திருநங்கையருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழ் நாடு மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்பாட்டம்
திருநங்கைகளைப் பார்த்து “சுயமா ஒழைக்கறுதுக்கு உங்களுக்கு என்ன? பாலியல் தொழில் ஏன் செய்யறீங்க? கட கடையா ஏறி ஏன் காசு கேக்குறீங்க?” என்று கேட்பதற்க்கு நம் மக்களுக்கு மிகுந்த ஆர்வம்.
இந்த வினாக்களுக்கு விடை அளிக்கும் விதமாக பேசிய சென்னையை சேர்ந்த முதல் திருநங்கை ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநரான வைஷ்ணவியின் உரையாடலை இந்த காணொளியில் பாருங்கள்.
சமுதாயத்தில் பலருக்கு எந்தவித தடங்கலும் இல்லாமல் கிடைக்கும் சராசரியான வேலை வாய்ப்புகள் எவ்வாறு திருநங்கையருக்கு மறுக்கப்படுகிறது என்பதைப் பற்றி அவர் தெளிவாக விவரிக்கிறார்.
திருநங்கையர் இன்றும் தொடர்ந்து கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு கண்ணியமான வேலை செய்யும் திருநங்கை பல போராட்டங்களைக் கடந்து அந்த நிலையை அடைந்துள்ளார். தன் தொழில் முனைப்பை ஆதரிக்கும் நிதி ஆதரவாளரை கண்டறிவது, தொழிலுக்கான இடத்தை வாடகைக்கு பெறுவது, அரசு ஆவணங்களை பெற்று தொழிலை தொடங்குவது வரை உள்ள ஒவ்வொரு படியும் பெரும் போராட்டமாகவே இருந்து வருகிறது. இதைத் தாண்டி தொழிலை நிறுவிய பின், அந்த தொழிலில் உழைத்து தன் முதலீட்டை கூட மீட்டெடுக்க இயலாமல் இருக்கின்றார்.
இதற்கு ஒரே தீர்வு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு மட்டுமே! இதனை வலியுறுத்தி வரும் திங்கள் 17 ஆகஸ்ட் 2015 அன்று மாலை 2 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெறும் தமிழகத்தைச் சார்ந்த திருநங்கைகள், திருநங்கைகள் அமைப்புகள், மாணவர்கள், திருநங்கை ஆதரவாளர்கள், செயல்பாட்டாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தாங்கள் தங்களுடைய அமைப்புடன் கலந்து கொள்ளுமாறு மிக தோழமையோடு கேட்டுகொள்கிறோம்.
தொடர்ப்புக்கு: ஜெயா, சகோதரன் அமைப்பு: 9841865423
சங்கரி, நிறங்கள் அமைப்பு: 9790990622
Reservation in education and shelter homes and funancial asistance are all require for this community. Perhaps they should be in par with scheduled tribes
Please see the link http://cms.tn.gov.in/sites/default/files/gos/bcmbc_e_28_2015.pdf
Transgenders of Tamil Nadu are declared as Most Backward Classes in G.O.28, dated 6.4.2015. Reason for such action is also clearly given. Seems notification has also been published in Gazette