Shri – ஓரினம் https://new2.orinam.net வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Sun, 22 Dec 2013 00:36:16 +0000 ta-IN hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://new2.orinam.net/wp-content/uploads/2024/03/cropped-imageedit_4_9441988906-32x32.png Shri – ஓரினம் https://new2.orinam.net 32 32 தாய் நாட்டின் துரோகம்! https://new2.orinam.net/ta/betrayed-by-country-ta/ https://new2.orinam.net/ta/betrayed-by-country-ta/#comments Sun, 22 Dec 2013 00:12:05 +0000 https://new2.orinam.net/?p=9396 379686_10200891094831643_984694158_n

டிசம்பர் 11, 2013 பல கோடி இந்திய மக்களின் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு கருப்பு தினம். அன்று இந்திய உச்ச நீதிமன்றம், தில்லி உயர் நீதி மன்றத்தின் 2009 ஆம் ஆண்டு தீர்ப்பை தள்ளி வைத்து, அதன் விளைவாக, ஒருபாலீர்ப்பை சட்டத்தின் பார்வையில் குற்றமாக ஆக்கியது. ஒரு பாலை சேர்ந்த, பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட இருவரின், பரஸ்பர சம்மதத்துடன், தனிமையில் நடக்கும் பால் சம்மந்தப்பட்ட உறவுகளை, குற்றமாக கருதும் இந்திய சட்டத்தின் 377 பிரிவு, அரசியல் சாசனத்தின் படி செல்லுபடியாகும் என்றும், அதை இந்திய பாராளுமன்றம் விரும்பினால் மாற்றாலாம் என்றும் உச்ச நீதி மன்றம், டிசம்பர் 11 அன்று தீர்ப்பு வழங்கிற்று. ஒரே வரியில், உலகின் மிகப் பெரிய ஜனநாயகமான இந்தியாவின், பல கோடி குடிமக்களை, “சின்னூண்டு சிறுபான்மை” என்று விவரித்த உச்ச நீதிமன்றம், அதே சிறுபான்மையை, பத்து ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை பெறக்கூடிய, குற்றவாளிகளாகவும் அறிவித்தது.

இதை நாங்கள் யாரும் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. “நம் அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கருத்து என்று ஒன்று இருந்தால், அது அனைவரையும் அரவணைத்து போகும் சகோதரத்துவமே” என்று முழங்கி, ஒருபாலீர்ப்பை குற்றமற்றதாக அறிவித்த, தில்லி உயர் நீதி மன்றத்தின் 2009 ஆம் ஆண்டு முற்போக்கான தீர்ப்பிற்கு பிறகு, இதை நாங்கள் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. தில்லி உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு, உலகமெங்கும், மனித உரிமைகளின் மகத்தான் வெற்றி என்று பாராட்டப் பட்டது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர், ஹிலரி கிளின்டன், 2011 ஆம் ஆண்டு மனித உரிமை தினத்தன்று, ஐ.நா. சபையில் ஆற்றிய உரையில், தில்லி உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டிப் பேசினார். அது வரையில், இந்தியாவின் பார்வையில் கொஞ்சம் கொஞ்சமாக, வெளிவரத் துவங்கியிருந்த, இந்தியாவின் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட சிறுபான்மையினர், தீர்ப்பிற்கு பிறகு புது உத்வேகமும், உற்சாகமும் பெற்றனர். அவர்களின் இயக்கமும் வலுவடைந்தது. சட்டத்தின் பாதுகாப்புடன், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கைகளை முழுமையாக வாழவும், தங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கவும், போராடவும், துவங்கினர். இந்தியாவின் பல நகரங்களில், வானவில் பேரணிகள் வருடாந்திர கொண்டாட்டங்களாக வடிவுபெற்றன. உள்ளூர் மற்றும் தேசிய அளவில் மீடியா நிறுவனங்கள், இவர்களின் பிரச்சனைகளை பற்றி பேசவும், எழுதவும் துவங்கின. கூட்டங்கள் நடத்தப் பெற்றன. புத்தகங்கள் எழுதப்பட்டன. திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. மாற்றுப் பாலியல் இந்திய, எப்போழுதும் காணாத பொலிவுடன், வெளிவந்து கொண்டிருந்தது. சரித்திரத்தின் பக்கம் திரும்பி விட்டது என்றும், அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும், தோன்றியது என்பதே உண்மை.

தென்னிந்தியாவின் ஒரு சிறிய நகரில் பிறந்து வளர்ந்த எனக்கு, ஒருபாலீர்ப்பு என்ற வார்த்தையை கூட இருபத்தி ஐந்து வயது வரையில் கேட்டறியாத எனக்கு, இந்த முன்னேற்றம், ஒரு நம்ப முடியாத நிகழ்வு என்றால் அது மிகையாகாது. பல ஆண்டுகள் மனப் போராட்டத்திற்கு பிறகு, ஒரு வழியாக துணிச்சலை வரவழைத்துக் கொண்டு, என் பெற்றோர்களிடம் நான் ஒருபாலீர்ப்பாளன் என்பதை, சில வருடங்களுக்கு முன்பு தான் சொல்லியிருந்தேன். திருமணத்திற்கான நிர்பந்தத்தை நிராகரித்து, மனம் விரும்பிய காதலை கண்டு, மகிழ்ச்சியுடன், மன நிறைவுடன், நேர்மையாக வாழத் துவங்கி இருந்தேன். அவமானமும், குற்ற உணர்வும் நிறைந்த என் இளமை பருவம், ஒரு மறந்து போன கடந்த காலமாக மாறியிருந்தது. எனது அடையாளத்திற்கு ஒரு யோகியத்தையும், எனது இருப்பிற்கு ஒரு உறுதியையும், தந்திருந்தது தில்லி உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு.

உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு வரவிருந்த நாளென்று, நான் ஒரு சிறிய கொண்டாத்தையே திட்டமிட்டிருந்தேன். டிசம்பர் 11 ஆன்று, இந்திய நேரம், காலை பத்தரை மணிக்கு, நான் தற்பொழுது வசிக்கும் நியூ ஜெர்சியில், நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு, தீர்ப்பு வரவிருந்தது. தீர்ப்பின் பூரிப்பில் இரவு முழுவதும் குத்திக் கொண்டிருப்பேன், தூக்கம் இருக்காது, அதானால் அடுத்த நாள் பணிக்கு வரமுடியாது என்று என் பாஸிடம் சொல்லி, விடுப்பும் பெற்றிருந்தேன். தீர்ப்பை கொண்டாட இனிப்புகளும் தயாராக வாங்கி வைத்திருந்தேன். பல்வேறு நகரங்களில் வசிக்கும் என் நண்பர்கள் எல்லோரும் ஒன்றாக ஆன்லைனில் தீர்ப்பின் அறிவிப்பை சேர்ந்து பார்க்கவும் திட்டமிட்டிருந்தோம். இந்தியாவிலிருக்கும் என் நண்பர்களும், குடும்பத்தினரும், உலகெங்கிலும் இருக்கும் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களும், அவர்களது ஆதரவாளர்களும், அவரவர் இடங்களில், ஆன்லைனில், தொலைக்காட்சிகள், வானொலிகள், என்று பல வழிகளில் இணைந்து, இந்தியாவின் சரித்திரத்தில் மறக்கமுடியாத ஒரு பெரிய நிகழ்வான இந்தத் தீர்ப்பை, ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

அதன் பிறகு வந்தது தீர்ப்பு. அடிவயிற்றை அதிர வைத்த அந்த தீர்ப்பு. “கீழ் நீதி மன்றத்தின் தீர்ப்பை தள்ளி வைத்து, சட்டப்பிரிவு 377, அரசியல் சாசனப்படி செல்லுபடியாகும் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது,” என்று தொலைக்காட்சியில், அந்த செய்தி அறிவிப்பாளர் சொன்னபொழுது, என் இதயத் துடிப்பே நின்று போனது. அந்த நொடியில் நான் எப்படி உணர்ந்தேன் என்பதை விவரிக்க வேண்டுமானால், எனக்கு மிக நெருங்கிய ஒருவர் இறந்து போனால், இல்லை, கொலை செய்யப்பட்டிருந்தால் எப்படியிருக்குமோ, அப்படி இருந்தது என்றுதான் விவரிக்க வேண்டும். அதிர்ச்சியில் மனமுடைந்த நான், கதறிக் கதறி அழத் துடங்கினேன். நள்ளிரவில், எனது இல்ல வரவேற்ப்பரையில், தனிமையில் இருந்ததால், என்னால் மனம் விட்டு அழ முடிந்தது. இந்தியாவில் இருக்கும் எனது மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட நண்பர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று ஒரு நொடி யோசித்தேன்.

இந்தியாவிலிருக்கும் எனது நண்பர் கவின், தனது வலைப்பதிவில் இதை வலியோடு விவரிக்கிறார்: “தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், நண்பர்கள், என்று எல்லோரிடமும் ஒரேமாதிரியான கதைகளைத் தான் கேட்கிறேன்: தீர்ப்பு வந்த நேரத்தில், அலுவகங்களில் இருந்தவர்கள், பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாமல், அவசர அவசரமாக ஓய்வு அறைகளுக்கு ஓடிய கதைகள், தங்கள் சோகம் பிறருக்கு தெரிந்து விடக் கூடாது என்று தங்கள் இருக்கைகளிலிருந்து நகராமல் ஒளிந்த கதைகள், உடன் பணி செய்பவர்களுக்கு முன்னால் உடைந்து அழுதுவிடுவோமோ என்ற பயத்தில் அலுவலக சந்திப்புகளை தவிர்த்த கதைகள், என்று எங்கு பார்த்தாலும், எல்லோரிடமிருந்தும், சோகம் நிறைந்த கதைகள். இப்படி நொருங்கிப் போனவர்கள் பச்சிளங்குழந்தைகள் அல்ல, எதையும் எதிர்த்து போராட துணிவும், திண்ணமும் கொண்ட, வயது வந்த பெரியவர்கள்.”

தீர்ப்பு, இந்தியாவிலிருக்கும் எனது மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட நண்பர்களின் வாழ்வில், எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என்பதை உணர, எனக்கு சில நொடிகளே பிடித்தன. சில நிமிடங்களில், இந்தியாவின் பல கோடி குடிமக்கள், குற்றவாளிகள் என்று அறிவிக்கப் பட்டிருந்தார்கள். அவர்களது சுதந்திரம், கண்ணியம், வாழ்கை இவற்றை இந்தியாவின் உச்ச நீதி மன்றம், இரக்கமில்லாமல் உருக்குலைத்திருந்தது. அதுவரையில் உரிமைகளுக்காக போராடிய பலாயிரக்கணக்கான போராளிகள், தங்கள் தாய்நாட்டிலேயே பாதுகாப்பற்ற சுழலுக்குத் தள்ளப் பட்டிருந்தார்கள். 153 ஆண்டுகள் பழமையான, அதுவரையில் பரிசீலிக்கப் படாத, ஒரு தப்பான சட்டம், அன்று இந்தியாவின், மிக உயர்ந்த நீதி மன்றத்தால் பரிசீலிக்கப் பட்டு, அரசியல் சாசனப்படி செல்லுபடியாகும் என்ற முத்திரையையும் பெற்றிருந்தது. வெறுப்பிற்கும், அநீதிக்கும், இதை வீட வேறு என்ன ஊக்கம் வேண்டும்? ஊழல் நிறைந்த இந்தியாவின் போலீஸ் துறை, இந்த சட்டப் பிரிவை, மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட மக்களை துன்புறுத்தவும், பயமுறுத்தவும், பணம்பரிக்கவும், எப்படி ஓர் ஆயுதமாக பயபடுத்தி வந்திருக்கிறது என்பதை, இதோ இந்த பதிவில் காணலாம்.

ஒருபாலீர்ப்பு குற்றம் இல்லை, என்ற தில்லி உயர் நீதி மன்றத்தின் 2009 ஆம் ஆண்டு தீர்ப்பு, இந்தியா முழுவதும் அமுலில் இருந்தாலும், அதை சிறிதும் கருத்தில் கொள்ளாமல், இதோ சில மாதங்களுக்கு
முன்பு, கர்நாடகா போலீஸ் துறை, அந்த மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய ஊரில், பிரிவு 377 ஐ காரணம் காட்டி, ரெய்டு நடத்தி, 14 ஆண்களை கைது செய்தது. சிறு நகரங்களில் இது போல “இயற்கைக்கு மாறாக உறவு கொண்ட” குற்றத்திற்காக, 377 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டால், அதுவே அவர்களின் வாழ்க்கையை சீரழிக்கப் போதுமானது. குற்றத்தை நிரூபிக்க வேண்டியது கூட அவசியம் இல்லை. இந்த அவமானத்தை சந்திப்பதும், ஊரில் இருப்பவர்களின் வெறுப்பை சமாளிப்பதும், எளிதான காரியம் இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஊரை விட்டு ஓடிப் போவதை தவிர, இவர்களுக்கு வேறு வழி கிடையாது என்பது தான் வேதனையான உண்மை. இப்பொழுது உச்ச நீதி மன்றம், 377 சட்டப் பிரிவை நிலைநிறுத்திய பிறகு, சமூகத்தின் பல அங்கங்களில் இருந்தும், அமைப்புகளில் இருந்தும், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட மக்களை, மீண்டும் இருட்டிற்கு தள்ளும் முயற்ச்சிகள் புத்துணர்வுடன் நடைபெறும் என்பதும், எல்லோராலும் இந்த நிர்பந்தங்களை எதிர்க்க முடியாது என்பதும், வருத்தத்திற்கு உரிய விஷயங்கள்.

உலகில் பிற நாடுகளில் நடப்பதை போல, இந்தியாவிலும், பால், ஜாதி, மதம், வர்க்கம் என்று பலவகையான அநீதிகள் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் இவைகளுக்கு நம் நாட்டின் மிக உயர்ந்த நீதி மன்றத்தின் ஆதரவு கிடையாது. இந்த தீர்ப்பிற்கு பிறகு, மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட மக்களின் மீது நடைபெறும் அநீதிகளுக்கு, நம் உச்ச நீதி மன்றத்தின் ஆதரவு உண்டு!

என் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து, மனதை சிறிது தேற்றிக் கொண்டு, இந்தியாவிலிருக்கும் என் தாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அம்மா சொன்னாள்: “நீ இந்தியாவுக்கு வராதப்பா! எங்க இருக்கையோ அங்கேயே நல்ல இரு.”

நம்மவர்களாலேயே நம் சுதந்திரம் பறிக்கப் பட்டதும், நாட்டிற்கு திரும்பாதே என்று பெற்றதாய் சொல்லிக் கேட்டதும் தான், என் வாழ்க்கையிலேயே நான் அனுபவித்த மிகப் பெரிய வலி!

]]>
https://new2.orinam.net/ta/betrayed-by-country-ta/feed/ 1
டயலாக்: செய்திகள் வாசிப்பது அறியாமை https://new2.orinam.net/ta/dialogue-todays-news/ https://new2.orinam.net/ta/dialogue-todays-news/#respond Fri, 31 May 2013 23:14:29 +0000 https://new2.orinam.net/?p=8848 FearIgnoranceHate


“இலங்கை கடற்படை தாக்குதலுக்கு மூன்று தமிழ் மீனவர்கள் பலி.”

அடையாரில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பின் வரவேற்பு அறையில் உட்கார்ந்து, சுவரில் ஒட்டியிருந்த பிளாஸ்மா டி.வீயில் சன் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்த இருபத்தி ஏழு வயது ப்ரீத்தி, சலித்துக் கொண்டாள்: “இந்த காலத்துல எவ்வளவோ ஜாப் ஆபர்ச்சூனிடிஸ் இருக்கு. யாரு இவங்கள ஸ்ரீலங்கா பார்டர்ல போய் மீன் பிடிக்கச் சொன்னா?”

***

“தில்லியில் நள்ளிரவில் இளம்பெண் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார்.”

அன்றைய பேப்பரில் செய்தி படித்த இப்ராகிம் ராவுத்தர் மனைவியிடம் தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டார்: “அல்லா! என்ன கொடுமை. இது தேவையா? இந்த காலத்து பொண்ணுங்கள என்ன சொல்றது. இருட்டின பிறகு ரோட்டுல திரிவானேன்?”

***

“சிகாகோ விமான நிலையத்தில் பயண இடைவேளையில் தொழுகை நடத்திய முஸ்லீம் முதியவர் மூன்று வாலிபர்களால் தாக்ப்பட்டார்.”

நியூ யார்க் நகரத்தில் உள்ள செல்சி ஏரியாவில், ஒரு ரெஸ்டாரென்டில் தனது பாய்ப்ரெண்டுடன் உணவருந்திக் கொண்டிருந்த ஷ்யாம், தனது ப்ளாக்பெரியில் செய்தி படித்தவாறே சொன்னான்: “அனதர் ஹேட் க்ரைம். அப்படி ஏர்போர்ட்டுல ப்ரே பண்ணலேனா என்ன இந்த ஆளுக்கு? வயசு காலத்துல வெட்டி வீராப்பு.”

***

ப்ரீத்தியின் பிளாஸ்மா டி.வீயில் இப்பொழுது செய்தி மாறியிருந்தது.

“மின்சார ரயிலில் பிச்சையெடுத்த திருநங்கைகள் கைது.”

அவளுடன் சேர்ந்து டி.வீ பார்த்துக் கொண்டிருந்த அவளது அம்மா முனங்கினாள்: “என்ன கருமம் இது. யாரு இதுகள ட்ரெயின்ல பிச்சை எடுக்கச் சொன்னா? சரியான தொந்தரவு இதுகளோட.”

***

]]>
https://new2.orinam.net/ta/dialogue-todays-news/feed/ 0
நங்கை பாடும் தாலாட்டு (Lesbian Lullaby) https://new2.orinam.net/ta/lesbian-lullaby-ta/ https://new2.orinam.net/ta/lesbian-lullaby-ta/#comments Sat, 23 Mar 2013 19:04:48 +0000 https://new2.orinam.net/?p=8493 (நங்கை = லெஸ்பியன்)

Pasamalar

பாசமலர் படத்தில் வரும் மலர்ந்தும் மலராத பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. பாடலை ஒருமுறை கேட்டுவிட்டு படியுங்களேன்!

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே
வண்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே..

மாதங்கள் பத்து ஒருத்தி மடியிலே சுமக்க, மற்றவள் மனதிலே சுமக்க
மாதாக்கள் இருவரின் மனம் மகிழ மண்ணில் பிறந்தாயடி
பேதங்கள் போற்றும் இவ்வுலகில் அனவைரும் சமமென்று
நியாயங்கள் செய்யும் நீதியின் வடிவாக நிமிர்ந்து திகழ்வாயடி

(நதியில் விளையாடி..)

அம்மையும் அப்பனுமாக, நானும் அவளும் உன்னை காப்போம் கண்ணே
அதற்கு மேல் சொந்தங்கள் எங்கே என்றால் என்ன சொல்வேன் பெண்ணே?
சிறகில் எனை மூடி அருமை மகளாக வளர்த்த கதை சொல்லவா – மங்கை நான் நங்கை என்றறிந்ததும்
கனவில் நினையாத காழ்ப்பு கொண்டு தவிர்த்த கதை சொல்லவா? குடும்பம் என்னை தவிர்த்த கதை சொல்லவா?

தங்க கடியாரம் வைர மணியாரம் தந்து பெயர் சூட்டுவார், தாத்தா வந்து பெயர் சூட்டுவார் – கண்கள்
பொங்க பேத்தி நீ பெரும்பாக்கியம் என்று பாட்டி தாலாட்டுவார், தொட்டிலில் தாலாட்டுவார்
மடியில் உனைவைத்து மருமகள் என்று மாமன் மார்தட்டுவார், மகிழ்ந்து மார்தட்டுவார் – நீ பிறந்த
நொடியில் ஓடி வந்து சித்தி சீராட்டுவார், சின்னவள் உன்னை சித்தி சீராட்டுவார்

(நதியில் விளையாடி..)

சொந்தங்கள் இப்படிச் சேர்த்துக்கொள்ளும் என்று சொல்ல இதயம் துடிக்குதடி
பந்தங்கள் உன்னை பார்த்து பூரிக்கும் என்று சொல்ல எந்தன் உள்ளம் தயங்குதடி
மணவாளனுக்கு பிறந்திருந்தால் மறுத்திருக்க மாட்டோம் என்று வாதாடுவார்கள்
மகளின் மனைவிக்கு பிறந்ததால் நீ உறவல்ல என்று வேற்றுமை பாராட்டுவார்கள்

கண்ணில் மணி போல, மணியின் நிழல் போல கலந்து வளர்ந்தோமடி – இந்த
மண்ணும் கடல் வானும் மறைந்தாலும் மறக்க முடியாது என்று மயங்கி கிடந்தேனடி
சிறகில் எனை மூடி அருமை மகளாக வளர்த்த கதை சொல்லவா – மங்கை நான் நங்கை என்றறிந்ததும்
கனவில் நினையாத காழ்ப்பு கொண்டு தவிர்த்த கதை சொல்லவா? குடும்பம் என்னை தவிர்த்த கதை சொல்லவா?

மாதங்கள் பத்து ஒருத்தி மடியிலே சுமக்க, மற்றவள் மனதிலே சுமக்க
மாதாக்கள் இருவரின் மனம் மகிழ மண்ணில் பிறந்தாயடி
பேதங்கள் போற்றும் இவ்வுலகில் அனவைரும் சமமென்று
நியாயங்கள் செய்யும் நீதியின் வடிவாக நிமிர்ந்து திகழ்வாயடி

(நதியில் விளையாடி)

]]>
https://new2.orinam.net/ta/lesbian-lullaby-ta/feed/ 1
1989: A Love Story https://new2.orinam.net/ta/1989-a-love-story/ https://new2.orinam.net/ta/1989-a-love-story/#comments Wed, 13 Feb 2013 04:22:10 +0000 https://new2.orinam.net/?p=8263
Radha, Alaigal Oivathillai

Shridhar Sadasivan’s Tamil story 1989 ஒரு காதல் கதை
(1989 – A Love story).
Work in progress version. Available for a limited time.

Audio: Lakshmi Sriraman


This post is part of the V-Day 2013 series called The Original L Word

]]>
https://new2.orinam.net/ta/1989-a-love-story/feed/ 1
பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து கவிதா கிருஷ்ணன் தில்லியில் ஆற்றிய உரை https://new2.orinam.net/ta/kavita-krishnan-on-violence-against-women-ta/ https://new2.orinam.net/ta/kavita-krishnan-on-violence-against-women-ta/#respond Sun, 23 Dec 2012 06:11:03 +0000 https://new2.orinam.net/?p=7826
Kavita Krishnan (Image source: aipwa-aipwa.blogspot.com)
]]>
https://new2.orinam.net/ta/kavita-krishnan-on-violence-against-women-ta/feed/ 0
ஹிலரி கிளிண்டன் ஐ. நா சபையில் வழங்கிய மனித உரிமைகள் பற்றிய உரை https://new2.orinam.net/ta/clinton-un-speech-ta/ https://new2.orinam.net/ta/clinton-un-speech-ta/#respond Wed, 05 Dec 2012 19:40:11 +0000 https://new2.orinam.net/?p=7706
Secretary Clinton, Dec 6th 2011, Geneva (Image: US Mission Geneva)

ஓரினம்.நெட் வெளியீடு
தமிழாக்கம்: ஸ்ரீதர் சதாசிவன்
உதவி: பூங்கோதை பாலசுப்பிரமணியன் & மதன்

]]>
https://new2.orinam.net/ta/clinton-un-speech-ta/feed/ 0
கவிதை: வரமொன்று கேட்டாள்! https://new2.orinam.net/ta/she-asked-for-a-boon/ https://new2.orinam.net/ta/she-asked-for-a-boon/#comments Thu, 09 Aug 2012 04:45:49 +0000 https://new2.orinam.net/?p=7382
Image soruce: The Hindu

 

அப்பாவிடம் சொல்லாதே நீ யாரென்று
அத்தையிடம் சொல்லாதே உன் விருப்பம் ‘அது’வென்று
மாமாவிடம் சொல்லாதே உனக்கு மணாளன் உண்டென்று
மாப்பிளையிடம் சொல்லாதே நீ மறுவீடு கண்டாய் என்று

ஊருக்குத் தெரிய வேண்டாம் உனக்கும் குடும்பம் இருக்கிறதென்று
உலகுக்குப் புரிய வேண்டாம் நீ ஒருபாலீர்ப்பாளன் என்று.
மாதங்கள் பத்து உன்னை சுமந்தவள் கேட்கிறேன் வரம்
மாட்டேன் என்று சொல்லாமல் தருவதே நல்ல மைந்தன் ரகம்.


கைகேயியின் வரமாவது பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தோடு முடிந்தது – இப்படிக்
காலமெல்லாம் என்னை சிறைவாசம் செய்யச் சொல்கிறாயே அம்மா!

]]>
https://new2.orinam.net/ta/she-asked-for-a-boon/feed/ 3
கவிதை: சின்ன சின்ன ஆசை https://new2.orinam.net/ta/chinna-chinna-aasai/ https://new2.orinam.net/ta/chinna-chinna-aasai/#comments Sun, 03 Jun 2012 19:46:57 +0000 https://new2.orinam.net/?p=6905 ஒலி (Audio) வடிவில் கேட்க:

2012 சென்னை வானவில் விழாவின் கலை நிகழ்ச்சியான “நிறங்கள்”லில் வாசிக்கப்பட்ட வடிவம்.

[display_podcast]


கவிஞர்களின் குறும்புக்கு அளவே இல்லை. வெண்ணிலவை தொடுவதும், பூமி அவர்களை சுற்றி வருவதும், தென்றலுக்கு மாலை இடுவதும், சின்ன சின்ன ஆசைகளாம்! சிறிய சந்தோஷங்கள் கூட அரிதாகிப் போன எங்களுக்கு, ஆசைகள் நிஜமாகவே சின்னது தான். கேளுங்கள்.

'வேட்டை' படத்திலிருந்து ஒரு காட்சி. நடிகர்களுக்கும் கவிதைக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை.

சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொடும் அளவுக்கு பெரியதல்ல ஆசை
என் இயல்புடன் இந்த பூமியில் சுற்றி வரவே ஆசை

ஊருக்கு போகும் போது அவனையும் கூட்டிப் போக ஆசை
உலகுக்கு எல்லாம் எங்கள் இருவரையும் பற்றிச் சொல்ல ஆசை
தெருவில் அவனுடன் சேர்ந்து திமுரு நடை போட ஆசை
பொருமும் கண்களை ஒழிக்க அம்மா திருஷ்டிக் கழிக்க ஆசை

‘மாப்பிள்ளை, என் மாப்பிள்ளை’ என்று அப்பா அவனை பார்த்துப் பெருமைபேச ஆசை
‘என் பிள்ளை கிடைக்க அவன் அதிர்ஷ்டசாலி’ என்று அம்மா என்னையும் அருமைபேச ஆசை
மச்சான் என் தம்பி, அவனை வேண்டி வரவேற்க ஆசை
‘அத்தான்’ என்று என் தங்கை அவனை சீண்டிச் சிரிக்க வைக்க ஆசை

பல கதைகள் பேசி பாட்டி அவனை ‘போர்’ அடிக்க ஆசை
பட்டு வேட்டி இரண்டு தாத்தா பரிசளிக்க ஆசை
குல தெய்வம் கோவிலுக்கு குடும்பமாக போக ஆசை
அர்ச்சனை பட்டியலில் அவன் பெயரையும் சேர்த்துக் கேட்க ஆசை

ஊர் முழுக்க உறவு, எங்களை விருந்துக்கு கூப்பிட ஆசை
சீர் வாங்கி வாங்கி எங்கள் கரங்கள் களைத்துப் போக ஆசை
தெருவோரத்தில் தோழி என்னை அணைத்துக் கொள்ள ஆசை
‘ஸ்ரீ மாப்பிள்ளை’ என்று அவனை அழைத்துக் கேட்க ஆசை

தோப்பு துரவெல்லாம் அவனை சுற்றிக் காட்ட ஆசை
வாய்ப்பு வரும்போதெல்லாம் ரகசியாமாய் விரல் பின்ன ஆசை
மனமின்றி கிளம்ப, உடன்பிறப்புக்கள் எங்களை ஒட்டிக் கொள்ள ஆசை
‘மருமகன் நீ மற்றொரு மகன்’ என்று பெற்றோர் அவனைக் கட்டிக் கொள்ள ஆசை

சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொடும் அளவுக்கு பெரியதல்ல ஆசை
என் இயல்புடன் இந்த பூமியில் சுற்றி வரவே ஆசை

]]>
https://new2.orinam.net/ta/chinna-chinna-aasai/feed/ 10
கவிதை: ஒபாமா – ஒரு வார்த்தை சொல்ல பல வருஷம் தயங்கி நின்னேன் https://new2.orinam.net/ta/obama-oru-vaarthai/ https://new2.orinam.net/ta/obama-oru-vaarthai/#comments Thu, 10 May 2012 00:17:01 +0000 https://new2.orinam.net/?p=6570 In a historic and game changing moment, the President of the United States today announced his support for same-sex marriage. “Same-sex couples should be able to get married,” he said in an interview with Robin Roberts of ABC news. Obama has been dilly dallying on this issue for years now, trying to have it both ways and saying he was evolving on the issue. Looks like he finally evolved!

The Tamil song “ஒரு வார்த்தை” is one of my favorites. It is a song between a girl and her boyfriend. She tells him how she had to wait all these years for the boyfriend to say that word. The boyfriend admits he was scared, he didn’t have the guts and he tried his best to avoid the topic, but now he finally managed to say it.

I came across this song today accidentally. I couldn’t help but tweak it as a duet between me and President Obama about his evolution on same-sex marriage. If you are not familiar with the song, you may want to watch it before you read the modified version. I have included a video link below.

நான்: ஒரு வார்த்தை கேட்க பல வருஷம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்
மணமாலை ஒண்ணு பூ பூவா கோர்திருந்தேன்
அந்த சேதிக்காக நொடி நொடியா வேர்த்திருந்தேன்

ஒபாமா: ஒரு வார்த்தை சொல்ல பல வருஷம் தயங்கி நின்னேன்
அந்த பார்வை பார்க்க முடியாம நான் ஒதுங்கி நின்னேன்

நான்: பெலோசி பைடன் என்று என்டோர்ஸ்மென்ட்கள் ஆயிரம் இருந்தும்
உன் என்டோர்ஸ்மென்ட்காகவே எந்தன் கண்கள் காந்து நிற்கும்

ஒபாமா: இதயத்தை தட்டி தட்டி பார்த்து புட்டே
அது திறக்கலை என்றதுமே ஒடைச்சி புட்டே

நான்: நீ தலையசைக்க வேண்டும் என்று, பெட்டிஷன் எழுதி போட்டே
பேச்சி அம்மன் கோவில் சாமி பேபர் சாமி ஆனது என்ன!!
ஒரு வார்த்தை கேட்க பல வருஷம் காத்திருந்தேன்
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்

ஒபாமா: கண்டுக்காம ஒதுக்கிப் பார்த்தேன், கல்யாண பேச்சைத் தவிர்த்துப் பார்த்தேன்
எதுக்குடா வம்புனு விலகிப் பார்த்தேன், எலெக்க்ஷன் முடியட்டும்னு எண்ணிப் பார்த்தேன்

நான்: அடுத்த வீட்டு கல்யாணத்தின் பத்திரிக்கை பார்க்கும் போது
எங்கள் பேரை மணமக்களாக மாற்றி எழுதி ரசித்து பார்த்தேன்

ஒபாமா: இதுவரை எனக்குள்ளே இரும்பு நெஞ்சு
அது இன்று முதல் ஆனது இலவம் பஞ்சு
ஒரு வார்த்தை சொல்ல பல வருஷம் தயங்கி நின்னேன்
அந்த பார்வை பார்க்க முடியாம நான் ஒதுங்கி நின்னேன்
அணைககட்டு போலவே இருக்கும் மனசு நீ தொட்டு உடைஞ்சது என்ன
புயலுக்கு பதில் சொல்லும் எந்தன் இதயம் பூ பட்டு சரிஞ்சது என்ன
அந்த வார்த்தை சொல்லி முதன்முதலா நிமிர்ந்து நின்னேன்
இனி எந்த எதிர்ப்பு வந்தாலும் நான் தயங்க மாட்டேன்

]]>
https://new2.orinam.net/ta/obama-oru-vaarthai/feed/ 1
கவிதை: நீ அழகாய் இருக்கிறாய்! https://new2.orinam.net/ta/how-to-tell-a-trans-person-they-are-beautiful-ta/ https://new2.orinam.net/ta/how-to-tell-a-trans-person-they-are-beautiful-ta/#respond Wed, 07 Mar 2012 17:44:39 +0000 https://new2.orinam.net/?p=6219

“A short poem I wrote when my dysphoria was pretty bad. I finally got up the courage to read it on my youtube account.” – Kaia.

நீ அழகாய் இருக்கிறாய்! – Tamil Translation by Shri, with the author’s permission

All rights with Kaia. Thanks Deen (SALGA NYC) for the Hattip.


நீ அழகாய் இருக்கிறாய் !

– ஸ்ரீதர் சதாசிவன்

‘நீ அழகாய் இருக்கிறாய்’ – என்று என் நண்பனே என்னிடம் நீ சொல்ல நினைக்கும் பொழுது, நன்கு யோசித்துச் சொல்! நாவளவில் சொல்லாதே!

‘நீ அழகாய் இருக்கிறாய், திருநங்கை என்றே நம்பமுடியவில்லை’ – என்ற எண்ணத்துடன் சொல்லாதே, நான் அழகாய் இருக்கிறேன் என்று!
‘நீ அழகாய் தானே இருக்கிறாய், எதற்காக உன் உடலை மாற்ற வேண்டும்?’ – என்ற நிபந்தனையுடன் சொல்லாதே, நான் அழகாய் இருக்கிறேன் என்று!
‘நீ அழகாய் இருக்கிறாய்’ என்று சொன்னவுடன் அதை நான் நம்புவேன் என்ற எதிர்ப்பார்ப்புடன் சொல்லாதே, நான் அழகாய் இருக்கிறேன் என்று!

நம்பமாட்டேன், நம்பமுடியாது, என்னால்.
என் உடல், என் உருவம், என் குரல் என்று எல்லாம் அருவெறுக்க வைக்கிறது என்று என்னிடம் தினம் சொல்பவர்கள் ஏராளம்!
பரவாயில்லை. இருந்தாலும் எனக்கு வேண்டாம், ‘நீ அழகாய் இருக்கிறாய்’ என்ற வெறும் உன் உதட்டளவு தாராளம்.

‘நீ அழகாய் இருக்கிறாய்’ – என்று என் நண்பனே என்னிடம் நீ சொல்ல நினைக்கும் பொழுது, நன்கு யோசித்துச் சொல்!
உதட்டளவில் சொல்லாதே! உண்மையெனில் சொல். உள்ளம் உணர்ந்து சொல்.

‘நீ அழகாய் இருக்கிறாய்’ – என்று என் நண்பனே என்னிடம் நீ சொல். ‘நன்றி’ என்று முகம்மலர என்னால் ஏற்றுக்கொள்ள முடியும் என்று நினைக்கிறன்
‘நீ அழகாய் இருக்கிறாய்’ – என்று நீ சொன்னாலும், என்னால் பல சமயங்களில் அதை ஏன் உணர முடிவதில்லை என்று வியக்கிறேன்.

‘நீ இப்பொழுது அழகாய் இருக்கிறாய்’ என்று சொல்லாதே என் நண்பனே, எப்பொழுதும் அழகாய் இருந்திருக்கிறேன், அழகாய் இருப்பேன் என்று சொல்.
‘நீ அழகாய் இருக்கிறாய்’ – என்று என் நண்பனே என்னிடம் நீ சொல்லும் பொழுது, உறுதியுடன் சொல். என்னால் உன் வார்த்தைகளை உதறித் தள்ள முடியாத உறுதியுடன் சொல்.
நாளை நிலைக்கண்ணாடியின் முன் நான் நிர்வாணமாக நிற்கும் பொழுது, என்னால் உன் வார்த்தைகளை உதறித் தள்ள முடியாத உறுதியுடன் சொல்.

‘நீ அழகாய் இருக்கிறாய்’ – என்று என் நண்பனே, நான் ஆச்சரியப்படும் படி சொல்.
‘நீ அழகாய் இருக்கிறாய்’ – என்று என் நண்பனே, நான் சிறிதும் எதிர்பாராத தருணங்களில் சொல்.
‘நீ அழகாய் இருக்கிறாய்’ – என்று என் நண்பனே, பெண்ணாக உன் பார்வையில் பாஸ்மார்க் வாங்கிவிட்டேன் என்பதால் சொல்லாதே!
‘நீ அழகாய் இருக்கிறாய்’ – என்று என் நண்பனே நான் நானாக இருக்கும் பொழுது சொல்.
‘நீ அழகாய் இருக்கிறாய்’ – என்று என் நண்பனே என்னை முழுமையாக ஏற்றுக் கொண்டு சொல்.
‘நீ அழகாய் இருக்கிறாய்’ – என்று என் நண்பனே என்னிடம் நீ சொல்ல நினைக்கும் பொழுது, நன்கு யோசித்துச் சொல்! உதட்டளவில் சொல்லாதே! உள்ளம் உணர்ந்து சொல்!

]]>
https://new2.orinam.net/ta/how-to-tell-a-trans-person-they-are-beautiful-ta/feed/ 0