பீச்சர்ட் – ஓரினம் https://new2.orinam.net வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Wed, 10 Jun 2015 05:41:10 +0000 ta-IN hourly 1 https://wordpress.org/?v=6.8.3 https://new2.orinam.net/wp-content/uploads/2024/03/cropped-imageedit_4_9441988906-32x32.png பீச்சர்ட் – ஓரினம் https://new2.orinam.net 32 32 சாதி ஒடுக்குமுறையை எதிர்த்து ஓரினத்தின் நிலை https://new2.orinam.net/ta/orinams-stand-against-caste/ https://new2.orinam.net/ta/orinams-stand-against-caste/#respond Wed, 10 Jun 2015 05:18:43 +0000 https://new2.orinam.net/?p=11761 ஓரினம் என்பது சென்னையை அடிப்படையாகக்கொண்டு தன்னார்வலர்களால் நடத்தப்படும் பதிவு செய்யப்படாத ஒரு கூட்டமைப்பு. இது ஆதரவு, கலாச்சாரம் மற்றும் போராட்டம் தொடர்பான தளங்களில் செயல்படுகிறது. சாதி, நிறம், இனம், மதம், பாலியல்-பாலினம், வயது மற்றும் திரன் என  எல்லாவிதமான ஒதுக்குதல்களையும் ஓரினம் எதிர்க்கிறது.

இதன் நீட்டிப்பாக, சமூகம், சாதி, தோற்றம், இனம், மதம், திறமை மற்றும் கண்ணுக்கு புலப்படுகின்ற/புலப்படாத அடையாளங்கள் தொடர்பான எல்லாவிதமான முன் அனுமானங்களையும் ஓரினம் எதிர்க்கிறது.

சமீபத்தில் ஓரினம்  முகநூல் பக்கத்தில் நடைபெற்ற சாதி, சாதி சார்ந்த ஒடுக்குமுறைகள், சாதியம் தொடர்பான உரையாடல்களுக்கு பிறகு நமது மதிப்பீடுகளை மீண்டும் தெளிவாக உறுதிபடுத்த வேண்டிய அவசியத்தை உணர்கிறோம். சாதி தொடர்பான பாரபட்சம் மற்றும் முன் அனுமானங்களை எதிர்கொள்ள ஓரினம் தனது நிலைப்பாட்டை மீண்டும் நிலைநிறுத்த விரும்புகிறது. சாதி அமைப்பு என்பது மக்களைத் தொடர்ந்து ஒடுக்குகின்ற, சுரண்டுகின்ற ஒரு திட்டமிடப்பட்ட அமைப்பாகவே  செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. சாதி என்பது மக்களிடையே பிரிவினையை உண்டாக்கியுள்ள  ஒரு அமைப்பே தவிர, தனி மனித தேர்வு கிடையாது. சாதியம் என்பது ஒட்டுமொத்த இந்திய மக்களையும் பாதிக்கும் ஒரு பிரச்சினை என்பது மட்டுமல்லாது, ஒடுக்குமுறை, ஆணாதிக்கம், மதம், திறமை, வர்க்கபேதம் போன்றவற்றைக் கலைக்கவும் தடையாக இருக்கிறது.

நமது பாலியல்-பாலின உரிமைகள் இயக்கம் தமிழகத்தின் சுயமரியாதை இயக்கத்தின் கருத்தாக்கத்தை பின்பற்றி வருகிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஒரு தனிநபரின் கண்ணியத்திற்கு (மதிப்பிற்கு) உறுதியளிக்கிறது. உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் “அனைத்து மனிதர்களும் சுதந்திரமான, சமமான மதிப்புகளும் உரிமைகளும் கொண்டவர்கள்” என்பதை வலியுறுத்துகிறது. சுய மரியாதை, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் ஆகியவையின் கொள்கைகளுக்கு இணங்கி நடப்பதில் ஓரினம் உறுதியாக உள்ளது. நமது நோக்கத்திலான உலகம் என்பது அனைத்து பாலின மற்றும் பாலியலைச் சார்ந்தவர்களும் அவர்களது மனித உரிமைகளை எந்த ஒதுக்குதலும் இல்லாமல் அடைவதுதான். இந்த  பார்வையில் சாதியம் என்பது தனிப்பட்ட ஒரு நபரின் பிறப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவரது கண்ணியம் மற்றும் சுதந்திரத்தின் மீது செலுத்தப்படும் அறமில்லாத அநியாயமான அடக்குமுறை ஆகும். ஆகையால் சாதியம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதனை ஓரினம்  எதிர்க்கும் முறையில் செயல்பாடும். மேலும் சாதியினால் கிடைக்கும் தனிப்பட்ட சலுகைகள் விளைவான பாரபட்சத்தையும் முன் அனுமானங்களையும் ஓரினம் எதிர்கொள்ள போராடும்.

]]>
https://new2.orinam.net/ta/orinams-stand-against-caste/feed/ 0
நன்றி ஹரீஷ்! https://new2.orinam.net/ta/thanks-harish/ https://new2.orinam.net/ta/thanks-harish/#respond Thu, 21 May 2015 13:34:06 +0000 https://new2.orinam.net/?p=11677 குடும்பப் பெயர் வைத்து எவரையும் அழைக்கும் பழக்கம் எனக்கில்லை. அது என்  விருப்பச் சார்பு*. இந்த கட்டுரை வெளி வருவதற்குள் உங்களுக்கு எண்ணற்ற வாழ்த்துக்களும், வசவுகளும் வந்திருக்கும்.

உங்கள் அம்மாவின் விளம்பரத்தை மையமாய் வைத்து நான் எழுதுவதால் தான் உங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்து தொடங்குகிறேன்! மேலும் இது தொடர்பாய் பல வலைப்பதிவுகளும், விவாதங்களும் துளிர் விட்டுள்ளது ஆரோக்கியமானதென்றே நான் கருதுகிறேன்!

இந்த பழுத்துப்போன எழுத்து கதம்பத்தினை இன்னமும் படிக்க நினைக்கும் எல்லா வாசகர்களுக்கும் நன்றி! சுருக்கமாக நடந்தவற்றை விவரிக்கிறேன். ஹரீஷ் அவரின் அன்னை அவருக்காக வரன் தேடி நாளிதழ் ஒன்றில் விளம்பரம் கொடுத்தார். அதில் சாதி தடையில்லை,ஆயினும் ஐயர் சாதியினருக்கு சார்பு உண்டு என வரையப்பட்டிருந்தது. அதனைப் பதிவு செய்ய பல நாளிதழ்களும் மறுத்த நிலையில் மிட் டே (Mid-Day) எனும் நாளிதழ் பிரசுரித்தது. அதன் பின் பாராட்டியும் கண்டித்தும் பல குரல்கள் எழுந்துள்ளன.

harish_matrimonial_ad

பாராட்டும் குரல்கள் 

இந்தியாவில்  முதல் முறையாக ஓர்பாலீர்ப்பு சார்ந்த வாழ்க்கைத்துணை தேடலுக்கு ஒரு குரல் கிடைத்துள்ளது.

எதிர்க்கும் குரல்கள் 

சாதி சார்பினை வெளிப்படையாய் தெரிவித்து இந்த விளம்பரம் சமூக சீர்திருத்தத்தில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

உண்மை என்னவென்றால், ஹரீஷ்-க்கு சார்பான குரல்கள் தான் அதிகம் (வெறும் 6 சதவிகித இந்தியத் திருமணங்களே சாதி கலப்புத் திருமணங்கள்). பாலீர்ப்பு சிறுபான்மையினர் அடிப்படை உரிமைக்காக தோள் நின்று போராடினாலும், அவர்கள் சாதி ஒழிப்பின் முக்கியத்துவத்தினை அறியவில்லை. சாதி, பாலீர்ப்பு அரசியலின் விளிம்பிலிருந்து ஒளியாண்டுகள் (light years) பல கடந்து இருப்பதாகவே பலரும் எண்ணுகின்றனர். எனக்கென்னவோ இவை அனைத்தும் சாதியெனும் கணத்தோடு வெட்டுண்ட (intersected) பகுதிகளாகவே தெரிகிறது.

இதனை மேலும் விவரிக்க, தருமபுரியில் நடந்த சம்பவத்தினை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இளவரசன், திவ்யா இருவரும் சாதி கலப்பு திருமணம் செய்து கொள்ள, அவர்களின் கிராமத்தில் கலவரம் தொடங்கிற்று. திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொள்ளவே, குடிசை எரிப்பும், வன்முறையும் இடரின்றி தொடர்கின்றன! பின் திவ்யாவின் அன்னை தரப்பில் நீதி மன்றத்தில் மனு அளிக்கவே, ஆட்கொணர் நீதிப்பேராணை (writ of Habeus Corpus) வழங்கப்படுகிறது. திவ்யா பெற்றோருடன் செல்ல முடிவெடுக்க, இளவரசனின்  சடலம் அடுத்த நாள் மீட்கப்படுகிறது.

சாதியின் வன்மம்  மிக அதிகம்! சாதி எளிதில் மறையக்கூடிய விடயமில்லை. எல்லோருக்கும் இருக்கக்கூடிய சார்பு என்றாலும், இந்த விளம்பரத்தினை தருமபுரியோடு தரமேற்றி பார்க்காமல் என்னைப் போன்றோரல் இருக்க முடியாது!

“அதெல்லாம் சரி! சாதி எப்படிய்யா இதுக்குள்ள வந்துச்சு? என்னென்னவோ உளரிக் கொட்டுற!”, என்று நீங்கள் சொல்லலாம். பாலீர்ப்பு உரிமைகள் நிறுவப்பட்ட சமுதாயமாய் இந்தியா இருப்பதாய் கற்பனை செய்து கொள்ளுங்கள். இங்கு இளவரசனும் திவ்யாவும், அமுதன் மற்றும் இளமாறனாய் இருப்பதாய் யோசித்துப் பாருங்கள்! நம் எல்லோருக்கும் அடிவயிற்றில் கொஞ்சம் நெருடல் ஏற்படுத்தும் காட்சிகள் தோன்றும்**!

சாதி சார்பு என்பது நகர தளங்களில் பழக்கம் மற்றும் வாழ்வியல் தொடர்பான சார்பாக சொல்லப்படுவதற்கு அடிப்படை இல்லாததாகவே கருதுகிறேன். குடும்ப பூசைகளிலோ, வழிபாட்டு முறைகளிலோ, விழாக்களிலோ பங்கு பெறுவதற்கான விதிகள் தன் சாதி மக்களுக்கு மட்டும் தான் இருக்கும் என்றும் மற்றவர்களுக்கு அவை விளங்காது எனவும் எண்ணுவது எந்த வகையில் நியாயம்? கற்றுக்கொள்வதற்கும், இசைந்து நடப்பதும் கடினமாக இருக்க இவை ஒன்றும் குவாண்டம் விசைவியல் (Quantum mechanics) அல்லவே?

நான் ஹரீஷ் அவர்களுக்கு நன்றி தெரிவித்த காரணம் இதுவே. அவரது விளம்பரம் மீண்டும் ஒரு பெரிய விவாதத்தினைத் தொடங்கியுள்ளது. சாதி எவ்வாறு பல தரப்பட்ட மக்களையும் பாதிக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கான ஒரு எண்ண வெளியினை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் வைணவ மத நம்பிக்கைச் சார்ந்த மாற்று பாலீர்ப்பு அமைப்பான கால்வா (GALVA***) போன்றவற்றின் தகவு பற்றி பலரும் விவாதித்தது நினைவிற்கு வருகிறது. முகப்புத்தகத்தில் நடக்கும் எந்த விவாதமும் சமூக மாற்றத்தினை ஏற்படுத்தாது என்றாலும் அவை ஒரு சிறு தீப்பொறியினை துவக்குகின்றன.

இது போன்ற வாய்ப்புகளைப் மாற்று-பாலீர்ப்பு சமூகத்தினர் பயன்படுத்திக்கொள்வது மிகவும் அவசியம் என்று நான் எண்ணுகிறேன். ஏனெனில் சட்ட ரீதியான தடைகளை நாம் எதிர்கொண்டு வெல்ல முடியும்! சாதி ரீதியான கட்டுப்பாடுகள் சட்டத்தைக்  காட்டிலும் வலுவானவை!

கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லி முடிக்கிறேன். எல்லோரும் சாதி குறிப்பிட்டிருப்பதை மையப்படுத்தி பல எண்ணங்களைப் பதிவு செய்கின்றனர். ஆயினும் பெற்றோரால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பதில் உள்ள பிரச்சனையை யாரும் சொல்லவில்லை. குடும்ப அமைப்பும் திருமணமும் விதிப்ரழ்  மக்களின் (individuals who do not subscribe to hetero-patriarchy / Queer) அடிப்படை உரிமைகளை எவ்வாறு பறிக்கின்றது என்று பேசவில்லை. திருமணச் சந்தையிலிருந்து வேற்று சாதி ஆண்மகனைத் தேடினால் அது சரியா? அதுகுறித்தும் சிந்திப்போம்!

 “திருமணம் செய்வதற்கு முன்பு பொருத்தம் பார்க்கிறார்களே, அதில் ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் சம தோற்றம், சம அன்பு, ஒத்த அறிவு, கல்வி ஒற்றுமை இருக்குமோ என்று கருதுவதில்லை. அதற்கு மாறாக நமது பிள்ளைக்கு அந்தப் பெண் தலைவணங்கிக் கட்டுப்பட்டு நல்ல அடிமையாக இருக்குமா என்ற கருத்தில், மாடுகளை விலைக்கு வாங்குவதற்கு என்னென்ன பொருத்தங்கள் பார்க்கிறோமோ அதையேதான் பெண்கள் பிரச்சினையிலும் பார்க்கிறார்கள். பெண்களே வீரத் தாய்மார்களாக ஆக விருப்பப்படுங்கள், நீங்கள் மாறினால் உங்கள் கணவன்மார்களும், மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது வெகு சுலபம். ஆண்கள் உங்களைத்தான் பிற்போக்காளிகள் என்று உங்கள் மீது பழி சுமத்தி வருகிறார்கள். அப்பழிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள். எதிர்காலத்தில் “இவள் இன்னாருடைய மனைவி” என்று அழைக்கப்படாமல், “இவர் இன்னாருடைய கணவன்” என்று அழைக்கப்படவேண்டும்.”

-பெரியார்


* சாதி ஆதிக்க மனித உருவில் இது நகநுனியாய் இருந்தாலும், அகற்றப்படவேண்டிய அழுக்காகவே அதனை நான் கருதுகிறேன்! குடும்ப/சாதி பெயர் பயன்படுத்தாவிட்டால் அவர்கள் சாதியற்றவர் ஆவதில்லை. ஆயின் அவரின் சாதி அடையாளத்தினை தெரு விளக்காய் பளீரிட விரும்பா/முடியா நிலைக்கு அது ஒருவரைத் தள்ளுகிறது!

** இவை நடக்கவில்லை என்று நினைக்காதீர்கள்!  பல நங்கைக் காதலர்கள் இந்தியா முழுவதிலும் தற்கொலை செய்து கொள்கின்றனர்! அதற்க்கு பாலீர்ப்பு  மட்டும் காரணமில்லை! சாதியும் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.

***அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ஒரு ஓர்பாலீர்ப்பு (இரு ஆண்கள்) திருமணத்தைப் பற்றிய கட்டுரையில் ஒருவரின் சாதி மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு காரணமாய் பிராமண சாதியின் செயல்பாடுகள் மற்ற சாதியினருக்கு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளதாக அந்த அமைப்பின் மும்பை முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது! உயர் சாதிச் சலுகைப்  பற்றிய ஆழ்ந்த எண்ண  ஓட்டம் அவசியம் என்று நான் நினைக்கிறேன்.

 

]]>
https://new2.orinam.net/ta/thanks-harish/feed/ 0
மாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட திருமணமான தமிழரா? – படைப்புகளை வரவேற்கிறோம் https://new2.orinam.net/ta/south-asian-married-queer-seeking-submissions-ta/ https://new2.orinam.net/ta/south-asian-married-queer-seeking-submissions-ta/#respond Sun, 12 Oct 2014 08:10:52 +0000 https://new2.orinam.net/?p=10779 பின்னனி:

ஓரினம் – சென்னையிலிருந்து செயல்படும், LGBTQI மற்றும் அனைத்து மாற்று பாலின நண்பர்களின் கூட்டமைப்பு.

ஓரினத்தின் உறுப்பினர்களுக்கும், செயல்பாட்டாளர்களுக்கும் பெரும்பான்மையில் திருமணம் குறித்தான பார்வை பலவிதமாகவும், மாறுபட்டதாகவும் உள்ளது. கட்டாயத் திருமணங்களின் கொடுங்கோன்மையாலும், பெண்களையும் மற்ற பாலினங்களையும் ஆணாதிக்க ஏற்றத்தாழ்வுகளை கொண்டு திருமண அமைப்பு ஒடுக்குவதையும் எதிர்த்து சிலர் திருமணம் என்னும் கட்டமைப்பிலிருந்து முற்றிலுமாக வெளியே நிற்கின்றனர். இன்னும் சிலர் (ஓர்பாலீர்ப்பாளர்கள், ஓர்பாலீர்ப்பாளர்கள் அல்லாதோர்) திருமணக் கட்டமைப்பை தேர்ந்தெடுத்து அது ஏற்றத்தாழ்வுகள் இல்லாத ஒன்றாக அமைத்துக் கொள்ள தொடர்ந்து முயற்சிக்கின்றனர். இருப்பினும் ஒரு குழுவாக எங்களின் கொள்கைகளை மற்றும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, திருமணம் செய்து கொண்ட மாறுபட்ட பாலீர்ப்பு கொண்டவர்களுக்கும், அவர்களின் துணைகளுக்கும் ஆதரவு அளிப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம். இதன் விழைவு தான் ‘மாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட திருமணமான தமிழரா?’ எனும் இந்த திட்டம்

அடிப்படைக் கோட்டுபாடு:

தெற்கு ஆசியர்களுக்கிடையே இருக்கும் கட்டாய எதிர்பாலீர்ப்பு கலாச்சாரம் தனித்துவம் கொண்டதாகவும், அதே நேரம் தன்னளவில் ஒத்த தன்மையுடையதாகவும் உள்ளது. திருமணம் (எதிர்பால்) என்பது மகன் பெற்றோர்களுக்கு செய்யும் கடமை என்றும், திருமணமாகாத பெண் தோல்வி அடைந்தவள், பெற்றோற்களுக்கு பாரம் என்றும் ஆசிய மனங்களில் பதிந்து கிடக்கிறது. இதன் விளைவாய் மாற்று பாலினத்தோருக்கும், திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கும், பெற்றோர்களின் ஆசையை பூர்த்தி செய்வதிலும் அவர்களின் விருப்பத்திற்கேற்ப வாழ்க்கை வாழ்வது என்ற இரண்டிற்கும் நடுவே சிக்கி தவிக்கினறனர்.

பொதுவாக எங்களிடம் சொல்லப்பட்டது, நம்பிகள் (gay) பெற்றோர்களின் அழுத்தத்தை தாங்க முடியாமல் ,அவர்களின் பாலீர்ப்பின் சுயத்தை மறைத்து பெண்ணை திருமணம் செய்து கொள்கின்றனர். இருப்பினும் திருமணமான மாறுபட்ட பாலீர்ப்பாளர்களும், நம்பி (gay), நங்கைகளும் (lesbians) எதிர்கொள்கிற பிரச்சனைகள் பலவிதமானது.

நங்கைகளுக்கும், இருபாலினர்களுக்குமம் (cis people) திருமணத்திற்கான சமுக அழுத்தங்கள் உள்ளது. ஆயினும் கூட நம்பிகள் சந்திக்கும் பிரச்சனைகள் வேறுபட்டது. பாலாதிக்க உறவுமுறைகளின் அமைப்பில் எதிர்பாலீர்பாளர்களான திருநங்கைகள், திருநம்பிகளுக்கு திருமண அழுத்தம் என்பது அவர்களின் பாலீர்ப்பு மட்டுமல்ல, அவர்களின் பால் அடையாளத்தையும் நிராகரிப்பதாக இருக்கும்.

மேலும் திருமணக் கட்டமைப்புக்குள் நுழையும் எல்லா எதிர்பாலீனத்துருக்கும் குடும்ப அழுத்தம் மட்டும் காரணமில்லை. நம்பியாக இருப்பதும், எதிர்பாலீர்ப்பாளராகவும் இருப்பது இரு துருவங்கள் அல்ல. மாறுபட்ட பாலீர்ப்பாளர்களும் மற்ற பாலினத்தரால் வேறு வேறு கோணங்களில் ஈர்க்கப் படவே செய்கின்றனர். ஒரு சிலர் தங்களின் இருபால் பாலீர்ப்பை முழுவதுமாக முன்னதாகவே தெரிவித்து வேறொரு பாலீனத்தரை திருமணம் செய்வதும் உண்டு.

ஆனாலும் பெரும்பான்மையில் எதிர் பாலீனத்தாரோடு உறவில் இருக்கும் போது, தங்களின் ஓர்பால் ஈர்ப்புத்தன்மையை பின்னர் அறிந்து கொள்ளும் சூழ்நிலைகள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதேநேரம் ஒரு சிலர் திருமண வாழ்க்கையின் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு தங்கள் அடையாளங்களை தன் துணைக்கு அறிவிக்கின்றனர்.

கடந்த பத்தாண்டு காலங்களில் பல்வேறு நபர்கள் பல்வேறு சூழ்நிலைகளில் ஓரினத்தை தொடர்பு கொண்டனர்,

  • ஓர்பால் ஈர்ப்பு கொண்டவர்களை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தும் பெற்றோர்களை எதிர்கொள்வதற்காக
  • வேறு பாலீனரத்தோடு உறவில் இருப்பவர்கள், தங்கள் கணவன்/ மனைவியை விட்டு வெளியேறுவதற்கான வழிகாட்டுதலுக்காக
  • எதிர் பாலீனரத்தோடு உறவில் இருக்கும் அதே சமயத்தில் ஒத்த பாலினரத்தோடும் ஈர்ப்பு ஏற்படும் சமயங்களில்
  • திருனர் மற்றும் திருநங்கைகள், திருநங்கை/திருநம்பிகள் அல்லாதவர்களுக்கு விருப்பம் இல்லாத போதிலும் திருமணம் செய்ய சொல்லி கட்டாயபடுத்தப்படும் போது
  • எதிர்பாலினத்தனரின் ஆடைகளை அணியும் திருனர் அல்லாத எதிர்பாலீர்ப்பாளர்கள் தங்களின் இயல்பை ஏற்று கொண்ட பெண்ணை திருமணம் செய்ய விருப்பப்படும் போது
  • ஆண் பெண் தம்பதியர்களாக இருப்பவர்களில் யாரோ ஒருவர் அல்லது இருவருமே ஒருவர் தங்களின் மாற்றுப்பாலீர்ப்பு தன்மையை பற்றி முழு ஒப்புதலுடன் பகிர்ந்து கொள்ள விருப்பப்படும் போது

சூழ்நிலைகள் இப்படியானதாக இருக்க, எதிர்பாலினத்தோரை திருமணம் செய்து கொண்ட நம்பி/ நங்கை/ இருபாலீர்ப்பாளர்கள் , திருநங்கை, திருநம்பிகளும் அவர்களின் துணையாளர்களுக்கும் பாதுகாப்பான ஆதரவான, முன்முடிவுகளற்ற ஒரு சூழலை இந்தியாவில் உருவாக்குவதற்கான முதல் படியாக ஒரினம் சார்பாக திருமண பிரச்சனைகளை முன்நிறுத்தும் கட்டுரைகள், கதைகள், நேர்காணல்கள், கவிதைகளை சேகரிக்க முடிவு செய்துள்ளோம்.

அழைப்பு:

வேற்றுபாலினத்தோரை திருமணம் செய்து கொண்ட நம்பி, நங்கை, இருபாலீர்பாளர்கள் , திருநங்கை, திருநம்பிகள் குறித்தான மற்றும் கட்டாய திருமணங்கள் குறித்தான ஆக்கங்கள் தமிழ், ஆங்கிலம் என்று இரு மொழிகளிலும் வரவேற்கப்படுகின்றன. மேலும் திருமணமான மாற்றுபாலினத்தவருடன் மேற்க்கொள்ளும் படைப்புகள் வரவேற்க்கபடுகின்றன.

தொடர்புகொள்ள:

உங்கள் படைப்புக்களை orinamwebber@gmail.com அனுப்பி வைக்கவும். புனைப்பெயர் கொண்டும் அனுப்பலாம்.உங்கள் படைப்புக்களை ஒட்டி முழு உதவியும் நம்பிக்கையும் தருவதற்கான நம்பகத்தன்மையான ஆசிரியர்கள் எங்கள் குழுவில் உள்ளனர் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

]]>
https://new2.orinam.net/ta/south-asian-married-queer-seeking-submissions-ta/feed/ 0
Video: Dealing With Family – குடும்பத்தினரை சமாளிப்பது எப்படி? https://new2.orinam.net/ta/video-deailng-with-family-ta/ https://new2.orinam.net/ta/video-deailng-with-family-ta/#comments Mon, 10 Feb 2014 01:08:01 +0000 https://new2.orinam.net/?p=9858 Velu and Sundar

In this hangout, some of Orinam’s members who are gay, talk about how they dealt with their family members post coming out.
(Language: Tamil)

இந்த ஹங்அவுட்டில் ஓரினம் அமைப்பை சேர்ந்த சில தன்பாலீர்ப்பு கொண்ட அங்கத்தினர்கள், தங்கள் குடும்பத்த்தினரை சமாளித்த அனுபவங்களை பற்றி பேசுகிறார்கள்.

 

பகுதி 1/Part 1:

பகுதி 2/Part 2:

]]>
https://new2.orinam.net/ta/video-deailng-with-family-ta/feed/ 1
கவிதை: காதலின் ஆற்றலால் (Tamil translation of Vikram Seth’s Through love’s great power) https://new2.orinam.net/ta/loves-great-power-vikram-seth-ta/ https://new2.orinam.net/ta/loves-great-power-vikram-seth-ta/#comments Sun, 09 Feb 2014 15:33:24 +0000 https://new2.orinam.net/?p=9813 VikramSeth_Huffpost

Image courtesy: Huffington Post

ஆங்கில மூலம்: விக்ரம் சேத்
தமிழாக்கம்: அரவிந்த்
பிழை, நயம், சீர் திருத்தம்: பூங்கோதை
ஓலி வடிவம்: பிரவீன் ராஜேந்திரன்


காதலதன் ஆற்றலில் பன்மையிழந்து,
உடல், பொருள் ஆவியும் பின்னிப்பிணைந்து,
ஒருமையாய் காதலுற் றுணையிருந்து,
சுதந்திர ஆழியில் மூழ்கித்திளைத்து,
அல்ல(து)திளைப்பாலேயே தடைதகர்த்து,
இன்புறுதலே இயல்பான நற்செயல்!

முன்பளித்த நீதியை உடைத்தெறிந்து,
நலிந்தோரை வீதியில் துகிலுரித்து,
இணைந்திட்ட ஈருயிர் பறித்தெரித்து,
விலங்கிட்டு ஈனமாய்க் கதறவைத்து,
நயமின்றி கீழ்த்தரமும் கொண்டிசைந்து,
வதைத்தலே இயல்பிலிலாத் தீஞ்செயல்!

 

ஒலி வடிவில் – Audio version

]]>
https://new2.orinam.net/ta/loves-great-power-vikram-seth-ta/feed/ 4
Video: Growing up gay and Tamil – தற்பாலீர்ப்பு தமிழர்களாய் வளர்ந்த அனுபவங்கள் https://new2.orinam.net/ta/video-growing-up-gay-and-tamil-ta/ https://new2.orinam.net/ta/video-growing-up-gay-and-tamil-ta/#comments Mon, 27 Jan 2014 03:09:57 +0000 https://new2.orinam.net/?p=9684  

SundarHangout

In this hangout, some of Orinam’s members who are gay, talk about their respective journeys of realizing and accepting their sexuality and their coming out stories.

“அம்மா-அப்பா, அனுமார் கோவில், சைதாப்பேட்டை, சுவாமி விவேகானந்தர், சினிமா போஸ்டர், சின்ன வீடு, முதற் காதல், முடிவில்லா பயணங்கள்.”

இந்த ஹங்அவுட்டில் ஓரினம் அமைப்பை சேர்ந்த சில தன்பாலீர்ப்பு கொண்ட அங்கத்தினர்கள், தாங்கள் எப்படி தங்கள் பாலீர்ப்பை உணர்ந்து, ஏற்றுக்கொண்டார்கள் என்பதை பற்றியும், தங்களின் வெளியே வந்த அனுபவங்களையும் பற்றியும் பேசுகிறார்கள்.

]]>
https://new2.orinam.net/ta/video-growing-up-gay-and-tamil-ta/feed/ 3
ஆடியோ: நான் கிரிமினல் அல்ல – விக்ரம் சேத் https://new2.orinam.net/ta/i-am-not-a-criminal-ta/ https://new2.orinam.net/ta/i-am-not-a-criminal-ta/#comments Sat, 04 Jan 2014 00:15:26 +0000 https://new2.orinam.net/?p=9442 Vikram Seth, India Today (Tamil), Dec 20th, 2013

நீங்கள் விரும்புபவரை நேசிக்கமுடியாத நிலைமை வருவது, உங்கள் வாழ்க்கையையே பறிகொடுப்பதற்குச் சமம்

11.12.13 – சில எண்ணங்கள்

விக்ரம் சேத்


டிசம்பர் 20 இந்தியா டுடே இதழில்லிருந்து

ஒலி வடிவம்: பிரவீன் ராஜேந்திரன்

]]>
https://new2.orinam.net/ta/i-am-not-a-criminal-ta/feed/ 3
பொது மக்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும்.. https://new2.orinam.net/ta/a-request-to-media-and-public/ https://new2.orinam.net/ta/a-request-to-media-and-public/#comments Sat, 07 Dec 2013 21:55:59 +0000 https://new2.orinam.net/?p=9310 Thirunangai_MediaStory

விபச்சாரம், பிச்சை எடுப்பது, வன்முறை போன்றவற்றை நான் ஆதரித்து பேசவில்லை. இத்தகைய செயலை ஆமோதிக்கவும் இல்லை. மக்களுக்கு இடையூறு செய்யும் எந்த செயலும் கண்டிக்கப்பட வேண்டும். அது ஆணாக, பெண்ணாக இல்லை திருநங்கையாக இருந்தாலும் தவறு என்பது தவறு தான்.

வீட்டை விட்டு சிறுவயதில் துரத்தப்பட்டு, கல்வியை பாதி வயதிலே விட்டு விட்டு, வெளியேறும் திருநங்கைகள், சரியான வாழ்வாதாரம் அமையாது சமூகத்தில் சமஉரிமைகள் மறுக்கப்பட்ட மற்ற திருநங்கைகளிடமே அடைக்கலம் புகுகின்றனர். தங்களின் வயிற்று பிழைப்பிற்காக தங்களின் மூதாதை திருநங்கைகள் தங்களுக்கு பயிற்றுவித்த கடை கேட்டல், பாலியல் தொழில் போன்றவையே தங்களை நம்பி அடைக்கலம் வரும் திருநங்கைகளுக்கு கற்றுகொடுக்கின்றனர். இதன் காரணமாக இந்த வாழ்வியலே வாழையடி வாழையாக வளர்கிறது.

இந்தியாவில், அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் திருநங்கைகளுக்கு ஓரளவிற்கு சாதகமான சூழல் இருந்தாலும் இன்னும் சமுதாயத்தில் சம உரிமைக்கான வாய்ப்பை பெறுவதற்கு பெரும் போராட்டம் தொடுக்க வேண்டி உள்ளது. இத்தகையான இக்கட்டான தருணத்திலும் சில திருநங்கைகள் இன்று தங்களின் வாழ்வாதார சூழ்நிலையை மேன்படுத்திக்கொள்ள சுயமரியாதை கொண்ட மனிதர்கள் போல வாழ முற்படுகின்றனர். பல திருநங்கைகள் இன்னும் பழமையிலே ஊறி உள்ளனர். ஒரே இரவில் இந்த மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது, கால அவகாசம் எடுக்கும். ஆனாலும் நாங்கள் மாறி வர முற்படுவது மறுக்கமுடியாத உண்மையும் கூட. இதை மக்கள் அனைவரும் உணர வேண்டும்.

இந்த மாறி வரும் சூழலில், சிலர் செய்யும் இத்தகைய செயலுக்காக ஒட்டுமொத்த இனத்தை அடையாளப்படுத்தி, மக்களிடம் இருக்கும் சில நன்மதிப்பையும் கெடுக்கும் வகையில் செய்தி வெளியிடுவது, மிகவும் கவலைக்குரியது. இத்தகைய போக்கை சில பத்திரிகை நண்பர்கள் கடைபிடிக்க வேண்டாம். சான் ஏறினால் முழம் சறுக்கும் வாழ்க்கை எங்களுடையது, இது போன்று நாங்கள் சிலர் முன்னேற்றம் கொண்டு வழிநடக்கும் தருவாயில், மக்களிடம் நன்மதிப்பை பெற்றுத் தாருங்கள்.

ஒரு ஆண் அல்லது பெண் சமுதாயத்தில் தவறு நிகழ்த்தினால் ஒட்டுமொத்த இனத்தின் அடையாளத்தை வெளிப்படுத்தி செய்தி வருவது இல்லை, அவரின் பெயரில் மட்டுமே வெளிவரும். தவறான செய்திகள் இருப்பின் இன்னார் இதை செய்தார் என்கிற அடையாளத்தோடு வெளியுடுங்கள், அதை விட்டு விட்டு திருநங்கைகள் என்று ஒரு இனத்தையே முழுமையாக அடையாளபடுத்தி எங்களை மேலும் சீர்குலைய செய்யாதீர்கள். நல்ல வாழ்வாதார சூழ்நிலை இருந்தும் நேர்மையாக பயணிக்காமல் பலர் வாழும் சமுகத்தில் அடுத்த வேலை சோற்றுக்காக போராடும் திருநங்கைகளை குறை கூறுவதை விட்டு விட்டு, எங்களின் சம உரிமைக்காக எழுதுங்கள்.

]]>
https://new2.orinam.net/ta/a-request-to-media-and-public/feed/ 6
டயலாக்: செய்திகள் வாசிப்பது அறியாமை https://new2.orinam.net/ta/dialogue-todays-news/ https://new2.orinam.net/ta/dialogue-todays-news/#respond Fri, 31 May 2013 23:14:29 +0000 https://new2.orinam.net/?p=8848 FearIgnoranceHate


“இலங்கை கடற்படை தாக்குதலுக்கு மூன்று தமிழ் மீனவர்கள் பலி.”

அடையாரில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பின் வரவேற்பு அறையில் உட்கார்ந்து, சுவரில் ஒட்டியிருந்த பிளாஸ்மா டி.வீயில் சன் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்த இருபத்தி ஏழு வயது ப்ரீத்தி, சலித்துக் கொண்டாள்: “இந்த காலத்துல எவ்வளவோ ஜாப் ஆபர்ச்சூனிடிஸ் இருக்கு. யாரு இவங்கள ஸ்ரீலங்கா பார்டர்ல போய் மீன் பிடிக்கச் சொன்னா?”

***

“தில்லியில் நள்ளிரவில் இளம்பெண் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார்.”

அன்றைய பேப்பரில் செய்தி படித்த இப்ராகிம் ராவுத்தர் மனைவியிடம் தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டார்: “அல்லா! என்ன கொடுமை. இது தேவையா? இந்த காலத்து பொண்ணுங்கள என்ன சொல்றது. இருட்டின பிறகு ரோட்டுல திரிவானேன்?”

***

“சிகாகோ விமான நிலையத்தில் பயண இடைவேளையில் தொழுகை நடத்திய முஸ்லீம் முதியவர் மூன்று வாலிபர்களால் தாக்ப்பட்டார்.”

நியூ யார்க் நகரத்தில் உள்ள செல்சி ஏரியாவில், ஒரு ரெஸ்டாரென்டில் தனது பாய்ப்ரெண்டுடன் உணவருந்திக் கொண்டிருந்த ஷ்யாம், தனது ப்ளாக்பெரியில் செய்தி படித்தவாறே சொன்னான்: “அனதர் ஹேட் க்ரைம். அப்படி ஏர்போர்ட்டுல ப்ரே பண்ணலேனா என்ன இந்த ஆளுக்கு? வயசு காலத்துல வெட்டி வீராப்பு.”

***

ப்ரீத்தியின் பிளாஸ்மா டி.வீயில் இப்பொழுது செய்தி மாறியிருந்தது.

“மின்சார ரயிலில் பிச்சையெடுத்த திருநங்கைகள் கைது.”

அவளுடன் சேர்ந்து டி.வீ பார்த்துக் கொண்டிருந்த அவளது அம்மா முனங்கினாள்: “என்ன கருமம் இது. யாரு இதுகள ட்ரெயின்ல பிச்சை எடுக்கச் சொன்னா? சரியான தொந்தரவு இதுகளோட.”

***

]]>
https://new2.orinam.net/ta/dialogue-todays-news/feed/ 0
வயது 18 https://new2.orinam.net/ta/age-18-ta/ https://new2.orinam.net/ta/age-18-ta/#comments Fri, 26 Apr 2013 03:29:44 +0000 https://new2.orinam.net/?p=8731 RK

மூச்சுக் காற்றால்
கன்னங்களை வேக வைத்து,
வியர்வை துளிகளால்
மயிர்த் தேகத்தில் கோலம் போட்டு,
உச்ச வேகத்தால்
தொடையிடுக்கில் ஏக்கத்தை மூட்டிவிட்டு,
எங்கடா போனாய்?

மார்பு மொட்டுகளில்
நீ பதித்த எச்சத்தின்
ஈரம் காயுமுன்னே
வந்துவிட்டுப் போ

]]>
https://new2.orinam.net/ta/age-18-ta/feed/ 1