Comments on: புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டுள்ளோம் https://new2.orinam.net/ta/puthaikkappadavillai-ta/ வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Sat, 04 Jan 2014 09:15:14 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.8 By: sathyaperumal.B https://new2.orinam.net/ta/puthaikkappadavillai-ta/comment-page-1/#comment-8682 Sat, 04 Jan 2014 09:15:14 +0000 https://new2.orinam.net/?p=9390#comment-8682 குரலற்றவர்களின் குரலாக மேலெழுந்த வழக்கின் சிறு வெளிச்சக்கீற்றையும் உச்சநீதிமன்றம் ஊதியணைத்திருப்பது, இச்சமூகம் எப்படிப்பட்ட விக்டோரியன் காலத்திய மதிப்பீடுகளில் தொங்கித் தற்கொலை செய்துகொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. இப்படிப்பட்ட நிலையில் பாலியல் தேர்வு என்பது அவரவரின் உயிரியலமைப்பு மற்றும் உரிமை சார்ந்த ஒன்று என்பதை இச்சமூகம் எப்போது ஏற்றுக்கொள்ளுமோ என நினைத்தால் மலைப்பாகத்தானிருக்கிறது!
சராசரி இந்திய ஆண்மனதாலும் ஆண்களால் கட்டமைக்கப்பட்டுள்ள பெண்மனதாலும் ஆண்-பெண் பாலுறவன்றிய வேறொரு மனித உறவு என்பது இயற்கைக்கு மாறான ஒன்றாகவே புரிந்துகொள்ளப்படுகின்றது என்றால் அது புரிந்துகொள்ளக்கூடியது தான். ஆனால் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று மட்டுமே பதிந்துள்ள சமூகச் சித்திரத்தைத்தான் இந்த நாட்டின் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியும் கொண்டிருக்கிறாரென்றால் வேறென்ன சொல்ல?
பாராளுமன்றத்தில் விவாதித்துச் சட்டப்பிரிவு 377 ஐ நீக்கவோ திருத்தவோ செய்யுங்கள் என்றாவது வழிகாட்டினாரே…. அந்த அளவில் அவருக்கு நன்றி! இதையே ஒரு வாய்ப்பாகக் கொண்டு, நாடு தழுவிய பொது விவாதங்களை மேற்கொள்வதே பயனுள்ளதாக இருக்குமென்று நம்புகிறேன்.
நமது இந்தியச் சமுதாயத்திற்கென்றே சில விசித்திரத் தனித்தன்மைகள் உள்ளன. அவற்றிலொன்று, உலகின் மிகப்பெரிய சனநாயகம் ‘தானே’ என்று அறைகூவிக்கொண்டே சிறுபான்மையினரின் குரல்வளையை நெரிப்பது! அப்படிக் குரல்வளை நெரிக்கப்படும்பொழுதெல்லாம், திமிறிக்கொண்டு போராடியே மத, சாதிச் சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் உரிமைகள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. அதைப்போலவே, ஒருங்கிணைந்த தொடர்ச்சியான போராட்டங்களின் வழியாகவே அவரவரின் பாலியல் தேர்வை உரிமையாக வென்றெடுக்க முடியும்!
இதற்கு முன்பும் 377-வது சட்டப்பிரிவு இருந்தது. இன்றும் இருக்கிறது. நாளை? இருக்கக்கூடாது! அதற்கான விவாதங்களைச் சமூகத்தின் அனைத்துப் பக்கங்களிலிருந்தும் துவங்கிப் பாராளுமன்றத்தில் ஒலிக்கச்செய்வதே இனிச் செய்யவேண்டிய பணியாக இருக்கும். உச்சநீதிமன்றத்தீர்ப்பின் தடைக்கல்லையே படிக்கல்லாக அமைத்து வெற்றி பெரும் நாள் வெகுதொலைவிலிருக்காது என்று நம்புகிறேன். இந்தக்கடினமான பணியின் வலிமையான குரலான “ஓரினம்”-உடன் தோழர் தினேஷ்குமார் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அயரவேண்டாம் தோழர்!
“அக்கா வந்து கொடுக்கச் சுக்கா? மிளகா? சுதந்திரம் – கிளியே?” என்பது புரட்சிக்கவிஞரின் வரி!

]]>
By: Ajay Sathyan https://new2.orinam.net/ta/puthaikkappadavillai-ta/comment-page-1/#comment-8569 Sun, 22 Dec 2013 17:27:32 +0000 https://new2.orinam.net/?p=9390#comment-8569 ஆம், நாம் உண்மையாகவே புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டுள்ளோம்.

]]>