Reva – ஓரினம் https://new2.orinam.net வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Wed, 14 Dec 2011 02:30:44 +0000 ta-IN hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://new2.orinam.net/wp-content/uploads/2024/03/cropped-imageedit_4_9441988906-32x32.png Reva – ஓரினம் https://new2.orinam.net 32 32 பால் எனும் நதி! https://new2.orinam.net/ta/gender-meanders-ta/ https://new2.orinam.net/ta/gender-meanders-ta/#respond Tue, 13 Dec 2011 14:50:17 +0000 https://new2.orinam.net/?p=5439 தமிழாக்கம்: ஸ்ரீதர் சதாசிவன்

image (c) The Guardian

பாலை (Gender) பற்றிய எனது கற்பனை இதோ!

ஒரு நதியை கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒரு கரை ஆண் பாலுக்கு, ஒரு கரை பெண் பாலுக்கு. இருகரைகளிலும் மக்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். அவர்கள் பார்வையில், நீங்கள் ஒரு கரையில் இருக்கவேண்டும் அல்லது இன்னொன்றில்.

சிலர் வெறுமனே நின்றுகொண்டிருப்பதில் நாட்டம் கொள்ளாதவர்கள். நதியில் குதித்து, தண்ணீரோடு விளையாட நினைப்பவர்கள். நீரை போன்று இறுக்கமற்று இயங்கும் பாலுடன் விளையாட விழைபவர்கள். அவர்களில் சிலர் நதியில் கால் நனைக்கிறார்கள். சிலர் சிலசமயங்களில் நதியில் முங்கி குளிக்கிறார்கள். சிலர் நீந்துவதுண்டு. மேலும் சிலர் நதியில் நீந்தி எதிர் கரையை எட்ட முயல்கிறார்கள். எந்த பகுதியில் நீந்த முற்படுகிறார்கள் என்பதை பொறுத்து, விளைவுகள் வேறுபடுகின்றன. சலனமற்ற, அமைதியான பகுதிகளில் நீந்துவது எளிதாகிறது. வீரியத்துடன், பாயும் நதியின் பகுதிகளில் நீந்துவது சவாலாகிறது.

நதியின் போக்கை நிர்ணயிப்பது எது? நதியின் மடியும், அதில் படிந்திருக்கும் கற்கள் மற்றும் இதர படிமானங்களும். இவை நாம் அனைவரும் வாழ்க்கையில் சந்திக்கும் வேறுபட்ட சூழ்நிலைகளை குறிக்கின்றன. பால் எனும் நதியில் நீந்துபவர்கள், எப்படி நீந்துகிறார்கள் என்பது கரையில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருப்பவர்களையும் பொருத்தது. அவர்கள் உங்களுக்காக ஆரவாரம் செய்து உங்களை ஆதரிகிரார்களா, அல்லது உங்கள் மேல் கற்களை வீசி உங்களை கண்டிக்கிறார்களா என்பதை பொருத்தது. சில சமயங்களில் நீந்துபவர்களுக்கு உதவ ஒரு படகு தென்படுகிறது – இது நிஜ வாழ்க்கையில் உங்களை ஆதரிக்கும், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உதவிக் குழுக்களை குறிக்கின்றது.

இப்படி பால் எனும் நதி, காலாகாலமாய் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையிலும் இந்த நதியை வேடிக்கை மட்டும் பார்க்காமல், நதியோடு விளையாட நினைக்கும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், என்பது என் எண்ணம்!

]]>
https://new2.orinam.net/ta/gender-meanders-ta/feed/ 0