தையும், LGBTQIA+ சமூக மக்களின் தேவைகளையும் ஒன்றிய அரசு சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. தங்கள் இருப்பின் காரணமாக தொடர்ந்து ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படும் LGBTQIA+ சமூக மக்கள் தங்களின் குடும்பங்களை விட்டு வெளியேற்றப்படுகின்றனர் அல்லது வெளியேற நிர்பந்திக்கப்படுகின்றனர். தங்களுக்கான இடத்தை இந்தச் சமூகத்தில் அடைய LGBTQIA+ மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். குடும்பங்களை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் தங்களுக்கான குடும்பங்களை சுயமாகத் தாங்களே தேர்ந்தெடுத்து (Chosen Family) தங்களுக்கான சமூகத்தையும் கட்டமைத்துக் கொள்கின்றனர். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது திருமண உறவு அளிக்கும் உரிமைகளை வழங்குவது இல்லை. டி. வேலுச்சாமி vs டி. பச்சையம்மாள் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழும் ஜோடிகளின் உறவின் தன்மை “திருமணத்தை ஒத்து இருந்தால்” மட்டுமே பெண்கள் குடும்ப வன்முறைப் பாதுகாப்புச் சட்டம், 2005-இன் கீழ் 

2.4 திருமணத்தின் அடிப்படையில் கிடைக்கும் பல்வேறு பலன்களுக்கு அடிப்படையாக இருக்கும் சட்டங்கள் மற்றும் கொள்கைகள் மூலம் தற்போதைய திருமணக் கட்டமைப்பைப் பாதுகாக்க ஒன்றிய அரசு முயல்வது, எதிர்பாலீர்ப்பு கொண்டவர்களுக்குக் கிடைக்கும் உரிமைகளை  ஏற்கெனவே இந்தியச் சமூகத்தில் ஒடுக்குமுறைக்கு ஆளாகி வரும் LGBTQIA+ மக்களுக்கு வேண்டுமென்றே கிடைக்கவிடாமல் செய்வதற்குச் சமமானது.

2.5 சமூக அமைப்பு என்ற முறையில் திருமணமானது பல்வேறு பலன்கள், பொறுப்புகள், கடமைகள் ஆகியவற்றுக்கு முக்கியக் காரணியாக உள்ளது. இந்தியச் சட்டக் கட்டமைப்பு மற்றும் இந்தியக் கலாச்சாரச் சூழலில் திருமணத்தின் மூலம் கிடைக்கும் அந்தஸ்தானது திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் வேறு எந்த உறவின் மூலமும் கிடைக்காது. திருமணத்தின் மூலம் கிடைக்கும் பாதுகாப்பு குறித்த சிறிய பட்டியல் பின்வருமாறு (இவை மட்டுமே அல்ல):

திருமணத்தின் மூலம் கிடைக்கும் பாதுகாப்பு

  • திருமண பந்தத்தில் உள்ள இருவர் அல்லது இருவரில் ஒருவர் மட்டுமே தங்கள் திருமண உறவை முறித்துக் கொள்ள முடியும், வேறு யாரும் இதைச் செய்ய முடியாது. LGBTQIA+ மக்களின் உறவானது அவர்களது பெற்றோரால் தொடர்ந்து பிரிக்கப்பட்டு வருவதால் இந்த அம்சம் அவர்களுக்கு மிக முக்கியமானது மற்றும் மிகுந்த பலனளிக்கக்கூடியது ஆகும்.
  • இந்தியாவில் தற்போது திருமண ஆகாத ஜோடிகளை விடத் திருமணமானவர்களுக்கு எளிதில் வாடகைக்கு வீடு கிடைக்கிறது. தங்கள் குடும்பத்திலிருந்து வெளியேற்றப்படும் LGBTQIA+ சமூக மக்கள், தங்களின் கல்விச் சான்றுகள், அடையாள ஆவணங்களை வீட்டில் இருந்து உடனடியாக எடுத்துச் செல்ல முடியாது என்பதாலும், வேலைக்காக வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தினாலும் தங்குவதற்கான இடத்தைக் கண்டறிந்து பெற திருமண உரிமை அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • கூட்டு வங்கிக் கணக்கு தொடங்குதல், ஆயுள் காப்பீடுகளில் இணையரைப் பலனாளியாகச் சேர்த்தல் போன்ற பலன்கள் LGBTQIA+ சமூகத்தினருக்கும் கிடைக்கும்.
  • தங்கள் இணையரின் உடல் நலம் தொடர்பான முடிவுகளை எடுத்தல், அவசரக் காலங்களில் இணையரின் பிரதிநிதியாகச் செயல்படுதல் போன்ற உரிமைகள் LGBTQIA+ சமூக மக்களுக்குத் திருமணம் மூலம் கிடைக்கும். உயிர் காக்கும் சிகிச்சைகள், அறுவைச் சிகிச்சைகள் போன்றவற்றை மேற்கொள்ள உறவினர்கள் அல்லது இணையரின் கையொப்ப ஒப்புதலை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கோருகின்றனர். தற்போதைய சூழலில் LGBTQIA+ சமூக மக்களுக்கு இந்த மிக முக்கியமான உரிமை கிடைப்பதில்லை. பெரும்பாலான LGBTQIA+ சமூக மக்கள் தங்களின் பால்-பாலின-பாலீர்ப்பு அடையாளங்களின் காரணமாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் அவர்களின் சார்பாக இந்த முடிவுகளை எடுக்க அவர்களின் இணையருக்குத் திருமண உரிமை உதவிகரமாக இருக்கும்.
  • திருமணமானது ஒரு தம்பதியின் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பை வழங்குவதுடன், இணையரின் இறப்பின்போது அவரின் உடலைப் பெறுவதற்கான உரிமை, இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு வாரிசுதாரர் சான்றைப் பெறுதல், உயிலைச் செயல்படுத்துதல், கருணையின் அடிப்படையில் பணி பெறுதல் போன்ற உரிமைகளையும் வழங்குகிறது. 

3. LGBTQIA+ சமூக மக்களை உள்ளடக்கும் வகையில் தற்போது உள்ள தனிப்பட்ட சட்டங்களில் (Personal laws) மாற்றங்கள் செய்ய முடியுமா?  

3.1 இந்து திருமணச் சட்டத்தில் “மணமகள்”, “மணமகன்” ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. சிறப்புத் திருமணச் சட்டத்தில் “நபர்கள்”, “தரப்பினர்” ஆகிய வார்த்தைகளும், அதன் பிரகடனத்தில் “கணவன் மற்றும் மனைவி” என்ற வார்த்தைகளும் பயன்படுத்தப்படுகின்றன. கிறிஸ்தவ திருமணச் சட்டத்தில் “நபர்கள்” எனும் வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. மணமகன், மணமகள், கணவன், மனைவி ஆகிய வார்த்தைகளுக்குப் பதிலாக நபர்கள், இணையர்கள் எனும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பாலினம் அடிப்படையிலான வார்த்தைகளினால் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க முடியும்.  

3.2 குடும்பத்திற்குள்ளான திருமணங்கள் குறித்த ஒன்றிய அரசின் கவலையைத் தீர்க்கும் பொருட்டு, தடைசெய்யப்பட்ட உறவுமுறைகள் குறித்த பட்டியலை இணைத்து ஒரு ஒருங்கிணைந்த பட்டியலை உருவாக்க வேண்டும். 

3.3 திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயதை 18-ஆக மாற்ற வேண்டும். LGBTQIA+ மக்களின் பால்-பாலின-பாலீர்ப்பு அடையாளங்களை அவர்களின் பெற்றோர்கள் சிறிய வயதில் கண்டறிந்தால் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக முடிந்தவரை விரைவாகத் திருமணம் செய்து வைக்க முடியும் என்பதால் இந்த மாற்றம்  LGBTQIA+ மக்களுக்கு உதவிகரமாக இருக்கும். 

4. சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழான அறிவிப்புக் கால முறையை மாற்றுதல் 

4.1 தற்போதைய சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் “அறிவிப்புக் காலம்” எனும் சட்டத்திற்கு முரணான நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் படி, திருமணம் செய்து கொள்பவர்கள் குறித்த விவரம் அவர்கள் மாவட்டத்தின் பதிவாளர் அலுவலகத்தில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். தங்கள் வீட்டை விட்டு வெளியேறிய மற்றும் சிறைப்படுத்துதல், கட்டாய அடையாள மாற்றத்திற்கு உட்படுத்துதல், ஆணவக் கொலை போன்ற அபயாங்களை எதிர்கொள்ளும் LGBTQIA+ மக்களுக்கு இது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். “மறுப்புத் தெரிவித்தல்” என்பது முறையாக வரையறுக்கப்படாததால் இந்த 30 நாள் அறிவிப்புக் காலத்தில் யார் வேண்டுமானாலும் மறுப்பு தெரிவிக்கும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே ஒடுக்குமுறைக்கு ஆளாகி வரும் LGBTQIA+ சமூக மக்களுக்கு இந்த அறிவிப்புக் காலம் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தும்.   

4.2 எனவே சிறப்புத் திருமணச் சட்டத்தின் பிரிவுகள் 5 மற்றும் 6 சட்டத்திற்கு முரணானவை என அறிவிப்பதற்குத் தமிழக அரசு ஆதரவு தெரிவிக்க வேண்டும். 30 நாள் அறிவிப்புக் காலம் நடைமுறையில் இருக்கும் வரை சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் LGBTQIA+ சமூக மக்களுக்கு வழங்கப்படும் திருமணம் தொடர்பான உரிமைகளை அமல்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

5. தனிப்பட்ட சட்டங்களை மேம்படுத்துவதற்கான அடுத்த படி – சுயமாகத் தேர்ந்தெடுத்த குடும்பத்திற்கான உரிமை

5.1 LGBTQIA+ மக்களுக்கான திருமண உரிமை அவர்களின் வாழ்க்கையை நிச்சயமாக மேம்படுத்தும். ஆனால் தங்களுக்கான குடும்பத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமையை LGBTQIA+ மக்களுக்கு வழங்குவதன் மூலம் மட்டுமே அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்திட முடியும். பலமான குடும்ப மற்றும் சமூக உறவு பிணைப்பைக் கொண்ட ஆதிக்க பாலினத்தைச் சேர்ந்த எதிர்பாலீர்ப்பு உடையவர்களைப் போல் அல்லாமல் LGBTQIA+ சமூக மக்கள் தாங்கள் பிறந்த குடும்பத்தையும் தங்களின் சொந்த ஊர்/சமூகத்தையும் விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படுகின்றனர் அல்லது வெளியேற்றப்படுகின்றனர். 

5.2 குடும்ப அட்டை வழங்குதல், ஒரே முகவரியில் அனைவருக்கும் அடையாள ஆவணம் வழங்குதல் போன்றவற்றின் மூலம் சுயமாகத் தேர்ந்தெடுத்த குடும்பங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும். பிறந்த குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜோடிகளுக்குப் பாதுகாப்பு அளித்தல், குழந்தைகளைப் பராமரிப்பதற்கான உரிமை, சொத்துரிமை, சுயமாகத் தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் மருத்துவ முடிவுகளை எடுப்பதற்கான உரிமை, காப்பீடு பெறுதல் ஆகியவை வழங்கப்பட வேண்டும். மேலும் பிற குடும்ப அமைப்புகளுக்கு வழங்கப்படுவது போன்று சுயமாகத் தேர்ந்தெடுத்த குடும்பங்களுக்கும் அரசு மானியங்கள் மற்றும் திட்டங்கள் அளிக்கப்பட வேண்டும். 

5.3 LGBTQIA+ சமூக மக்கள் ஆபத்துக் காலங்களில் உதவிக்காக நாடிச் செல்லும் சட்ட அமலாக்கத் துறையினர் மற்றும் பிற துறையினருக்கு போதுமான விழிப்புணர்வு இல்லையெனில் சட்டம் அல்லது கொள்கையில் செய்யப்படும் எந்தவொரு மாற்றமும் பலனளிக்காது. எனவே சுஷ்மா vs காவல்துறை ஆணையர் வழக்கில் 07-06-2021 அன்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணையின்படி, காவல் துறையினர், சிறைத் துறையினர், மாவட்ட மற்றும் மாநிலச் சட்டச் சேவை அதிகாரிகள் ஆகியோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.  இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மற்றும் அடிமட்டத்தில் பணியாற்றும் சமூகத் தலைவர்கள் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான உதவியை வழங்குவோம் எனும் உறுதியை தமிழ்நாடு அரசிற்கு அளிக்கிறோம்.

நன்றி,

கட்டியக்காரி, நிறங்கள் சாரிட்டபிள் டிரஸ்ட், ஓரினம், சாத்தி (SAATHII), சகோதரன், தமிழ்நாடு LGBTIQ இயக்கம், தோழி, டிரான்ஸ் ரைட்ஸ் நவ் பிரதிநிதிகள் மற்றும் தனிநபர் சமூகச் செயற்பாட்டாளர்கள்

Click here for English


Translation credits: Anish Anto
Image credits: Gokul

]]>
https://new2.orinam.net/ta/marriage-equality-letter-to-tn-govt-from-lgbtqia-communities-ta/feed/ 0
பாலியல் கல்வி: நீலம் சோசியல் முன்னெடுப்பு https://new2.orinam.net/ta/sex-education-neelam-social-ta/ https://new2.orinam.net/ta/sex-education-neelam-social-ta/#respond Wed, 14 Jul 2021 08:05:00 +0000 https://new2.orinam.net/?p=15669 நீலம் வெப் சோசியல் (Neelam web social) என்னும் YouTube அலைவரிசை, இயக்குனர் பா. ரஞ்சித் அவர்களின் முன்னெடுப்பில் நடத்தப்பட்டு வருகிறது. சமூகம் மற்றும் அரசியல் சூழல் சார்ந்த பல உரையாடல்கள் மற்றும் நேர்கானல்களை, இளைஞர்களின் மொழியில் பல்சுவையாக தயாரித்தளிக்கிறது இந்த தளம்.

அதன் ஒரு பகுதியாக, பாலியல் கல்வி சார்ந்த கலகலப்பான ஒரு தொடர் ஒளிபரப்பப்படுகிறது. பால், பாலினம் மற்றும் பாலியல் சார்ந்த அடிப்படை புரிதல்களை சுவையாக தொகுத்து வழங்கியுள்ளனர். ஜூலை 2 2021 மற்றும் ஜூலை 9 2021 அன்று இரு தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், ஓரினத்தின் ஆர்வலர், சதீஸ் பங்கெடுத்து பாலியல் சார்ந்த உரையாடலை நிகழ்த்தியுள்ளார்.

நீலம் நிறவனத்தின் இந்த முன்னெடுப்பை ஓரினம் வெகுவாக பாராட்டுகிறது. இது போன்ற முன்னெடுப்புகள் மேலும் பல வந்திடவும், அதற்கு ஓரினம் துணை நிற்கும் எனவும் பதிகிறோம். கானொளிகளின் இணைப்பு கீழே.

]]>
https://new2.orinam.net/ta/sex-education-neelam-social-ta/feed/ 0
‘விசித்திரமான பையனு’க்கு அப்பால் ஒற்றுமையை நோக்கி https://new2.orinam.net/ta/beyond-funny-boy-solidarity-tamil/ https://new2.orinam.net/ta/beyond-funny-boy-solidarity-tamil/#respond Mon, 18 Jan 2021 01:37:11 +0000 https://new2.orinam.net/?p=15406 by YaliniDream and Angel Queentus

image of ocean

முரண்பாடுகள்

இலங்கையின் கொழும்புநகரில் 1983 ஆம் ஆண்டு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, ஒரு இளம், தன்பாலீர்ப்பு கொண்ட தமிழ்ச் சிறுவனை மையமாகக் கொண்டு ஷியாம் செல்வதுரை எழுதிய ஒரு தைரியமான, புதுமையான நாவல் ‘ஃபன்னி பாய்’ (விசித்திரமான பையன்). இடையிலிங்க, திருநர் மற்றும் குயர் தமிழ் பேசும் சமூகங்களின் வாழ்ந்த அனுபவங்களைப் பற்றி பல மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர்ந்த ஒரு நாவல் பெரிய திரைக்குச் செல்வதை வைத்துக்கொண்டு, எங்கள் சமூகங்களைச் சுற்றியுள்ள தவறான கதைகளை உடைக்க மீண்டும் ஒரு முறை நாங்கள் செயலூக்கம் பெறுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

ஃபன்னி பாய் நாவலின் சக்திவாய்ந்த கதைசொல்லல் முறை உலகளாவிய பார்வையாளர்களுக்கு மிகவும் மௌனமாக்கப்பட்ட தமிழ் பேசும் அனுபவங்களில் ஒன்றை எடுத்துச் செல்கிறது. பண்டைய குயர், திருநர் மற்றும் இடையிலிங்கத் தமிழ், முஸ்லீம் வரலாறுகள் இருந்தபோதிலும், காலனித்துவம், சாதிவாதம், மத ஆணாதிக்கங்கள், சர்வாதிகாரவாதம், பொருளாதார சுரண்டல், பேரழிவு முதலாளித்துவம் மற்றும் போர் ஆகியவற்றால் முன்வைக்கப்பட்ட துன்புறுத்தல் மற்றும் தவறான தகவல்களால் நமது சமூகங்களுக்கான இடம் பயங்கரமாகக் குறுகிவிட்டது

1994 ஆம் ஆண்டில் ஃபன்னி பாய் வெளியிடப்பட்ட நேரத்தில், உண்மையான எல்ஜிபிடிகுஐ+ தமிழர்கள் அல்லது முஸ்லிம்கள் இல்லை என்று ஒரு தவறான இருமைக்கட்டமைப்பு வெளிவந்தது. நீங்கள் இந்த வழியில் “வித்தியாசமான” அல்லது “குயர்” அல்லது “விநோதமானவர்” என்றால், நீங்கள் மேற்கத்தைய சமூக வாழ்க்கைமுறைகளால் கவரப்பட்டு மாறிவிட்டீர்கள் என்ற கற்பிதம் உருவாகியிருந்தது.

 

FunnyBoy and Deepa Mehta
இந்தவகை எடுத்துரைப்பானது போரின் வன்முறையால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த இன்டர்செக்ஸ், டிரான்ஸ் மற்றும் குயர் தமிழ் பேசும் சமூகங்களிளுக்கு மேலும் வேதைனையை உண்டு பண்ணியது. தணிக்கை, துஷ்பிரயோகம், சித்திரவதை மற்றும் எல்ஜிபிடிகுஐ+ தமிழ் பேசும் மக்களின் கொலைகளை இந்த இருமை எதிவு நியாயப்படுத்தியது. மேலும் எம் சமூகங்களுக்குள் தனிமை, சுய வெறுப்பு, அவமானம், துருவப்படுத்தல் மற்றும் துண்டு துண்டாதல் பற்றி எரிவதற்கு இது வழிவகுத்தது. எங்கள் சமூகங்களுக்குள் மிகவும் துன்புறுத்தப்பட்டவர்களைப் பாதிக்கும் சாதி, மத மற்றும் வர்க்க அம்சங்கள் பற்றிய நுண்ணறிவு ஃபன்னி பாய் நாவலில் இல்லாவிட்டாலும் கூட, ஷியாம் செல்வதுரை இந்த தவறான இருமைஎதிர்வைத் தகர்த்து, மிகவும் தேவைப்பட்ட ஒரு வெளியைத் திறந்துவைத்தார்.

சமீபத்தில், இந்தக் கதை தீபா மேத்தாவின் தழுவல் மூலம் நாவல் வடிவத்தில் இருந்து திரைப்பட வடிவத்துக்குத் தாவிச்சென்றிருக்கிறது. திரைப்படம் தமிழர் சமூகங்களின் மிகவும் வேதனைக்குரிய நெருக்கமான அம்சங்களைக் குறுக்கிட்டுச் செல்வதன் காரணத்தால், மிகவும் உணர்ச்சிவசப்பட்ட புகழாரங்களும் விமர்சனங்களும் அதையொட்டி எழுந்திருப்பதைக் காண்கிறோம். தமிழ்பேசும் குயர், திருநர், இடையிலிங்க சமூகங்களுக்கிடையே வருத்தம்தரும்வகையில் எதிரொலிக்கும் இவ்விமர்சனத்தின் மையச்சரடு பின்வரும் மூன்று விடயங்களை மையப்படுத்துகிறது: மட்டுப்படுத்தப்பட்ட தமிழ் நடிகர் பிரதிநிதித்துவம், தமிழ் மொழி மோசமான முறையில் உபயோகிக்கப்பட்டிருப்பது, மேலும் வரலாற்றைத் திரிபுபடுத்திக் காண்பித்தமை.
இவை ஆராய்வதற்கும் விவாதிப்பதற்கும் தகுந்த சரியான கரிசனங்கள் என்ற போதிலும், தீவில் உள்ள எல்ஜிபிடிகுஐ+ தமிழ் பேசும் மக்களிடம் கூட்டு ஒன்றிணைவையும் பொறுப்புணர்வையும் நிரூபிக்க தமிழ் புலம்பெயர்ந்தோர் பலரும் தவறியிருப்பதை எங்கள் சமூகங்கள் கண்ணுறுகின்றன. தோல்வியுற்ற இந்தக் கூட்டு ஒருங்கிணைவின் விளைவுகளாக துருவப்படல், ஓரங்கட்டப்பட்ட மக்களை மேலும் மௌனமாக்குவது, மற்றும் சமீபத்திய சூறாவளியால் அதிகரித்திருக்கும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொள்வோரின் உள மற்றும் உடல் பாதுகாப்புகளை உறுதிசெய்யத் தவறும் நிலை ஆகியவற்றைச் சொல்லமுடியும். இந்த சூழ்நிலைகள் பயங்கரமாகத் தீவிரமடையும் திறனைக்கொண்டுள்ளன. எங்களுடைய தமிழ்ச் சமூகங்களுக்குள் கலைகள், நலம் பெறுதல், கூட்டு ஒன்றிணைவு மற்றும் விடுதலை ஆகியவற்றில் எவ்வளவு அக்கறை மற்றும் கவனம் தேவை என்பதை இந்த கவலைக்கிடமான சூழலில் இருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள வித்தியாசமான தமிழ் மொழி பேசும் மக்கள் எதிர்கொள்ளும் தீவிரமான நிலவரங்கள் சர்வாதிகார, பாசிச நிலைமைகளை எதிர்கொள்ளுவோருடனான கூட்டு ஒருங்கிணைவுக்கான பல நுண்ணறிவுகளை நல்க வல்லவை. ஆனால், தொடக்கம் கருதி சில ஆலோசனைகளை இந்த விவகாரத்தில் தம்மை இணைத்துக்கொள்வதைத் தேர்வாய்க்கொள்ளும் பால்மாறா எதிர்பாலீர்ப்புள்ள தமிழர்களுக்குச் (cis straight Tamils) சொல்ல விழைகிறோம். எங்கள் மீதான துஷ்பிரயோகங்கள், தனிமைப்படுத்துதல், கொலைகள், நோய்கள், மற்றும் தற்கொலைகளுடன் உடந்தையாக நிற்க விரும்பாவிட்டால்:

  • எல்ஜிபிடிகுஐ+ தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் அன்பு, கவனிப்பு மற்றும் உறுதிப்படுத்தல் ஆகியவற்றை வெளிப்படுத்துங்கள்
  • இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் நாம் எதிர்கொள்ளும் ஆபத்தான நிலைமைகளை மாற்றுவதற்கான உறுதிப்பாட்டை நிரூபியுங்கள்.
  • திரைப்படத்திற்கான உங்கள் எதிர்வினையை — அது புகழ்ச்சியாக இருந்தாலும் சரி, விமர்சனமாக இருந்தாலும் சரி — எல்ஜிபிடிகுஐ+ தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பு, மேன்மை, மற்றும் விடுதலைக்கான அபிலாஷைகளை அங்கீகரித்தே முன்வையுங்கள். குறிப்பாக போருக்குப் பின்னராக, பொருளாரதாரச் சுரண்டல், அனர்த்தங்கள், வன்முறையென பல்வேறு இடர்களுக்குள்ளும் மேன்மை நோக்கிப் போராடும் கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மலையகம் உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களை மனம் கொள்ள வேண்டும்.

நிலவரங்கள்

திருநர், குயர் மற்றும் இடையிலிங்க மக்கள் பொதுவெளியில் வெளிப்படையாக இருப்பதென்பது, அதிலும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், மிகவும் கடினமான விடயம். தாக்குதல், துன்புறுத்தல், அவதூறு என்பவற்றுக்கு மேலாக எம் சமூகங்கள் வீட்டுவசதி, கல்வி, கூட்டு வழிபாடு மற்றும் மருத்துவ பராமரிப்பு பெற்றுக்கொள்வதில் தடைகளை அனுபவிக்கின்றனர். பெரும்பாலான எல்ஜிபிடிகுஐ+ மக்கள் ஒளிவுமறைவாக இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் தமது கதைகளைச் சேர்க்கவும், ஒருங்கிணைக்கவும், வெளிப்படையாகச் சொல்லவும் முடியாத இருட்டடிப்புக்குள் அவர்களைத் தள்ளியிருக்கிறது.
பல தசாப்தங்களாக போர், அனர்த்தங்கள், சர்வாதிகாரவாதம், மத ஆணாதிக்கம் மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றால் குறுக்கப்பட்டிருந்த இந்த வெளி, “தமிழர்கள் அல்லது முஸ்லிம்கள் ≠ எல்ஜிபிடிகுஐ+” என்ற சமன்பாட்டால் மேலும் இறுகிச் சுருங்கிவிடுகிறது. போர்க்காலப்பகுதியில் எல்ஜிபிடிகுஐ+ மக்கள் போர்க்குற்றங்கள், இராணுவமயமாக்கல், பொலிஸ் வன்முறை மற்றும் இலங்கை அரசால் இலக்குவைக்கப்படல் ஆகியவற்றுக்கு முகம்கொடுத்தது மட்டுமல்லாமல், தமிழ்ப் போராளிகள் மற்றும் அவர்தம் துணை இராணுவங்களின் தந்தைமையவாத கட்டுக்காவல் மற்றும் துன்புறுத்தலையும் சேர்த்தே எதிர்கொண்டனர்.
இந்தக் காலப்பகுதியில், மற்றொரு துருவமுனைப்பு — மற்றொரு தவறான இருமைக்கட்டமைப்பு — உருவாகிற்று: ஒன்றில் நீங்கள் உங்கள் வித்தியாசத்தை (ங்களை) அமைதிப்படுத்தித் தமிழ் தேசியவாதத்திற்கு உங்களை ஒப்புக்கொடுத்து உங்கள் விசுவாசத்தை பெருக்கிக் கொண்டீர்கள், அல்லது துரோகியாக அடையாளம் காணப்பட்டு விலக்கி வைக்கப்பட்டீர்கள். உண்மையில் பார்க்கப்போனால் யதார்த்தம் இதைவிட மிகவும் சிக்கலான ஒன்றாக இருந்தது. வித்தியாசமான தமிழ் பேசும் மக்கள் தமது இருப்பை அழித்தொழிக்க முனையும் பல்வேறு வன்முறைச் சக்திகளை பல்வேறு சிக்கலான வழிகளில் எதிர்கொண்டாக வேண்டியிருந்தது.
போர், கடத்தல், சித்திரவதை மற்றும் கொலை ஆகியவற்றின் கீழ் சமாளித்தல், உயிர்பிழைத்தல் மற்றும் எதிர்ப்பு உத்திகள் ஆகியவற்றின் பன்முகத்தன்மை வேரூன்றத் தொடங்கின பன்முக எதிர்ப்பின் புத்திசாலித்தனமான, இரகசிய வேலைக்கு தவறான தகவல்களை எதிர்கொள்ளும் திறன், பரஸ்பர உதவி, உடல்நலம்/ஆரோக்கியத்தை வளர்ப்பது, துருவமுனைப்புகளைத் தணித்தல், பாதுகாப்பு நெறிமுறைகளை உருவாக்குதல், வேறுபாடுகளைக் கடந்த இரகசிய கூட்டு ஒருங்கிணைவு வலையமைப்புகளை உருவாக்கிப் பராமரித்தல் என்பவற்றில் திறன்கள் தேவைப்பட்டன. வடக்கு மற்றும் கிழக்கில் எல்ஜிபிடிகுஐ+ தமிழர்களின் உயிர்வாழ்வையும் போராட்டத்தையும் ஆதரிக்கவேண்டும் என விழையும் புலம்பெயர்ந்த அல்லது தென்னிலங்கையின் சில பிரதேசங்களைச் சேர்ந்தோரைப் பொறுத்தவரை கூட்டு ஒருங்கிணைவு (solidarity)என்பது மிகவும் துல்லியமாக இருக்கவேண்டும். இந்த சூழல்களில் ஒரு சிறிய தவறு கூட உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

எல்ஜிபிடிகுஐ+ தமிழ் பேசும் மக்களுக்கான அன்பு, பாதுகாப்பு, மேன்மை மற்றும் விடுதலையை மையமாகக் கொண்ட வகையில் ஃபன்னி பாயைச் சுற்றியுள்ள எங்கள் உரையாடல்களை தொடர்ந்து ஆழப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் கூட்டு ஒருங்கிணைவு தொடர்பான பின்வரும் உதவிக்குறிப்புகளை நாங்கள் வழங்குகிறோம். இவ்வழி செயற்படும் போது, அனைத்து தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களை மட்டுமன்றி, ஆப்ரோ-சிலோனீஸ், வன்னியால எத்தோ மற்றும் பிற துன்புறுத்தப்பட்ட, சிறுபான்மைப்படுத்தப்பட்ட எல்லா மக்களையும் விடுதலையை நோக்கி நகர்த்த முடியும், ஒற்றுமையுடன் வேரூன்றிய சூழலை உருவாக்க முடியும் என்று நம்புகிறோம்.

வித்தியாசமான மக்களே, நாம் உங்களை நேசிக்கிறோம். உங்களுடைய தைரியம், மீளெளுகை, திறமை, மற்றும் மந்திரத்தன்மைக்கு நன்றி. அதிசிறப்பான விடுதலை எதிர்காலங்களை நோக்கி பண்டைய மதிநுட்பங்களைக் கடத்தும் நமது புனிதமான பாத்திரங்களை மீண்டும் பெறுவோம்.
வன்முறை, ஒடுக்குமுறை, துருவப்படுத்தல் மற்றும் சர்வாதிகாரத்துடன் போட்டியிடும் சமூகங்களுடன் கூட்டு ஒருங்கிணவு நோக்கிய உதவிக்குறிப்புகள் துல்லியம் மற்றும் தொடர்ச்சியைப் பயிற்சி செய்தல்: ஒரு சம்பவம், உடனடி ஆபத்து அல்லது அவசரநிலை இருக்கும்போது முன்முயற்சி எடுக்க வேண்டும்: “விஷயங்கள் தீவிரமானவை / கடினமானவை / ஆபத்தானவை என்று கேள்விப்பட்டேன், நாங்கள் ஆதரிக்கக் கிடைக்கிறோம். உங்களுக்கு என்ன வேண்டும்? நாங்கள் இன்ன இன்ன விதங்களில் உதவமுடியும். ” நீங்கள் எதை வழங்க முடியும் என்பதில் நடைமுறைச் சாத்தியத்தை கவனம் கொள்ளுங்கள்: மக்களின் உயிருக்கு ஆபத்து இருக்கும்போது, தவறான வாக்குறுதிகள் ஆபத்தானவை. மக்கள் வன்முறையிலிருந்து தப்பிப்பிழைக்கும்போது, போலி வாக்குறுதிகள் அவர்களை அவதியுறச் செய்யும், துண்டு துண்டாக்கி நம்பிக்கையை ஒழிக்கும். உங்கள் வாக்குறுதிகள் குறித்துத் துல்லியமாக இருங்கள்: உங்களுடைய தரப்பு எதை நியாயமுறையில் வழங்கமுடியும் என்பதை அறிந்து வைத்திருங்கள். “இவை எனது திறன்கள். இவற்றை என்னால் இலகுடன் வழங்க முடியும். ஆனால் வேறு சிலவற்றை செய்வது எனக்குக் கடினமாக இருக்கும், ஆனால் முயன்று பார்க்கலாம். இதுதான் என் அனுபத்தின் எல்லை. இங்கே நான் இன்னும் வளர வேண்டி இருக்கிறது. இவையெல்லாம் என் குறைபாடுகள்.

கவனிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் கலாச்சாரத்தை உருவாக்குதல்: நாம் சர்வாதிகார ஆணாதிக்க அதிகாரக் கட்டமைப்புக்குக் கீழ் அடக்கப்பட்டிருக்கும் நிலையில், சுய பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்பேற்றல் நடைமுறைகளைப் பின்பற்றுதல் ஏற்படுவது கடினமாக இருக்கலாம். கவனிப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதென்பது மேல் / கீழ் செயல்பாட்டு முறைகளில் தங்கியிருக்காத ஒரு பொறுப்புணர்வை அதிகரிக்கிறது. நீங்கள் ஒரு குழுவுடன் அநாமதேயமாக பணிபுரிந்தாலும், கவனிப்பு, தீவிர ஒப்புதல் மற்றும் ஆரோக்கியத்தை வளர்க்கலாம். அர்ப்பணிப்பைச் செய்ய முடியாத ஒரு நிலையில், அல்லது தவறிழைத்த ஒரு நிலையில் நேர்மையுடன் நபர்கள் இருக்க முடிகிற ஒரு சூழலானது நீங்கள் ஒருங்கிணைவுடன் இருக்கிற எல்லொருடைய பாதுகாப்பையும் உறுதி செய்ய இன்றியமையாதது.

திறன்கள் / தகவல்களைப் பகிர்தல், பரிமாற்றத்தை எளிதாக்குதல் மற்றும் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் முடிவெடுப்பதை ஆதரித்தல்: சுரண்டப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து அமைப்புரீதியாக விலக்கி வைக்கப்பட்டுள்ள திறன்கள், தகவல்கள் மற்றும் “நிபுணத்துவம்” ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் அந்த அணுகலை ஜனநாயகமயமாக்கும் பொறுப்பு அணுகல்வாய்ப்பு மற்றும் சலுகை உள்ளவர்களுக்கு உண்டு. பட்டேர்னலிஸ (paternalism) நிலைப்பிரகாரம், “நிபுணத்துவம்” உள்ளதாகக் காட்டிக்கொள்ளும் அணுகல்வாய்ப்புக் கொண்ட நபர்கள் ஒடுக்கப்பட்ட நபர்கள் சார்பில் பேசுவதாகச் சொல்லி முடிவுகளையும் எடுப்பதைக் காணலாம். கூட்டு ஒருங்கிணைவு என்பது இந்த மேற்சொன்ன இயங்குதளத்தை தலைகீழாக்குவதை வேண்டிநிற்பது. ஒடுக்கும் சக்திகளால் ஆகக்கொடூரமாகப் பாதிக்கப்பட்டோர் தம்மைக்குறித்து தகவலறிந்த முடிபுகளை எடுப்பதற்கு நம்மாலான ஆதரவை வழங்கவேண்டும். அத்தோடு மட்டுமன்றி இதர ஒடுக்கப்பட்ட சமூகங்களுடன் பரிமாறல்களை ஏற்படுத்தித் தருவதன் மூலம் கூட்டிணவுகள், உத்திகள் மற்றும் தாக்கத்தை வலுப்படுத்தமுடியும். துன்புறுத்தப்பட்ட சமூகத்தின் அபிலாஷைகளைப் பொறுத்து அவர்கள் எவ்வாறு தம் நோக்குகள் மற்றும் இலக்குகள் நோக்கி நகரமுடியும் என்பதற்கு அணுகல் வசதிகள் கிடைக்கப்பெற்ற நபர்கள் சிபாரிசுகளையோ அல்லது தெரிவுகளையோ வழங்குவதன் மூலம் உதவமுடியும். ஆனால், இறுதியாக முடிவு எடுக்கும் வலு அந்தச் சமூகத்தின் கரங்களிலேயே இருக்க வேண்டும்.
வேறுபாடுகளை மீறிய ஆதரவு, பரஸ்பர புரிந்துணர்வு, மேலும் ஒருங்கிணைவை வளர்த்தல்: எல்ஜிபிடிகுஐ+ தமிழர்களைப் பொறுத்தவரை, கடூரமான நிலைமைகள் மற்றும் தவறான தகவல்கள் பன்மைத்துவத்தை எவ்வாறு தடுக்கும் என்பதையும், அதற்கு பதிலாக வேறுபாடுகளைத் தூண்டி விரோதம் மற்றும் துருவமுனைப்பை வளர்ப்பதையும் நாங்கள் கண்டிருக்கிறோம். பன்மைத்துவம் என்பது விடுதலைச் செயற்பாட்டில் அவசியமான, அழகான பகுதி. பன்மைத்துவ தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் தீர்வுகளை உருவாக்குவது ஒரு நியாயமான மற்றும் சமமான சமுதாயத்தை நோக்கிய பாதையாகும். பெரும்பாலும், சலுகை பெற்ற குழுக்கள் தாம் “சிறந்தவர்கள்” என்று கருதுபவர்களை ஒடுக்கப்பட்ட சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவோராய் தேர்ந்தெடுப்பதன் மூலம் பெயரளவிலான உட்சேர்ப்பு பாசாங்கில் (tokenization) பங்கேற்பார்கள். இந்த பெயரளவிலான-உட்சேர்ப்பு சில அதிகாரக் கட்டமைப்புகளை உருவாக்கி மேலும் மேலும் சிதைவுறுதலையும் நம்பிக்கையீனத்தையும் சமூகங்களிடையே வளர்த்துச் செல்லும். வன்முறையால் பாதிக்கப்பட சமூகங்களுக்கு நடைமுறையில் தேவைப்படுவதென்பது தொடர்புறவும், நலம் பெறவும், வேறுபட்ட அனுபவங்கள் நோக்குநிலைகளை மீறி ஒன்றுபடவுமான ஆதரவு தான்.

மீண்டோரை மையமாகக் கொண்ட ஒருங்கிணைத்தல் ஏற்பாடுகள்:தீங்கு குறித்த பகுப்பாய்வொன்றை நடத்துங்கள். தீங்கு மற்றும் வன்முறைகளால் அதிகம் பாதிப்புற்றோரின் தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை கொடுங்கள். ஒரு நபர் தனக்கு தீங்கு நேர்ந்ததெனப் பகிர்ந்து கொள்ளும்போது, ​​கவனத்துடனும் புரிதலுடனும் செவிமடுக்க வேண்டும். தீங்கிலிருந்து மீண்டோர் பாதிகாப்பான சூழல்களை அணுகவதற்கு வழிவகை செய்வதே முதன்மைச் செயற்பாடாக இருக்கவேண்டும். ஒரு நபருக்கு தீங்கு நேரும் சூழ்நிலையை விட்டு வெளியேற முடியாவிட்டால், அச்சந்தர்ப்பத்தில் ஆதரவு என்பது பாதுகாப்பாகத் தீங்கைச் சுழியோடிக் கடப்பது பற்றிய ஆலோசனையாக இருக்க முடியும். ஒரு நபர் தீங்கு விளைவிக்கும் நிலைமைகளை விட்டு தப்பி வெளியேற முயற்சிக்கிறார் என்றால், அவர் தப்பிக்க உதவுவது மற்றும் பாதுகாப்பான தஞ்ச விடுதிகளைக் கண்டுபிடிப்பது போன்றவை கூட்டு ஒருங்கிணைவாகும். தீங்கு நேரும் நிலவரங்களில், எமது இலக்குகள் தடுப்பு, இடையீடு மற்றும் எதிர்கொள்ளல். சம்மத உடன்பாட்டையும் சுய நிர்ணயத்தையும் ஆதரித்தல் என்பது தீங்கு நேரும் சூழல்களில் மேலும் முக்கியமான ஒன்று. பாதுகாப்பைத் தேடும் நபர்கள் பாதுகாப்பு வசதிகள் உள்ளோரிடம் தங்கியிருக்க நேர்கையில் அதிகார நிலைமைகள் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது.
பொருத்தமான தந்திரோபாயங்களைப் பயன்படுத்துதல்: களத்திலிருந்து வரும் செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியே கொண்டு செல்வது கூட்டு ஒருங்கிணைவில் மிகவும் உபயோகமான ஒரு உத்திதான், ஆனால் சில முன்னெடுப்புகள் இரகசியமாக இருக்கவேண்டியதும் அவசியமாகும். சில நேரங்களில், தீங்கற்றவர் என்ற அபிப்பிராயம் நன்மைபயக்கக் கூடிய ஒன்றாக ஒருக்கலாம். நீங்கள் கூட்டு ஒருங்கிணைவில் உள்ள சமூகத்தின் அன்றாட வாழ்வியல் யதார்த்தத்தில் இருந்து ஒருங்கிணைவு உத்திகளையும் தந்திரோபாயங்களையும் வடிவமையுங்கள். கள மூலோபாயம் அற்ற ஊடக வெளிச்சம் சில நேரங்களில் இலக்குவைக்கப்பட்ட சமூகங்களை பாதுகாப்பற்ற ஆபத்து நிலவரத்துக்குள் தள்ளிவிடக்கூடும்.

வலிந்த ஒத்திசைவினூடு துணைபோதலை மறுத்தல்: தமிழ்பேசும் எல்ஜிபிடிகுஐ+ மக்களைப்போலவே, பல வேறு சமூகங்களும் தங்களுடைய ஒருங்கிணைப்பு வேலைகளை இரகசியமாகச் செய்ய வேண்டிய நிர்ப்பந்ததில் உள்ளன. குரலெழுப்பும் சக்தியுள்ள, பரந்த வெளியில் செயற்படும் வாய்ப்புள்ள சலுகை நிறைந்த சமூகங்கள் இரகசியமாகச் செயற்படும் நிபந்தனையின் கீழிருப்போரின் செயற்பாடுகளை வலிந்த ஒத்திசைவின் மூலம் தமதாக்கிக் கொள்ளும் அபாயம் உண்டு. பாதுகாப்புக் காரணங்களுக்காக மறைந்தே இயங்கவேண்டியிருக்கும் சமூகங்களுடன் கூட்டு ஒருங்கிணைவில் வேலை செய்யும்போது, இந்த வலிந்த ஒத்திசவை பாதுகாப்பை விட்டுக்கொடுக்காமல் மறுதலிக்க வேண்டிய தேவை உருவாகிறது. ஒரு சமூகத்தின் சார்பில் அவர்களுக்காகப் பேசுவதற்கும், அல்லது அவர்களுடைய விருப்பங்கள், ஆய்வுகள், நுன்ணறிவுகளை வெளிக்கொணர்வதற்கும் இடையே பாரிய வித்தியாசங்கள் உண்டு.

அதிகாரத்தையும் கூட்டுழைப்பையும் பரிசீலித்தல்: கூட்டு உழைப்பென்பது திறன்கள், நுண்ணறிவுகள், ஏலுமைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து தாக்கமிகு இடையீட்டை நிகழ்த்துவதற்கான ஒரு சந்த்தர்ப்பத்தை வழங்குகிறது. என்றபோதிலும், வழக்கத்திலிருக்கிற ஒரு பொதுவான சுரண்டல் நடைமுறை குறித்து நாம் கவனம் கொள்ள வேண்டும். சலுகை மிகுந்த ஆதிக்க சமூகங்கள் தாம் கொண்டுநடத்தும் முன்னெடுப்புகள் மற்றும் இடையீடுகளுக்குள், ஒடுக்கப்பட்ட மக்களின் இருப்பைச் “செருகிவிட்டு” “ஆதரவளித்து” “பெரிதாக்குவதன்” மூலம் ஒருவித செல்வாக்கைத் தேடிக்கொள்ள முனைவர். இந்த முனைப்பின் கீழ், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் இருப்பானது ஆதிக்க சமூகங்களின் செயல்களை நியாயப்படுத்துவற்கு துணைபோகும் நிலை ஏற்படுகிறது. இந்தவகையாக துணைபோகும் ஒத்திசைவை நல்க வேண்டிய அழுத்தத்தை உணரும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தமது அருமந்த நேரத்தையும் சக்தியையும் தமது தேவைகளில் செலவிடுவதைத் தவிர்த்து வசதி வாய்ப்புள்ள ஆதிக்க சமூகங்களுக்காக விரயமாக்க வேண்டிய நிலைக்கு வந்துவிடுகின்றனர். கூட்டு ஒருங்கிணைவு என்பது இந்தமாதிரியான அதிகாரப் பரிமாணங்கள் குறித்த உணர்திறனையும், அந்த சலுகை அதிகாரங்கள் தாக்கமுற்ற சமூகங்களின் மேம்பாட்டை நோக்கி எவ்வாறெல்லாம் பிரயோகிக்கப்பட முடியும் என்ற தொடர்ந்த பரிசீலனையையும் கோரிநிற்பது.


About the Authors:

The authors Angel Queentus (L) and YaliniDream (R) are with Maynmai,  a Tamil-led, multi-ethnic, multi-racial formation responding to attacks on asylum.

Autho rpixஏஞ்சல் குயின்ரஸ் வடக்கில் திருநர்களால் முன்னெடுத்து நடாத்தப்படும் சமூக அமைப்பான யாழ்ப்பாண திருநர் வலையமைப்பின் (JTN) ஸ்தாபக இயக்குநராவார். APTN (பாங்கொக்) அமைப்பின் 2020 ஆதரவு பயிலுநர் குழு அங்கத்தவராக, SOGIE பால்நிலைசார் மருத்துவ வசதிவாய்ப்புக்கான ஆதரவுச் செயற்பாட்டு நெறிமுறைகளை வளர்த்தெடுக்கும் பணியில் சமீபகாலமாக வேலைசெய்து வருகிறார். கடந்த மர்ர்ச் 2020இல் சங்கத் பெண்ணிய திறன் வளர்ப்பு பட்டறையில் பங்கேற்றிருந்தார். பல்வேறு ஊடக எழுத்துக்கள், தொலைக்காட்சி நேர்காணல்களை ஏஞ்சல் வழங்கியிருக்கிறார். கடந்தகாலத்தில் ஈக்வல் க்ரவுன்ட் (கொழும்பு) மற்றும் சாவிய அபிவிருத்தி நிறுவனம் (காலி) ஆகியவற்றில் பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழினி ட்ரீம் சுற்றுப்பயணக் கலை மரபில் வருகிற ஒரு நிகழ்த்துகலைக் கலைஞர், அமைப்பாளர், ஸோமாட்டிக்ஸ் பயிற்றுனர், மற்றும் ஆலோசகர். வன்முறையால் பாதிப்புறும் சமூகங்கள் நலமடையவும், அமைப்பாகவும், மேன்மைபெறவும் வேண்டி கலை உத்திகளைப் பாவிப்பதில் இருபது வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவம் கொண்டவர். கவிதை, அரங்கு, பாடல் மற்றும் நடனம் ஆகியவற்றின் தனித்த கலவையூடாக ஆன்மாவை அழைத்து அதன்வழி நடைமுறையை மாற்றியமைக்க முயல்பவர். மண், மனம், ஆன்மா மற்றும் கனவின் நிலங்களில் நீதி மூலமாக அமைதி நோக்கிய தேடலுக்கு இது வழிவகுக்கிறது. விடுதலை எதிர்காலம் நோக்கிய செயன்முறைகளுக்கு இடமளிக்கும் பண்பாட்டு வேலையின் நிறைவான மரபில் இருந்து யாழினி தன் உந்துதலைப் பெற்றுக்கொள்கிறார். ப்ரூக்ளின் ட்ரீம்வுல்ஃப் என்பதில் ஜென்டோக் லோன்வுல்ஃப் உடன் இணைந்த ஓரங்கமாக சுற்றுப்பயணம் மேற்கொள்வதுடன் யாழினி விஷன் சேஞ் வின் அமைப்பில் ஆலோசகராகவும், எம்-ஸ்டூடியோ.ஒர்க் இன் இணை ஸ்தாபகராகவும், மேன்மை அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் விளங்குகிறார்.

Acknowledgements:

This piece ioriginally appeared on Dec 16, 2020, in the Medium [see here] and has been republished on Orinam with the consent of the authors.

]]>
https://new2.orinam.net/ta/beyond-funny-boy-solidarity-tamil/feed/ 0
நர்த்தகி நடராஜ் – இந்தியாவின் முதல் திருநங்கை ”பத்மா” விருது பெறுநர் https://new2.orinam.net/ta/ta-narthaki-padmashri-2019/ https://new2.orinam.net/ta/ta-narthaki-padmashri-2019/#respond Sat, 09 Feb 2019 02:16:32 +0000 https://new2.orinam.net/?p=14365
Image: www.narthakinataraj.com

பரதநாட்டியக் கலைஞர், முனைவர் ‘திருநங்கை’ நர்த்தகி நடராஜ் அவர்கள் இந்தியாவில் “பத்மஸ்ரீ” விருது பெரும் முதல் திருநங்கை ஆனார். இதைபற்றிய செய்தி இந்திய அரசாங்கத்தால் ஜனவரி 25ஆம் தேதி, 2019 அன்று வெளியிடப்பட்டது. இச்செய்தி ஊடகங்களாலும், நர்த்தகி அவர்களின் ரசிகர்களாலும், சக நாட்டிய கலைஞர்களாலும் பெரும் பாராட்டுக்களையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

அவரின் பால் அடையாளத்தினை அவரது குடும்பம் ஏற்காததால் வீட்டை விட்டு வெளியேறும் சூழல் இவருக்கு மிகச் சிறிய வயதிலேயே ஏற்பட்டது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் ஒரு ஒப்பற்றப் பரதநாட்டிய கலைஞர் மற்றும் ஆசிரியராகி, இந்தியாவின் முதன்மையான விருதுகளில் ஒன்றை பெற்றதின் மூலம் வெற்றியின் சிகரத்தை எட்டியுள்ளார்.

நர்த்தகி அவர்களின் வெற்றிப்பாதை எளிமையானதாக இருக்கவில்லை. ஓர் பரதநாட்டியக் கலைஞராக ஆக வேண்டும் என்ற கனவை நிறைவேற்றுவதே கடினம், அதிலும் பால் மாறுதலை அந்த காலகட்டத்தில் செய்ய முயற்சித்தது மாபாரத செயல். நாட்டிய அரங்கேற்றம் தனது ஆசிரியர் திரு.நாமனூர் ஜெயராமன் தலைமையில் நடந்த பின், நர்த்தகி அவர்கள் நாட்டிய மாமேதை தஞ்சாவூர் திரு.கிட்டப்பா பிள்ளை அவர்களிடமிருந்து, 1985 இல் ஆரம்பித்து 1999 வரை கடும் பயிற்சியினை மேற்கொண்டார். இந்த பெரும் காலகட்டத்தில் “வாத்தியார்” கிட்டப்பா பிள்ளை அவர்களிடம் அன்பும் அடைக்கலமும் பெற்று அவருடனேயே தங்கி மிக அற்புதமான, அரிய ஆடல் உருப்படிகளை இவர் கற்றுக் கொண்டார். இதில் மிக முக்கியமானவை “தஞ்சை நால்வர்” என்று பெருமையுடன் அழைக்கப்படும் திரு.கிட்டப்பா பிள்ளையின் மூதாதையர்கள் இயற்றிய பாடல்கள். இப்பாடல்களை இன்றும் நர்த்தகி நடராஜ் அவர்கள் நடனமாடி புகழ் சேர்க்கிறார். 2000 வது ஆண்டில் சென்னை சென்றடைந்தார்.

சென்னையில் அரங்கேறும் வாய்ப்புக்கள் எண்ணற்ற தடைகளுடன் இருந்தன; ஆனாலும் கலை ஆர்வம் மற்றும் கலைக்காகவே தன் முழு வாழ்க்கையை அர்ப்பணித்தப்படியால், அமைப்பாளர்கள் மற்றும் கலை ஆர்வலர்களின் நெஞ்சங்களை வென்றார். கூடிய விரைவிலேயே சென்னையின் முதன்மையான இயலிசை நாடக்க கூடங்களான “சபாக்களில்” வழக்கமான கலைஞர் ஆனார். டிசம்பர் மாதம் சென்னையில் நடக்கும் “மெட்ராஸ் மியூசிக் சீசன்” என்று சொல்லக்கூடிய மார்கழி இசை நாட்டிய நாடக விழாக்களில் பங்கேற்கக்கூடிய முக்கிய பரதநாட்டியக் கலைஞர் ஆனார்.

2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இவருக்கு “கலைமாமணி” விருதினை அளித்தது. இதைத் தவிர, இந்திய அரசாங்கத்திடமிருந்து 2011 ஆண்டில் “சங்கீத் நாடக் அகாடெமி” விருதையும் பெற்றுள்ளார். (ஓரினம் இவரை அப்பொழுது வாழ்த்தியது. இதைப் பற்றி படிக்க) பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் இவருக்கு 2016ஆம் ஆண்டில் மதிப்புறு முனைவர் பட்டம் (டாக்டர் ஆப் லெட்டர்ஸ்) வழங்கியது. நர்த்தகியும், அவரது உற்றத்தோழி மற்றும் சக நடன கலைஞருமான திருநங்கை சக்தி பாஸ்கர் அவர்களும், இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமுள்ள மதிப்புமிக்க அரங்கங்களில் நிகழிச்சிகளை அளித்துளள்னர்.

Narthaki and Shakthi
Image of Narthaki and Shakthi: Facebook.com

இப்பொழுது நர்த்தகி பல மாணவர்களுக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுக்கிறார், முக்கியமாக திருநங்கைகள் மற்றும் மாற்றுப்பால்/மாற்றுப்பாலீர்ப்பு அடையாளங்களைக் கொண்டவர்களுக்கும் பயிற்சி அளிக்கிறார். 2018 ஆம் ஆண்டில் அவரது கலைப் பயணம் பதினோராம்-வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் ஒரு பாடமாக இடம் பெற்றுள்ளது.

Image cred: TamilNadu LGBTIQ

நர்த்தகி அவர்களின் நாட்டிய கச்சேரிகளில் அவர் “நாயிகா பாவம்” என்று சொல்லக்கூடிய, தன்னை தலைவியாக பாவித்துக்கொண்டு காதல் வசப்பட்டு தலைவனைப் பற்றி பாடும் பாடல்கள், பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களின் மனங்களை கவர்ந்திருக்கிறிது. அவரது நாட்டியத்தை அவர் சமூகத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ள உபயோகப்படுத்தி, பெரும் அளவில் பாமர மக்களளுக்குக் கூட நாட்டிய ஆர்வத்தினை புகுத்தி உள்ளார். இதன் மூலம் பரதநாட்டியத்தை உலகளாவிய கலையாக்கி, மொழி மற்றும் கலாச்சார எல்லைகளை மீறச் செய்திருக்கிறார் நர்த்தகி.

தனது பால் அடையாளம் அவரின் கலை மேல் கொண்ட தாக்கத்தைப் பற்றி நர்த்தகி அதிகம் கூறியுள்ளார். “தி ஐந்து” பத்திரிகையில் 2011 ஆம் ஆண்டு அவர் ஒரு பேட்டியளித்ததில், “நான் அடையாளத்துக்கு ஆடினேன், பிழைப்புக்காக ஆடினேன்…இப்பொழுது நான் எனது ஆன்மாவிற்காக ஆடுகிறேன். பரதக்கலை என்னைத் தனது கருப்பையில் வைத்து ஈன்றெடுத்து நர்த்தகி நடராஜாக மறுபிறவி அளித்துள்ளது” என்று கூறினார்.

தமிழ் இலக்கியம் மேல் பேரார்வம் கொண்ட இவர், இவரது பால் அடையாளத்தைப் பற்றி மேற்கொண்ட தேடலில் அதை நாடினார். தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் மேல் அவர் கொண்ட நேசம் அவரது நாட்டிய நிகழ்ச்சிகளில் இனிதே காண முடிகிறது. தமிழ் இலக்கியத்தில் மூன்றாம் பால் அதனின் சரித்திரத்தை கூர்ந்தாராய்ச்சி மேற்கொண்டிருக்கிறார்.

2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு சிறிய காணொளியை நாம் இங்கு காண்போம். இது சிவபெருமான் மேல் காதல் கொண்ட தலைவி அவரது லீலைகளை வர்ணிக்கிறாற்போல் அமைந்த ஒரு நாட்டிய உருப்படி

நர்த்தகி திருநர் ஏற்புக்காக வெகு காலமாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். 2017 ஆம் ஆண்டு, “டெட் எக்ஸ் டாக்” என்று சொல்லக்கூடிய சுயவாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துக்கொள்ளக்கூடிய ஒரு பேச்சு நிகழ்ச்சியில், நர்த்தகி மற்றும் சக்தி கல்வி கூடங்களில் சந்தித்த ஒதுக்குதல்கள் மற்றும் ஒரு ரயில் பயணத்தில் சக யாத்திரிகள் அவரை அலட்சியப்படுத்தியபோது அவர் எப்படி அதை அணுகினார் போன்ற சம்பவங்களைப் பற்றி பேசுகிறார் நர்த்தகி.

நர்த்தகியின் வாழ்க்கைப்பயணம் நிச்சயமாக பல நபர்களை ஊக்குவிக்கிறது. குறிப்பாக சமூக ஒடுக்குதல்களை உடைத்து, தடைகளை வென்று வாழ்க்கையில் தேர்ச்சி பெற உதவுகின்றது. ஓரினம் நர்த்தகி நடராஜ் அவர்கள் “பத்மஸ்ரீ ” விருது பெற்றமைக்கு புகழுரை அளிக்கிறது. மென்மேலும் பல சாதனைகளை புரிந்து பெருமை சேர்க்க அன்பார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.


Acknowledgements: Thanks to Srinivas for translating this piece from Maddy’s original, and to to Subha for editorial input.

]]>
https://new2.orinam.net/ta/ta-narthaki-padmashri-2019/feed/ 0
ஊடக வெளியீடு: திருநங்கையருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்பாட்டம் https://new2.orinam.net/ta/press-release-tamil-nadu-state-wide-protest-demanding-reservations-in-education-and-employment-for-transwomen/ https://new2.orinam.net/ta/press-release-tamil-nadu-state-wide-protest-demanding-reservations-in-education-and-employment-for-transwomen/#respond Sun, 16 Aug 2015 15:54:31 +0000 https://new2.orinam.net/?p=11895 வேண்டாம் கருணை!!! வேண்டும் உரிமை!!!

தமிழக வாழ் திருநங்கைகளாகிய நாங்கள் நல்வேரு தளங்களில் மனரீதியாகவும், உடலியல் ரீதியாகவும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இச்சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம்.
இதற்கு இடஒதுக்கீடு மட்டுமே தீர்வாகும் என கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாபெரும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை வரும் 17.08.2015 திங்களன்று சுமார் 3 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடத்த உள்ளோம்.
கோரிக்கைகள்:
  • மாற்றுப் பாலினத்தோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு மற்றும் முன்னுரிமை வழங்கவேண்டும்.
  • மாற்றுப் பாலினத்தோருக்கான வாழ்வுரிமைக்காக உச்ச நீதிமன்றம் வழங்கிய NALSA தீர்ப்பினை விரைவில் சில திருத்தங்களுடன் அமல்படுத்த வேண்டும்.
  • தமிழக மகளிருக்கான மேம்பாட்டுத்திட்டங்களில் திருநங்கைகளையும் இணைத்திட வழிவகை செய்யவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம்.
இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக திரு நங்கைகள், திரு நங்கை சமூக அமைப்புகள், அமைப்பு சாரா திரு நங்கைகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், ஆதரவாளர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
ஆகவே எங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் ஊடாக (பத்திரிக்கை, தொலைகாட்சி, இணையம்) நண்பர்களும் கலந்து கொணடு எங்கள் போராட்டத்திற்கு வெற்றி சேர்க்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி!!!
மேலும் தொடர்புக்கு:
  • பானு: 8015088322
  • ஜெயா: 9841865423
  • சங்கரி: 9551837719
]]>
https://new2.orinam.net/ta/press-release-tamil-nadu-state-wide-protest-demanding-reservations-in-education-and-employment-for-transwomen/feed/ 0
திருநங்கையருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு  வழங்கக்கோரி தமிழ் நாடு மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்பாட்டம் https://new2.orinam.net/ta/statewide-protest-in-tamil-nadu-demanding-reservations-in-education-and-employment-for-transwomen/ https://new2.orinam.net/ta/statewide-protest-in-tamil-nadu-demanding-reservations-in-education-and-employment-for-transwomen/#respond Fri, 14 Aug 2015 18:10:18 +0000 https://new2.orinam.net/?p=11879 திருநங்கைகளைப் பார்த்து “சுயமா ஒழைக்கறுதுக்கு உங்களுக்கு என்ன? பாலியல் தொழில் ஏன் செய்யறீங்க? கட கடையா ஏறி ஏன் காசு கேக்குறீங்க?” என்று கேட்பதற்க்கு நம் மக்களுக்கு மிகுந்த ஆர்வம்.

இந்த வினாக்களுக்கு விடை அளிக்கும் விதமாக பேசிய சென்னையை சேர்ந்த முதல் திருநங்கை ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநரான வைஷ்ணவியின் உரையாடலை இந்த காணொளியில் பாருங்கள்.

சமுதாயத்தில் பலருக்கு எந்தவித தடங்கலும் இல்லாமல் கிடைக்கும் சராசரியான வேலை வாய்ப்புகள் எவ்வாறு திருநங்கையருக்கு மறுக்கப்படுகிறது என்பதைப் பற்றி அவர் தெளிவாக விவரிக்கிறார்.

திருநங்கையர் இன்றும் தொடர்ந்து கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு கண்ணியமான வேலை செய்யும் திருநங்கை பல போராட்டங்களைக் கடந்து அந்த நிலையை அடைந்துள்ளார். தன் தொழில் முனைப்பை ஆதரிக்கும் நிதி ஆதரவாளரை கண்டறிவது, தொழிலுக்கான இடத்தை வாடகைக்கு பெறுவது, அரசு ஆவணங்களை பெற்று தொழிலை தொடங்குவது வரை உள்ள ஒவ்வொரு படியும் பெரும் போராட்டமாகவே இருந்து வருகிறது. இதைத் தாண்டி தொழிலை நிறுவிய பின், அந்த தொழிலில் உழைத்து தன் முதலீட்டை கூட மீட்டெடுக்க இயலாமல் இருக்கின்றார்.

இதற்கு ஒரே தீர்வு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு மட்டுமே! இதனை வலியுறுத்தி வரும் திங்கள் 17 ஆகஸ்ட் 2015 அன்று மாலை 2 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெறும் தமிழகத்தைச் சார்ந்த திருநங்கைகள், திருநங்கைகள் அமைப்புகள், மாணவர்கள், திருநங்கை ஆதரவாளர்கள், செயல்பாட்டாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தாங்கள் தங்களுடைய அமைப்புடன் கலந்து கொள்ளுமாறு மிக தோழமையோடு கேட்டுகொள்கிறோம்.

தொடர்ப்புக்கு: ஜெயா, சகோதரன் அமைப்பு: 9841865423

சங்கரி, நிறங்கள் அமைப்பு: 9790990622

]]>
https://new2.orinam.net/ta/statewide-protest-in-tamil-nadu-demanding-reservations-in-education-and-employment-for-transwomen/feed/ 0
சாதி ஒடுக்குமுறையை எதிர்த்து ஓரினத்தின் நிலை https://new2.orinam.net/ta/orinams-stand-against-caste/ https://new2.orinam.net/ta/orinams-stand-against-caste/#respond Wed, 10 Jun 2015 05:18:43 +0000 https://new2.orinam.net/?p=11761 ஓரினம் என்பது சென்னையை அடிப்படையாகக்கொண்டு தன்னார்வலர்களால் நடத்தப்படும் பதிவு செய்யப்படாத ஒரு கூட்டமைப்பு. இது ஆதரவு, கலாச்சாரம் மற்றும் போராட்டம் தொடர்பான தளங்களில் செயல்படுகிறது. சாதி, நிறம், இனம், மதம், பாலியல்-பாலினம், வயது மற்றும் திரன் என  எல்லாவிதமான ஒதுக்குதல்களையும் ஓரினம் எதிர்க்கிறது.

இதன் நீட்டிப்பாக, சமூகம், சாதி, தோற்றம், இனம், மதம், திறமை மற்றும் கண்ணுக்கு புலப்படுகின்ற/புலப்படாத அடையாளங்கள் தொடர்பான எல்லாவிதமான முன் அனுமானங்களையும் ஓரினம் எதிர்க்கிறது.

சமீபத்தில் ஓரினம்  முகநூல் பக்கத்தில் நடைபெற்ற சாதி, சாதி சார்ந்த ஒடுக்குமுறைகள், சாதியம் தொடர்பான உரையாடல்களுக்கு பிறகு நமது மதிப்பீடுகளை மீண்டும் தெளிவாக உறுதிபடுத்த வேண்டிய அவசியத்தை உணர்கிறோம். சாதி தொடர்பான பாரபட்சம் மற்றும் முன் அனுமானங்களை எதிர்கொள்ள ஓரினம் தனது நிலைப்பாட்டை மீண்டும் நிலைநிறுத்த விரும்புகிறது. சாதி அமைப்பு என்பது மக்களைத் தொடர்ந்து ஒடுக்குகின்ற, சுரண்டுகின்ற ஒரு திட்டமிடப்பட்ட அமைப்பாகவே  செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. சாதி என்பது மக்களிடையே பிரிவினையை உண்டாக்கியுள்ள  ஒரு அமைப்பே தவிர, தனி மனித தேர்வு கிடையாது. சாதியம் என்பது ஒட்டுமொத்த இந்திய மக்களையும் பாதிக்கும் ஒரு பிரச்சினை என்பது மட்டுமல்லாது, ஒடுக்குமுறை, ஆணாதிக்கம், மதம், திறமை, வர்க்கபேதம் போன்றவற்றைக் கலைக்கவும் தடையாக இருக்கிறது.

நமது பாலியல்-பாலின உரிமைகள் இயக்கம் தமிழகத்தின் சுயமரியாதை இயக்கத்தின் கருத்தாக்கத்தை பின்பற்றி வருகிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஒரு தனிநபரின் கண்ணியத்திற்கு (மதிப்பிற்கு) உறுதியளிக்கிறது. உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் “அனைத்து மனிதர்களும் சுதந்திரமான, சமமான மதிப்புகளும் உரிமைகளும் கொண்டவர்கள்” என்பதை வலியுறுத்துகிறது. சுய மரியாதை, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் ஆகியவையின் கொள்கைகளுக்கு இணங்கி நடப்பதில் ஓரினம் உறுதியாக உள்ளது. நமது நோக்கத்திலான உலகம் என்பது அனைத்து பாலின மற்றும் பாலியலைச் சார்ந்தவர்களும் அவர்களது மனித உரிமைகளை எந்த ஒதுக்குதலும் இல்லாமல் அடைவதுதான். இந்த  பார்வையில் சாதியம் என்பது தனிப்பட்ட ஒரு நபரின் பிறப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவரது கண்ணியம் மற்றும் சுதந்திரத்தின் மீது செலுத்தப்படும் அறமில்லாத அநியாயமான அடக்குமுறை ஆகும். ஆகையால் சாதியம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதனை ஓரினம்  எதிர்க்கும் முறையில் செயல்பாடும். மேலும் சாதியினால் கிடைக்கும் தனிப்பட்ட சலுகைகள் விளைவான பாரபட்சத்தையும் முன் அனுமானங்களையும் ஓரினம் எதிர்கொள்ள போராடும்.

]]>
https://new2.orinam.net/ta/orinams-stand-against-caste/feed/ 0
What will People Say: – படைப்பாக்கங்களுக்கான அழைப்பு: மாறுபட்ட/பன்மைப்பட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் சிற்றிதழ் https://new2.orinam.net/ta/what-will-people-say/ https://new2.orinam.net/ta/what-will-people-say/#respond Thu, 09 Apr 2015 13:39:38 +0000 https://new2.orinam.net/?p=11393 What Will People Say கூட்டியக்கம் பற்றிய அறிவிப்பு மற்றும்  சிற்றிதழ்க்கு படைப்பாக்கங்களை சமர்ப்பிக்க அழைப்பு.]]> What will People Say: மாறுபட்ட/பன்மைப்பட்ட பாலீர்ப்பு, பாலடையாளமுள்ளோர் மற்றும் தோழர்களின் கூட்டியக்கம்

What Will People Say கூட்டியக்கம் படைப்பாக்கங்களை சமர்ப்பிக்க உங்களை வரவேற்கிறது. இந்த கூட்டியக்கம் நம் கதைகளை பகிர்வதற்கான, ஆதரவான சமூகங்களை கட்டமைப்பதற்கான, மற்றும் அடக்குமுறைக்கு எதிரான பண்பாட்டு எதிர்ப்பலைகளை ஒழுங்கமைப்பதற்கான தளங்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த கூட்டியக்கம் இருமொழி (ஆங்கிலம்/தமிழ்) சிற்றிதழ் மற்றும் வலைப்பதிவினூடே மாறுபட்ட/பன்மைப்பட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் தொடர்பான கதைகள், அனுபவங்கள், மற்றும் கனவுகளை பகிர்வதற்கான பாதுகாப்பான அனாமதேய வெளிகளை உருவாக்க முனைகின்றது. ஈழத்தமிழ் மாறுபட்ட/பன்மைப்பட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களென தங்களை அடையாளப்படுத்தும் அல்லது ஈழம், இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தற்போது கனடாவில் வாழ்கின்ற படைப்பாளிகளிடமிருந்து  இந்த சிற்றிதழ் மற்றும் வலைப்பதிவுக்கான படைப்புக்களை எதிர்பார்க்கின்றோம். உங்களது கதைகள், வரைகதைகள், கவிதைகள், ஓவியங்கள் அல்லது ஒலி/ஒளி ஊடகப் படைப்புக்கள் வரவேற்கப்படுகின்றன. 2015ம் ஆண்டு ஆனி மாதம் இவை வெளியிடப்படும்.
சில முன்மொழியப்பட்ட தலைப்புகள் (ஆனால் இதற்குள் மட்டுப்படுத்தப்பட வேண்டியதில்லை):

  • குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட/மறுக்கப்பட்ட பாலியல்பு, பால்நிலை அடையாளம் மற்றும் வெளிப்படுத்துகை
  • பரந்த மாறுபட்ட/பன்மைப்பட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர் சமூகங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துதல்
  • நம் சமூகங்களுக்கு உள்ளேயும், வெளியேயுமான தனிமைப்படுத்துதல், இனவாதம்
  • தமிழ் சமூகங்களில் தோழமை
  • உடன்போக்கு, பாலுறவு, காதல் மற்றும் உறவுகள்
  • முரண்பாடு அத்துடன்/அல்லது புலம்பெயர்வு அல்லது புகலிட வாழ்வுடன் தொடர்புடைய மனவடு மற்றும் கூட்டு ஆற்றுப்படுத்துகை

எப்படி சமர்ப்பிப்பது:

அனைத்து வகையான படைப்புக்களும் தலைப்பு, படைப்பின் பின்புலம் (100 வார்த்தைக்களுக்குட்பட்டதாக) மற்றும் படைப்பாளியின் பெயர்/புனைபெயர் ஆகியவற்றுடன் மின்னஞ்சல் மூலம்whatwillpeoplesay@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். மின்னஞ்சல் தலைப்பில் What Will People Say சிற்றிதழுக்கான படைப்பு என்பதை குறிப்பிடவும்.*அனாமதேயமாக பங்குபற்ற விரும்புபவர்கள் உங்களை அடையாளப்படுத்தக்கூடிய தகவல்களை (உ+ம்: படைப்பில் இடம்பெறும் பெயர்கள்) நீக்கிவிடுங்கள்.

அனைத்து படைப்புக்களும் வைகாசி மாதம் 1ம் திகதி இரவு 11:59க்கு முன்னர் அனுப்பப்பட வேண்டும்.

எழுத்துமூலப் படைப்புக்கள்:

எழுத்துமூலப் படைப்புக்கள் 250 வார்த்தைகளுக்குட்பட்டதாக, ஏரியல் எழுத்துருவில் 12 அளவில், மைக்ரோசொப்ட் கோப்பாக இருத்தல் வேண்டும்.

ஒலி/ஒளி ஊடகப் படைப்புக்கள்:

ஒலி/ஒளி ஊடகப் படைப்புக்கள் மூன்று நிமிடங்களுக்குட்பட்டதாக இருத்தல் வேண்டும். இணைப்பு அல்லது கோப்பினை mp3 அல்லது wav (ஒலி ஊடகம்), 1920 x 1080க்குட்பட்ட mp4 அல்லது mov (ஒளி ஊடகம்) கோப்புகளாக அனுப்புங்கள்.

காட்சி ஊடகப் படைப்புகள்:

1920×1080க்கு உட்பட்ட jpg கோப்பாக இருக்க வேண்டும்.

இவற்றில் ஏதும் குழப்பங்கள், கேள்விகள் இருப்பின் எம்மைத் தொடர்புகொள்ளவும்.

மேலதிகத் தகவல்களுக்கு What will People Say கூட்டியக்கத்தை தொடர்புகொள்ளவும்:

Whatwillpeoplesay15@gmail.com
whatwillpeoplesaycollective.wordpress.com/

What will People Say ஒரு பன்முகத்தன்மை கொண்ட தமிழ் மாறுபட்ட/பன்மைப்பட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளமுள்ளோர் மற்றும் தோழர்களின் கூட்டியக்கம். இதன் உறுப்பினர்கள் ஒவ்வொரு மாதமும் நேரிலும், இணையத்தினூடும் சந்திக்கின்றனர். நமது சமூகங்களின் மாறுபட்ட/பன்மைப்பட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளமுள்ளோருக்கான வெளிகளை உரையாடல்களினூடாகவும், கற்கைநெறிகளூடாகவும், ஒன்றுகூடல்களுக்கூடாகவும், இளைஞர்களையும், வயது முதிர்ந்தவர்களையும் இணைத்தவாறு உருவாக்குவது இந்தக் கூட்டியக்கத்தின் நோக்கமாகும்.
]]>
https://new2.orinam.net/ta/what-will-people-say/feed/ 0
அறிவிப்பு https://new2.orinam.net/ta/announcement/ https://new2.orinam.net/ta/announcement/#respond Sun, 29 Mar 2015 18:31:40 +0000 https://new2.orinam.net/?p=11247 மாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட திருமணமான தமிழரா? கொன்ஞம் பேசனும் வாங்க
பாலின-பாலீர்ப்பு அடையாள சொற்பொருள்கள் ]]>
சென்னை வானவில்-சுயமரியாதை மாதத்தில் நடக்கவிருக்கும் <a href=”https://new2.orinam.net/events/upcoming-events//”>நிகழ்ச்சிகள்</a>

<hr />

மாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட திருமணமான தமிழரா? கொன்ஞம் பேசனும் வாங்க

2015 சென்னை வானவில்-சுயமரியாதை விழாவின் இரண்டாவது ஒருங்கினைப்பு கூட்டம் சகோதரன் யூனிட் 2 அலுவலகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி, சனிகிழமை காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெர இருக்கிரது மேலும்…

<hr />

2015 சென்னை வானவில்-சுயமரியாதை விழாவின் முதல் ஒருங்கினைப்பு கூட்டம் சகோதரன் அலுவலகத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி, சனிகிழமை மதியம் 3.30 மணிக்கு நடைபெர இருக்கிரது மேலும்…
ரீல் டிசயர்ஸ்: சென்னை சர்வதேச பாலின-பாலீர்ப்பு திரைப்பட விழா 2015இல் உங்கள் திரைப்படங்களை சமர்ப்பியுங்கள் #CIQFF2015

படிவத்தை தமிழில் சமர்ப்பிக்க


தற்கொலை எண்ணமா? நீங்கள் தமிழகத்தில் இருந்தால், ஸ்னேஹா உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம் (+91)044 22670050. நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள அமைப்புகளிக்கு இங்கே சொடுக்கவும்.

]]>
https://new2.orinam.net/ta/announcement/feed/ 0
பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலை ஆதரித்து https://new2.orinam.net/ta/support-maadhorubaagan-perumal-murugan-ta/ https://new2.orinam.net/ta/support-maadhorubaagan-perumal-murugan-ta/#respond Wed, 14 Jan 2015 19:50:22 +0000 https://new2.orinam.net/?p=10917 maadhorubaagan

எழுத்தாளர் பெருமாள் முருகனின் புகழ் பெற்ற நாவல்களில் ஒன்றான மாதொருபாகன் (காலச்சுவடு வெளியீடு, நான்கு பதிப்புகள்) என்ற நாவல் தடை செய்ய நடக்கும் கொடுமையான அடக்குமுறைகளை எதிர்த்து ஓரினம் சார்பாக எங்கள் குரலை பதிவு செய்கிறோம். ஒரு சில அடிப்படைவாத வலது சாரி இந்துதுவ கட்சிகள், மற்றும் சில சாதிய அமைப்புகளின் எதிர்ப்புக்கு இப்பிரதி இலக்காகி உள்ளது. புத்தகத்தை தடை செய்ய கோருவதும், எழுத்தாளரை கைது செய்ய கோருவதும் இந்திய அரசியலமைப்பு சட்டம் அனுமதித்துள்ள கருத்துரிமைக்கு முற்றிலும் முரண்படுவதாக உள்ளது.

சிவனின் ஆண்பெண் வடிவமாகிய அர்த்தநாரி ஈஸ்வரனின் தமிழ் பெயரை தலைப்பாக கொண்ட இந்த புத்தகம் கொங்கு தமிழ் நாட்டின் மையப்பகுதியான திருஞ்சங்கோடு நகரத்தையும், அதன் கோவில் திருவிழா தொடர்புடைய வழக்கங்கள் என்று சிலரால் கருதப்படும் விடயங்களையும் குறித்து பேசுகிறது.

எனினும் இந்த புத்தகத்தின் சாரம் இதுமட்டுமல்ல என்பதை அறிகிறோம். இந்த புனைவில் ஆண்மை, பெண்மை மீது உள்ள வழக்கமான கருத்துகளுக்கு வேறொரு பரிமாணத்தை தந்துள்ளார் ஆசிரியர். குழந்தை இல்லாத அன்பான தம்பதியர்களான காளி மற்றும் பொன்னா பற்றியது இதன் முழு கதையும். முதன்மை ஆண் பாத்திரமான காளி மீது கட்டமைக்கப்பட்ட ஆண்மை கருத்தியல் எல்லா விதத்திலும் தோல்வி அடைகிறது. முதன்மை பெண் கதாபாத்திரமான பொன்னா குழந்தை பெறுவதற்காக முகமற்ற உடலுறவு சடங்கில் கலந்து கொள்வதன் மூலம் பெண்களுக்கான பாலியல் மரபுகளை கடந்து செல்கிறார்; அந்த இரவில் யாருடன் உறவு கொள்ள வேண்டும் என்பதை தான் தேர்ந்து கொள்ளலாம் என்றதையும், தன் விருபதிற்கு இணங்க இருக்கும் ஒரு அழகான கடவுளுடன் மட்டுமே உறவு கொள்ள வேண்டும் என்பதிலும் தெளிவான சிந்தனையுடன் திகழ்கிறாள். மேலும் இந்த புத்தகம் பொது புத்தியில் புரியபட்டுள்ள தெய்வீக தன்மைக்கு ஒரு புதிய வடிவத்தை தருகிறது. கடவுள் என்று வரும் போது பெண் ஒருத்தி பகுத்தறியவும், ஒரு முடிவு எடுத்த பிறகு அதில் நிலையாக நிற்க முடியும் என்பதையும், சாதியற்ற அன்பின் உருவாய் மட்டும் திகழ்கிறான்/திகழ்கிறாள் என்பதையும் அழகாக உணர்த்துவதாக இருக்கிறது. இவ்வாறே தெய்வீகத்தின் தன்மைக்கு ஒரு புதிய வடிவத்தை தருகிறது. ‘கடவுள் தந்த குழந்தை’ என்று நாம் கேட்ட வாக்கியம் உண்மையில் எதை குறிக்கிறது என்பதை மறுசிந்தனைக்கு உட்படுத்துகிறது.

பண்பாடு, கலாச்சாரம் என்ற பெயரில் மாற்று பாலியல்களையும், பால் அடையாளங்களையும் எதிர்க்கும், ஆணாதிக்க அடையாளத்தை கடை பிடித்து பெண்களை ஒடுக்க நினைக்கும் அதே எச்சரிக்கைவாதிகள் தான் இந்த புத்தகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த கதையில் வரும் திருச்செங்கோடு நகரின் பெயரை இனிவரும் பதிப்புகளில் இருந்து நீக்க எழுத்தாளர் முடிவு செய்துள்ளார் என்ற போதிலும் இந்த நாவலை தடை செய்வதே இவர்களின் நோக்கம். மாற்று பாலினத்தரை ஒழிப்பதும், ஆணாதிக்க அடையாளத்தையும், விதிமுறைகளை வலுப்படுத்துவதையும் எதிர்த்து போராடும் ஒரு முற்போக்கு அமைப்பாக செயல்படும் ஓரினம் பாலினம் அல்லது இலக்கியம் எதுவாக இருப்பினும் ஒடுக்கப்படுபவர்கள் பக்கமே என்றும் நிற்கும். ஓரினம் – எழுத்தாளர், பதிப்பாளர், மொழிபெயர்பாளருக்கு தனது ஆதரவை தெரிவித்து கொள்கிறது.

சமீபத்தில் பெருமாள் முருகன் தன் படைப்புகளை திரும்பி பெற்றுக்கொண்டார் என்பதை நாங்கள் அறிவோம். இந்த முடிவை அவர் மீண்டும் பரீசீலனை செய்ய வேண்டும் என்பது எங்கள் விருப்பமாக இருந்தாலும், அவர் சந்தித்த போராட்டங்களை எதிர்த்த முயற்சிகளை நாங்கள் மதிக்கிறோம், மேலும் நீண்ட் சுயபரிசோதனைக்கு பிறகே இந்த முடிவை எடுத்துள்ளார் என்பதையும் நாங்கள் புரிந்து கொள்கிறோம். எனினும் இந்த புத்தகம் எப்போதும் வாழும் என்பதை நாங்கள் குறிப்பிடுகிறோம் – அவர் படைப்புகளின் பிரதிகள் எங்கள் நூலகங்களில் உள்ளன. அதை நாங்கள் தீயிட மாட்டோம். இந்த படைப்புகள் இனி நாங்கள் நடத்தும் விழாக்களிலும் பங்குபெறும் விழாக்களிலும் தனி இடத்திலும் பொது வெளியிலும் வாசிக்கப்பட்டும், விவாதிக்கபடும்.

 

]]>
https://new2.orinam.net/ta/support-maadhorubaagan-perumal-murugan-ta/feed/ 0