377 சட்டப்பிரிவு – ஓரினம் https://new2.orinam.net வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Mon, 29 Sep 2014 10:10:15 +0000 ta-IN hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://new2.orinam.net/wp-content/uploads/2024/03/cropped-imageedit_4_9441988906-32x32.png 377 சட்டப்பிரிவு – ஓரினம் https://new2.orinam.net 32 32 நாடாளுமன்றத்தை நோக்கி … https://new2.orinam.net/ta/theekkathir_kumaresan/ https://new2.orinam.net/ta/theekkathir_kumaresan/#comments Sat, 20 Sep 2014 01:27:41 +0000 https://new2.orinam.net/?p=10650 தமிழ்நாடு வானவில் கூட்டணி, சங்கமா மற்றும் பல்வேறு தமிழ் முற்போக்கு அமைப்புகளின் ஆதரவுடன்  சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் செப்.13, 2014 அன்று நிறங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், எங்களின் கோரிக்கையை ஆதரித்து தீக்கதிர் ஆசிரியர் குமரேசன்  அவர்கள்  பேசியதின் சுருக்கம். குமரேசன் அவர்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க உறுப்பினர், மற்றும் பொருப்பாசிரியர் தீக்கதிர் (சென்னை இதழ்) – இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின்-மார்க்சிஸ்ட் ( சிபிஐ: CPI-M) அதிகாரபூர்வ செய்தித்தாள்.


theekkathir_kumaresan

ஓர் பாலின உறவைக் குற்றச்செயலாக அறிவிக்கும் 377வது சட்டம் செல்லாது என்று தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பு செல்லாது என்று உச்சநீதிமன்றம் கூறியது. அதே நேரத்தில், நாடாளுமன்றம் இந்தச் சட்டத்தை விலக்கிக்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆகவே, அந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற உங்கள் முழக்கம் இப்போது நாடாளுமன்றத்தை நோக்கியே எழ வேண்டும்.

ஆனால் இன்றைய நாடாளுமன்றம் அவ்வளவு எளிதில் உங்கள் கோரிக்கையை ஏற்று சட்டத்திருத்தம் கொண்டுவந்துவிடும் என்று எதிர்பார்க்க வேண்டாம். உங்கள் போராட்டம் அத்தனை எளிதாக வெற்றிபெற்றுவிடாது. மக்களின் பெருந்திரள் போராட்டங்களையே கூட அரசு பொருட்படுத்துவதில்லை.

நாட்டின் அரசமைப்பு சாசனத்தை உருவாக்கிய குழுவின் தலைவரான டாக்டர் அம்பேத்கர், சட்ட அமைச்சராக இருந்தபோது, பெண்களுக்கு சொத்துரிமை அளிக்கும் சட்டத்தைக் கொண்டுவந்தார். அதனால் நாட்டின் பாரம்பரியமும் கலாச்சாரமும் கெட்டுவிடும் என்று கூறி அந்தச் சட்டத்தைப் பலரும் எதிர்த்தபோது அவர் தன் அமைச்சர் பதவியிலிருந்து விலகத் தயாரானார். உங்கள் பிரச்சனையில், அத்தகைய லட்சியத்தையும் உறுதியையும் இன்றைய ஆட்சியாளர்களிடமும் அவர்களது கூட்டாளிகளிடமும் எதிர்பார்க்க முடியாது.

ஆகவே, இன்னும் பல மடங்கு வலுவான, ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்துகிற உறுதியை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து வழக்குத் தொடுத்தவர் ஒரு பாஜக எம்.பி. அவருக்கு ஆதரவாக வந்தது ஒரு இந்து அமைப்பு. இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக்கொண்டவை ஒரு இஸ்லாமிய அமைப்பு, ஒரு கிறுஸ்துவ அமைப்பு… ஆக, கடவுளை உருண்டுகொண்டே கும்பிடுகிற, மண்டிக்கால் போட்டு வணங்குகிற என எந்த மதமானாலும் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரிதான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இயற்கைக்கு மாறாக உறவுகொள்கிறவர்களை ஏன் ஆதரிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். ஆனால், ஆணும் பெண்ணுமாக வாழ்கிறவர்களில் ஆணிடம், இனி நீ இன்னொரு ஆணோடு வாழ்க்கை நடத்து என்று சொன்னால் அவனால் ஏற்க முடியாது. ஏனென்றால் பெண்ணோடு வாழ்வதே அவர்களது இயற்கை. அதே போல், ஆணோடு வாழ்கிற பெண்ணிடம், இனி நீ இன்னொரு பெண்ணோடு வாழவேண்டும் என்று சொன்னால் அவளால் சகித்துக்கொள்ள முடியாது. அவர்களுடைய இயற்கை அது.

அப்படித்தான் தன் பாலினத்தைச் சேர்ந்தவர்களோடு இணைந்து வாழ்வதும் ஒரு இயற்கைதான். அதைப் புரிந்துகொள்ள மறுப்பதில்தான் சிக்கல் இருக்கிறது. பொதுச் சமுதாயத்தில் அந்தப் புரிதலை ஏற்படுத்துவதற்காகவும் தொடர்ந்து இந்தக் கருத்துகளைச் சொல்லிக்கொண்டிருப்போம்.

]]>
https://new2.orinam.net/ta/theekkathir_kumaresan/feed/ 1
கவிதை: காதலின் ஆற்றலால் (Tamil translation of Vikram Seth’s Through love’s great power) https://new2.orinam.net/ta/loves-great-power-vikram-seth-ta/ https://new2.orinam.net/ta/loves-great-power-vikram-seth-ta/#comments Sun, 09 Feb 2014 15:33:24 +0000 https://new2.orinam.net/?p=9813 VikramSeth_Huffpost

Image courtesy: Huffington Post

ஆங்கில மூலம்: விக்ரம் சேத்
தமிழாக்கம்: அரவிந்த்
பிழை, நயம், சீர் திருத்தம்: பூங்கோதை
ஓலி வடிவம்: பிரவீன் ராஜேந்திரன்


காதலதன் ஆற்றலில் பன்மையிழந்து,
உடல், பொருள் ஆவியும் பின்னிப்பிணைந்து,
ஒருமையாய் காதலுற் றுணையிருந்து,
சுதந்திர ஆழியில் மூழ்கித்திளைத்து,
அல்ல(து)திளைப்பாலேயே தடைதகர்த்து,
இன்புறுதலே இயல்பான நற்செயல்!

முன்பளித்த நீதியை உடைத்தெறிந்து,
நலிந்தோரை வீதியில் துகிலுரித்து,
இணைந்திட்ட ஈருயிர் பறித்தெரித்து,
விலங்கிட்டு ஈனமாய்க் கதறவைத்து,
நயமின்றி கீழ்த்தரமும் கொண்டிசைந்து,
வதைத்தலே இயல்பிலிலாத் தீஞ்செயல்!

 

ஒலி வடிவில் – Audio version

]]>
https://new2.orinam.net/ta/loves-great-power-vikram-seth-ta/feed/ 4
தமிழ்நாடு வானவில் கூட்டணி, பாலியல் சிறுபானமையினரின் உரிமைகளை காக்கக் கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தும் பேரணி https://new2.orinam.net/ta/httporinam-nettamil-nadu-rainbow-coalition-organizes-377-protest-rally-valluvar-kottam-chennai-ta/ https://new2.orinam.net/ta/httporinam-nettamil-nadu-rainbow-coalition-organizes-377-protest-rally-valluvar-kottam-chennai-ta/#comments Thu, 16 Jan 2014 03:45:45 +0000 https://new2.orinam.net/?p=9589  

Tamil Nadu Rainbow Coaltion

பாலியல் சிறுபானமையினரின் உரிமைகளை காக்கக் கோரி ஜனவரி 11 ( 3-430 PM) அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் பேரணி.
தமிழகமெங்கும் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் (Lesbians, Gays, Bisexuals, Transgenders), மற்றும் எல்லா சமூகங்ககளை சார்ந்தவர்களின் மனித உரிமைகள், சுகாதாரம் தொடர்பான துறைகளில் பணியாற்றும் அமைப்புகள் ஒன்றாக இணைந்து அமைத்துள்ள கூட்டணி, தமிழ்நாடு வானவில் கூட்டணி.

டிசம்பர் 11, 2013 அன்று மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் கண்ணியத்திற்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில், 377 சட்டப்பிரிவை நிலைநிறுத்தி, இந்திய உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வழங்கி சரியாக ஒரு மாதமான இன்று, இந்தியாவெங்கிலும் தீர்ப்பை எதிர்த்து போராட்டங்களும், பேரணிகளும் நடைபெறுகின்றன. தமிழ்நாடு வானவில் கூட்டணி இந்த போராட்டங்களில் இணைகிறது.
1975 ல் அவசர நிலையை அங்கீகரித்ததும், 1979 ல் (மதுரா வழக்கில்) பாலியல் பலாத்காரத்தை  நியாப்படுத்தியதும், பெருமை வாய்ந்த இந்திய உச்ச நீதி மன்றத்தின் வரலாற்றின் மீது படிந்திருக்கும், அழிக்க முடியாத கரைகள். அந்த வரிசையில் டிசம்பர் 11, 2013 அன்று வழங்கிய 377  தீர்ப்பும் இடம்பெறும்.
இந்த பின்னடைவு எங்களுக்கு வேதனையைத் தந்தாலும், இந்திய அரசு சமர்பித்துள்ள மறுபரிசீலனை விண்ணப்பமும், மற்றும் நாடெங்கிலும் எங்களை ஆதரித்து எழும்பியுள்ள முற்போக்கான குரல்களும், எங்களுக்கு ஊக்கத்தை அளிக்கின்றன.  இன்றைய பேரணியில் தமிழ்நாடு வானவில் கூட்டணி கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன் வைக்கிறது:

 

  1.  மாநில அளவில் 377 பிரிவில் சட்ட திருத்தம் கொண்டுவந்து, 18 வயதிற்கு மேல் உள்ள இருவரின் பரஸ்பர சம்மதத்துடன் தனிமையில் நடக்கும் எந்த பால் சம்மந்தமான உறவையும், குற்றமாக்காமல் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம். 1967 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்து திருமண சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரித்தது போன்ற பல முற்போக்கான மாற்றங்களை பாரம்பரியமாக கொண்ட நம் தமிழ் நாட்டில், இந்த 377 சட்ட திருத்தம் இன்னொரு பெருமை சேர்க்கும் விஷயமாக கருதப்படும் என்பது மறுக்க முடியாதது.
  2. தேசிய அளவில், இந்திய அரசாங்கம், நாஸ் பவுண்டேஷன், வாய்சஸ் அகைன்ச்ட் 377, ஆகிய அமைப்புகள் சமர்ப்பித்துள்ள மறுபரிசீலனை விண்ணப்பங்களை, சாதகமாக பரிசீலித்து, மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் கண்ணியத்தை காக்குமாறு உச்ச நீதி மன்றத்தை கேட்டுக் கொள்கிறோம்.
  3. சம உரிமைகள் கொண்ட முழு குடிமக்களாக எங்களை நடத்துமாறு எங்கள் குடும்பங்கள், கல்வி  நிலையங்கள், பணி இடங்கள், அரசாங்கம், நம் தாய்நாடு, மற்றும் நம் சமுதாயம், ஆகியோரை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். அதீத வெறுப்பினாலும், அறியாமையாலும் எங்கள் மேல் தவறான அபிப்பராயங்களை கொண்டவர்களை, அவற்றைக் களைந்து, திறந்த மனத்துடன், சொந்த குடும்பத்திற்குள்ளேயே சிறுபான்மையான எங்கள் வாழ்வுகளையும், போராட்டங்களையும், புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
  4. எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும், பெண்கள் அமைப்புகள், தலித் அமைப்புகள், பாலியல் தொழிலாளர் அமைப்புகள் ஆகியபல முற்போக்கான அமைப்புகளுக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அமைப்புகளுடன், எங்களுக்கு பொதுவாக அமைந்துள்ள சவால்களையும், உரிமை போராட்டங்களையும் நாங்கள் நன்கு உணர்வோம். இவர்களுடன் இணைந்து, எல்லோருடைய சமூக நீதிக்கும், சமத்துவத்திற்குமான எங்கள் போராட்டம், பன்மடங்கு உறுதியுடன் தொடரும், என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.

 

Rally photos:

Media coverage:

]]>
https://new2.orinam.net/ta/httporinam-nettamil-nadu-rainbow-coalition-organizes-377-protest-rally-valluvar-kottam-chennai-ta/feed/ 1
ஹிலரி கிளிண்டன் ஐ. நா சபையில் வழங்கிய மனித உரிமைகள் பற்றிய உரை https://new2.orinam.net/ta/clinton-un-speech-ta/ https://new2.orinam.net/ta/clinton-un-speech-ta/#respond Wed, 05 Dec 2012 19:40:11 +0000 https://new2.orinam.net/?p=7706
Secretary Clinton, Dec 6th 2011, Geneva (Image: US Mission Geneva)

ஓரினம்.நெட் வெளியீடு
தமிழாக்கம்: ஸ்ரீதர் சதாசிவன்
உதவி: பூங்கோதை பாலசுப்பிரமணியன் & மதன்

]]>
https://new2.orinam.net/ta/clinton-un-speech-ta/feed/ 0
ஒருபாலீர்ப்பு: பெற்றோர்களின் கதை https://new2.orinam.net/ta/being-gay-parents-story-tamil/ https://new2.orinam.net/ta/being-gay-parents-story-tamil/#comments Tue, 19 Apr 2011 02:16:26 +0000 https://new2.orinam.net/?p=2311 Excerpts from Barkha Dutt’s TV Show : Being Gay : The Parents’ Story. Watch the full video in English on NDTV’s website here .
Our sincere thanks to NDTV and Bharka Dutt for presenting this amazing show.

சித்ரா பாலேகர் : என் பொண்ணு என்கிட்ட தான் ஒரு லெஸ்பியன்னு வெளியே வந்தது 1993 ஆம் ஆண்டு. அவ அப்போதான் காலேஜ் முடிச்சிருந்தா. எனக்கு அவ சொன்னதை கேட்டப்போ, ஆச்சரியமா இருந்தது. பின்னாடி அவளே எனக்கு சொன்ன மாதிரி, அவ எல்லாரையும் போல எதிர்பாலீர்ப்புள்ளவளா தான் இருப்பான்னு எனக்கு நானே முடிவு பண்ணிகிட்டேன். இந்த மாதிரி ஒரு சாத்தியம் இருக்கும்னு கூட நினைக்கலை. மத்தபடி அவ சொன்னப்போ, நான் ஒன்னும் பெரிசா அதிர்ச்சியெல்லாம் அடையலை. அவள என் முழுமனசோட ஏத்துகிட்டேன்.

சித்ரா பாலேகர்

என்னோட ஆச்சரியத்துக்கு காரணம், எனக்கு ஒருபாலீர்ப்பை பத்தி ஒண்ணுமே தெரியாது. கொஞ்சம் கொஞ்சம் அதைபத்தி சினிமால, வெளிநாட்டுக்கு போனப்போ, இது மாதிரி நேரத்துல கேட்டிருக்கேன், அவ்ளோதான். மத்தபடி என் வாழ்க்கைல, எனக்கு தெரிஞ்சவங்கள்ல, இது மாதிரி யாரும் இருக்கலை. நான் அவகிட்ட கேட்ட முதல் கேள்வி, “ஏன் இத்தனை நாளா என்கிட்ட இதை நீ சொல்லல? உனக்கு எப்போ இது தெரிஞ்சது”னு தான். அவளுக்கு ஒரு பதிமுணு, பதினாலு வயசுல தான் ஒரு லெஸ்பியன்னுதெரிஞ்சிருக்கு. ஸ்கூல்ல பொண்ணுங்க பசங்கள பத்தி, பசங்க பொண்ணுங்கள பத்தி பேசும்போது, இவளுக்கு அந்த மாதிரி ஒன்னும் பேசவோ, கேக்கவோ விருப்பம் இல்லை. ரொம்ப குழம்பியிருக்கா. அவள சுத்தி எல்லாரும், எல்லாமும் ஆண்-பெண் சமந்தப்பட்ட விஷயங்களா இருந்ததால, அவளோட இந்த ஒருபாலீர்ப்பை நினைச்சு அவ குழம்பியிருக்கா, எல்லாரையும் விட்டு ஒதுக்கப்பட்டவளா பீல் பண்ணியிருக்கா. எங்க குடும்பத்துல நாங்க எல்லாத்தையும் மனம்விட்டு பேசுவோம் , அரசியலோ, சமுதாயமோ எதை பத்தி வேணும்னா பேசுவோம். ஆனா அவ சொன்னா, “அம்மா, நாம எல்லாத்தையும் பத்தி பேசினோம். ஆனா செக்ஸ் பத்தியோ, பாலீர்ப்பு பத்தியோ பேசினதில்லை. அதுனால எனக்கு தயக்கமா இருந்தது, இதை பத்தி பேச பயமா இருந்தது”னு.

அவ ஒரு நல்ல பொண்ணு. எல்லாத்துலயும் முதல்ல வருவா. அவ என் பொண்ணுங்கறதுல எனக்கு ரொம்பவே பெருமை, பெருமிதம். அவ என்கிட்ட லெஸ்பியன்னு வெளிய வந்தப்போ நான் யோசிச்சேன் “இதுனால நம்ம பொண்ணு மேல நமக்கு இருக்கற பாசமும் , அவளால நாம அடைஞ்ச பெருமையும் குறைஞ்சு போகுமா? இல்ல மாறிடுமா?”னு. இல்லையே! உடனடியா என் மனசு திடமாச்சு, நம்ம பொண்ணு இவ. எப்படி இருந்தா என்ன, அப்படின்னு ஒரு தெளிவு.

இது கொஞ்சம் பர்சலனா விஷயம்ங்கறதுனால, சொந்தம் பந்தம், அக்கம் பக்கத்துல, யார்கிட்ட என்ன சொல்லனும்னு, இதெல்லாம் அவ முடிவிக்கே நான் விட்டுட்டேன். அவளும், அவளோட பார்ட்னரும் என்கூட, எங்க வீட்டுலதான் இரண்டு வருஷம் இருந்தாங்க. எங்க நெருங்கின சொந்தக்காரங்க, பிரெண்ட்ஸ் எல்லாம் என் பொண்ணையும், அவளோட பார்ட்னரையும் (பெண்) முழு மனசோட ஏத்துக்கிட்டாங்க.

பிந்துமாதவ் : எனக்கு ஒரு பன்னண்டு பதிமுணு வயசிருக்கும்போது நான் ஒரு “கே”னு எனக்கு தெரியவந்தது. என்னோட வெளிய வந்த கதை ரொம்பவே கஷ்டமான, வேதனையான கதை. என் காலத்துல இப்போ இருக்கற மாதிரி டி.வீ சானல்ஸ், இன்டர்நெட் இதெல்லாம் கிடையாது. நான் காலேஜ் போய், மருத்துவம் சம்மந்தமான புத்தகங்கள படிக்கற வரைக்கும் எனக்கு ஒருபாலீர்ப்பை பத்தி ஒண்ணுமே தெரியாது. அந்த வாரத்தையை கூட நான் கேட்டதில்லை. எனக்கு பசங்கமேல ஈர்ப்புனு தெரியும். ஆனா அதுக்கு ஒரு பேரு இருக்கு, என்னை மாதிரி நிறைய பசங்க இருக்காங்க இதெல்லாம் அப்போ தெரியலை. என்கூட ஸ்கூல்ல படிக்கற பசங்க எல்லாம் பொண்ணுங்கள பத்தி பேசும்போது, எனக்கு அதுல எல்லாம் பெருசா நாட்டம் இல்லை. என்னோட ஒருபாலீர்ப்பை பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாததுனால, என்னை நானே ரொம்ப கீழ்த்தரமா நினைச்சேன். நான் ஒரு தரம் கேட்டவன், பாவி, கேவலமானவன் அப்படி எல்லாம் என்னை நானே நினைச்சு வெறுத்திருக்கேன். அதனால என்னோட சுயமரியாதை சுத்தமா அழிஞ்சு போச்சு. இரண்டு மூணு தரவை தற்கொலைக்கு கூட முயற்சி பண்ணினேன். என்னோட இந்த பாலீர்ப்பை பத்தி என் அம்மாக்கோ, அப்பாக்கோ தெரிஞ்சு போச்சுன்னா, எங்க குடும்ப மானமே போய்டும் அப்படி எல்லாம் நினைச்சு பயந்து நடுங்குவேன். இந்த கவலைகளால படிப்புல நாட்டம் குறைஞ்சது. இன்ஜினியரிங் மூணாவது வருஷத்துல ஒரு பேப்பர் தவிர, மீதி எல்லாத்துலயும் பெயில் ஆனேன். வேலைக்கு போனபிறகு எங்க வீட்டுல கல்யாணத்துக்காக ரொம்பவே நிர்பந்தம். வேற வழி இல்லாம கல்யாணம் பண்ணிகிட்டேன். கல்யாணம் தோல்வியில முடிஞ்சது. ஒரே வருஷத்துல விவாகரத்து. ரொம்பவே விவகாரமான விவாகரத்து. எங்க குடும்பத்துல எல்லாருக்கும் ரொம்பவே மனகஷ்டம். அப்போ கூட எங்க அப்பா அம்மாகிட்ட நான் ஒரு “கே”, எனக்கு பசங்க மேல ஈர்ப்பு, இதெல்லாம் பேசமுடியலை. அப்புறம் நான் வேலை மாறி அமெரிக்கா போன பிறகு, அங்க இருக்கற என்னை போன்றவர்களுக்கான ஆதரவு நிறுவனமான “த்ரிகொன்” மூலமா என்னை மாதிரி இருக்கற பிற இந்தியர்கள சந்திச்ச அப்பறம்தான் எனக்கு கொஞ்சம் கொஞ்சமா என் வாழ்கையை பத்தி புரிய ஆரம்பிச்சது.என்னை நானே புரிஞ்சு, ஏத்துகிட்டேன். முதல்ல அமெரிக்காலேயே செட்டில் ஆய்டலாம்னு நினைச்சேன். அப்புறம் யோசிச்சப்போ, இந்த மாதிரி பயந்து, குடும்பத்தை விட்டும், நாட்டை விட்டும் ஏன் தள்ளி இருக்கணும்னு தோணிச்சு. அதனால தைரியமா இந்தியாவுக்கு திரும்பினேன்.

பிந்துமாதவ் மற்றும் அவரது அம்மா

பிந்துமாதவின் அம்மா : மாதவ் வெளியே வந்தப்போ, அவன் ஒரு “கே”, அவனுக்கு பசங்க மேல தான் ஈர்ப்புனு சொன்னப்போ, எங்க குடும்பத்துல எல்லாருக்குமே பெரிய அதிர்ச்சி. நான் உடனடியா அவன ஒரு சாமியார்கிட்ட கூட்டிகிட்டு போய் பரிகாரம் கேட்டேன். ஒண்னும் பலனில்லை. அப்புறம் ஒரு மருத்துவர போய் பாத்தோம். அவர் தெளிவா எனக்கு சொன்னாரு, ஒருபாலீர்ப்புனா என்ன, அதுக்கு என்ன அர்த்தம், அதை மாத்த முடியாதுனு எல்லாம் விவரமா சொன்னாரு. உன் பையன் மாறவேண்டியதில்லம்மா, நீதான் உன் மனச மாத்திகிட்டு அவன புரிஞ்சிக்கனும்னு சொன்னாரு. நான் கொஞ்சம், கொஞ்சமா மனசு மாறினேன். ஒருபாலீர்ப்பு பத்தின படங்களை பாத்தேன் (“மை ப்ரதர் நிகில்”,”பிலடெல்பியா”). இவனை மாதிரி நிறைய பேரு இருக்காங்கனு புரிஞ்சது.

எனக்கு மாதவ தவிர ஒரு பொண்ணும் இருக்கா. அவ கல்யாணம் முடியற வரைக்கும் யார்கிட்டயும் இதை பத்தி சொல்ல வேண்டாம், கொஞ்சம் அமைதியா இருன்னு நான் மாதவ்கிட்ட கேட்டுகிட்டேன்.  அதுக்கப்புரம், மாதவே எங்க குடும்பத்துல மத்த எல்லார்கிட்டயும் இத பத்தி சொன்னான். இன்னிக்கும் என்னால தைரியமா என் சொந்தகாரங்க கிட்ட இதை பத்தி பேசமுடியலைங்கறது தான் உண்மை.

பஞ்சாபி பாட்டி : இதபாருங்க, என் பேரன் “கே” தான். அவன் அப்படிதான், அவன் வாழ்க்கை அப்படிதான். இதை எதிர்கரவங்க, முதல்ல

பேரனும் பாட்டியும்

என்கிட்ட மோதட்டும், அப்புறம் என் பேரன்கிட்ட மோதலாம். அவங்க அவங்க வாழ்க்கைல ஆயிரம் ஓட்டை இருக்கு, அதை கவனிக்காம , அடுத்தவங்க வாழ்க்கையை பத்தி என்ன பேச்சு? அந்தகாலத்துலையே சுயம்வரம்ங்கர பேருல எல்லோருக்கும் அவங்க வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க அதிகாரம் குடுத்தாங்க. ஆதி காலத்துலேயே அது சாத்தியம்னா, இப்போ ஏன் கூடாது? சட்டம் எழுதறவங்களுக்கு என்ன தெரியும், ஒரு அம்மா, ஒரு பாட்டிக்கு என்ன உணர்ச்சி இருக்குனு? எனக்கு என் பேரன் முக்கியம். என் பேரன் அவன் இஷ்டப்படி அவன் வாழ்க்கையை வாழனும். யாரு அதுக்கு தடை போடுவாங்க, பாப்போம். அட, இதோ ஜப்பான்ல பூகம்பத்துல ஊரே அடிச்சிகிட்டு போச்சு, ஒரு நொடில வாழ்கையே மாறி போச்சு. அங்க போன உசிருல “கே” பசங்க, மத்தவங்கன்னு எதுவும் வித்தியாசம் இருக்கா? இருக்கற வரைக்கும், மனுஷங்களா அவங்க இஷ்ட்டப்படி வாழ விடுங்க! உலகத்துல எல்லாருக்கும் அவங்க இஷடப்படி வாழ உரிமை இருக்கறப்போ, என் பேரனுக்கோ, அவனை மாதிரி இருக்கற மத்த பசங்களுக்கோ மட்டும் அந்த சுதந்திரம் இருக்க கூடாதா? பையனோ, பொண்ணோ, யார அவங்க விரும்பராங்களோ அவங்களோட சந்தோஷமா இருக்கட்டுமே. அதுல தலையிட நீங்க யாரு, கேக்கறேன்!

நிதினும் அவரது அம்மாவும்

நிதினின் அம்மா : சின்ன வயசுலேர்ந்தே என் பையன் வித்தியாசமா தான் இருந்தான். பொண்ணுங்களோட தான் விளையாடுவான், பசங்க கூட விளையாட மாட்டான். எனக்கே ஒரு சந்தேகம் இருந்தது. அவன் கடைசியா என்கிட்ட அவன் ஒரு “கே”னு சொன்னப்போ, எனக்கு அதிர்ச்சி எல்லாம் ஒன்னும் இல்லை. எனக்கு தெரியும்னு சொன்னேன். உன் வாழ்க்கை, உன் இஷ்டப்படி இருப்பானு சொல்லிட்டேன். எனக்கு கொஞ்சம் கூட தயக்கம் இல்லை. அக்கம் பக்கம், சொந்தம் பந்தம் என்ன சொல்லும்னெல்லாம் நான் கவலையே படலை.  இப்போகூட எல்லார்கிட்டயும் நானே சொல்றேன், ஆமாம் என் பையன் ஒரு “கே” தான், அப்படின்னு. அப்புறம் என்னால முடிச்சவரை, அவங்களுக்கு இதபத்தி புரியவைக்கறேன். என்னதான் ஆனாலும், அவங்க நம்ம குழந்தைங்க, நம்மாளோட அன்பும் ஆதரவும் அவங்களுக்கு தேவை.

Image Source : NDTV.com

]]>
https://new2.orinam.net/ta/being-gay-parents-story-tamil/feed/ 1
377 வழக்கில் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து கல்வி வல்லுனர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் https://new2.orinam.net/ta/academics-support-delhi-high-court-decision-in-section-377-case-ta/ https://new2.orinam.net/ta/academics-support-delhi-high-court-decision-in-section-377-case-ta/#respond Tue, 08 Feb 2011 10:57:35 +0000 https://new2.orinam.net/?p=4200 பிப்ரவரி 7, 2011:ஜூலை 2, 2009 அன்று தில்லி உயர்நீதிமன்றம், நாஸ் பவுண்டேஷன் மற்றும் தில்லி அரசாங்கம் இவர்களுக்கிடையிலான வழக்கில், “வயதுவந்த இருவரின் விருப்பதுடன் தனிமையில் நடக்கும் பால் சமந்தப்பட்ட உறவு குற்றமல்ல” என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கி, ஒருபாலீர்ப்பை குற்றமற்றதாக ஆக்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இப்பொழுது இந்திய உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.

Click on the image for latest 377 updates

ஒருபாலீர்ப்பு (Homosexuality) என்றால் என்ன என்று சரியான விஞ்ஞான புரிதல் இல்லாத பலர், தாங்கள் எல்லாம் தெரிந்த மேதாவிகள் என்ற இறுமாப்புடன், ஒருபாலீர்ப்பு தவறானது என்று கூறுவதோடு மட்டுமல்லாமல், தில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். இதில் பலர் தாங்கள் சொல்லுவது தான் சரி என்றும், உச்சநீதிமன்றம் தங்களுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று வலியுறத்தி வருகிறார்கள். இந்த எதிர்ப்புக்கு சவாலாக, இந்தியாவில் பல பகுதிகளிலிருந்து, ஒருபாலீர்ப்பை குற்றமற்றதாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல கல்வி வல்லுனர்கள் ஒன்றாக இணைந்து, ஒரு மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். உச்சநீதிமன்றமும் இரண்டு தரப்பு மனுக்களையும் பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

அறிவியல், விஞ்ஞாயனம், சமூகவியல், சர்வதேச சட்டம், அரசியல், பாலியல், போன்ற துறைகளில் வல்லுனர்களான இந்த கல்வி வல்லுனர்கள், முக்கியமான இந்த வழக்கில் தங்களது கருத்துக்களையும் உச்சநீதி மன்றம், கருத்தில் கொள்ளவேண்டும் என்று தங்கள் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்கள். இது போன்ற சமூகமாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சட்டங்கள் மாற்றியமைக்க படும்போது, கல்வி அறிவும், அனுபவமும் கொண்ட எல்லோர் கருத்துக்களும் கேட்கப்பட வேண்டும் என்றும், மதவாதிகளும், மத தலைவர்களும் சொல்லும் வார்த்தையே கடைசி வார்த்தையாக கொண்டு, சமூகத்தில் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களை அமைக்க கூடாது என்றும் கல்வி வல்லுனர்கள் இந்த மனுவில் வலியுறுத்திகிறார்கள்.

“ஏட்டு சுரக்காய், கறிக்கு உதவாது” என்பது போன்றதல்ல இந்த கல்வி வல்லுனர்களின் கருத்துக்கள். தீர்ப்பை எதிர்க்கும் பலர், தங்களது வாழ்க்கையில் ஒருபாலீர்ப்பாலர்களை கண்டிராதவர், அவர்களை பற்றி ஒன்றும் அறிந்திராதவர். ஆனால் இந்த கல்வி வல்லுனர்களோ, தங்களது அன்றாட வாழ்க்கையில் நூற்றுக்கணக்கான ஒருபாலீர்ப்பாளர்கள் மற்றும் பல மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களை சந்தித்தவர்கள், சந்தித்துக் கொண்டிருப்பவர்கள். பாலியல் சிறுபான்மையினர், எப்படி இந்த சமூகத்தால் ஏச்சுக்கும், பேச்சுக்கும், வேற்றுமைபடுத்துதலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள் என்று தினசரி கண்டு வருபவர்கள் இந்த கல்வி வல்லுனர்கள்.

கல்லூரிகள், பல்கலைகழகங்கள் போன்ற கல்வி நிலையைங்களில் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள், பிற வேலையில் உள்ளவர்கள் போன்ற பலர் எப்படி பல கஷ்டங்களுக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள் என்றும் நேரடியாக அறிந்தவர்கள் இந்த மனுதாரர்கள். ராகிங், கல்லூரியை விட்டு நீக்கம், பணிநீக்கம், பதவிநீக்கம் போன்ற கொடுமைகளுக்கு மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் ஆளாக்கப்படுகிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. 377 சட்டப்பிரிவு, இது போன்ற மனிதநேயமற்ற தீயசெயல்களுக்கு ஊக்கம் அளிக்கிறது என்று வருத்தத்துடன் கூறுகிறார்கள் இந்த கல்வி வல்லுனர்கள். கல்வி நிலையங்கள் எல்லோரும் தயக்கமின்றி, கலக்கமின்றி, வந்து சுதந்திரமாக, திறந்த மனத்துடன், கற்க வேண்டிய கூடங்கள் என்றும், 377 சட்டம் இந்த சூழலுக்கு பங்கம் விளைவிக்கிறது என்றும் கூறுகிறார்கள் இவர்கள்.

மேலும் விவரங்களுக்கு :
விக்ரம் டாக்டர் 98213-29037

மனுதாரர்கள் :

Professor Nivedita Menon, School of International Studies, JNU.
Professor Shohini Ghosh, Sajjad Zaheer Chair, AJK Mass Communication Research Centre, Jamia Millia Islamia,
Ms.Shilpa Phadke, Assistant Professor, Centre for Media & Cultural, Studies, Tata Institute of Social Sciences,
Dr.Aditya Nigam, Fellow, Centre for the Study of Developing Studies
Dr.Ranjani Mazumdar, Associate Professor, School of Arts and Aesthetics, JNU
Professor Kamal Mitra Chenoy, School of International Studies, JNU.
Professor Anuradha M. Chenoy, School of International Studies, JNU
Ms.Ankita Pandey, Assistant Professor, Lady Shri Ram College, Delhi University
Mr.Partha Pratim Shil, Assistant Professor, Hindu College, Delhi University
Professor K.P.Jayasankar, Centre for Media & Cultural Studies, Tata Institute of Social Sciences,
Professor Satish Deshpande, Department of Sociology, University of Delhi,
Ms.Janaki Srinivasan, Assistant Professor, Dept. Of Political Science, Punjab University
Dr.Shoba Venkatesh Ghosh, Professor of English, University of Mumbai
Professor Mary E.John, Director, Centre for Women’s Development Studies,
Professor Anjali Monteiro, Centre for Media & Cultural Studies, Tata Institute of Social Sciences,
Dr.Janaki Abraham, Associate Professor, Department of Sociology, University of Delhi

]]>
https://new2.orinam.net/ta/academics-support-delhi-high-court-decision-in-section-377-case-ta/feed/ 0
பெற்றோர்கள்: 377 எங்கள் குடும்பங்களை சீர்குலைக்கிறது https://new2.orinam.net/ta/parents-say-377-destroys-famiiies-ta/ https://new2.orinam.net/ta/parents-say-377-destroys-famiiies-ta/#respond Tue, 08 Feb 2011 10:51:06 +0000 https://new2.orinam.net/?p=4194

பிப்ரவரி 7, 2011 : ஜூலை 2, 2009 அன்று தில்லி உயர்நீதிமன்றம், நாஸ் பவுண்டேஷன் மற்றும் தில்லி அரசாங்கம் இவர்களுக்கிடையிலான வழக்கில், “வயதுவந்த இருவரின் விருப்பதுடன் தனிமையில் நடக்கும் பால் சமந்தப்பட்ட உறவு குற்றமல்ல” என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு ஒருபாலீர்ப்பை சட்டத்தின் பார்வையில் குற்றமற்றதாக ஆக்கியது. ஒருபாலீர்ப்பு (Homosexuality) என்றால் என்ன என்று சரியான அறிவியல் ரீதியான புரிதல் இல்லாதவர்கள், தங்களது வாழ்க்கையில் ஒருபாலீர்ப்பாலர்களை அறிந்திராத பலர், இந்த தீர்ப்பு அபாயகரமானது என்று தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள். இதற்கு இவர்கள் கூறும் காரணம், இந்த தீர்ப்பு குடும்ப அமைப்பிற்கு கேடு விளைவிக்கும் என்பதாகும்.

அர்த்தமில்லாத, தவறான, குழப்பம் விளைவிக்ககூடிய இந்த எதிர்ப்பிற்கு சவாலாக உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் ஒருமித்த குரல் ஒன்று எழும்பி உள்ளது . அந்த குரல், பெற்றோர்களுடையது. ஆம்! ஒருபாலீர்ப்பாலர்களை குழந்தைகளாக கொண்ட பெற்றோர்களின் குரல் அது. இந்திய நாட்டின் பல பகுதிகளிலிருந்து மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் (LGBT) பெற்றோர்களில் சிலர் ஒன்று கூடி, ஐ.பி.சி. பிரிவு 377, ஒருபாலீர்ப்பை குற்றமாக்குவதால், தங்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்கும் எத்தகைய தீமையை விளைவிக்கிறது என்று விவரித்து மனு ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் பெற்றோர்களின் இந்த மனுவை பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த பெற்றோர்கள் வேற்றுமைபடுத்தக்கூடிய, பிரிவினையை வளர்க்கக்கூடிய, கொடுமையான 377 போன்ற சட்டங்கள்தான் குடும்ப அமைப்பிற்கு கேடு விளைவிக்கும் என்று வாதாடுகிறார்கள். தில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதி மன்றம் நிலைநிறுத்த வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள். “377 சட்டம் தான் குடும்பங்களுக்கு கேடு விளைவிக்கிறது. தனிமனித உரிமைக்கு பங்கம் விளைவிக்கும் இந்த சட்டப்பிரிவினால் , அரசாங்கத்திற்கு தனிமனித வாழ்வில் தலை இடுகிற, நியாயமற்ற, அபாயகரமான சக்தி இருக்கிறது. ஒருபாலீர்ப்பாலர்களை குழந்தைகளாக கொண்ட குடும்பங்களுக்கு இதனால் பெரிய ஆபத்து. தேவையற்ற மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் எங்கள் குழந்தைகள் ஆட்படுத்தப்படுவதால், எங்கள் குடும்பங்களும் காயப்படுத்தப் படுகின்றன. எங்களை போன்ற குடும்பங்களின் மரியாதைக்கும், மனநிம்மதிக்கும் நேரடியாக பங்கம் விளைவிக்கிறது இந்த சட்டம்” என்கிறார்கள் இந்த பெற்றோர்கள்.

நிஷித் சரணின் தாயார் திருமதி.மின்னா சரண், இந்த குழுவிற்க்கு தலைமை வகிக்கிறார். இவரது மகன் நிஷித் திறமைவாய்ந்த ஒரு பட இயக்குனர். நிஷித் துயரகரமான ஒரு சாலை விபத்தில் இளவயதில் இறந்து போனார். ஒருபாலீர்ப்பாளரான நிஷித், தனது மாறுபட்ட பாலீர்ப்பை புரிந்து, அதை ஏற்றுக்கொள்ள எப்படியெல்லாம் மனப்போரட்டம் மேற்க்கொள்ளவேண்டியிருந்தது என்பதை படமாக பதிவு செய்து இருந்தார். குடும்பத்தாலும், சமுதாயத்தாலும் தான் வெறுக்கப்படுவோமே என்ற பயமும், கவலையும் அவரை ஒவ்வொரு நாளும் வாட்டி எடுத்தது. அவரது தாயாரோ அவரை புரிந்துகொண்டு , அவருக்கு உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருந்தார். “அடுத்தவர் என்ன சொல்லுவார்” என்று கவலைப்படாமல், இந்த சமூகத்தின் எதிர்ப்பிற்கு அஞ்சாமல், தன் மகனை முழு மனதோடு ஏற்றுக்கொண்ட ஒரு உன்னத தாய் திருமதி.மின்னா சரண். நிஷித்தின் மறைவிற்க்கு பிறகு, அவரது பெயரில் ஒரு அறக்கட்டளை அமைத்து, மாறுப்பட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட குழந்தைகளுக்கும் , அவரது பெற்றோர்களுக்கும் இடையே ஒரு பாலமாக, அன்பை வளர்க்கும் அன்னையாக அரிய பணியாற்றிவருகிறார் திருமதி.மின்னா சரண்.

வீணாவின் தாயார் திருமதி.முனித்தாயம்மா இந்த குழுவில் இடம்பெற்றுள்ள இன்னொரு தாய். வீணா ஒரு திருநங்கை. ஆணாக பிறந்த இவர், சிறுவயது முதல் தன்னை பெண்ணாக கருதியவர். பெண் குழந்தைகளை போல தன்னை அழகு படுத்திகொள்வதிலும், உடைகள் அணிவதிலும் இவருக்கு சிறுவயதிலிருந்தே இயற்கையான நாட்டம் இருந்தது. சரியான புரிதல் இல்லாததாலும், ஊர் உலகம் என்ன சொல்லுமோ என்ற பயத்தாலும், முனித்தாயம்மா தனது மகனை கண்டித்து, பல சமயங்களில் அடித்து துன்புறுத்தியுமிருக்கிறார். விவரம் தெரியாத வயதிலிருந்தே இயற்கையாக தனக்கு தோன்றிய விதத்தில் நடந்து கொண்ட குழந்தையை, புரிந்து கொள்ளமால் கண்டித்ததை மிகுந்த மனவருத்தத்துடன் இந்த தாய் நினைவுகூருகிறார். தன்னை போல் இல்லாமல், பிற பெற்றோர்கள் தங்கள் திருநங்கை (மற்றும் திருநம்பி ) (Transgender) குழந்தைகளை புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகிற முனித்தாயம்மா, 377 சட்டப்பிரிவு அத்தகைய மனமாற்றங்களுக்கு பெரிய முட்டுக்கட்டை என்கிறார்.

திருமதி. சித்ரா பாலேகர் ஒரு விருது பெற்ற நாடக நடிகர், இயக்குனர் மற்றும் படத் தயாரிப்பாளர். இவரது மகள் ஷாமலி பாலேகர் ஒரு லெஸ்பியன். இந்த மனுவில் சித்ரா தான் ஒரு லெஸ்பியனின் தாயாக இருப்பதால், எப்படி இந்த சமூகத்தால் ஒதுக்கப்பட்டு உணர்கிறார் என்று விவரிக்கிறார். 377 போன்ற சட்டங்களால், இவரை போன்ற பெற்றோர்கள், மனம் திறந்து மற்றவர்களுடன் தங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளக்கூட முடிவதில்லை என்பதையும், இவர் மாறுபட்ட பாலீர்ப்பை பற்றி தகவல் அறிய எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருந்தது என்பதையும் பற்றியும் சொல்கிறார் இவர்.

மாற்றுப் பாலியல் குறித்த புரிதலைப் புத்தகங்கள் மூலமும் பலரை சந்திப்பதன் மூலமும் தான் பெற்றிருப்பதாகவும், இது போன்ற வாய்ப்புகள் எல்லா பெற்றோர்களுக்கும் கிடைப்பதில்லை என்றும் அவர் கூறுகிறார். சமூகத்தில் இது குறித்து நிலவும் தவறான கருத்துக்கள் அவர்களை அத்தகைய முயற்சிகளிலிருந்து தடுக்கிறது என்றும் கூறுகிறார் திருமதி. சித்ரா பாலேக்கர்.

இந்த மூன்று தாய்மார்களும், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கிய பத்தொன்பது பெற்றோர்கள் அடங்கிய குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த பத்தொன்பது பெற்றோர்களும் இந்தியாவில் பல பகுதிகளில் இருந்து, பல வாழ்க்கை முறைகளிலிருந்து வருகிறார்கள். குடும்பத் தலைவிகள், ஆசிரியர்கள், வங்கி அதிகாரிகள், தபால் துறை பணியாளர்கள் என்று பல தரப்பட்டவர்கள் இந்த பெறோர்கள். இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், இந்த குழு, தீர்ப்பை எதிர்ப்பவர்களின் இன்னொரு குற்றச்சாட்டையும் தவிடு பொடியாக்குகிறது. அது “ஒருபாலீர்ப்பு ஒரு மேலை நாட்டு இறக்குமதி, நாகரிக விரும்பிகளின் வாழ்க்கை நெறி” என்ற குற்றச்சாட்டு. தங்கள் குழந்தைகளின் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான 377 சட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் சராசரி, சாதாரண இந்தியர்கள் இந்த பெற்றோர்கள்.

மேலும் விவரங்களுக்கு: விக்ரம் டாக்டர் 98213-29037

]]>
https://new2.orinam.net/ta/parents-say-377-destroys-famiiies-ta/feed/ 0