பிரிவு 377
18 வயதிற்கு மேலான, தன்னிச்சையாக செயல்படுபவர்களது தனிமனித செயல்பாட்டைத் தண்டனைக்குரிய குற்றமாக்குவதால் இந்தச் சட்டம் (377) அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்துகள் 21, 14 மற்றும் 15 ஆகியவற்றை மீறுகிறது.
– நீதிபதி ஷா, நீதிபதி முரளீதர், தில்லி உயர்நீதி மன்றம்.
ஜூலை 2, 2009 அன்று தில்லி உயர் நீதிமன்றம் நாஸ் பவுண்டேஷன் ஐ.பி.சி 377 ஐ எதிர்த்து தொடுத்திருந்த வழக்கில் “வயதுவந்த இருவரின் விருப்பதுடன் நடக்கும் பால் சமந்தப்பட்ட உறவு குற்றமல்ல” என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண் இந்தியர்களின் வாழ்வில் ஒரு பெரும் மாற்றத்தை, மலர்ச்சியை கொண்டுவந்தது.
சில முக்கிய ஆவணங்கள் உங்களுக்காக (ஆங்கிலத்தில் மட்டும்)
- Delhi High Court ruling (Full text)
- Primer compiled by Alternate Law Forum
- A must read account of the verdict by Kajal Bhardwaj on Asian Age
அப்பொழுதிருந்து இந்த வழக்கில் பல முக்கிய திருப்பங்கள் ஏற்ப்பட்டுள்ளது. சிலர் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். பிப்ரவரி 7, 2011 அன்று எல்லா மனுக்களும் நீதிபதிகள் சாங்க்வி மற்றும் கங்கூலியின் முன் பரிசீலனைக்கு வந்தன. தீர்ப்பை ஆதரித்து பல இந்திய குடிமக்களும் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். உச்ச நீதி மன்றம் கூடிய விரைவில் எல்லா தரப்பினரையும் விசாரிக்க உள்ளது.
(c) ஓரினம். எங்கள் காப்புரிமை கொள்கையை படிக்கவும்