ஓரினம் https://new2.orinam.net வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Tue, 22 Aug 2023 06:17:46 +0000 ta-IN hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://new2.orinam.net/wp-content/uploads/2024/03/cropped-imageedit_4_9441988906-32x32.png ஓரினம் https://new2.orinam.net 32 32 திருநம்பிகள் கருத்துக் குறிப்புகள்: an explainer for policy makers [தமிழ்] https://new2.orinam.net/ta/trans-men-explainer-tamil/ https://new2.orinam.net/ta/trans-men-explainer-tamil/#respond Tue, 22 Aug 2023 06:17:05 +0000 https://new2.orinam.net/?p=16395 [மொழிபெயர்ப்பு ஸ்வேதா ஸ்ரீ] English version is here.


திருநம்பிகள் கருத்துக் குறிப்புகள்

திருநம்பிகள்/திருநர் அனுபவமுள்ள ஆண்கள் என்பது பெற்றோர்/மருத்துவ வல்லுநர்களால் பிறப்புறுப்பின் அடிப்படையில் பெண்ணாக நியமிக்கப்பட்டவர்கள், ஆனால் அவர்கள் ஆண்களாக அடையாளப் படுத்துபவர்கள்.

இந்திய அளவில், ‘திருநர்’ என்ற சொல், திருநங்கைகள், ஹிஜ்ரா, கின்னர் போன்ற சமூக-கலாச்சார அடையாளங்களைச் சேர்ந்த திருநங்கைகளையே பெரும்பான்மையான சமூகத்தால் குறிக்கப்படுகிறது. இதன் விளைவாக, திருநம்பிகள் அரசு அதிகாரிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களால் திருநர்களாக பார்க்கப்படுவதில்லை, இதனால் எங்களை பாதிக்கும் முக்கிய பிரச்சினைகள் புறக்கணிக்கப்படுகிறது.

எங்களைப் போன்ற திருநம்பிகள் எங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தும் போது பல போராட்டங்களை எதிர்கொள்கின்றனர். நாம் பிறக்கும்போதே பெண் என்ற அடிப்படையிலான ஆணாதிக்கக் கட்டமைப்புகளிலிருந்து ஒடுக்குமுறைகளை சமாளிக்க வேண்டும், அதே போல் திருநம்பிகள் என்ற பாலின அடையாளத்தின் அடிப்படையில் நம் வாழ்நாள் முழுவதும் பாகுபாடு மற்றும் வன்முறைகளை எதிர்கொள்ளவேண்டி உள்ளது. இது எங்கள் நடமாட்டம், பொது இடங்களுக்கான அணுகல், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், சிவில் உரிமைகள் (குடும்ப வழி சொத்துரிமை , குழந்தை வளர்ப்பு உரிமைகள்) ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் எங்கள் பிறப்பு குடும்பங்கள் மற்றும் பிற நிறுவனங்களிலிருந்தும் கூட வன்முறைகளையும் அதிகமாக்குகிறது.

குடும்பம் மற்றும் சமூகத்தினிடம் இருந்து ஆதரவின்மை மற்றும் வன்முறை காரணமாக நாங்கள் வீடற்ற நிலைக்கு தள்ளப்படுகிறோம். மேலும், பொது இடங்கள், கல்வி, வேலை வாய்ப்புகள், சமூகப் பாதுகாப்பு, வீட்டுவசதி, சுகாதாரம் போன்றவற்றை அணுகுவதில் பாகுபாடு மற்றும் வன்முறையை எதிர்கொள்கிறோம். இதனால், எங்களில் பெரும்பாலானோர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக முறையற்ற சிறிய வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

வாழ்வதற்கான உரிமை, சமத்துவத்திற்கான உரிமை

நமது இந்திய அரசியலமைப்பின் 14, 15, 19 மற்றும் 21 வது பிரிவுகள் சமத்துவத்திற்கான உரிமை, பாலினத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படக்கூடாது, இது பாலின அடையாளத்தையும் உள்ளடக்கியது (NALSA தீர்ப்பு மேற்கோள் AIR 2014 SC 1863), சுய வெளிப்பாட்டு உரிமை, வாழ்வுரிமை போன்றவற்றை நமக்கு வழங்கியுள்ளன. நமது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்கள் நமது பாலின அடையாளத்தை அறிந்து கொள்ளும் தருணத்தில், பாதுகாப்பானயிடமாக இருக்க வேண்டிய குடும்பமே எங்களில் பலருக்கு வன்முறையின் முதல் இடமாக மாறுகிறது. பல நேரங்களில் குடும்பங்களால் திருமணம் செய்து கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறோம், மேலும் மனமாற்ற சிகிச்சை, கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் வன்முறை, குடும்பங்கள் மற்றும் சமூகத்தால் குடும்ப வன்முறை போன்றவற்றுக்கு உட்படுத்தப்படுகிறோம். இந்த வன்முறையில் பலர் தப்பிப்பிழைப்பதில்லை: வன்முறையை சமாளிக்க முடியாமல் பல திருநம்பிகள் தற்கொலை செய்து கொண்ட வரலாறு உள்ளது. எனவே திருநம்பிகளாகிய நாங்கள் நமது இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான உரிமைகளை அணுக முடிவதில்லை.

கல்வி உரிமை 

இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம் அல்லது கல்விக்கான உரிமைச் சட்டம் (RTE) நமது இந்திய அரசியலமைப்பின் 21a பிரிவின் கீழ் இந்தியாவில் 6 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியின் முக்கியத்துவத்தை விவரிக்கிறது. எவ்வாறாயினும், பிறக்கும்போதே பெண்ணாக கருதப்பட்ட சமூக பாலின விதிமுறைகளுக்கு இணங்காத குழந்தைகள், வலுக்கட்டாயமாக ஆண்களுடன் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள், அவர்களில் சிலர் 14 வயதுடையவர்கள்.

நாங்கள் குடும்பங்களின் கட்டாய திருமண முயற்சிகளை எதிர்த்தால் கொடுமை, கற்பழிப்பு, வன்முறை, துஷ்பிரயோகம் மற்றும் மனமாற்ற சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறோம், இது எங்கள் கல்வி வாய்ப்பை தடுக்கிறது மேலும் பள்ளிகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் தள்ளுகிறது.

கல்வி நிறுவனங்களுக்கு அணுகல் உள்ளவர்களும் கூட, தங்களின் பாலின வெளிப்பாடு மற்றும் அடையாளத்தின் காரணமாக வன்முறை, கொடுமை மற்றும் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிறார்கள். கல்வி நிறுவனங்களில் நடக்கும் இந்த வன்முறைகள் கல்வியை இடைநிற்க செய்கிறது, மேலும் நமது கல்வி வாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகளை தடுக்கிறது. மேலும் கிடைமட்ட இடஒதுக்கீடு இல்லாத காரணயத்தீனால் சாதியின் அடிப்படையில் திருநம்பிகளிடையே மேலும் ஒதுக்கப்பட்ட நபர்களின் கல்வி வாய்ப்பை தடுக்கிறது.

வேலை செய்யும் உரிமை

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 16(2) படி குடிமக்களுக்கு பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டவோ அல்லது வேலை செய்யத் தகுதியற்றவராகவோ கருத முடியாது என்று கூறுகிறது, இது பாலின அடையாளத்தின் அடிப்படையிலும் கூறலாம். தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் 2005 இன் படி, பாதுகாப்பான வேலை சூழலை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும், ஆனால் உண்மையில் திருநம்பிகள் தங்கள் பாலின அடையாளத்தின் காரணமாக வேலையில் துன்புறுத்தப்படுகிறார்கள்.

பணியிடங்களில் பாரபட்சத்திற்கு எதிரான கொள்கைகள், திருநர் மக்கள் அடங்கிய உள் குழு, தீர்வுக் கொள்கைகள், ஒரு அறை கொண்ட பாலின நடுநிலை கழிவறை ஆகியவை இல்லை. மேலும் தொழிலாளர்களில் திருநம்பிகள் மற்றும் திருநங்கைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளும் தொழிலாளர் சட்டங்கள் மற்றும் பாலினம்-பிரிவுபடுத்தப்பட்ட புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை.

மேலும், கல்வித் தகுதிகள் இல்லாததால், எங்களில் பலர் ஒழுங்கமைக்கப்படாத  வேளைகளில் நுழைகிறார்கள், அங்கு திருநம்பிகளுக்கு பாதுகாப்பு இல்லை.

காவல்துறை மற்றும் பிற ஆயுதப் படைகளுக்கான ஆட்சேர்ப்புகளில், திருநம்பிகள் மற்றும் பிறப்பால் ஆண்கள் வெவ்வேறு உடலியல்/உடல் திறன்களைக் கொண்டுள்ளனர் என்ற உண்மையைக் கருத்தில் கொள்ளாமல் உடல் பரிசோதனைகளில் பிறப்பால் ஆண்களின் தரத்திற்கு எதிராக போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இத்தகைய தரநிலைகள் திருநம்பிகள் பொது வேலைவாய்ப்பை அணுகுவதற்கான நியாயமான மற்றும் சமமான வாய்ப்புகளைப் பெறுவதை தடுக்கிறது.

ஆரோக்கியத்திற்கான உரிமை

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவு, அடிப்படை வாழ்க்கை உரிமை, தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் ஆரோக்கியத்திற்கான உரிமையை உறுதி செய்கிறது. கட்டுரைகள் 38,39,42,43 மற்றும் 47 ஆகியவை மாநில அரசுக்கு  ஆரோக்கியத்திற்கான உரிமையை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக கடமையை அளிக்கின்றன.

திருநம்பிகளுக்கு மகப்பேறு மருத்துவர்கள், உட்சுரப்பியல் நிபுணர்கள், தோல் மருத்துவர்கள் போன்ற பல சிறப்பு நிபுணர்கள் தேவை. பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார (SRH) சேவைகளை அணுக வேண்டிய திருநம்பிகள், பால் மற்றும் பாலினம் ஆகியவற்றுக்கு இடையேயான அடிப்படை வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாத மகப்பேறு மருத்துவ நிபுணர்களிடம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், மேலும் ஆண்-அடையாளம் மற்றும் ஆண்மையை வெளிப்படுத்தும் நபருக்கு கருப்பை நீக்கம் எவ்வாறு தேவைப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகின்றனர். , மேலும் மாதவிடாய் பிரச்சனைகள், கருப்பை, கர்ப்பப்பை வாய் மற்றும்/அல்லது மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம், கரு பாதுகாப்பு, மகப்பேறியல் அல்லது மருத்துவம் மூலம் கர்ப்பம் களையும் சேவைகள்  பற்றிய புரிதலும் இல்லை.

கூடுதல் பாரமாக, பாலின இணக்கமின்மை/டிஸ்ஃபோரியா கடிதம் வழங்க மருத்துவ நிபுணர்களால் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறோம். இந்த உடல் பரிசோதனைகள் தேவையற்றவை, மேலும் நமது உடல் ரீதியாக தனியுரிமை மற்றும் சுயநிர்ணய உரிமையை மீறுகின்றன.

ஹார்மோன்கள், அறுவை சிகிச்சைகள் மற்றும் பாலினத்தை உறுதிப்படுத்தும் நடைமுறைகளை அணுகுவதில் சிரமங்களை எதிர்கொள்கிறோம். ஹார்மோன் சிகிச்சை, அறுவை சிகிச்சைகள் மற்றும் பொது சுகாதாரத்தை அணுகுவதில் மருத்துவ அலட்சியம், புறக்கணிப்பு, நிபுணத்துவமின்மை மற்றும் அறியாமை போன்ற சிக்கல்களை எதிர்கொள்கிறோம். இதனால் பல திருநர் மக்கள் தங்கள் உயிரைக் கூட இழந்துள்ளனர்.

சமூக உறுப்பினர்கள், சேவை வழங்குநர்கள் (சுகாதாரம், கல்வி, வாழ்வாதாரம், சட்டம்) மற்றும் கொள்கை வல்லுநர்கள், திருநம்பிகளுக்கான குறிப்பிட்ட சிக்கல்கள் மற்றும் பிற சிக்கல்களைப் புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கொள்கை மேம்பாட்டிற்கான ஆலோசனைகளில் பல்வேறு சமூகப் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

]]>
https://new2.orinam.net/ta/trans-men-explainer-tamil/feed/ 0
திருமண சம உரிமை: தமிழ்நாடு LGBTQIA+ சமூக மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான அறிக்கை https://new2.orinam.net/ta/marriage-equality-letter-to-tn-govt-from-lgbtqia-communities-ta/ https://new2.orinam.net/ta/marriage-equality-letter-to-tn-govt-from-lgbtqia-communities-ta/#respond Sat, 06 May 2023 05:14:14 +0000 https://new2.orinam.net/?p=16301 Click here for English

மே 3, 2023

பெறுநர்: தமிழ்நாடு அரசு

பொருள்: தமிழ்நாடு  மாற்று பால்-பாலின-பாலீர்ப்பு (LGBTQIA+) சமூக மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான “திருமண சம உரிமை” அறிக்கை

இந்திய உச்ச நீதிமன்றத்தில் திருமண சம உரிமை மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்று வரும் தருணத்தில், கடந்த ஏப்ரல் 23. 2023 அன்று சென்னையில் இந்த விவகாரம் தொடர்பாக கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் LGBTQIA+ சமூக மக்களுக்காகச் செயல்படும் குழுக்களான கட்டியக்காரி, Queerbatore,  நிறங்கள் சாரிட்டபிள் டிரஸ்ட், ஓரினம், சாத்தி (SAATHII), சகோதரன், தமிழ்நாடு LGBTIQ இயக்கம், திருநர் உணவுக் கூடம் (சென்னை), தோழி, டிரான்ஸ் ரைட்ஸ் நவ் ஆகியவற்றின் உறுப்பினர்கள், தனிநபர் சமூக செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், மனநல நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் தமிழ்நாடு வானவில் கூட்டமைப்பின் அங்கமாவர். 2009-ஆம் ஆண்டு சென்னை வானவில் கூட்டமைப்பு என ஆரம்பிக்கப்பட்ட இந்த முறைசாரா அமைப்பு தற்போது தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. 

இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட எடுக்கப்பட்ட முடிவுகளை அரசின் பார்வைக்குச் சமர்பிக்கிறோம். திருமண சம உரிமை வழக்கு விசாரணையில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தனது பதில் மனுவைத் தாக்கல் செய்யும்போது இதில் உள்ள கோரிக்கைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

  • அறிமுகம் 
  • திருமணமும் அதன் பலன்களும் – LGBTQIA+ சமூக மக்கள் தங்கள் திருமணத்திற்குச் சமூகப் பாதுகாப்பு கோருவது ஏன்? 
  • LGBTQIA+ சமூக மக்களை உள்ளடக்கும் வகையில் தற்போது இருக்கும் தனிப்பட்ட சட்டங்களில் (Personal laws) மாற்றங்கள் செய்ய முடியுமா? 
  • சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழான அறிவிப்புக் கால முறையை மாற்றுதல் 
  • தனிப்பட்ட சட்டங்களை மேம்படுத்துவதற்கான அடுத்த படி – சுயமாகத் தேர்ந்தெடுத்த குடும்பத்திற்கான உரிமை

அறிமுகம்: 

1.1 தமிழ்நாடு அரசு திருநர் மக்களைச் சட்டரீதியாக அங்கீகரித்ததுடன் அவர்களுக்கான நலவாரியத்தையும் 2008-ஆம் ஆண்டில் இருந்து செயல்படுத்தி வருகிறது. நால்சா (NALS) vs ஒன்றிய அரசு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு இதைச் செய்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், அருண் குமார் மற்றும் பிறர்  vs பதிவுத்துறை தலைவர் மற்றும் பிறர் வழக்கில் திருநங்கைக்கும் ஆணுக்கும் இடையிலான திருமணம் இந்து திருமணச் சட்டத்தின் கீழ் செல்லுபடியாகும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. எஸ். சுஷ்மா  vs காவல்துறை ஆணையர் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் LGBTQIA+ சமூக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்ததுடன், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களையும் வழங்கியது. 

1.2 கொள்கை மாற்றம், நீதிமன்றத் தீர்ப்புகள், அரசு வழிகாட்டுதல் போன்றவற்றின் மூலம் LGBTQIA+ சமூக மக்களை அங்கீகரித்து, ஆதரித்து வரும் மாநிலம் என்ற முறையில் மற்றும் சுய மரியாதை/சீர்த்திருத்தத் திருமணத்தை இந்து திருமணச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்காக 1968-ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்த மாநிலம் என்ற முறையில்,  திருமண சம உரிமை விவகாரத்திலும், பாலின பாகுபாடின்றி (ஆண், பெண், திருநர்) LGBTQIA+ சமூக மக்கள் அதிகாரப்பூர்வமாகத் திருமணம் செய்து கொள்வதற்கான உரிமையை வழங்கும் விவகாரத்திலும் தமிழ்நாடு அரசு LGBTQIA+ மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். 

1.3 இந்திய உச்ச நீதிமன்றத்தில் தற்போது சமர்பிக்கப்பட்டுள்ள மனுக்கள் (இனி முதல் “திருமண சம உரிமை மனுக்கள்” எனக் குறிப்பிடப்படும்) மீதான விசாரணையின்போது, சிறப்புத் திருமணச் சட்டம் (Special Marriage Act) மற்றும் மத ரீதியான தனிப்பட்டச் சட்டங்களின் (Religious Personal Laws) கீழ் LGBTQIA+ மக்கள் திருமணம் செய்து கொள்வதற்குத் தமிழ்நாடு அரசு ஆதரவு தெரிவிக்க வேண்டும். 

2. திருமணமும் அதன் பலன்களும்

2.1 திருமணம் என்பது பெரும்பான்மை சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் வயது வந்த இருவருக்கு இடையேயான சமூக ஒன்றிணைவு ஆகும். திருமண சம உரிமை மனுக்களிலும் இது குறித்து மனுதாரர்களால் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். 

2.2 திருமணத்தின் மூலம் கிடைக்கும் சமூக பாதுகாப்பைத் தமிழ்நாடு அங்கீகரித்துள்ளது. இதன் காரணமாகவே ஏழைப் பெற்றோரின் பெண் பிள்ளைகள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்து கொள்ளும் விதவைகள், விதவைகளின் மகள்கள், சாதி மறுப்பு/கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் ஜோடிகள் ஆகியோருக்கு உதவும் வகையில் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவைமகள் திருமண உதவித்திட்டம், அன்னைதெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம், டாக்டர். முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்புத்திருமண உதவித்திட்டம் போன்ற திருமண உதவித் திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

.2.3 திருமணம் என்பது LGBTQIA+ சமூகத்தினருக்குத் தேவையானதோ முக்கியமானதோ இல்லை, திருமணம் செய்து கொள்ளாததால் அவர்களின் அடிப்படை உரிமைகள் எதுவும் மறுக்கப்படவில்லை என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் தற்போது இருக்கும் திருமணச் சட்ட கட்டமைப்பில் உள்ள தடைகளையும் எடுத்துக் காட்டியுள்ளது. ஒன்றிய அரசின் வாதம் பின்வருமாறு – “அவர்கள் இந்த நாட்டில் வாழலாம், ஆனால் தற்போதைய சட்டக் கட்டமைப்பின் கீழ் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது. இவ்வாறு திருமணம் செய்துகொள்ள முடியாத நிலை காணப்படுவது அவர்களின் அடிப்படை உரிமையை மறுப்பதாக அமையாது.” சட்டத்தையும், LGBTQIA+ சமூக மக்களின் தேவைகளையும் ஒன்றிய அரசு சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. தங்கள் இருப்பின் காரணமாக தொடர்ந்து ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படும் LGBTQIA+ சமூக மக்கள் தங்களின் குடும்பங்களை விட்டு வெளியேற்றப்படுகின்றனர் அல்லது வெளியேற நிர்பந்திக்கப்படுகின்றனர். தங்களுக்கான இடத்தை இந்தச் சமூகத்தில் அடைய LGBTQIA+ மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். குடும்பங்களை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் தங்களுக்கான குடும்பங்களை சுயமாகத் தாங்களே தேர்ந்தெடுத்து (Chosen Family) தங்களுக்கான சமூகத்தையும் கட்டமைத்துக் கொள்கின்றனர். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது திருமண உறவு அளிக்கும் உரிமைகளை வழங்குவது இல்லை. டி. வேலுச்சாமி vs டி. பச்சையம்மாள் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழும் ஜோடிகளின் உறவின் தன்மை “திருமணத்தை ஒத்து இருந்தால்” மட்டுமே பெண்கள் குடும்ப வன்முறைப் பாதுகாப்புச் சட்டம், 2005-இன் கீழ் 

2.4 திருமணத்தின் அடிப்படையில் கிடைக்கும் பல்வேறு பலன்களுக்கு அடிப்படையாக இருக்கும் சட்டங்கள் மற்றும் கொள்கைகள் மூலம் தற்போதைய திருமணக் கட்டமைப்பைப் பாதுகாக்க ஒன்றிய அரசு முயல்வது, எதிர்பாலீர்ப்பு கொண்டவர்களுக்குக் கிடைக்கும் உரிமைகளை  ஏற்கெனவே இந்தியச் சமூகத்தில் ஒடுக்குமுறைக்கு ஆளாகி வரும் LGBTQIA+ மக்களுக்கு வேண்டுமென்றே கிடைக்கவிடாமல் செய்வதற்குச் சமமானது.

2.5 சமூக அமைப்பு என்ற முறையில் திருமணமானது பல்வேறு பலன்கள், பொறுப்புகள், கடமைகள் ஆகியவற்றுக்கு முக்கியக் காரணியாக உள்ளது. இந்தியச் சட்டக் கட்டமைப்பு மற்றும் இந்தியக் கலாச்சாரச் சூழலில் திருமணத்தின் மூலம் கிடைக்கும் அந்தஸ்தானது திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் வேறு எந்த உறவின் மூலமும் கிடைக்காது. திருமணத்தின் மூலம் கிடைக்கும் பாதுகாப்பு குறித்த சிறிய பட்டியல் பின்வருமாறு (இவை மட்டுமே அல்ல):

திருமணத்தின் மூலம் கிடைக்கும் பாதுகாப்பு

  • திருமண பந்தத்தில் உள்ள இருவர் அல்லது இருவரில் ஒருவர் மட்டுமே தங்கள் திருமண உறவை முறித்துக் கொள்ள முடியும், வேறு யாரும் இதைச் செய்ய முடியாது. LGBTQIA+ மக்களின் உறவானது அவர்களது பெற்றோரால் தொடர்ந்து பிரிக்கப்பட்டு வருவதால் இந்த அம்சம் அவர்களுக்கு மிக முக்கியமானது மற்றும் மிகுந்த பலனளிக்கக்கூடியது ஆகும்.
  • இந்தியாவில் தற்போது திருமண ஆகாத ஜோடிகளை விடத் திருமணமானவர்களுக்கு எளிதில் வாடகைக்கு வீடு கிடைக்கிறது. தங்கள் குடும்பத்திலிருந்து வெளியேற்றப்படும் LGBTQIA+ சமூக மக்கள், தங்களின் கல்விச் சான்றுகள், அடையாள ஆவணங்களை வீட்டில் இருந்து உடனடியாக எடுத்துச் செல்ல முடியாது என்பதாலும், வேலைக்காக வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தினாலும் தங்குவதற்கான இடத்தைக் கண்டறிந்து பெற திருமண உரிமை அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • கூட்டு வங்கிக் கணக்கு தொடங்குதல், ஆயுள் காப்பீடுகளில் இணையரைப் பலனாளியாகச் சேர்த்தல் போன்ற பலன்கள் LGBTQIA+ சமூகத்தினருக்கும் கிடைக்கும்.
  • தங்கள் இணையரின் உடல் நலம் தொடர்பான முடிவுகளை எடுத்தல், அவசரக் காலங்களில் இணையரின் பிரதிநிதியாகச் செயல்படுதல் போன்ற உரிமைகள் LGBTQIA+ சமூக மக்களுக்குத் திருமணம் மூலம் கிடைக்கும். உயிர் காக்கும் சிகிச்சைகள், அறுவைச் சிகிச்சைகள் போன்றவற்றை மேற்கொள்ள உறவினர்கள் அல்லது இணையரின் கையொப்ப ஒப்புதலை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கோருகின்றனர். தற்போதைய சூழலில் LGBTQIA+ சமூக மக்களுக்கு இந்த மிக முக்கியமான உரிமை கிடைப்பதில்லை. பெரும்பாலான LGBTQIA+ சமூக மக்கள் தங்களின் பால்-பாலின-பாலீர்ப்பு அடையாளங்களின் காரணமாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் அவர்களின் சார்பாக இந்த முடிவுகளை எடுக்க அவர்களின் இணையருக்குத் திருமண உரிமை உதவிகரமாக இருக்கும்.
  • திருமணமானது ஒரு தம்பதியின் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பை வழங்குவதுடன், இணையரின் இறப்பின்போது அவரின் உடலைப் பெறுவதற்கான உரிமை, இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு வாரிசுதாரர் சான்றைப் பெறுதல், உயிலைச் செயல்படுத்துதல், கருணையின் அடிப்படையில் பணி பெறுதல் போன்ற உரிமைகளையும் வழங்குகிறது. 

3. LGBTQIA+ சமூக மக்களை உள்ளடக்கும் வகையில் தற்போது உள்ள தனிப்பட்ட சட்டங்களில் (Personal laws) மாற்றங்கள் செய்ய முடியுமா?  

3.1 இந்து திருமணச் சட்டத்தில் “மணமகள்”, “மணமகன்” ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. சிறப்புத் திருமணச் சட்டத்தில் “நபர்கள்”, “தரப்பினர்” ஆகிய வார்த்தைகளும், அதன் பிரகடனத்தில் “கணவன் மற்றும் மனைவி” என்ற வார்த்தைகளும் பயன்படுத்தப்படுகின்றன. கிறிஸ்தவ திருமணச் சட்டத்தில் “நபர்கள்” எனும் வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. மணமகன், மணமகள், கணவன், மனைவி ஆகிய வார்த்தைகளுக்குப் பதிலாக நபர்கள், இணையர்கள் எனும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பாலினம் அடிப்படையிலான வார்த்தைகளினால் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க முடியும்.  

3.2 குடும்பத்திற்குள்ளான திருமணங்கள் குறித்த ஒன்றிய அரசின் கவலையைத் தீர்க்கும் பொருட்டு, தடைசெய்யப்பட்ட உறவுமுறைகள் குறித்த பட்டியலை இணைத்து ஒரு ஒருங்கிணைந்த பட்டியலை உருவாக்க வேண்டும். 

3.3 திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயதை 18-ஆக மாற்ற வேண்டும். LGBTQIA+ மக்களின் பால்-பாலின-பாலீர்ப்பு அடையாளங்களை அவர்களின் பெற்றோர்கள் சிறிய வயதில் கண்டறிந்தால் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக முடிந்தவரை விரைவாகத் திருமணம் செய்து வைக்க முடியும் என்பதால் இந்த மாற்றம்  LGBTQIA+ மக்களுக்கு உதவிகரமாக இருக்கும். 

4. சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழான அறிவிப்புக் கால முறையை மாற்றுதல் 

4.1 தற்போதைய சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் “அறிவிப்புக் காலம்” எனும் சட்டத்திற்கு முரணான நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் படி, திருமணம் செய்து கொள்பவர்கள் குறித்த விவரம் அவர்கள் மாவட்டத்தின் பதிவாளர் அலுவலகத்தில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். தங்கள் வீட்டை விட்டு வெளியேறிய மற்றும் சிறைப்படுத்துதல், கட்டாய அடையாள மாற்றத்திற்கு உட்படுத்துதல், ஆணவக் கொலை போன்ற அபயாங்களை எதிர்கொள்ளும் LGBTQIA+ மக்களுக்கு இது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். “மறுப்புத் தெரிவித்தல்” என்பது முறையாக வரையறுக்கப்படாததால் இந்த 30 நாள் அறிவிப்புக் காலத்தில் யார் வேண்டுமானாலும் மறுப்பு தெரிவிக்கும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே ஒடுக்குமுறைக்கு ஆளாகி வரும் LGBTQIA+ சமூக மக்களுக்கு இந்த அறிவிப்புக் காலம் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தும்.   

4.2 எனவே சிறப்புத் திருமணச் சட்டத்தின் பிரிவுகள் 5 மற்றும் 6 சட்டத்திற்கு முரணானவை என அறிவிப்பதற்குத் தமிழக அரசு ஆதரவு தெரிவிக்க வேண்டும். 30 நாள் அறிவிப்புக் காலம் நடைமுறையில் இருக்கும் வரை சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் LGBTQIA+ சமூக மக்களுக்கு வழங்கப்படும் திருமணம் தொடர்பான உரிமைகளை அமல்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

5. தனிப்பட்ட சட்டங்களை மேம்படுத்துவதற்கான அடுத்த படி – சுயமாகத் தேர்ந்தெடுத்த குடும்பத்திற்கான உரிமை

5.1 LGBTQIA+ மக்களுக்கான திருமண உரிமை அவர்களின் வாழ்க்கையை நிச்சயமாக மேம்படுத்தும். ஆனால் தங்களுக்கான குடும்பத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமையை LGBTQIA+ மக்களுக்கு வழங்குவதன் மூலம் மட்டுமே அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்திட முடியும். பலமான குடும்ப மற்றும் சமூக உறவு பிணைப்பைக் கொண்ட ஆதிக்க பாலினத்தைச் சேர்ந்த எதிர்பாலீர்ப்பு உடையவர்களைப் போல் அல்லாமல் LGBTQIA+ சமூக மக்கள் தாங்கள் பிறந்த குடும்பத்தையும் தங்களின் சொந்த ஊர்/சமூகத்தையும் விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படுகின்றனர் அல்லது வெளியேற்றப்படுகின்றனர். 

5.2 குடும்ப அட்டை வழங்குதல், ஒரே முகவரியில் அனைவருக்கும் அடையாள ஆவணம் வழங்குதல் போன்றவற்றின் மூலம் சுயமாகத் தேர்ந்தெடுத்த குடும்பங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும். பிறந்த குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜோடிகளுக்குப் பாதுகாப்பு அளித்தல், குழந்தைகளைப் பராமரிப்பதற்கான உரிமை, சொத்துரிமை, சுயமாகத் தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் மருத்துவ முடிவுகளை எடுப்பதற்கான உரிமை, காப்பீடு பெறுதல் ஆகியவை வழங்கப்பட வேண்டும். மேலும் பிற குடும்ப அமைப்புகளுக்கு வழங்கப்படுவது போன்று சுயமாகத் தேர்ந்தெடுத்த குடும்பங்களுக்கும் அரசு மானியங்கள் மற்றும் திட்டங்கள் அளிக்கப்பட வேண்டும். 

5.3 LGBTQIA+ சமூக மக்கள் ஆபத்துக் காலங்களில் உதவிக்காக நாடிச் செல்லும் சட்ட அமலாக்கத் துறையினர் மற்றும் பிற துறையினருக்கு போதுமான விழிப்புணர்வு இல்லையெனில் சட்டம் அல்லது கொள்கையில் செய்யப்படும் எந்தவொரு மாற்றமும் பலனளிக்காது. எனவே சுஷ்மா vs காவல்துறை ஆணையர் வழக்கில் 07-06-2021 அன்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணையின்படி, காவல் துறையினர், சிறைத் துறையினர், மாவட்ட மற்றும் மாநிலச் சட்டச் சேவை அதிகாரிகள் ஆகியோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.  இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மற்றும் அடிமட்டத்தில் பணியாற்றும் சமூகத் தலைவர்கள் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான உதவியை வழங்குவோம் எனும் உறுதியை தமிழ்நாடு அரசிற்கு அளிக்கிறோம்.

நன்றி,

கட்டியக்காரி, நிறங்கள் சாரிட்டபிள் டிரஸ்ட், ஓரினம், சாத்தி (SAATHII), சகோதரன், தமிழ்நாடு LGBTIQ இயக்கம், தோழி, டிரான்ஸ் ரைட்ஸ் நவ் பிரதிநிதிகள் மற்றும் தனிநபர் சமூகச் செயற்பாட்டாளர்கள்

Click here for English


Translation credits: Anish Anto
Image credits: Gokul

]]>
https://new2.orinam.net/ta/marriage-equality-letter-to-tn-govt-from-lgbtqia-communities-ta/feed/ 0
[கவிதை] என் வார்த்தைகள் https://new2.orinam.net/ta/poem-my-words-ta/ https://new2.orinam.net/ta/poem-my-words-ta/#respond Thu, 16 Feb 2023 07:37:05 +0000 https://new2.orinam.net/?p=16208 என் வார்த்தைகள்

 


வலுவிழந்த வார்த்தைகள் கொண்டு கோர்த்த கவிதை
காய்ந்த பூமாலை.

செத்த சொற்கள் மண்டி கிடக்கின்றன
புத்தகக் கல்லறையில்.

சொல்லி பயனில்லை
யார் அறிவார் என் நெஞ்சம்?

பிறந்து சாகும் பிஞ்சு குழந்தைகள் போல்
கேட்டும் கேட்கா என் ஒலியிலா வாக்குகள்
பிறர் கேளாச் செவிகள்.

“நான் இது தான், நான் இது தான்.”
என்று பல முறை கூறியும்
வார்த்தைகள் ஏனோ என்னை தான் தாக்கின
உங்களை அடையவில்லை.

உங்கள் முகச்சுழிவில் அருவருப்பு கண்டு
அவமானம் கொண்டு என் வார்த்தைகள்
திசை மாறி போயின.

வலி சுமந்து
கீழே விழுந்த என் வார்த்தைகள்
எப்படி அடையும் உங்களை?

வாக்கு போரில்
என் சொல் அம்புகளை
வீழ்த்தின உங்கள் சொல் அஸ்திரங்கள்.

அங்கீகாரம் வேண்டி வந்த என் சொற்களை
விரட்டி மிரள செய்து
பின்பும் கூண்டிலே அடைத்தீர்கள்
நியாயமா?


Image submitted by author, courtesy OpenAI.

]]>
https://new2.orinam.net/ta/poem-my-words-ta/feed/ 0
[கதை] அவளும் நானும் https://new2.orinam.net/ta/fiction-she-and-i-ta/ https://new2.orinam.net/ta/fiction-she-and-i-ta/#respond Thu, 02 Feb 2023 16:50:07 +0000 https://new2.orinam.net/?p=16196 அவளும் நானும்

ஆண்டுகள் பல கழித்து
அன்றொரு நாள் அவளை மீண்டும் கண்டேன்!

மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது
அந்தப் பேருந்துநிறுத்தத்தில்.

அத்தகைய கூட்ட நெரிசலிலும் கூட
என் கண்கள் அவளைக் கண்டுப்பிடித்துவிட்டன.

இதில் பெரிதாய் ஆச்சர்யம் ஒன்றும் அல்ல தான்!

ஆம்! அவள் பிம்பம்தனை எங்கனம் என் விழிகள் மறக்கும்?

நான் நேசித்த முதல் பெண் ஆயிற்றே அவள்!!

ஆழ்மனதில் அடிப்படிந்துக்கிடந்த
நினைவுகள் அத்துனையும் ஆர்ப்பரித்துக்கொண்டு மேல் எழும்பின.

பாவம் என்னுள்ளம்!
எதையோ என்னிடம் கதைக்க முன்வர
என் மோட்டார் சைக்கிளோ அதற்கு முட்டுக்கட்டைப் போடுவதுப்போல்
உறுமிக்கொண்டிருந்தது.

நானோ அவளைக் கண்ட மயக்கத்தில்
கணம் மறந்து அங்கேயே நின்று கொண்டிருந்தேன்.

சட்டென்று அவள் விழிகள் என் திசையில் திரும்பின.
திடுக்கிட்டுப்போனேன் ஒரு நொடியில்!

மறுநொடி
அவள் எனை நோக்கி வர கண்டேன்.

வந்ததும் வரிசையாய் கேள்விகள் பல தொடுத்தால்
வழக்கம் போல் என் வார்த்தைகள் அனைத்தும்
அவள் விழிகளுக்குள்ளேயே சிக்கிக்கொண்டன

நெடுநேரம் பேசிவிட்டோம் போலும்
அவள் ஏறவேண்டியே பேருந்து போனதைக்கூட கவணிக்காமல்

பிறகு என்ன! என் ஸ்கூட்டர் எங்கள் இருவரையும் ஏற்றிச்சென்றது அன்று!

She and I: AI art by author


குறிப்பு:

– இந்தக் கவிதை சனவரி 29 2023 அன்று நடந்த 64வது QUILT இலக்கிய அமர்வின் போது ஆசிரியரால் வாசிக்கப்பட்டது.

– படம்: திறந்தவெளி செயற்கை நுண்ணறிவு இயங்குதளம் (OpenAI) மூலம் உருவாக்கப்பட்டது.

]]>
https://new2.orinam.net/ta/fiction-she-and-i-ta/feed/ 0
[ஓவியம்] PS – சொல்லப்படாத காதல் கதை https://new2.orinam.net/ta/vandiyathevan-x-senthan-amudhan/ https://new2.orinam.net/ta/vandiyathevan-x-senthan-amudhan/#respond Mon, 30 Jan 2023 10:31:11 +0000 https://new2.orinam.net/vandiyathevan-x-senthan-amuthan/ பொன்னியின் செல்வன் கதையை பெரும்பாலும் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம் என நம்புகிறேன். இந்த கதையில் சிறு மாறுதல்கள் செய்து குயர் சமூகத்திற்கு ஏற்றவாறு நான் வரைந்திருக்கிரேன். இது முற்றிலும் ஒரு கற்பனையே.

.
வந்தியத்தேவன் 💜 சேந்தன் அமுதன்
.
“உன் நெற்றி
தீண்டும் போதெல்லாம்
நீ என்னை தொட்டு திலகமிட்ட
அந்த அழகிய தருணம்தான்
நினைவிருக்கிறது என்னவனே”
.
என்று காதல் மலர வந்தியத்தேவனை நோக்கி கூறினான் சேந்தன் அமுதன் !!
.
ஹம், நான் படித்த பொன்னியின் செல்வனில் இதை நான் பார்த்ததே இல்லையே என்று யோசித்தேன்…
.
ஆனால் இது யாருக்கும் தெரியாத ஒரு ரகசிய காதல் கதை ஆயிற்றே!

]]>
https://new2.orinam.net/ta/vandiyathevan-x-senthan-amudhan/feed/ 0
[புதுக்கவிதை] அவனும் இவனும் (கோவிடும் என்னவனும்) https://new2.orinam.net/ta/covid-and-my-man-ta/ https://new2.orinam.net/ta/covid-and-my-man-ta/#respond Sun, 29 Jan 2023 17:16:11 +0000 https://new2.orinam.net/?p=16151 அவனும் இவனும் (கோவிடும் என்னவனும்)

அவன் ஊஹானின் ஆய்வகத்தில் தோன்றினான்… இவனோ தமிழ்நாடு என்னும் தாயகத்தில் வேரூன்றினான்;

அவன் என் முகத்தின் துளைகளில் காமம் கொண்டு உட்புகுந்தான்… இவனோ என் அகத்தின் துளைகளில் காதல் கொண்டு உள்நிறைந்தான்;

அவன் என் உடம்பெனும் சிறையுனுள் அகப்பட்ட போது மட்டுமே மூச்சு முட்டுகிறது… இவனோ என் உடம்பெனும் கூட்டினுள் கூடாமல் தனித்திடும் போது சுவாசம் விம்முகிறது;

அவன் என்னுள் பிரவேசித்த பிறகே என்னூன் வெப்பம் கொள்கிறது… இவன் என்னை விட்டு நீங்கினால் என்னூனுயிரெலாம் வெந்து வெந்து ஊதுகனல் ஆகிறது;

அவனால் நான் கொண்ட மயக்கம் மருந்து உண்ணத் தெளியும்… இவனால் நான் கொண்ட மயக்க நோயும் இவனே மருந்தும் இவனே;

அவனால் என் புலன்கள் சில ஆற்றல் இழந்தன… இவனால் என் ஐம்புலனும் செயல் மறந்து நிற்கின்றன;

அவன் என்னை அண்டாமல் அகல அறிவியல் கண்ட தடுப்பூசிகள் உண்டு… இவன் என்னை விட்டு அகல அறவியல் மாண்ட திருமணம் என்ற தடுப்பூசி உண்டு;

அவன் என்னை ஆட்கொண்டால் தற்காலிக உடல் நோயாளி என உலகம் என் மேல் பரிதாபம் கொள்கிறது… இவன் என்னை ஆட்கொண்டால் நிரந்தர உள நோயாளி உலகம் என் மேல் வெறுப்பைக் கக்குகிறது;

அவன் இயல்பாக என்னைத் தீண்டினால் சில வாரங்களுக்கு மட்டுமே வனவாசம்… இவன் இயல்பாக என்னைத் தீண்டினால் பல நாடுகளில் வாணாள் சிறைவாசம்;

அடிக்கடி உருமாறும் அவனுக்கு ஏற்றவாறு உலகம் அவனைச் சமாளிக்கிறது… உருவும் திருவும் அறவே மாறா இவனுள் இருக்கும் என்னை உலகம் ஏனோ ஏற்க மறுக்கிறது;

அவனால் பிறர்க்கு ஏற்படும் நெடுந்துயர் கொடிதினும் கொடிது…என்னுள் இருக்கும் இவனால் எனக்கு ஏற்படும் அருந்துயர் இம்மையிலும் இனிது.

 


குறிப்பு:

– இந்தக் கவிதை சனவரி 29 2023 அன்று நடந்த 64வது quilt இலக்கிய அமர்வின் போது ஆசிரியரால் எழுதப்பட்டு வாசிக்கப்பட்டது.

– படம்: திறந்தவெளி செயற்கை நுண்ணறிவு இயங்குதளம் (OpenAI) மூலம் உருவாக்கப்பட்டது.

]]>
https://new2.orinam.net/ta/covid-and-my-man-ta/feed/ 0
[கதை] இரகசிய சிநேகிதனே https://new2.orinam.net/ta/fiction-secret-friend-ta/ https://new2.orinam.net/ta/fiction-secret-friend-ta/#respond Thu, 26 Jan 2023 16:50:55 +0000 https://new2.orinam.net/?p=16143 AI-generated line drawing of two men embracing each other while a woman looks on.எத்தணை நாள் தான் இந்த நாடகத்தை கொண்டு செல்வது? இதற்கு ஒரு முடிவு எழுதுவது எப்போது? கானல் நீராய் செல்லும் என் காதல் எப்போது உண்மையாகும்? என் மேல் பெரும் மரியாதை வைத்திருக்கும் என் மனைவிக்கு, இந்த உண்மைகள் தெரிய வந்தால் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்? கேள்விகள் மட்டுமே என்னிடம் உள்ளது. பதில் கிடைக்க உதவ வேண்டியவனோ கேள்விகளின் எண்ணிக்கையை மட்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறான். தவறு தான் தன்பாலின ஈர்ப்பாளனான நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்தது தவறு தான். என்ன செய்வது அவனை சந்திக்கும் நாள் வரையிலும் என்னைப் பற்றிய என் பாலீர்ப்புப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல், குழப்பத்தில் இருந்த நான் குடும்பத்தாரின் அழுத்தத்தினால் திருமணம் செய்து கொள்ள வேண்டியதாகி விட்டது. நான் தான் தடுமாறி விட்டேன் அவனைப் பார்த்த அந்த நொடி. அவன் ஏன் நான் வேலைக்குச் சேர்ந்த அதே அலுவலகத்தில் வேலைக்குச் சேர வேண்டும்? அதுவும் எனது திருமணத்திற்கு 10 நாட்கள் முன்பு? ஏன் நானாக அவனது அலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அதே நாளில் அவனிடம் பேச வேண்டும்? கடந்த ஆறுமாத காலத்தைத் திரும்பிப் பார்க்கிறேன்.

ஒரு ஜீன் மாதத்தில் நான் அக்கௌண்டண்டாக* வேலைப் பார்த்துக் கொண்டிருந்த அதே நிறுவனத்தில் மனித வளத் துறையின் இளநிலை அலுவலராக பீட்டர் வேலைக்குச் சேர்ந்தான். திருப்பூரில் இருந்த நூற்றுக்கணக்கான மில்களில் அதுவும் ஒன்று. பீட்டர் என்னை விட 5 வயது சிறியவன் தான். ஆனால் 35 வயதிற்குரிய உடலமைப்புடன் இருந்தான். 30 வயதைக் கடந்த நானோ 25 வயதிற்குரிய உடலமைப்புடன் இருந்தேன். என்னவோ தெரியவில்லை பார்த்த அன்றே அவனிடமிருந்த ஏதோ ஒன்று என்னை ஈர்த்தது. அன்று மாலையே அவனது தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அவனுடன் பேசினேன். ஜீலை மாதத் தொடக்கத்தில் எனக்கு திருமணம் முடிவாகி இருந்ததால் அதற்கு அடுத்து வந்த நாட்களில் கல்யாண வேலையில் பிசியாகி விட்டேன். திருமணத்திற்கு 15 நாட்கள் விடுப்பு எடுக்க வேண்டியதாகி இருந்தது. அதே வேளையில் நிறுவன கணக்கு வழக்கிலும் ஒரு முக்கிய வேலை இருந்தது. எனவே மேலாளரிடம் பேசி, பி.காம் முடித்துவிட்டு ஹெச். ஆர் சம்பந்தப்பட்ட படிப்பு படித்து இருந்த பீட்டரிடம் அந்த வேலையை கொடுக்கச் சொல்லி ஏற்பாடு செய்திருந்தேன். இந்த ஏற்பாடு பீட்டருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்பது அவன் என்னிடம் பேசிய விதத்தில் இருந்து தெரிய வந்தது. எனக்கும் வேறு வழி இல்லை. அன்றிலிருந்து பீட்டர் என்னை வேண்டாதவனாகவே பார்க்க ஆரம்பித்தான்.

எனது திருமணத்திற்காக எடுத்த விடுப்புகள் முடிந்து வேலைக்கு திரும்பி வந்தப்பின்பும் பீட்டர் என்னிடம் வேண்டாவெறுப்பாகவே பேசிக்கொண்டிருந்தான். மதிய உணவு வேலையில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் வேளையில் புதிதாக திருமணம் ஆனவன் தான் பொழுது போக்குக்கான டார்கெட். அப்படி என்னை கேலி பேசி கிண்டலடிக்க ஆரம்பித்தவன் கொஞ்ச நாட்களில் சகஜமாக பேச ஆரம்பித்தான்.

ஆகஸ்ட் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை எனது வாழ்க்கையை மாற்றிப் போட்ட நாள். அப்போது பீட்டர் திருப்பூரில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தான். அலுவலக நண்பர்கள் சிலருடன் சேர்ந்து அந்த ஞாயிற்றுக்கிழமை பீட்டரின் வீட்டில் சரக்கு அடித்தோம். சரக்கு அடித்தப் பின் மற்ற நண்பர்கள் அனைவரின் வீடுகளும் அருகே இருந்ததால் அவர்களது வீட்டிற்குச் சென்று விட்டனர். நான் பீட்டரின் வீட்டில் இரவு தங்கும் முடிவுடன் தான் வந்து இருந்தேன்.அந்த இரவு ஒரே கட்டிலை பகிர்ந்திருந்த நாங்கள், எங்கள் உடல்களையும் கலக்க விட்டோம். எந்த ஒரு தூண்டுதலும் இல்லாமல், அதுவாகவே தோன்றிய காட்டுத்தீ போல எங்களது உடல்கள் தங்களை தழுவிக்கொண்டன. ஆம் அது காட்டுத்தீ தான். அந்த காட்டுத்தீயிற்கான முகாந்திரமோ தொடக்கமோ இன்று வரையிலும் எங்கள் இருவருக்கும் புலப்படவில்லை. மிகவும் இயல்பாய், இலகுவாய் பல வருடம் பழகிய நண்பர்கள் போல் எங்களது உடல்கள் காமம் பேசி பழகிக் கொண்டன அந்த இரவில். திருமணத்திற்குப் பின் மனைவியுடன் பலமுறை உடலுறவு வைத்திருந்தப் போது கிடைக்காத ஒரு முழுமை பீட்டரிடம் எனக்கு கிடைத்தது. அந்த போதை மயக்கத்தில் பீட்டர் சொல்லித் தான் எனக்கு தெரிய வந்தது பீட்டர் என்னை எந்த அளவுக்கு விரும்பி இருக்கிறான் என்று.

“விக்னேஷ், நான் உன்னை பார்த்த அன்றே எனக்கு உன்னை அவ்வளவு பிடித்து இருந்தது, ஆம் நான் ஒரு தன்பால் ஈர்ப்பாளன். ஆனால் அன்று மாலையே உனக்கு திருமணமாகப் போகும் செய்தி கிடைத்தவுடன் எனது மனதில் இருந்த ஆசையை முற்றிலுமாக நீக்க முயற்சி செய்தேன். அதனால் தான் உன்னிடம் சிடுசிடுப்பாக நடந்து கொண்டேன். இன்று இரவு நீ இங்கு தங்கப்போவதாய் சொன்னதும் அடக்கம் செய்திருந்த எனது ஆசை கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. நமக்குள் நடந்த இந்த உறவு என்னை எந்த அளவுக்கு மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என உனக்கு தெரியாது. இப்போது எனக்கு வருத்தம் மட்டுமே உள்ளது. இந்த மது போதை தெளிந்ததும் நீ என்னை மறந்துவிடுவாய், உன் மனைவியிடம் சென்று விடுவாய். எனக்கும் இது புதிதில்லை” என்று சொன்ன பீட்டரிடம் நான் எப்படிச் சொல்வேன், இந்த இரவு தான் என்னை எனக்கு காட்டிய இரவு என்று. ஆம், பீட்டருடன் இருக்கும் இந்த இரவு தான் என்னைப் பற்றிய ஒரு தெளிவான புரிதலை எனக்கு கொடுத்துள்ளது. ஆம் நானும் ஒரு தன்பால் ஈர்ப்பாளன் தான். இது நாள் வரையிலும் இந்த சமூகம் உருவாக்கி வைத்திருந்த ஆண் என்ற பிம்பத்தை, கர்வத்தை நம்பி என்னை ஏமாற்றிக் கொண்டிருந்தேன். பீட்டர்தான் என்னை முழுமையாக்கி, என்னை எனக்கே காட்டியவன்.

அதற்கு அடுத்து வந்த நாட்கள் எனக்கு குழப்பத்தின் நாட்களாக அமைந்தது. இந்த சமூக அமைப்பை எதிர்க்கும் துணிவு என்னிடம் சுத்தமாக இல்லை. என் மனைவியை விட நான் பீட்டரை அதிகம் நேசித்தாலும் எனது மனைவியையும் என்னால் விட்டுக் கொடுக்க முடியாது. அவள் மூலம் கிடைத்திருக்கும் இந்த சமூக அங்கீகாரம் அவள் என் மீது வைத்திருக்கும் காதலையும் மரியாதையையும் விட பெரியது. அதை இழந்து நிற்கும் தைரியம் இல்லை. அதே நேரத்தில் பீட்டரையும் என்னால் விட முடியாது. அவனை நான் மனப்பூர்வமாக காதலிக்கிறேன்.என் இரகசிய காதலன் அவன். என்னதான் நடக்கிறது பார்ப்போமே என்ற ஒரு குருட்டு நம்பிக்கையில் ஒரு வாரம் கழித்து பீட்டரிடம் எனது காதலைத் தெரிவித்தேன்.

சில சமயங்களில் நாம் எவ்வளவு தான் தெளிவாக இருந்தாலும், நாம் செய்வது நெறிமுறை அளவில் தவறு என்று நமது மனசாட்சி தடுத்தாலும், உணர்ச்சிகளுக்கு அடிமையாகி, உணர்ச்சிகளின் போக்கில் சில செயல்களை செய்து விடுவோம். அத்தகைய ஒரு செயல் தான் நான் பீட்டரை காதலித்தது. பீட்டருக்கோ இருதலை கொள்ளி எறும்பின் நிலை. ஒரு பக்கம் நெறிமுறை/ ஒழுக்க மதிப்பீட்டு அளவில் தவறான ஒரு செயல். மறுபக்கம் தனிமையும் காதலின் ஏக்கமும் சூழ் வாழ்வில் ஒழுக்க மதிப்பீடுகளுக்கு முரணாக வந்துள்ள காதல் அழைப்பு.

கிட்டத்தட்ட ஒரு மாத கால அளவில் எங்களுக்குள் தர்க்க ரீதியான, சமூக ஒழுக்க அளவீடுகள் ரீதியான விவாதங்களே தொடர்ந்தன. இன்னொருவரின் இணையர் உன்னை எப்படி என் காதலனாக ஏற்றுக் கொள்வது? இது பீட்டரின் முறைப்பாடு. என்னுள் இருந்த காதல் உணர்வு உன் மூலமாக மட்டுமே தூண்டப் பட்டதற்கும் என்னை நானே கண்டடைந்ததும் உன் மூலமாக நடந்ததற்கு நான் என்னச் செய்வது? இது எனது தன்னிலை விளக்கம். உன் மனைவியை விவாகரத்து செய்து விட்டு உன் காதலை என்னிடம் சொல் – இது பீட்டர். திருமணம் எனும் சமூக அங்கீகாரத்தை இழக்க நான் தயாரில்லை – இது நான். இப்படி ஆரம்பித்த தர்க்கங்கள், இவ்வாறாக முடிவுப் பெற்றது.

மனைவியுடன் இருந்தாலும் நான் தான் உன் முதல் காதலெனச் சொல் – இது பீட்டர்.
மனைவியுடன் இருந்தாலும் நீயே என் உயிரானவன், என் காதலன்- இது நான்.

இந்த தர்க்கங்களின் முடிவில் உணர்ச்சிகளே வென்றது. ஏனெனில் எங்கள் இருவருக்கும் தெரியும், எங்களால் ஒருவரைப் பிரிந்து ஒருவர் வாழ்வது கடினம் என. எனவே எங்களின் இந்த இரகசிய உறவை தொடர்வோம் என்ற நிலைக்கு வந்தோம்.

நீங்கள் நினைப்பது சரிதான், எங்கள் வாழ்வில் நாங்கள் செய்த சிறுமைகள் இவை. எங்களுக்கும் அந்தந்த நேரத்து நியாயங்கள் இருந்தன. அடுத்த மூன்று மாதங்கள் எங்களின் காதல் தேனிலவு மாதங்களாக இருந்தன. திருப்பூரும் கோயம்புத்தூரும் எங்கள் காதலின் சாட்சியங்களை பதிவு செய்து வந்தன. வாழ்வில் முதல் காதலை சுவைக்கும் எங்கள் இருவருக்கும் அந்த மூன்று மாதங்கள் இன்பத்தின் மாதங்களாகத் தெரிந்தது.

அதே வருடம் டிசம்பர் மாத ஒரு ஞாயிற்றுக்கிழமையில், இந்த கதையின் ஆரம்பத்தில் கூறப்பட்டுள்ளது போல் நான் என் மனதுடன் போராடிக் கொண்டிருந்த போது, எனது மனைவிக்கு எங்களின் இந்த இரகசிய உறவு நிலை பற்றி எனது கைப்பேசி உரையாடல்கள் மூலம் தெரிய வந்தது.

உறவினர்கள், பெரியவர்களின் முன்னிலையில் பஞ்சாயத்து ஏற்பாடானது. மனைவியா, இரகசிய காதலனா என முடிவெடுக்க வேண்டிய தருணம். மனைவிக்காக இரகசிய காதலனை கைவிட்டு விட்டு மனைவியுடன் வாழ நினைத்தேன். என் காதலனும் எல்லா பழியையும் தன் மேல் ஏற்றுக்கொண்டு, என்னை நிராபராதியாக்கப் போராடிக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் என் மனைவியும் உறவினர்களும் என் காதலனை தாக்கவும் செய்தனர். அப்போது அவன் என்னை பார்த்த ஒரு பார்வை, கூறிய ஒரு வார்த்தை என்னை கொடும் நெருப்பாய் சுட்டெரித்தது. என்னைக் காதலித்ததைத் தவிர வேறொரு தவறும் இழைக்காத என் காதலன் என்னை நிராபராதி கூண்டில் ஏற்றி விட்டு குற்றவாளியாய் நிற்கிறான். முன்னை விட்ட என் மனசாட்சி என்னை அதிகம் குத்தியது, கேள்வி கேட்டது.

அப்போது நான் ஒரு உரக்கக் கத்தி கூறிய ஒரு சொல், ஒரு செயல் அந்த இடத்தில் ஒரு மயான அமைதியைக் கொண்டு வந்து இருந்தது.

கண்ணீரை அடக்க முடியாமல், ஓடிச்சென்று என் காதலனின் இதழில் இதழ் பதித்தேன். நானும் குற்றவாளிதான், என் மனைவியை விவாகரத்து செய்கிறான் என்று நான் உரக்க கத்தியதில் பஞ்சாயத்தில் சடுதியில் ஒரு மயான அமைதி தோன்றியது. ஆம், திருமணமானவன் என சமூகம் கொடுக்கும் அங்கீகாரத்தை விட என் காதல் எனக்கு கொடுக்கும் காதலன் என்கிற அங்கீகாரமே பெரிது. விவாகரத்து ஒன்றே நான் இதுவரை ஏமாற்றிய என் மனைவிக்கு செய்யும் பரிகாரம். என் காதலுக்கு நான் செய்யும் நியாயம். இம்முறை என் மனசாட்சி உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் என்னைக் காப்பாற்றியது. என் மனைவிக்கு இது எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என என்னால் புரிந்து கொள்ள முடிகிறது தான். ஆனால், அவளுக்கு கடைசி 3 மாதங்களாக நான் செய்த துரோகம் போதும். என்னாலும் பொய்யாய் இரட்டை வாழ்க்கை வாழ முடியும் என்ற நம்பிக்கை இல்லை. என் காதலனின் ஒரு தீர்க்கமான பார்வை என் வாழ்வை இப்படி தலைகீழாக மாற்றும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.

பஞ்சாயத்து முடிந்த அந்த நாளில், என் இரகசிய சிநேகிதனாய் இருந்த பீட்டர் என் கைகளைக் கோர்த்துக்கொண்டு என் காதலனாக, நானும் அவனும் அந்த அறையை விட்டு வெளியேறினோம், எதிர்வரும் இடர்களையும் பிரச்சனைகளையும் ஒன்றாக சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன்.


The image was generated using AI.

]]>
https://new2.orinam.net/ta/fiction-secret-friend-ta/feed/ 0
பாலியல் கல்வி: நீலம் சோசியல் முன்னெடுப்பு https://new2.orinam.net/ta/sex-education-neelam-social-ta/ https://new2.orinam.net/ta/sex-education-neelam-social-ta/#respond Wed, 14 Jul 2021 08:05:00 +0000 https://new2.orinam.net/?p=15669 நீலம் வெப் சோசியல் (Neelam web social) என்னும் YouTube அலைவரிசை, இயக்குனர் பா. ரஞ்சித் அவர்களின் முன்னெடுப்பில் நடத்தப்பட்டு வருகிறது. சமூகம் மற்றும் அரசியல் சூழல் சார்ந்த பல உரையாடல்கள் மற்றும் நேர்கானல்களை, இளைஞர்களின் மொழியில் பல்சுவையாக தயாரித்தளிக்கிறது இந்த தளம்.

அதன் ஒரு பகுதியாக, பாலியல் கல்வி சார்ந்த கலகலப்பான ஒரு தொடர் ஒளிபரப்பப்படுகிறது. பால், பாலினம் மற்றும் பாலியல் சார்ந்த அடிப்படை புரிதல்களை சுவையாக தொகுத்து வழங்கியுள்ளனர். ஜூலை 2 2021 மற்றும் ஜூலை 9 2021 அன்று இரு தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், ஓரினத்தின் ஆர்வலர், சதீஸ் பங்கெடுத்து பாலியல் சார்ந்த உரையாடலை நிகழ்த்தியுள்ளார்.

நீலம் நிறவனத்தின் இந்த முன்னெடுப்பை ஓரினம் வெகுவாக பாராட்டுகிறது. இது போன்ற முன்னெடுப்புகள் மேலும் பல வந்திடவும், அதற்கு ஓரினம் துணை நிற்கும் எனவும் பதிகிறோம். கானொளிகளின் இணைப்பு கீழே.

]]>
https://new2.orinam.net/ta/sex-education-neelam-social-ta/feed/ 0
[கதை] என் தற்காலிக வானவில் அவள் https://new2.orinam.net/ta/yenn-tharkaaliga-vaanavil-aval-ta/ https://new2.orinam.net/ta/yenn-tharkaaliga-vaanavil-aval-ta/#respond Wed, 10 Feb 2021 05:39:40 +0000 https://new2.orinam.net/?p=15435 அது ஒரு ஜுன் மாத கடைசி சனிக்கிழமை. வழக்கம் போல அன்றும் முகநூலில் எனது உண்மை உருவத்தை மறைத்து போலி கணக்கில் உலாவிக் கொண்டிருந்தேன். மதியழகி எனும் நான் நிலவழகி எனும் பெயரில். அரசாங்கப் பணியில் இருந்து கொண்டே அரசிற்கு எதிராகக், அரசின் நிலைபாடுகளுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிப்பது என்பது தன் தலையில் தானே மண்ணை வாரிக்கொண்டதற்குச் சமம் தானே. சமத்துவம், சமூக நீதி சார்பாக எனக்குள் எழும் கருத்துகளை சுதந்திரமாக பகிர்ந்து கொள்ளவே இந்த போலிக் கணக்கு.
ஜூன் மாதம் என்றாலே அது மாற்று பாலீர்ப்பாளர்கள், மாற்று பாலினத்தவர்களுக்கான சுயமரியாதை மாதம். மெசெஞ்சரில் ஒரு குறுஞ்செய்தி வினிதா என்ற பெயரில். பார்த்தவுடனே தெரிந்தது அதுவும் ஒரு போலிக் கணக்கு என்று. அன்று நான் வெட்டியாக இருந்ததால் பேச ஆரம்பித்தேன். பரஸ்பர வணக்கங்கள் மற்றும் விசாரிப்புகளுக்குப் பின்,

‘நிலா! நான் ஒரு சமபால் ஈர்ப்பாளள், உனது பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.’ என வினிதா கூறினாள்.
‘மிக்க மகிழ்ச்சி வினிதா, வாழ்த்துகள்’ – இது நான்.

‘நீங்க இருபால் ஈர்ப்பாளரா?’

‘இல்ல வினிதா, நானும் ஒரு சமபால் ஈர்ப்பாளள் தான்’
(இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும், நிஜமாகவே நான் ஏன் இந்த போலிக்கணக்கில் உலாவுகிறேன் என்று).

இவ்வாறாக ஆரம்பித்த உரையாடல் சில நாட்கள் தொடர்ந்தது.

பொதுவாகவே மெசெஞ்சரில் கடலை போட வருபவர்களை நான் மதிப்பதே இல்லை. ஆனால் வினிதா கூட மட்டும் எனது உரையாடலை நாட்கணக்கில் தொடர்ந்தேன். சில காரணங்கள் இருந்தாலும், முதல் காரணம் இருவருமே ஆண்டி இந்தியன், ஷமுக விரோதி, அர்பன் நக்ஸல் என்ற பட்டங்களை அறிவு ஜீவிகளான சங்கிகளிடமிருந்து பெற்றிருப்பது தான். சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்த வினிதாவுக்கு இந்தியாவின் பன்முகக் கலாச்சாரம் மேல் அளவிலா ஈர்ப்பு; தேடித்தேடி புதுப்புதுக் கலாச்சாரங்களை பற்றித் தெரிந்து கொள்வதும், இந்தியாவின் பன்முகத் தன்மையை சிலாகிப்பதும் மிகவும் பிடித்த ஒன்று. அவளது பால்நோக்குப் பற்றி முதல்நாள் பேசியதுடன் சரி, அடுத்த இரண்டு வாரங்களில் அவள் பேசியது எல்லாம் இந்தியாவின் பன்முகத் தன்மைப் பற்றியும், அதற்கு மாற்றாக ஒருமுகத் தன்மை புகுத்த நினைக்கும் சங்கிகளின் செயல்த் திட்டத்திற்கு எதிரான நிலைப்பாடுகளைப் பற்றியும் தான். சமபால் ஈர்ப்பாளள் என்றாலே நான் கண்டிப்பாக இடதுசாரியாகத் தானே இருக்க முடியும், என்னை என் பாலியல் நோக்கின் அடிப்படையில் ஒடுக்கும் போது, நான் பிற ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானவளாகத் தானே இருக்க முடியும்! எனவே வினிதா பேசிய விதமும், பேச்சும் என்னை வெகுவாகவேக் கவர்ந்தது.
இரண்டு வாரங்களுக்கு பின், நிலவழகியாக பேசிக் கொண்டிருந்த நான் மதியழகியாகவும், வினிதாவாக பேசிக்கொண்டிருந்த அவள் நான்சியாகவும் எங்களது உண்மையான முகநூல் கணக்குகளில் பேச ஆரம்பித்தோம்.

எண்களை பரிமாறிக் கொண்டு அலைபேசியிலும் பேச ஆரம்பித்தோம், ஊர், உலகம், சமூகம் என சுற்றிய எங்கள் பேச்சு, ஒருக்கட்டத்தில் எங்களை நோக்கித் திரும்பியது. நான்சி அவ்வபோது காமத்துபால் கலந்து பட்டும்படாமல் பேச ஆரம்பித்தாள். சில சமயம் உரையாடல் முழுக்க கலவி மட்டுமே நிரம்பியிருக்கும். எனக்கும் அது பிடித்திருந்தது. புதிதாக தோன்றிய இந்த உறவு நட்பா, காதலா அல்லது வெறும் காமமா என்ற குழப்பம் மெல்ல என்னுள் தோன்ற ஆரம்பித்தது.

காதல் – எந்தவொரு வரைமுறைக்குள்ளும், விளக்கங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாத விசித்திரம். 25 வயதை எட்டியிருக்கும் எனக்கும் அந்த விசித்திரம் எப்படி இருக்கும் எனத் தெரியாது. மறுதலித்த பல ஆண்களின் காதல் கோரிக்கைகளையும், நிறைவேற்றப்பட்ட சில பெண்களின் காமக் கோரிக்கைகளையும் கொண்டதுதான் இந்த 25 வருட வாழ்க்கை. சிறுவயதிலே அரசாங்க வேலை கிடைத்ததால், எனது வாழ்க்கையை முடிவு செய்யும் உரிமையை எனது பெற்றோர்களிடமிருந்து பறித்துக் கொண்டேன். எல்லாம் சரி தான், ஆனால் காதல் என்ற உணர்வு மட்டும் எப்படி இருக்கும் என இதுவரை உணர்ந்ததில்லை. வினிதா, இல்லை இல்லை நான்சி காமத்துப்பால் கலந்து பேச ஆரம்பித்த மூன்றாவது வாரத்திலிருந்து, வார்த்தையால் விவரிக்க முடியா ஓர் உணர்வால் ஆட்பட்டிருந்தேன். உடலியல் இன்பத்தை தேவையான அளவு அனுபவித்திருந்த போதும், உணர்வியல் ரீதியான இன்பத்திற்கு உள்ளம் ஏங்கிய சமயத்தில் தான் நான்சியுடனான இப்புது உறவு ஏற்பட்டிருந்தது. விளக்கமுடியா இந்த உணர்வுதான் காதலா? இந்த போதைதான் காதலா?, இப்போதையை நான்சி எப்போதும் எனக்கு தருவாளா, இல்லை இதுவும் மற்றுமொரு உடல்த்தேவைக்கான உறவா? என பல குழப்பங்கள் மனதில் ஓர் அமைதியின்மையை ஏற்படுத்த தொடங்கியது. இதைத் தொடரும் விருப்பம் எனக்கு இல்லை. ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டுமானால் நான்சியை நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என நினைத்தேன். அதற்கு முன் நான்சியிடம் அலைபேசியிலேயே கேட்டேன், நமக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த உறவு எத்தகையது, இவ்வுறவின் நோக்கம் என்ன என்று?!. என் நட்பு தான் அவளுக்கு வேண்டுமாம், தேவைப்படின் அவ்வபோது கலவியும். எனக்கு குழப்பம் இன்னும் அதிகரித்தது. எனவே நாம் நேரில் சந்திப்போம் என கூறியபோது முதலில் மறுத்தவள், என் வற்புறுத்தலில் பேரில் ஒத்துக் கொண்டாள்.

ஜூலை மாத கடைசி சனிக்கிழமை அது. அலுவலக வேலையாக மதுரை வரை செல்கிறேன் என வீட்டில் கூறிவிட்டு சிவகங்கையிலிருந்து கிளம்பினேன், மேலூரிலிருக்கும் நான்சியைப் பார்க்க. தொ. பரமசிவன் அவர்களின் அழகர்கோவிலை படித்தப்பின் மீண்டும் ஒருமுறை அழகர் கோவில் செல்ல விரும்பினேன். எனவே நான்சியும் நானும் அழகர்கோவில் சந்திக்கலாம் என முடிவெடுத்துக் கொண்டோம்.

azhagarkoil
[Image credit: http://streetsmadurai360.blogspot.com/]
பேசிக்கொண்டது போல 11 மணி அளவில் நான் அழகர்கோயில் சென்று விட்டேன். நான்சி வர 30 நிமிடங்கள் தாமதமாகும் என தெரிவித்ததால், நேரம் போக்குவதற்காக அவளது வினிதா என்ற போலிக்கணக்கிலிருந்த பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன். நிறைய பன்முகத் கலாச்சாரம் பற்றிய பதிவுகள், சில காதல் பதிவுகள் இருந்தது. அதில் சில பதிவுகளில் ரோஷிணி என்ற பெயரை டேக் செய்து காதல் பதிவுகளை மே மாதம் வரை வினிதா இட்டிருந்தாள். யார் அந்த ரோஷிணி என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் அந்த கணக்கை ஆராய்ந்தால் அதுவும் ஒரு போலிக் கணக்கு. சில குழப்பங்கள் இது தொடர்பாக எழுந்தாலும், நான்சி வருவதை பார்த்ததும் தற்காலிகமாக மறைந்தது. முதல் நேரடிச் சந்திப்பு. அழகர் கோவிலை தொ.பரமசிவன் அவர்களின் எழுத்துகளின்கண் கொண்டு பார்த்து இரசித்த விட்டு, கோவில் வளாகத்தில் தனியாக இருந்த ஒரு மர நிழலில் அமர்ந்தோம். வினிதாவே ஆரம்பித்தாள். இருவரைப் பற்றிய அடிப்படைத் தகவல்களையும் அலைபேசியிலேயே பகிர்ந்திருந்தோம். தான் தயார் செய்து கொண்டிருக்கும் அரசாங்க வேலைக்கான தேர்வில் தான் தனது கவனம் முழுக்க இருப்பதாக மீண்டும் ஒருமுறை கூறினாள். அவளைப் பற்றிய எந்த முடிவையும் எடுக்காத, அவளது முடிவைப் பொறுத்து எனது முடிவை அமைத்துக் கொள்ளலாம் என நினைத்த நான் இன்று அந்த முடிவை எடுத்துவிட வேண்டும் என தீர்க்கமாக நினைத்தேன். எனவே நானே ஆரம்பித்தேன்.

“நான்சி, நமது உறவை எவ்வாறு அமைத்துக் கொள்ள விரும்புகிறாய்? இந்த உறவு வெறும் நட்பா, இல்லை காமம் கலந்த நட்பா, காதலா, காதலுக்கான படிநிலைகளா? உனது நிலைப்பாடு எதுவென தெளிவாகச் சொல், குழப்பமான மனநிலையோடு நாட்களை கடத்த எனக்கு விருப்பம் இல்லை. இன்றே முடிவெடுப்போம். என்னச் சொல்கிறாய்?”

ஒருமணி நேரத்திற்கும் மேல் பேசியிருப்போம். நான்சியால் ஒரு தெளிவான நிலைப்பாட்டைச் சொல்ல முடியவில்லை. மாற்றி மாற்றி பேசினாள். நான் அவளுக்கு நல்ல தோழியாக வேண்டுமாம்,சில சமயம் கலவியும் வேண்டுமாம், என்னைக் காதலிக்கிறேன் எனச் சொல்கிறாள், உடனே இல்லை என மறுக்கிறாள். அவள் பேசியதன் மூலம் எனது குழப்பம் மேலும் அதிகரிக்கத் தான் செய்தது. மெதுவாக பேச்சை ரோஷிணி பக்கம் திருப்பினேன். யார் அந்த ரோஷிணி எனக் கேட்டேன். ரோஷிணி பெயரைக் கேட்டதும் தடுமாறியவள், அதை மறைக்க முயற்சித்தை நான் கவனிக்காமல் இல்லை. ரோஷிணி எனது நல்ல தோழி எனக் கூறியவள், தோழியோடு தான் காதல் பதிவுகள் இடுவாயா எனக் கேட்டதும் தனது முன்னாள் காதலி எனக் கூறினாள். சரி விடு எனக் கூறிக் கொண்டு, நமது உறவுநிலையை காதலுக்கான படிநிலைகளில் ஒன்றில் வைப்போம், நட்பு என்றால் அதில் கண்டிப்பாக காமம் கலக்கக் கூடாது; எனவே நமது உறவுநிலைக்கு அது சரிவராது என நானே ஒரு நிலைப்பாட்டை அவளிடம் தெரிவித்துக் கொண்டு, எடுத்துக் கொண்டேன்; எனது குழப்பங்களுக்கு ஒரு தற்காலிகத் தீர்வைக் கொடுத்தேன். மதியம் 2 மணியைக் கடந்ததால் இருவரும் ஒரு உணவகத்தில் சாப்பிட்டப் பின் விடைப் பெற்றுக் கொண்டோம்.

அதற்கு அடுத்து வந்த நாட்கள் எனக்கு மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஒரு புது உணர்வால் ஆட்கொள்ளப் பட்டிருந்தேன். காதல் படங்களில் வருவது போலவே எனக்கும் நடப்பது போலத் தோன்றியது. நான்சியுடன் அலைபேசியில் பேசும் போதெல்லாம் இன்பக் கடலில் மிதக்க ஆரம்பித்தேன். நான்சியும் காதல் ஒழுக பேசிய பேச்சுகளும் வார்த்தைகளும் எனக்குள் ஒரு மனக் கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஒரு சமபால் ஈர்ப்பாளராக வாழ்வது அத்துணை சுலபமானது அல்ல, அது உங்களுக்கும் தெரியும். பெற்றோர்களின் எதிர்ப்பு, சீக்கிரம் திருமணம் செய்து கொள் என்ற உறவினர்களின் நச்சரிப்பு என்ற புற அழுத்தங்கள் ஒருபுறம் இருந்தாலும், நிச்சயமில்லா எதிர்காலம் பற்றிய பயம், தனிமையிலே வாழ்க்கை முடிந்துவிடுமோ என்ற பயம் என்ற அகச்சிக்கல்கள் பெறும் அழுத்தத்தைக் கொடுக்கும். நீடித்த ஓர் உறவிற்கு மனம் எப்போது ஏங்கும். எனக்கும் மனம் அப்படி ஏங்கிய நேரத்தில் தான் நான்சியுடனான அறிமுகம் கிடைத்தது. இருந்தாலும், அவசரப் பட வேண்டாம், பொறுமையாக முடிவெடுப்போம் என என் மனதை பக்குவப் படுத்தியிருந்தேன். அதே நேரத்தில் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் வானவில் நிமிடங்களை கொஞ்சம் கூட தாமதிக்காமல், விட்டுவிடாமல் முழுவதும் அனுபவிப்போம் என நினைத்து வானவில் நாட்களை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.

சரியாக நாங்கள் பேச ஆரம்பித்த 45 ஆவது நாள். ஒரு ஏகாந்த மாலைப் பொழுது. நான்சி என்னை அலைபேசியில் அழைத்தாள்.

” மதி, நீ எனக்கு ஒரு நல்ல தோழி; நட்பைத் தவிர நம்மிடையே வேறொன்றும் இல்லை, நேரடியாகவே சொல்கிறேன்; ரோஷிணி என் காதலி, எனக்கு அவள்தான் வேண்டும். எனக்கும் அவளுக்கும் சில வாரங்களாக கருத்து வேறுபாடு நிலவியது. அவள் என்னை ஊதாசினப் படுத்துகிறாள், என்னை வெறுக்கிறாள் என நானே தேவையில்லாமல் கற்பனைச் செய்து கொண்டு அவளிடமிருந்து விலக முயற்சித்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் நான் உன்னுடன் பேச ஆரம்பித்தேன். உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது; ஆனாலும் எனக்கு ரோஷிணி தான் வேண்டும். நேற்று, பல வாரங்களுக்குப் பின் நேரில் சந்தித்தோம். அவள் என் மேல் எவ்வளவு காதல் வைத்திருக்கிறாள் என புரிந்து கொண்டேன். எனவே நம் உறவு காதலாக பரிணமிக்காது, நாம் நண்பர்களாவே இருந்து விடுவோமே. என்னச் சொல்கிறாய்?”

என நான்சி கூறியவுடன் ஒரு நிமிடம் நிலைத்தடுமாறி விட்டேன். பின் ஒருவழியாக சுதாரித்துக் கொண்டு நான் பேச ஆரம்பித்தேன்.

” நல்லது ரோஷிணி, குறைந்தபட்சம் இப்போதாவது இதை சொல்கிறாயே, நல்லது. ஆனால் ஒன்று மட்டும் சத்தியம். நீ என்னை உன் தேவைக்கு பயன்படுத்திக் கொண்டாய் என்று தான் நான் நினைக்கிறேன், உன் உறவில் ஒரு பிரச்சனை என்று நாம் பேச ஆரம்பித்த முதல் நாளே அல்லது நாம் நேரில் சந்தித்த அன்றாவது சொல்லியிருந்தால், நான் தேவையில்லாத கற்பனை உலகை உருவாக்கி இருக்க மாட்டேன். பரவாயில்லை விடு. நன்றாக இரு உன் காதலியுடன். ஆனால் நான் இந்த உறவைத் தொடர விரும்பவில்லை, என்ன சொன்னாய், நான் வெறும் தோழி, இந்த உறவு வெறும் நட்பு,.. ம்ம்ம்ம், தோழியுடன் தான் நீ கலவி உரையாடல்(செக்ஸ்டிங்), வீடியோ செக்ஸ் செய்வாயா? இதைச் சொல்ல உனக்கு வெட்கமாக இல்லை; ஓர் உறவில் சிக்கல் இருக்கும் போதே இன்னொருவருடன் உன்னால் எப்படி இவ்வாறு பேச முடிந்தது, இது கேவலமாக தெரியவில்லையா? உனது உறவிற்கு நீ செய்யும் துரோகமாக தெரியவில்லையா?. ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லுகிறேன். நமக்குள் ஏற்பட்ட இந்த உறவு என்றாவது ஒரு நாள் காதலாக பரிணமிக்கும் என நம்பியிருந்தேன், ஆனால் அதற்கு இப்போது வாய்பில்லை என்று தெரிந்தபின் இதைத் தொடர எனக்கு விருப்பம் இல்லை. கண்டிப்பாக நீ என் தோழி இல்லை, என் வாழ்வில் எனக்கு தற்காலிக இன்பத்தை கொடுத்த ஒரு தற்காலிக வானவில் நீ, அவ்வளவு தான். நீ என்னைப் பயன்படுத்திக் கொண்டாய், என்னை இரண்டாவது தெரிவாக நினைத்துக் கொண்டாய் என்று என் மனம் உறுதியாக நம்புகிறது. மனம் வலிக்கிறது, இந்த வலி நீங்க வேண்டுமானால் நீ என் வாழ்க்கையில் மீண்டும் வர க் கூடாது, இத்தோடு இந்த வானவில் நிமிடங்கள் முடிகிறது” என்று படபடவென பேசிய நான் அவள் பதிலளிக்கக் கூட வாய்ப்புக் கொடுக்காமல் அழைப்பைத் துண்டித்தேன். அவள் என்னை மீண்டும் தொடர்பு கொள்ள முடியா வண்ணம் இருக்க வேண்டிய எல்லாவற்றையும் உடனே செய்து முடித்தேன்.

இதுவரை நான் அனுபவித்திராத காதல் உணர்வை, நான் அனுபவிக்க உதவியவள் அவள். நிச்சயமற்ற நிரந்த வானவில்லை நோக்கிய வெறுமையான பயணத்தில், அயர்ச்சி ஏற்பட்ட தருணத்தில் எனக்கு புத்துணர்ச்சி அளித்த என் தற்காலிக வானவில் அவள். அவள் மேல் எவ்வித கோபமும் எனக்கு இல்லை, நானும் என் தற்காலிக வானவில் நிமிடங்களை நினைத்து மகிழ்ச்சியாகவே உள்ளேன். அவள் கூட மறுபடியும் பேசி நல்ல தோழியாக இருக்க முடியும்தான். இருந்தபோதிலும் அவள் என் தற்காலிக வானவில்லாக மட்டுமே இருந்து விட்டு போகட்டுமே! என்ன சொல்கிறீர்கள்!

– பிரான்சிஸ் திவாகர்.

]]>
https://new2.orinam.net/ta/yenn-tharkaaliga-vaanavil-aval-ta/feed/ 0
‘விசித்திரமான பையனு’க்கு அப்பால் ஒற்றுமையை நோக்கி https://new2.orinam.net/ta/beyond-funny-boy-solidarity-tamil/ https://new2.orinam.net/ta/beyond-funny-boy-solidarity-tamil/#respond Mon, 18 Jan 2021 01:37:11 +0000 https://new2.orinam.net/?p=15406 by YaliniDream and Angel Queentus

image of ocean

முரண்பாடுகள்

இலங்கையின் கொழும்புநகரில் 1983 ஆம் ஆண்டு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, ஒரு இளம், தன்பாலீர்ப்பு கொண்ட தமிழ்ச் சிறுவனை மையமாகக் கொண்டு ஷியாம் செல்வதுரை எழுதிய ஒரு தைரியமான, புதுமையான நாவல் ‘ஃபன்னி பாய்’ (விசித்திரமான பையன்). இடையிலிங்க, திருநர் மற்றும் குயர் தமிழ் பேசும் சமூகங்களின் வாழ்ந்த அனுபவங்களைப் பற்றி பல மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர்ந்த ஒரு நாவல் பெரிய திரைக்குச் செல்வதை வைத்துக்கொண்டு, எங்கள் சமூகங்களைச் சுற்றியுள்ள தவறான கதைகளை உடைக்க மீண்டும் ஒரு முறை நாங்கள் செயலூக்கம் பெறுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

ஃபன்னி பாய் நாவலின் சக்திவாய்ந்த கதைசொல்லல் முறை உலகளாவிய பார்வையாளர்களுக்கு மிகவும் மௌனமாக்கப்பட்ட தமிழ் பேசும் அனுபவங்களில் ஒன்றை எடுத்துச் செல்கிறது. பண்டைய குயர், திருநர் மற்றும் இடையிலிங்கத் தமிழ், முஸ்லீம் வரலாறுகள் இருந்தபோதிலும், காலனித்துவம், சாதிவாதம், மத ஆணாதிக்கங்கள், சர்வாதிகாரவாதம், பொருளாதார சுரண்டல், பேரழிவு முதலாளித்துவம் மற்றும் போர் ஆகியவற்றால் முன்வைக்கப்பட்ட துன்புறுத்தல் மற்றும் தவறான தகவல்களால் நமது சமூகங்களுக்கான இடம் பயங்கரமாகக் குறுகிவிட்டது

1994 ஆம் ஆண்டில் ஃபன்னி பாய் வெளியிடப்பட்ட நேரத்தில், உண்மையான எல்ஜிபிடிகுஐ+ தமிழர்கள் அல்லது முஸ்லிம்கள் இல்லை என்று ஒரு தவறான இருமைக்கட்டமைப்பு வெளிவந்தது. நீங்கள் இந்த வழியில் “வித்தியாசமான” அல்லது “குயர்” அல்லது “விநோதமானவர்” என்றால், நீங்கள் மேற்கத்தைய சமூக வாழ்க்கைமுறைகளால் கவரப்பட்டு மாறிவிட்டீர்கள் என்ற கற்பிதம் உருவாகியிருந்தது.

 

FunnyBoy and Deepa Mehta
இந்தவகை எடுத்துரைப்பானது போரின் வன்முறையால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த இன்டர்செக்ஸ், டிரான்ஸ் மற்றும் குயர் தமிழ் பேசும் சமூகங்களிளுக்கு மேலும் வேதைனையை உண்டு பண்ணியது. தணிக்கை, துஷ்பிரயோகம், சித்திரவதை மற்றும் எல்ஜிபிடிகுஐ+ தமிழ் பேசும் மக்களின் கொலைகளை இந்த இருமை எதிவு நியாயப்படுத்தியது. மேலும் எம் சமூகங்களுக்குள் தனிமை, சுய வெறுப்பு, அவமானம், துருவப்படுத்தல் மற்றும் துண்டு துண்டாதல் பற்றி எரிவதற்கு இது வழிவகுத்தது. எங்கள் சமூகங்களுக்குள் மிகவும் துன்புறுத்தப்பட்டவர்களைப் பாதிக்கும் சாதி, மத மற்றும் வர்க்க அம்சங்கள் பற்றிய நுண்ணறிவு ஃபன்னி பாய் நாவலில் இல்லாவிட்டாலும் கூட, ஷியாம் செல்வதுரை இந்த தவறான இருமைஎதிர்வைத் தகர்த்து, மிகவும் தேவைப்பட்ட ஒரு வெளியைத் திறந்துவைத்தார்.

சமீபத்தில், இந்தக் கதை தீபா மேத்தாவின் தழுவல் மூலம் நாவல் வடிவத்தில் இருந்து திரைப்பட வடிவத்துக்குத் தாவிச்சென்றிருக்கிறது. திரைப்படம் தமிழர் சமூகங்களின் மிகவும் வேதனைக்குரிய நெருக்கமான அம்சங்களைக் குறுக்கிட்டுச் செல்வதன் காரணத்தால், மிகவும் உணர்ச்சிவசப்பட்ட புகழாரங்களும் விமர்சனங்களும் அதையொட்டி எழுந்திருப்பதைக் காண்கிறோம். தமிழ்பேசும் குயர், திருநர், இடையிலிங்க சமூகங்களுக்கிடையே வருத்தம்தரும்வகையில் எதிரொலிக்கும் இவ்விமர்சனத்தின் மையச்சரடு பின்வரும் மூன்று விடயங்களை மையப்படுத்துகிறது: மட்டுப்படுத்தப்பட்ட தமிழ் நடிகர் பிரதிநிதித்துவம், தமிழ் மொழி மோசமான முறையில் உபயோகிக்கப்பட்டிருப்பது, மேலும் வரலாற்றைத் திரிபுபடுத்திக் காண்பித்தமை.
இவை ஆராய்வதற்கும் விவாதிப்பதற்கும் தகுந்த சரியான கரிசனங்கள் என்ற போதிலும், தீவில் உள்ள எல்ஜிபிடிகுஐ+ தமிழ் பேசும் மக்களிடம் கூட்டு ஒன்றிணைவையும் பொறுப்புணர்வையும் நிரூபிக்க தமிழ் புலம்பெயர்ந்தோர் பலரும் தவறியிருப்பதை எங்கள் சமூகங்கள் கண்ணுறுகின்றன. தோல்வியுற்ற இந்தக் கூட்டு ஒருங்கிணைவின் விளைவுகளாக துருவப்படல், ஓரங்கட்டப்பட்ட மக்களை மேலும் மௌனமாக்குவது, மற்றும் சமீபத்திய சூறாவளியால் அதிகரித்திருக்கும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொள்வோரின் உள மற்றும் உடல் பாதுகாப்புகளை உறுதிசெய்யத் தவறும் நிலை ஆகியவற்றைச் சொல்லமுடியும். இந்த சூழ்நிலைகள் பயங்கரமாகத் தீவிரமடையும் திறனைக்கொண்டுள்ளன. எங்களுடைய தமிழ்ச் சமூகங்களுக்குள் கலைகள், நலம் பெறுதல், கூட்டு ஒன்றிணைவு மற்றும் விடுதலை ஆகியவற்றில் எவ்வளவு அக்கறை மற்றும் கவனம் தேவை என்பதை இந்த கவலைக்கிடமான சூழலில் இருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள வித்தியாசமான தமிழ் மொழி பேசும் மக்கள் எதிர்கொள்ளும் தீவிரமான நிலவரங்கள் சர்வாதிகார, பாசிச நிலைமைகளை எதிர்கொள்ளுவோருடனான கூட்டு ஒருங்கிணைவுக்கான பல நுண்ணறிவுகளை நல்க வல்லவை. ஆனால், தொடக்கம் கருதி சில ஆலோசனைகளை இந்த விவகாரத்தில் தம்மை இணைத்துக்கொள்வதைத் தேர்வாய்க்கொள்ளும் பால்மாறா எதிர்பாலீர்ப்புள்ள தமிழர்களுக்குச் (cis straight Tamils) சொல்ல விழைகிறோம். எங்கள் மீதான துஷ்பிரயோகங்கள், தனிமைப்படுத்துதல், கொலைகள், நோய்கள், மற்றும் தற்கொலைகளுடன் உடந்தையாக நிற்க விரும்பாவிட்டால்:

  • எல்ஜிபிடிகுஐ+ தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் அன்பு, கவனிப்பு மற்றும் உறுதிப்படுத்தல் ஆகியவற்றை வெளிப்படுத்துங்கள்
  • இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் நாம் எதிர்கொள்ளும் ஆபத்தான நிலைமைகளை மாற்றுவதற்கான உறுதிப்பாட்டை நிரூபியுங்கள்.
  • திரைப்படத்திற்கான உங்கள் எதிர்வினையை — அது புகழ்ச்சியாக இருந்தாலும் சரி, விமர்சனமாக இருந்தாலும் சரி — எல்ஜிபிடிகுஐ+ தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பு, மேன்மை, மற்றும் விடுதலைக்கான அபிலாஷைகளை அங்கீகரித்தே முன்வையுங்கள். குறிப்பாக போருக்குப் பின்னராக, பொருளாரதாரச் சுரண்டல், அனர்த்தங்கள், வன்முறையென பல்வேறு இடர்களுக்குள்ளும் மேன்மை நோக்கிப் போராடும் கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மலையகம் உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களை மனம் கொள்ள வேண்டும்.

நிலவரங்கள்

திருநர், குயர் மற்றும் இடையிலிங்க மக்கள் பொதுவெளியில் வெளிப்படையாக இருப்பதென்பது, அதிலும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், மிகவும் கடினமான விடயம். தாக்குதல், துன்புறுத்தல், அவதூறு என்பவற்றுக்கு மேலாக எம் சமூகங்கள் வீட்டுவசதி, கல்வி, கூட்டு வழிபாடு மற்றும் மருத்துவ பராமரிப்பு பெற்றுக்கொள்வதில் தடைகளை அனுபவிக்கின்றனர். பெரும்பாலான எல்ஜிபிடிகுஐ+ மக்கள் ஒளிவுமறைவாக இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் தமது கதைகளைச் சேர்க்கவும், ஒருங்கிணைக்கவும், வெளிப்படையாகச் சொல்லவும் முடியாத இருட்டடிப்புக்குள் அவர்களைத் தள்ளியிருக்கிறது.
பல தசாப்தங்களாக போர், அனர்த்தங்கள், சர்வாதிகாரவாதம், மத ஆணாதிக்கம் மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றால் குறுக்கப்பட்டிருந்த இந்த வெளி, “தமிழர்கள் அல்லது முஸ்லிம்கள் ≠ எல்ஜிபிடிகுஐ+” என்ற சமன்பாட்டால் மேலும் இறுகிச் சுருங்கிவிடுகிறது. போர்க்காலப்பகுதியில் எல்ஜிபிடிகுஐ+ மக்கள் போர்க்குற்றங்கள், இராணுவமயமாக்கல், பொலிஸ் வன்முறை மற்றும் இலங்கை அரசால் இலக்குவைக்கப்படல் ஆகியவற்றுக்கு முகம்கொடுத்தது மட்டுமல்லாமல், தமிழ்ப் போராளிகள் மற்றும் அவர்தம் துணை இராணுவங்களின் தந்தைமையவாத கட்டுக்காவல் மற்றும் துன்புறுத்தலையும் சேர்த்தே எதிர்கொண்டனர்.
இந்தக் காலப்பகுதியில், மற்றொரு துருவமுனைப்பு — மற்றொரு தவறான இருமைக்கட்டமைப்பு — உருவாகிற்று: ஒன்றில் நீங்கள் உங்கள் வித்தியாசத்தை (ங்களை) அமைதிப்படுத்தித் தமிழ் தேசியவாதத்திற்கு உங்களை ஒப்புக்கொடுத்து உங்கள் விசுவாசத்தை பெருக்கிக் கொண்டீர்கள், அல்லது துரோகியாக அடையாளம் காணப்பட்டு விலக்கி வைக்கப்பட்டீர்கள். உண்மையில் பார்க்கப்போனால் யதார்த்தம் இதைவிட மிகவும் சிக்கலான ஒன்றாக இருந்தது. வித்தியாசமான தமிழ் பேசும் மக்கள் தமது இருப்பை அழித்தொழிக்க முனையும் பல்வேறு வன்முறைச் சக்திகளை பல்வேறு சிக்கலான வழிகளில் எதிர்கொண்டாக வேண்டியிருந்தது.
போர், கடத்தல், சித்திரவதை மற்றும் கொலை ஆகியவற்றின் கீழ் சமாளித்தல், உயிர்பிழைத்தல் மற்றும் எதிர்ப்பு உத்திகள் ஆகியவற்றின் பன்முகத்தன்மை வேரூன்றத் தொடங்கின பன்முக எதிர்ப்பின் புத்திசாலித்தனமான, இரகசிய வேலைக்கு தவறான தகவல்களை எதிர்கொள்ளும் திறன், பரஸ்பர உதவி, உடல்நலம்/ஆரோக்கியத்தை வளர்ப்பது, துருவமுனைப்புகளைத் தணித்தல், பாதுகாப்பு நெறிமுறைகளை உருவாக்குதல், வேறுபாடுகளைக் கடந்த இரகசிய கூட்டு ஒருங்கிணைவு வலையமைப்புகளை உருவாக்கிப் பராமரித்தல் என்பவற்றில் திறன்கள் தேவைப்பட்டன. வடக்கு மற்றும் கிழக்கில் எல்ஜிபிடிகுஐ+ தமிழர்களின் உயிர்வாழ்வையும் போராட்டத்தையும் ஆதரிக்கவேண்டும் என விழையும் புலம்பெயர்ந்த அல்லது தென்னிலங்கையின் சில பிரதேசங்களைச் சேர்ந்தோரைப் பொறுத்தவரை கூட்டு ஒருங்கிணைவு (solidarity)என்பது மிகவும் துல்லியமாக இருக்கவேண்டும். இந்த சூழல்களில் ஒரு சிறிய தவறு கூட உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

எல்ஜிபிடிகுஐ+ தமிழ் பேசும் மக்களுக்கான அன்பு, பாதுகாப்பு, மேன்மை மற்றும் விடுதலையை மையமாகக் கொண்ட வகையில் ஃபன்னி பாயைச் சுற்றியுள்ள எங்கள் உரையாடல்களை தொடர்ந்து ஆழப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் கூட்டு ஒருங்கிணைவு தொடர்பான பின்வரும் உதவிக்குறிப்புகளை நாங்கள் வழங்குகிறோம். இவ்வழி செயற்படும் போது, அனைத்து தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களை மட்டுமன்றி, ஆப்ரோ-சிலோனீஸ், வன்னியால எத்தோ மற்றும் பிற துன்புறுத்தப்பட்ட, சிறுபான்மைப்படுத்தப்பட்ட எல்லா மக்களையும் விடுதலையை நோக்கி நகர்த்த முடியும், ஒற்றுமையுடன் வேரூன்றிய சூழலை உருவாக்க முடியும் என்று நம்புகிறோம்.

வித்தியாசமான மக்களே, நாம் உங்களை நேசிக்கிறோம். உங்களுடைய தைரியம், மீளெளுகை, திறமை, மற்றும் மந்திரத்தன்மைக்கு நன்றி. அதிசிறப்பான விடுதலை எதிர்காலங்களை நோக்கி பண்டைய மதிநுட்பங்களைக் கடத்தும் நமது புனிதமான பாத்திரங்களை மீண்டும் பெறுவோம்.
வன்முறை, ஒடுக்குமுறை, துருவப்படுத்தல் மற்றும் சர்வாதிகாரத்துடன் போட்டியிடும் சமூகங்களுடன் கூட்டு ஒருங்கிணவு நோக்கிய உதவிக்குறிப்புகள் துல்லியம் மற்றும் தொடர்ச்சியைப் பயிற்சி செய்தல்: ஒரு சம்பவம், உடனடி ஆபத்து அல்லது அவசரநிலை இருக்கும்போது முன்முயற்சி எடுக்க வேண்டும்: “விஷயங்கள் தீவிரமானவை / கடினமானவை / ஆபத்தானவை என்று கேள்விப்பட்டேன், நாங்கள் ஆதரிக்கக் கிடைக்கிறோம். உங்களுக்கு என்ன வேண்டும்? நாங்கள் இன்ன இன்ன விதங்களில் உதவமுடியும். ” நீங்கள் எதை வழங்க முடியும் என்பதில் நடைமுறைச் சாத்தியத்தை கவனம் கொள்ளுங்கள்: மக்களின் உயிருக்கு ஆபத்து இருக்கும்போது, தவறான வாக்குறுதிகள் ஆபத்தானவை. மக்கள் வன்முறையிலிருந்து தப்பிப்பிழைக்கும்போது, போலி வாக்குறுதிகள் அவர்களை அவதியுறச் செய்யும், துண்டு துண்டாக்கி நம்பிக்கையை ஒழிக்கும். உங்கள் வாக்குறுதிகள் குறித்துத் துல்லியமாக இருங்கள்: உங்களுடைய தரப்பு எதை நியாயமுறையில் வழங்கமுடியும் என்பதை அறிந்து வைத்திருங்கள். “இவை எனது திறன்கள். இவற்றை என்னால் இலகுடன் வழங்க முடியும். ஆனால் வேறு சிலவற்றை செய்வது எனக்குக் கடினமாக இருக்கும், ஆனால் முயன்று பார்க்கலாம். இதுதான் என் அனுபத்தின் எல்லை. இங்கே நான் இன்னும் வளர வேண்டி இருக்கிறது. இவையெல்லாம் என் குறைபாடுகள்.

கவனிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் கலாச்சாரத்தை உருவாக்குதல்: நாம் சர்வாதிகார ஆணாதிக்க அதிகாரக் கட்டமைப்புக்குக் கீழ் அடக்கப்பட்டிருக்கும் நிலையில், சுய பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்பேற்றல் நடைமுறைகளைப் பின்பற்றுதல் ஏற்படுவது கடினமாக இருக்கலாம். கவனிப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதென்பது மேல் / கீழ் செயல்பாட்டு முறைகளில் தங்கியிருக்காத ஒரு பொறுப்புணர்வை அதிகரிக்கிறது. நீங்கள் ஒரு குழுவுடன் அநாமதேயமாக பணிபுரிந்தாலும், கவனிப்பு, தீவிர ஒப்புதல் மற்றும் ஆரோக்கியத்தை வளர்க்கலாம். அர்ப்பணிப்பைச் செய்ய முடியாத ஒரு நிலையில், அல்லது தவறிழைத்த ஒரு நிலையில் நேர்மையுடன் நபர்கள் இருக்க முடிகிற ஒரு சூழலானது நீங்கள் ஒருங்கிணைவுடன் இருக்கிற எல்லொருடைய பாதுகாப்பையும் உறுதி செய்ய இன்றியமையாதது.

திறன்கள் / தகவல்களைப் பகிர்தல், பரிமாற்றத்தை எளிதாக்குதல் மற்றும் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் முடிவெடுப்பதை ஆதரித்தல்: சுரண்டப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து அமைப்புரீதியாக விலக்கி வைக்கப்பட்டுள்ள திறன்கள், தகவல்கள் மற்றும் “நிபுணத்துவம்” ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் அந்த அணுகலை ஜனநாயகமயமாக்கும் பொறுப்பு அணுகல்வாய்ப்பு மற்றும் சலுகை உள்ளவர்களுக்கு உண்டு. பட்டேர்னலிஸ (paternalism) நிலைப்பிரகாரம், “நிபுணத்துவம்” உள்ளதாகக் காட்டிக்கொள்ளும் அணுகல்வாய்ப்புக் கொண்ட நபர்கள் ஒடுக்கப்பட்ட நபர்கள் சார்பில் பேசுவதாகச் சொல்லி முடிவுகளையும் எடுப்பதைக் காணலாம். கூட்டு ஒருங்கிணைவு என்பது இந்த மேற்சொன்ன இயங்குதளத்தை தலைகீழாக்குவதை வேண்டிநிற்பது. ஒடுக்கும் சக்திகளால் ஆகக்கொடூரமாகப் பாதிக்கப்பட்டோர் தம்மைக்குறித்து தகவலறிந்த முடிபுகளை எடுப்பதற்கு நம்மாலான ஆதரவை வழங்கவேண்டும். அத்தோடு மட்டுமன்றி இதர ஒடுக்கப்பட்ட சமூகங்களுடன் பரிமாறல்களை ஏற்படுத்தித் தருவதன் மூலம் கூட்டிணவுகள், உத்திகள் மற்றும் தாக்கத்தை வலுப்படுத்தமுடியும். துன்புறுத்தப்பட்ட சமூகத்தின் அபிலாஷைகளைப் பொறுத்து அவர்கள் எவ்வாறு தம் நோக்குகள் மற்றும் இலக்குகள் நோக்கி நகரமுடியும் என்பதற்கு அணுகல் வசதிகள் கிடைக்கப்பெற்ற நபர்கள் சிபாரிசுகளையோ அல்லது தெரிவுகளையோ வழங்குவதன் மூலம் உதவமுடியும். ஆனால், இறுதியாக முடிவு எடுக்கும் வலு அந்தச் சமூகத்தின் கரங்களிலேயே இருக்க வேண்டும்.
வேறுபாடுகளை மீறிய ஆதரவு, பரஸ்பர புரிந்துணர்வு, மேலும் ஒருங்கிணைவை வளர்த்தல்: எல்ஜிபிடிகுஐ+ தமிழர்களைப் பொறுத்தவரை, கடூரமான நிலைமைகள் மற்றும் தவறான தகவல்கள் பன்மைத்துவத்தை எவ்வாறு தடுக்கும் என்பதையும், அதற்கு பதிலாக வேறுபாடுகளைத் தூண்டி விரோதம் மற்றும் துருவமுனைப்பை வளர்ப்பதையும் நாங்கள் கண்டிருக்கிறோம். பன்மைத்துவம் என்பது விடுதலைச் செயற்பாட்டில் அவசியமான, அழகான பகுதி. பன்மைத்துவ தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் தீர்வுகளை உருவாக்குவது ஒரு நியாயமான மற்றும் சமமான சமுதாயத்தை நோக்கிய பாதையாகும். பெரும்பாலும், சலுகை பெற்ற குழுக்கள் தாம் “சிறந்தவர்கள்” என்று கருதுபவர்களை ஒடுக்கப்பட்ட சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவோராய் தேர்ந்தெடுப்பதன் மூலம் பெயரளவிலான உட்சேர்ப்பு பாசாங்கில் (tokenization) பங்கேற்பார்கள். இந்த பெயரளவிலான-உட்சேர்ப்பு சில அதிகாரக் கட்டமைப்புகளை உருவாக்கி மேலும் மேலும் சிதைவுறுதலையும் நம்பிக்கையீனத்தையும் சமூகங்களிடையே வளர்த்துச் செல்லும். வன்முறையால் பாதிக்கப்பட சமூகங்களுக்கு நடைமுறையில் தேவைப்படுவதென்பது தொடர்புறவும், நலம் பெறவும், வேறுபட்ட அனுபவங்கள் நோக்குநிலைகளை மீறி ஒன்றுபடவுமான ஆதரவு தான்.

மீண்டோரை மையமாகக் கொண்ட ஒருங்கிணைத்தல் ஏற்பாடுகள்:தீங்கு குறித்த பகுப்பாய்வொன்றை நடத்துங்கள். தீங்கு மற்றும் வன்முறைகளால் அதிகம் பாதிப்புற்றோரின் தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை கொடுங்கள். ஒரு நபர் தனக்கு தீங்கு நேர்ந்ததெனப் பகிர்ந்து கொள்ளும்போது, ​​கவனத்துடனும் புரிதலுடனும் செவிமடுக்க வேண்டும். தீங்கிலிருந்து மீண்டோர் பாதிகாப்பான சூழல்களை அணுகவதற்கு வழிவகை செய்வதே முதன்மைச் செயற்பாடாக இருக்கவேண்டும். ஒரு நபருக்கு தீங்கு நேரும் சூழ்நிலையை விட்டு வெளியேற முடியாவிட்டால், அச்சந்தர்ப்பத்தில் ஆதரவு என்பது பாதுகாப்பாகத் தீங்கைச் சுழியோடிக் கடப்பது பற்றிய ஆலோசனையாக இருக்க முடியும். ஒரு நபர் தீங்கு விளைவிக்கும் நிலைமைகளை விட்டு தப்பி வெளியேற முயற்சிக்கிறார் என்றால், அவர் தப்பிக்க உதவுவது மற்றும் பாதுகாப்பான தஞ்ச விடுதிகளைக் கண்டுபிடிப்பது போன்றவை கூட்டு ஒருங்கிணைவாகும். தீங்கு நேரும் நிலவரங்களில், எமது இலக்குகள் தடுப்பு, இடையீடு மற்றும் எதிர்கொள்ளல். சம்மத உடன்பாட்டையும் சுய நிர்ணயத்தையும் ஆதரித்தல் என்பது தீங்கு நேரும் சூழல்களில் மேலும் முக்கியமான ஒன்று. பாதுகாப்பைத் தேடும் நபர்கள் பாதுகாப்பு வசதிகள் உள்ளோரிடம் தங்கியிருக்க நேர்கையில் அதிகார நிலைமைகள் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது.
பொருத்தமான தந்திரோபாயங்களைப் பயன்படுத்துதல்: களத்திலிருந்து வரும் செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியே கொண்டு செல்வது கூட்டு ஒருங்கிணைவில் மிகவும் உபயோகமான ஒரு உத்திதான், ஆனால் சில முன்னெடுப்புகள் இரகசியமாக இருக்கவேண்டியதும் அவசியமாகும். சில நேரங்களில், தீங்கற்றவர் என்ற அபிப்பிராயம் நன்மைபயக்கக் கூடிய ஒன்றாக ஒருக்கலாம். நீங்கள் கூட்டு ஒருங்கிணைவில் உள்ள சமூகத்தின் அன்றாட வாழ்வியல் யதார்த்தத்தில் இருந்து ஒருங்கிணைவு உத்திகளையும் தந்திரோபாயங்களையும் வடிவமையுங்கள். கள மூலோபாயம் அற்ற ஊடக வெளிச்சம் சில நேரங்களில் இலக்குவைக்கப்பட்ட சமூகங்களை பாதுகாப்பற்ற ஆபத்து நிலவரத்துக்குள் தள்ளிவிடக்கூடும்.

வலிந்த ஒத்திசைவினூடு துணைபோதலை மறுத்தல்: தமிழ்பேசும் எல்ஜிபிடிகுஐ+ மக்களைப்போலவே, பல வேறு சமூகங்களும் தங்களுடைய ஒருங்கிணைப்பு வேலைகளை இரகசியமாகச் செய்ய வேண்டிய நிர்ப்பந்ததில் உள்ளன. குரலெழுப்பும் சக்தியுள்ள, பரந்த வெளியில் செயற்படும் வாய்ப்புள்ள சலுகை நிறைந்த சமூகங்கள் இரகசியமாகச் செயற்படும் நிபந்தனையின் கீழிருப்போரின் செயற்பாடுகளை வலிந்த ஒத்திசைவின் மூலம் தமதாக்கிக் கொள்ளும் அபாயம் உண்டு. பாதுகாப்புக் காரணங்களுக்காக மறைந்தே இயங்கவேண்டியிருக்கும் சமூகங்களுடன் கூட்டு ஒருங்கிணைவில் வேலை செய்யும்போது, இந்த வலிந்த ஒத்திசவை பாதுகாப்பை விட்டுக்கொடுக்காமல் மறுதலிக்க வேண்டிய தேவை உருவாகிறது. ஒரு சமூகத்தின் சார்பில் அவர்களுக்காகப் பேசுவதற்கும், அல்லது அவர்களுடைய விருப்பங்கள், ஆய்வுகள், நுன்ணறிவுகளை வெளிக்கொணர்வதற்கும் இடையே பாரிய வித்தியாசங்கள் உண்டு.

அதிகாரத்தையும் கூட்டுழைப்பையும் பரிசீலித்தல்: கூட்டு உழைப்பென்பது திறன்கள், நுண்ணறிவுகள், ஏலுமைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து தாக்கமிகு இடையீட்டை நிகழ்த்துவதற்கான ஒரு சந்த்தர்ப்பத்தை வழங்குகிறது. என்றபோதிலும், வழக்கத்திலிருக்கிற ஒரு பொதுவான சுரண்டல் நடைமுறை குறித்து நாம் கவனம் கொள்ள வேண்டும். சலுகை மிகுந்த ஆதிக்க சமூகங்கள் தாம் கொண்டுநடத்தும் முன்னெடுப்புகள் மற்றும் இடையீடுகளுக்குள், ஒடுக்கப்பட்ட மக்களின் இருப்பைச் “செருகிவிட்டு” “ஆதரவளித்து” “பெரிதாக்குவதன்” மூலம் ஒருவித செல்வாக்கைத் தேடிக்கொள்ள முனைவர். இந்த முனைப்பின் கீழ், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் இருப்பானது ஆதிக்க சமூகங்களின் செயல்களை நியாயப்படுத்துவற்கு துணைபோகும் நிலை ஏற்படுகிறது. இந்தவகையாக துணைபோகும் ஒத்திசைவை நல்க வேண்டிய அழுத்தத்தை உணரும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தமது அருமந்த நேரத்தையும் சக்தியையும் தமது தேவைகளில் செலவிடுவதைத் தவிர்த்து வசதி வாய்ப்புள்ள ஆதிக்க சமூகங்களுக்காக விரயமாக்க வேண்டிய நிலைக்கு வந்துவிடுகின்றனர். கூட்டு ஒருங்கிணைவு என்பது இந்தமாதிரியான அதிகாரப் பரிமாணங்கள் குறித்த உணர்திறனையும், அந்த சலுகை அதிகாரங்கள் தாக்கமுற்ற சமூகங்களின் மேம்பாட்டை நோக்கி எவ்வாறெல்லாம் பிரயோகிக்கப்பட முடியும் என்ற தொடர்ந்த பரிசீலனையையும் கோரிநிற்பது.


About the Authors:

The authors Angel Queentus (L) and YaliniDream (R) are with Maynmai,  a Tamil-led, multi-ethnic, multi-racial formation responding to attacks on asylum.

Autho rpixஏஞ்சல் குயின்ரஸ் வடக்கில் திருநர்களால் முன்னெடுத்து நடாத்தப்படும் சமூக அமைப்பான யாழ்ப்பாண திருநர் வலையமைப்பின் (JTN) ஸ்தாபக இயக்குநராவார். APTN (பாங்கொக்) அமைப்பின் 2020 ஆதரவு பயிலுநர் குழு அங்கத்தவராக, SOGIE பால்நிலைசார் மருத்துவ வசதிவாய்ப்புக்கான ஆதரவுச் செயற்பாட்டு நெறிமுறைகளை வளர்த்தெடுக்கும் பணியில் சமீபகாலமாக வேலைசெய்து வருகிறார். கடந்த மர்ர்ச் 2020இல் சங்கத் பெண்ணிய திறன் வளர்ப்பு பட்டறையில் பங்கேற்றிருந்தார். பல்வேறு ஊடக எழுத்துக்கள், தொலைக்காட்சி நேர்காணல்களை ஏஞ்சல் வழங்கியிருக்கிறார். கடந்தகாலத்தில் ஈக்வல் க்ரவுன்ட் (கொழும்பு) மற்றும் சாவிய அபிவிருத்தி நிறுவனம் (காலி) ஆகியவற்றில் பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழினி ட்ரீம் சுற்றுப்பயணக் கலை மரபில் வருகிற ஒரு நிகழ்த்துகலைக் கலைஞர், அமைப்பாளர், ஸோமாட்டிக்ஸ் பயிற்றுனர், மற்றும் ஆலோசகர். வன்முறையால் பாதிப்புறும் சமூகங்கள் நலமடையவும், அமைப்பாகவும், மேன்மைபெறவும் வேண்டி கலை உத்திகளைப் பாவிப்பதில் இருபது வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவம் கொண்டவர். கவிதை, அரங்கு, பாடல் மற்றும் நடனம் ஆகியவற்றின் தனித்த கலவையூடாக ஆன்மாவை அழைத்து அதன்வழி நடைமுறையை மாற்றியமைக்க முயல்பவர். மண், மனம், ஆன்மா மற்றும் கனவின் நிலங்களில் நீதி மூலமாக அமைதி நோக்கிய தேடலுக்கு இது வழிவகுக்கிறது. விடுதலை எதிர்காலம் நோக்கிய செயன்முறைகளுக்கு இடமளிக்கும் பண்பாட்டு வேலையின் நிறைவான மரபில் இருந்து யாழினி தன் உந்துதலைப் பெற்றுக்கொள்கிறார். ப்ரூக்ளின் ட்ரீம்வுல்ஃப் என்பதில் ஜென்டோக் லோன்வுல்ஃப் உடன் இணைந்த ஓரங்கமாக சுற்றுப்பயணம் மேற்கொள்வதுடன் யாழினி விஷன் சேஞ் வின் அமைப்பில் ஆலோசகராகவும், எம்-ஸ்டூடியோ.ஒர்க் இன் இணை ஸ்தாபகராகவும், மேன்மை அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் விளங்குகிறார்.

Acknowledgements:

This piece ioriginally appeared on Dec 16, 2020, in the Medium [see here] and has been republished on Orinam with the consent of the authors.

]]>
https://new2.orinam.net/ta/beyond-funny-boy-solidarity-tamil/feed/ 0