ந.ந.ஈ.தி வெளியே வரும் கதைகள் – ஓரினம் https://new2.orinam.net வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Sat, 16 Jun 2012 03:44:23 +0000 ta-IN hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://new2.orinam.net/wp-content/uploads/2024/03/cropped-imageedit_4_9441988906-32x32.png ந.ந.ஈ.தி வெளியே வரும் கதைகள் – ஓரினம் https://new2.orinam.net 32 32 சுந்தர் வெளியே வந்த கதை https://new2.orinam.net/ta/sundars-coming-out-story-ta/ https://new2.orinam.net/ta/sundars-coming-out-story-ta/#respond Sun, 18 Oct 2009 13:11:40 +0000 https://new2.orinam.net/?p=3179 இரண்டு வாரங்களுக்கு முன்பு என் அம்மாவிடம் நான் “அதிகாரப்பூர்வமாக” வெளியே வந்தேன். நான் “அதிகாரபூர்வமாக” என்று குறிப்பிடுவது ஏன் என்றால், சில பல காரணங்களால் எனது பால் ஈர்ப்பை பற்றி அம்மாவிற்கு முன்னாடியே தெரிந்திருக்கும் என்று எனக்கு ஒரு சந்தேகம். நாங்கள் இதை பற்றி நேரடியாக பேசியதில்லையென்றாலும் அவளுக்கு ஏதோ தெரியும் என்றது என் உள்ளுணர்வு.

கடிதம், போன், ஈ மெயில் இவற்றில் வெளியே வருவதை விட, அம்மாவிடம் நேரில் வெளியே வரவேண்டும் என்பது தான் என் விருப்பம். நான் இந்தியாவை விட்டு வந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டது, அம்மாவோ தன் ஆசிரிய பணியிலிருந்து விடுமுறை எடுத்து என்னை வந்து அமெரிக்காவில் பார்ப்பது என்பது நடக்கிற காரியமாக இல்லை.

இதனால் என் வெளியே வருதல் தாமதமாகிகொண்டேபோனது. ஒரு புறம் நான் மற்ற எல்லாரிடமும் வெளியே வந்துகொண்டிருந்தேன், மறுபுறம் நான் மிகவும் நேசிக்கும் ( வேலுவிற்கு பிறகு :) ) என் அம்மாவிடம் எனது பால் ஈர்ப்பை பகிர்ந்துகொள்ளமுடியவில்லை. இதனால் நாளுக்கு நாள் எனக்கு பொறுமை குறைந்துகொண்டேபோனது.

இந்த போராட்டதிருக்கு நடுவே மூவன்பிக் (எம்.பி) இணைய குழுவில் பலர் தாங்கள் வெளியே வந்ததை பற்றி ஈ மெயில் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அவற்றை படிக்க படிக்க எனக்கு நானும் அம்மாவிடம் வெளியே வரவேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துக்கொண்டே போனது ( ஸ்ரீ, பிரவீன்! உங்கள் இருவரின் வெளியே வந்த கதைகள் எனக்கு மிகப்பெரிய உந்துதல்) . நானும் என் அம்மாவை நேரே பார்க்க காத்துக்கொண்டிருக்காமல் தொலைதொடர்பு மூலமாக வெளியே வர முடிவு செய்தேன். ( என்ன சொல்வது, எப்படி சொல்வது என்று இன்னமும் முடிவு செய்யவில்லை).

அதற்கு அடுத்த வாரம் நான் வேலுவை பார்க்க அவன் ஊருக்கு போயிருந்தேன். எப்பொழுதும் போல சனி ஞாயிறு அம்மாவுக்கு போன் செய்தேன். வழக்கமான விசாரிப்புகளுக்கு பிறகு, எங்கள் உரையாடல் “ஆடோக்ராப்” தமிழ் திரைபடத்தை பற்றி திரும்பியது. (நான் சில நாட்களுக்கு முன்புதான் அந்த படத்தை பார்த்திருந்தேன்). எனக்கு படம் பிடித்திருந்தது என்றும் நன்றாக “சைட்” அடித்தேன் என்றும் அம்மாவிடம் சொன்னேன்.

அம்மா கேட்டாள் “யாரு அந்த மலையாள பெண்ணையா ?”
“இல்ல மா ”
“ஸ்னேஹாவை யா ?”
நான் பொறுமை இழந்தேன் “எம்மா … பொண்ணுங்கள தான் “சைட்” அடிக்கனுமா..”
மறுமுனையில் கொஞ்ச நேரம் நிசப்தம். பின்பு தயங்கியவாறே அம்மா கேட்டாள்..
“சுந்தர்…நீ பசங்கள பத்தி பேசறயா?”
அப்பாடா! என்று நான் பெருமூச்சு விட்டேன் “ஆமாம் மா ….எனக்கு பசங்க மேல தான் ஈர்ப்பு..பொண்ணுங்க மேல இல்லை ..”
(ஆம்.. சேரனின் திறமைக்கும் அழகிற்கும் நான் ரகசிய விசிறி ;) )
எதிர்பார்த்தது போல் அம்மா கேட்டாள் ” உனக்கு கண்டிப்பா தெரியுமா?”

“தெரியும் மா ” என்றவன் பள்ளிகூட நாட்களில் என்னுடன் படித்த இரண்டு நண்பர்களை பற்றி சொன்னேன். “உனக்கு அவர்களை நியாபகம் இருக்கிறதா.. அவர்கள் மேல் இருந்த நெருக்கம் வெறும் நட்பு மட்டும் இல்லை அவர்கள் மேல் எனக்கு இருந்தது காதல். எனக்கு அப்பொழுது இது புரியவில்லை.. இப்பொழுது யோசித்து பார்த்தால் எனக்கு அவர்களை பார்க்கும்பொழுதெல்லாம் ஏன் என் வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது என்று புரிகிறது”
சற்று சங்கடமாய் சிரித்தாள் அம்மா.
“உனக்கு என்னை பத்தி தெரியும்மா.. தீவீரமா யோசிக்காம நான் எதையும் சொல்ல மாட்டேன்” என்று தொடர்ந்தவன் உணர்ச்சி பொங்க அம்மாவிடம் பல விஷயங்களை பற்றி நிறுத்தாமல் பேசினேன். அம்மாவும் பொறுமையாகக் கேட்டாள். எனது இந்த தன் பால் ஈர்ப்பினால் எனக்குள் இருக்கும் பயம், நிராகரிக்கபடுவோமோ என்கிற கவலை, சங்கடங்கள், வெளியே வருதல், எனது முந்தய காதல்கள், இன்றைய காதல், 377 சட்டம், ஹெச். ஐ. வி என்று பல விஷயங்கள்.(யோசித்து பார்த்தால் ஒரே நேரத்தில் இத்தனை விஷயத்தையும் சொல்லியிருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது).

இதையெல்லாம் கேட்ட பிறகு அம்மா சொன்னது இது..
” நீ சொல்வதில் பல விஷயங்கள் எனக்கு புதுசு. என்னவானாலும் உன் மேல் இருக்கும் அன்பு எனக்கு சிறிதும் குறையாது.இதையெல்லாம் அனுபவித்த பொழுது நீ என்னிடம் மனம்திறந்து பேச முடியவில்லையே..எனக்கென்னவோ நான் ஒரு நல்ல தாயாக இல்லையோ என்று தோன்றுகிறது”

அதை கேட்டு நான் மனம் இளகி போனேன்.

அந்த நாளிலிருந்து இந்தியாவிலிருக்கும் என் தம்பி அடிக்கடி என் அம்மாவுடன் இதை பற்றி பேசுகிறான். இது அவளுக்கு உதவியாக இருக்கிறது. என் அம்மாவிருக்கு இருக்கும் கவலைகள்..
(1) தன மகனிற்கு ஒரு ஆதரவு தேவைப்பட்ட பொழுது, தன்னால் இருக்க முடியவில்லையே என்பது
(2) 377 சட்டமும் அதன் விளைவுகளும் ( இந்தியாவிற்கு திரும்பி வராதே. அமெரிக்காவிலேயே சந்தோஷமாக இரு!!)
(3) அப்பாவிடம் எப்படி இந்த விஷயத்தை சொல்வது.

வயதான பிறகு என் மகனை யார் கவனித்து கொள்வார்கள் என்ற கவலை…அவளுக்கு பெரியதாக இல்லை, அதற்கு இரண்டு காரணங்கள்
(1) என்னை நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே நேசிக்கும் ஒரு பெரிய நண்பர் கூட்டம் இருக்கிறது என்பதும்
(2) வேலு என் “நலன் விரும்பி” என்பதும் :)

அம்மாவிடம் வெளிய வந்துவிட்டேன் என்று நான் வானத்தில் பறக்காவிட்டாலும், ஆமாம் எனக்கு இது ஒரு பெரிய மனநிம்மதியையும், அமைதியையும் தருகிறது.

இப்பொழுது இதை எழுதும்பொழுது மிகவும் உணர்ச்சிகரமாக உணர்கிறேன்.
இந்த சந்தர்பத்தில், நான் 1998 ல் இணையத்தில் “ஹோமோஸெஷுஅல்” என்ற வார்த்தையை தேட ஆரம்பித்த நாளிலிருந்து இன்றுவரை என்னுடன் இருந்த (தெரிந்தோ, தெரியாமலோ) நண்பர்களுக்கு நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன்

* விக்ரம், எல்.ராம்கி, அசோக் மற்றும் “கே பாம்பே” இணைய குழுவின் பல அங்கத்தினர்கள். இன்று தன் பால் ஈர்ப்பு, இரு பால் ஈர்ப்பு பற்றி எனக்கு இருக்கும் தெளிவிற்கு காரணம் உங்களது ஈ மெயில்கள் மற்றும் நீங்கள் பகிர்ந்துகொண்ட பல தகவல்கள்.நீங்களெல்லாம் இல்லை என்றால் நான் இன்று எங்கே இருந்திருப்பேன் என்று எனக்கே தெரியாது ( கல்யாணம் செய்து கொண்டு , கொடுமையான ஒரு இரட்டை வாழ்கை வாழ்ந்துகொண்டிருப்பேன்)

* என் நண்பன் வெற்றி. “புருடு” (Purdue) வில் இருந்த இரண்டரை ஆண்டுகளாக எனக்கு வெற்றியை பழக்கம். அவனை சந்தித்த பொழுது நான் இரண்டே இரண்டு நண்பர்களிடம் தான் வெளியே வந்திருந்தேன். அவனும் நானும் எங்களது வெளியே வரும் அனுபவங்களை பகிர்ந்துகொண்டு ஒருவருக்கொருவர் ஊக்கமாக இருந்தோம். இதனால் நாங்கள் மேலும் பலரிடம் வெளியே வர முடிந்தது. அவன்தான் “கே.காம்” தளத்தில் என் புகைப்படத்தை போட என்னை ஊக்குவித்தான். (ஆம், அது அந்த நாட்களில் அது ஒரு பிரம்மபிரயத்தனமாக தோன்றியது)

* மாறு பட்ட பால் ஈர்ப்பு இல்லாத என் நண்பர்கள் மற்றும் என் தம்பி. என்னைபோன்ற பால் ஈர்ப்புள்ள நண்பர்கள் கிடைப்பதற்கு முன்பு எனக்கு இவர்கள் தான் ஆதரவு. சமீபமாக எனக்கு யார் மீது கண் ;) என்பதிலிருந்து, நான் கடைசியாக பார்த்த மாறுபட்ட பால் உணர்வு சம்மந்தப்பட்ட திரைப்படம், டி.வீ. நிகழ்ச்சி வரை… எல்லாவற்றையும் பொறுமையாக கேட்பார்கள்.இது போன்றவர்கள் மாறு பட்ட பாலுணர்வு கொண்டவர்கள்க்கு ஆதரவாக பேசினால் உலகம் இவர்களுடைய பால் உணர்வையும் சந்தேகப்படுகிறது. அப்படியும் துணித்து எனக்கு துணை நிற்கும் இவர்களுக்கு என் நன்றி.

* மூவன்பிக் (எம்.பி) – என்ன சொல்வது? இணையத்தில் சந்திப்பதை தவிர உங்களுடன் அதிகம் தொடர்பில்லை என்றாலும், நீங்கள் எனக்கு இன்னொரு குடும்பம். நன்றி!!

* வேலு! வாழ்கையை உன்னுடன் பகிர்ந்து கொள்ள அனுமதித்ததற்காக!

இப்படிக்கு,
சுந்தர்

]]>
https://new2.orinam.net/ta/sundars-coming-out-story-ta/feed/ 0
அணில் வெளியே வந்த கதை https://new2.orinam.net/ta/anils-coming-out-story-tamil/ https://new2.orinam.net/ta/anils-coming-out-story-tamil/#comments Sun, 18 Oct 2009 13:10:44 +0000 https://new2.orinam.net/?p=3177 இதோ நான் என் அண்ணன் கிட்ட வெளியே வந்த கதை. என் அண்ணன் கிட்ட நான் யாஹூ  மெசஞ்சர் மூலமா சொன்னேன். முக்கால்வாசி நான் எல்லார்கிட்டயும் யாஹூல தான் சொன்னேன் .. ரெண்டு காரணம் …

1) நான் எல்லாரயும் விட்டு தள்ளி இருக்கேன்

2) எனக்கு யாஹூ ல சொல்றது இசியா  இருக்கு

என் அண்ணன் என்ன விட ஒரு வயசு மூத்தவன்…. அவனுக்கு வயசு 24.

அனில் : உன்கிட்ட ஒன்னு சொல்லணும்… சரியான டைம் கிடைக்கல சொல்றதுக்கு..

அனிலின் அண்ணன் : என்னடா சொல்லு , எதாவது பொண்ணுங்க மேட்டர் ஆ?

அனில் : ஹே , கொஞ்சம் பர்சனல் ஆனா விஷயம் …. உன் பக்கத்துல யாரும் இல்லாதப்போ சொல்லு

அனிலின் அண்ணன் : யாரும் இல்ல டா…. போன் ல பேசனுமா.. கால் பண்ணு

அனில் : வேண்டாம்

அனிலின் அண்ணன் : சரி சொல்லு டா …. டென்ஷன் அ கிளப்பாத .. என்ன விஷயம் ?

அனில் :டென்ஷன் ஆகாத , இது உன்ன பத்தி இல்ல டா.

அனிலின் அண்ணன் : சரி சொல்லு

அனில் :சொல்ல தைரியம் வரமாட்டேன்குது ..

அனிலின் அண்ணன் : டே …சொல்லு டா

அனில் :நான் சொல்லிடுவேன் … நீ அப்பறம் ஏன்டா கேட்டோம்னு நினைப்ப

அனிலின் அண்ணன் : கடவுளே! கடிக்காத! சொல்லு …. என்னால என்னனு யோசிக்க முடியல …. சொல்லு ப்ளீஸ்

அனில் :கண்டிப்பா நீ கேக்க ரெடி ஆ ?

அனிலின் அண்ணன் : டேய் உன்னக்கு சொல்ல இஷ்டம் இல்லேன்னா விடு ….. வேண்டம்

அனில் :இல்ல டா … இன்னைக்கு இல்லைனாலும் என்னிக்காவது சொல்லித்தான் ஆகணும்

அனிலின் அண்ணன் : சரி அப்போ இப்போவே சொல்லு..

அனில் :ஹ்ம்ம்..  நான் ரெடி.. கேளு.. நான் கே (தன்பால் ஈர்ப்பு உள்ள ஆண் )

அனிலின் அண்ணன் : டேய்.. என்ன சொல்ற ? விளையாடறியா ?

அனில் :நான் சொன்னேன்ல ….. நீ இத கேட்டா டென்ஷன் ஆவேன்னு

அனிலின் அண்ணன் : கே (தன்பால் ஈர்ப்பு உள்ள ஆண் ) அப்படினா என்னடா ? எனக்கு தெரியாது

அனில் :நல்லதா போச்சு !

அனிலின் அண்ணன் : சொல்லு டா…. எனக்கு என்னனு தெரியனும்

அனில் :ஹ்ம்ம் எப்படி சொல்றது. எனக்கு பொண்ணுங்க மேல ஈர்ப்பு இல்லை.. பசங்க மேல தான் ஈர்ப்பு

அனிலின் அண்ணன் : எனக்கு தெரிஞ்சதெல்லாம் … கே ன்னா ….பசங்களும் பசங்களும் உறவு வெச்துக்கறது. நீயும் அதெல்லாம் செய்யறயா ?

அனில் :ஹி ஹி … அதெல்லாம் இல்லடா …இன்னும் இல்ல..

அனிலின் அண்ணன் : டேய்.. பொண்ணுங்களுக்கு என்னடா கொறைச்சல் இங்க?

அனில் :சரி நீ ரொம்ப சீரியஸ் ஆயிட்ட … கொஞ்சம் டைம் குடு … அப்பறம் யோசி..

அனிலின் அண்ணன் :ஹே! இல்ல, இல்ல.. அதனால பரவாயில்லை  நீ சொல்லு… இட்ஸ் ஒகே

அனில் :ஏன்டா கேட்டோம்னு இருக்குல்ல ?

அனிலின் அண்ணன் :ஹ்ம்ம் நீ எப்போவது பசங்களோட செக்ஸ் வெச்சுபியா? அதுக்கு சான்ஸ் இருக்கா ?

அனில் :தெரியல டா ஆனா என்னால ஒரு பொண்ணை கல்யாணம் செஞ்சுக்க முடியாது .. கண்டிப்பா முடியாது

அனிலின் அண்ணன் : பிற்காலத்து ல கூடவா ?

அனில் :ஆமாம்.. அம்மா அப்பா உன் கல்யாணத்த பத்தி மட்டும் கவலை பட்டா போதும்

அனிலின் அண்ணன் : டேய் … பாவம் டா…. அவங்களால இத எதுக்கமுடியாது  டா , நீ இத பத்தி கொஞ்சம் டைம் குடுத்து யோசிச்சு பாருடா

அனில் :தெரியும் டா… ஆனா எனக்கு வேற வழி இல்ல டா

அனிலின் அண்ணன் : சரி விடு !

அனில் :நான் நல்ல யோசிச்சு தான் டா சொல்றேன்… ரொம்ப வருஷமா இத பத்தி யோசிச்சிருக்கேன்….

அனிலின் அண்ணன் : உனக்கு இத பத்தி எப்போடா தெரியும் ?

அனில் :எப்போன்னு சரியாய் ஞாபகம் இல்ல ..என்னகு சின்ன வயச்லேர்ந்தே சந்தேகம் டா..

அனிலின் அண்ணன் : சரி.. நான் ஒரு அட்வைஸ் சொன்ன கேப்பியா ?

அனில் :என்ன சொல்லு

அனிலின் அண்ணன் : ஒரே ஒருதரம் ட்ரை பண்ணி பாரேன்

அனில் :என்ன ? பொண்ணுங்க கூட செக்ஸ் ஆ?

அனிலின் அண்ணன் : ஆமாம் … கரெக்ட்! அத தான் சொல்ல வந்தேன்

அனில் :ஹி ஹி ….. நான் பாஸ்ட் !  என்னால உறுதியா சொல்ல முடியாது…. நீ இத ஏத்துக்க முயற்சி  பண்ணு டா

அனிலின் அண்ணன் : ஹே .. நான் பண்றேன் டா …. என்னால முடியும்… ஆனா அப்பா அம்மா பாவம் டா . அவங்க கிட்ட என்ன சொல்றது

அனில் :தேங்க்ஸ் டா … நீ ஏத்துக்க  முயற்சி பன்றேன்னு சொல்றது எனக்கு பெரிய விஷயம் டா

அனிலின் அண்ணன் : ஆனா அப்பா அம்மா கிட்ட சொல்றது சரியில்லை டா

அனில் :ஹ்ம்ம் சரி பாக்கலாம் .. நான் இன்னும் ஒன்னும் முடிவு செய்யல்லடா … பிற்காலத்துல என்ன செய்யறதுன்னு அப்பறம் யோசிக்கலாம்

அனிலின் அண்ணன் : ஒன்னு தெரியுமா ..?

அனில் :என்ன?

அனிலின் அண்ணன் : நீ ஒரு முடிவெடுத்தா அத யாராலும் மாத்தமுடியாது …..நீயா மாறினா தான் உண்டு. அதான் எனக்கு கவலையா இருக்கு

அனில் :அதான் நீங்க என்ன புரிஞ்சுக்கணும்னு நான் எதிர்பார்கறேன் டா

அனிலின் அண்ணன் : நீ நல்ல டைம் குடுத்து முடிவெடுடா… நான் சொன்னதையும் ட்ரை பண்ணி பாறு ”

அனில் :சரி டா

அனிலின் அண்ணன் :நீ என்ன முடிவெடுத்தாலும் குடும்பத்துல யாரும் உன்னை கட்டாய படுத்த மாடோம் டா . ஆனா உன் முடிவு எங்க எல்லாரையும் பாதிக்கும் டா. அதனால யோசிச்சு முடிவெடு

அனில் :சரி டா.. நான் அப்பா அம்மா கிட்ட உடனே சொல்லபோரதுஇல்லை …. யோசிச்சு செய்வேன் … நீ டென்ஷன் ஆகாத

அனிலின் அண்ணன் : ஹ்ம்ம் அதான் நல்லது டா

அனில் :நீ எப்போ சொல்றியோ அப்போ தான் நான் அவங்க கிட்ட சொல்வேன்.. ஓகே யா ?

அனிலின் அண்ணன் : தேங்க்ஸ் டா , சரி நான் கிளம்பறேன்

அனில் :சரி டா…

அனிலின் அண்ணன் : நெஜமா ….நீ இப்படி சொல்லாம இருந்துருக்கலாம் …..நான் இத இப்போவவே மறந்துடுவேன் ..

அனில் :ஹ்ம்ம் நாம நினைக்கிறோம் ….நெறைய விஷயங்கள் நடக்காம இருந்திருக்கலாம் ..நம்ம கைல என்ன இருக்கு … நீ மறக்க வேண்டாம் …. ஏத்துக்க முயற்சி பண்ணு

அனிலின் அண்ணன் : நீயாச்சேனுதான்… நான் இந்த விஷயத்த எத்துகறேன் டா

அனில் :தேங்க்ஸ் டா … நம்ம அப்பொறம் பேசலாமா

அனிலின் அண்ணன் : சரி டா..  டா டா

]]>
https://new2.orinam.net/ta/anils-coming-out-story-tamil/feed/ 1
வேலு வெளியே வந்த கதை https://new2.orinam.net/ta/vs-coming-out-story-ta/ https://new2.orinam.net/ta/vs-coming-out-story-ta/#comments Sun, 18 Oct 2009 13:09:09 +0000 https://new2.orinam.net/?p=3175 என் பாலுணர்வை வெளிபடுத்துவதற்கு பல மாதங்களுக்கு முன்னதாகவே நான் அதற்கான களத்தை தயார் செய்ய துடங்கிவிட்டேன் . அமெரிக்காவிலிருந்து அக்காவுடன் தொலைபேசியில் உரையாடும்போதெல்லாம் எனக்கு திருமணத்தில் நாட்டம் இல்லை என்பதற்கான குறிகளை காட்டினேன். முதலில் நான் கதை சொல்கிறேன், இப்படி சொல்லி விட்டு அவளுக்கு முன்னதாகவே நான் திருமணம் செய்து கொள்வேன் என்று அக்கா என்னை கேலிசெய்வாள் (அன்றிலிருந்து சில மாதத்தில் அவள் திருமணம் நடந்தது). கல்லூரி நாட்களில் எனது வகுப்பு தோழியுடன் நான் அதிக நேரம் செலவழிப்பதை பார்த்து என் அப்பா கூட சந்தேகப்பட்டார் என்று சொல்லி சிரிப்பாள் அக்கா. ( என் தோழி வீட்டிற்கு வரும்போதெல்லாம் அப்பாவின் முகத்தில் தெரியும் சந்தேகத்தையும், கடுப்பையும் வேடிக்கை பார்ப்பதில் எனக்கு ஒரே குஷி) . அனால் நான் சொல்லும் விஷயங்களை வெறும் வேடிக்கையாக மட்டும் அக்கா எடுத்துக்கொள்ள கூடாது என்பதில் நான் கருத்தாக இருந்தேன். அதனால் அவ்வப்பொழுது அவளுக்கு எனது எண்ணத்தை மறைமுகமாக தெரிவித்துகொண்டிருந்தேன்.

போன வருடம் அவள் திருமணத்திற்காக நான் இந்திய சென்றிருந்த பொழுது அக்கா தன் புலன் விசாரணையை துவங்கினாள்.பெண்கள் விவரமானவர்கள் ( பக்கா சாமர்த்தியசாலிகள், நம்புங்கள்) . நான் பேசுவதை வைத்தே என்னமோ விஷயம்  இருக்கிறது என்று கண்டுபிடித்தவள் , என்ன பிரச்சனை என்று என்னிடம் கேட்டாள். அவள் வலை விரிக்க, நான் விழ காத்திருக்கும் மீனாய் அதில் விழுந்தேன். முதலில் எனக்கு கல்யாண சுமை வேண்டாம் நான் சுதந்திர பறவையாக இருக்க விரும்புகிறேன் என்று சால்சாப்பு சொன்னேன். அனால் அக்கா அதை நம்பவில்லை. என்னை கண்ணனுக்கு கண் பார்த்து அவள் கேட்டபொழுது என்னால் பொய் சொல்ல முடியவில்லை. அந்த நொடியிலேயே அக்காவிடம் மனம் திறந்து பேசவேண்டும் என்று துடித்தது என் மனம். அடக்கிகொண்டேன், நேரம் வரும்பொழுது இதை பற்றி விவரமாக சொல்கிறேன் என்றேன். அக்காவும் அதற்கு மேல் என்னை தொந்தரவு செய்யவில்லை. நான் சந்தோஷமாக இருக்க வேண்டும், அது தான் முக்கியம் என்றாள்.

இதேசமயம் அமெரிக்காவிலிருந்து என் காதலன், அடிக்கடி என்னுடன் பேசுவதற்காக என் அக்காவின் தொலைபேசியை தொடர்புகொண்டான். (என்னிடம் தனியே தொலைபேசி இல்லை, நான் இந்தியாவிலிருந்த நேரத்தில் அக்காவின் தொலைபேசியை உபயோகப்படுத்தி கொண்டிருந்தேன்) . என்னடா இது.. வேலை மெனக்கெட்டு இவ்வளவு தூரத்திலிருந்து , பணம் செலவழித்து ஒரு நண்பன் இத்தனை முறை தொடர்பு கொள்கிறானே என்று அக்காவுக்கு ஒரே சந்தேகம்! நடக்கிறதை வைத்து அக்கா தானாகவே விஷயத்தை யூகிக்க மாட்டாளா என்பது என் எண்ணம். (அக்காவும் சரியாகவே யூகித்தாள் என்று பின்பு எனக்கு தெரிய வந்தது).இந்த கண்ணாமூச்சிக்குப் பிறகு நான் அமெரிக்கா திரும்பினேன்.

சில மாதங்களுக்குப் பின்பு, ஒரு நாள் விடியற்காலை நான் ஆய்வுக்கூடத்தில் வேலையை முடித்துவிட்டு கண்ணசர தயாரானேன். அக்காவுக்கு ஒரு ஹலோ சொல்லலாம் என்று தொலைபேசியில் அழைத்தேன். சாதரணமாக பேசி கொண்டிருந்தவள் திடீரென்று ” நீ நேரம் வரும்போது சொல்கிறேன் என்று சொன்னயே, அந்த விஷயத்தை இப்பொழுது சொல்லு, என்ன பிரச்னை? எந்த விஷயம் உன்னை தொந்தரவு செய்கிறது? ” என்றாள். அப்பொழுது என் பெற்றோர்களும் வீட்டில் இல்லாததால் அவளால் தயக்கமின்றி பேச முடிந்தது, என்னையும் மனம்திறந்து பேசச் சொன்னாள் அக்கா.

நான் என்ன சொல்லபோகிறேன் என்று அவளுக்கு ஒரு அனுமானம் இருக்கிறதா என்று முதலில் கேட்டேன். “ஓரளவிற்கு இருக்கிறது அனால் தப்பாக யூகித்துவிடக்குடாது என்பதால் நீயே சொல்லு” என்றவள் என்ன விஷயமாக இருந்தாலும் பரவாயில்லை, அது அவளுக்கு என் மேல் இருக்கும் அன்பை எள்ளளவும் மாற்றாது என்று உறுதியளித்தாள்.

நான் மெதுவாக ஒரு முன்னுரையுடன் ஆரம்பித்தேன்,
“தயவுசெய்து என்னை பொறுமையாக கேளு, உனக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் தயங்காமல் கேளு, நான் சொல்லப்போகும் விஷயத்தால் நீ என்னை வெறுக்க மாட்டாய் என்று நம்புகிறேன், உனக்கும் நான் சொல்லப்போகும் விஷயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை அதனால் எந்த குற்றவுணற்சிக்கும் உன்னை ஆளாக்கிக் கொள்ளாதே, தயவுசெய்து தொலைபேசி தொடர்பை துண்டித்து விடாதே.”

பின்பு தொடர்ந்தேன் ” எனக்கு பெண்கள் மேல் எந்த ஈர்ப்பும் இல்லை, ஆண்கள் மேல் தான். அதனால் என் வாழ்க்கை துணையாக ஒரு ஆணை தான் என்னால் கற்பனை செய்ய முடிகிறது, பெண்ணை அல்ல” என்றேன். ஆச்சரியத்திலும் ஆச்சரியம், நான் சொன்னதை மிகவும் எளிதாக, சாதரணமாக எடுத்துக்கொண்டாள் அக்கா. பின்பு கேள்விகள் கேட்க ஆரம்பித்தாள். நான் ஏன் இப்படி உணர்கிறேன்?, எனக்கு இருக்கும் இந்த ஈர்ப்பு நிரந்தரமானதா? நான் நன்றாக யோசித்து பார்த்து தான் சொல்கிறேனா…ஏனென்றால் என்னிடம் எந்த வித்தியாசமும் அவளுக்கு இது வரை தெரிந்ததில்லையே என்றெல்லாம் கேட்டாள். பின்பு யாரேனும் என்னை கட்டாயப்படுத்துகிறார்களா, அமெரிக்கா சென்றால்தான் நான் இப்படி மாறிவிட்டேனா, என் வளர்ப்பில் ஏதேனும் குறையா என்றும் கேட்டாள்.

நான் பொறுமையாக அதேசமயம் மன உறுதியோடு அவளது எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னேன். அதை கேட்டு “நல்ல விவரமாதான் பதில் சொல்ற போ” என்று அக்கா என்னை கேலி செய்தாள். நான் சொன்ன விளக்கங்கள் அறிவுப்பூர்வமாக அவளுக்கு புரிந்தாலும் இந்த விஷயத்தை உடனே ஜீரணித்து கொள்ளமுடியவில்லை என்றாள். எக்காரணம் கொண்டும் அப்பா அம்மாவிடம் இதை பற்றி சொல்லாதே அவர்களால் இதை தாங்க முடியாது என்றும் என்னை எச்சரித்தாள்.

என் அக்கா என்னை ஏற்றுகொண்டாள் , எனது இந்த தன் பால் ஈர்ப்பால் அவளக்கு என் மேல் இருக்கும் அன்பு மாறவில்லை என்பது என்னை சந்தோஷப்படுத்தினாலும் , என் பெற்றோரிடம் இதை சொல்ல வேண்டாம் என்று சொன்னது எனக்கு கஷ்டமாக இருந்தது.

எல்லா பிரச்சனைகளுக்கும் காலம் தான் சிறந்த மருந்து என்பது மிகவும் சரி. அதற்கு பிறகு நானும் அக்காவும் இந்த விஷயத்தை பற்றி அடிக்கடி பேசினோம். மேலும், அவள் தன் பால் ஈர்ப்புள்ள என் நண்பன் ஒருவனின் சகோதரியிடமும் பேசினாள். பின்பு என் காதலனிடமும் பேசியவள் எனக்காக மிகவும் சந்தோஷ பட்டாள் ;) . இவை எல்லாம் அவளுக்கு என் மாறுபட்ட பாலுணர்வை ஏற்றுகொள்ள உதவியது. எனது அடுத்த பிறந்தநாளுக்கு எனக்கும் என் காதலனுக்கும் சேர்த்து உடைகள் வாங்கி இருப்பதாக சொன்னாள் அக்கா . எனக்கு எப்பொழுது அவைகளை பார்போம் என்று இருக்கிறது. போன வாரம் அவளுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது, எங்கள் பெற்றோர்கள் என் கல்யாண பேச்சை எடுக்கும் பொழுது அவர்களிடம் என் தன்பால் ஈர்ப்பை பற்றி சொல்லலாம் என்றும் சொன்னாள். அதை கேட்டதிலிருந்து எனக்கு அளவு கடந்த ஆனந்தம்!

]]>
https://new2.orinam.net/ta/vs-coming-out-story-ta/feed/ 1
ஸ்ரீ வெளியே வந்த கதை https://new2.orinam.net/ta/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/ https://new2.orinam.net/ta/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/#comments Sun, 18 Oct 2009 13:05:58 +0000 https://new2.orinam.net/?p=3173 அன்புள்ள அப்பா அம்மா,
ஒரு தொலைபேசி அழைப்பு தூரத்தில் நீங்கள் இருந்தாலும், கடிதத்தின் மூலம் உங்களிடம் பேசுவது சற்று வித்தியாசமாக உள்ளது.என் கல்யாணத்தைப் பற்றிய கவலையும், எனக்கு அதில் ஏன் நாட்டம் இல்லை என்ற  குழப்பமும் உங்களுக்கு இருப்பது எனக்கு தெரியும். அதைப் பற்றி சொல்லத்தான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். நான் சொல்லப்போகும் விஷயம் உங்களுக்கு அதிர்ச்சியாகவும் நெருடலாகவும் இருக்கலாம், அதற்கு முன் சிலவற்றை உங்களுக்கு தெளிவு படுத்த விரும்புகிறேன்

1) எனக்கு எந்த நோயும் இல்லை. நான் நல்ல தேக ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். கவலைப் பட வேண்டாம்.

2) எனக்கு காதல் தோல்வி இல்லை. பிறருக்காக ஏன் வாழ்க்கையை நான் வீண் அடிக்கமாட்டேன்

3) நான் சொல்வதை உங்களால் புரிந்துக் கொள்ள முடியாமல் போகலாம், புரிந்தாலும் ஏற்று கொள்ள முடியாமல் போகலாம். என்னவானாலும் நான் உங்கள் மகன், உங்கள் மனம் நோகுமாறு நான் எதையும் செய்ய மாட்டேன்.

உங்களிடம் இதை பற்றி சொல்லலாமா, வேண்டாமா என்று எனக்குள் பெரிய போராட்டம். உங்களிடம் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். பெற்றவர்களிடமே ஒரு பெரிய உண்மையையை மறைத்து, இரட்டை வாழ்க்கை வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. அதனால் தான் இன்று உங்களிடம் இதை பற்றி பேசுகிறேன்.

சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து, இந்த விஷயத்தை தெளிவாக விளக்குவது எளிதல்ல. இருந்தாலும் முயற்சிக்கிறேன்.

எனக்கு பெண்கள் மேல் எந்த ஈர்ப்பும் இல்லை. காதல், காமம், ஈர்ப்பு எல்லாம் எனக்கு ஆண்கள் மேல் தான். ஆமாம், இது மருத்துவரீதியாக சாத்தியமான ஒரு விஷயம். என்னைப் போல் உள்ளவர்களை ஆங்கிலத்தில் ஹொமொஸெஷுஅல்ஸ் என்றும் தமிழில் தன்பால் ஈர்ப்பு உள்ளவர்கள் என்றும் அழைப்பார்கள்.உலகில் பத்து சதவிகிதத்தினர் என்னை போன்ற தன்பால் ஈர்ப்பு உள்ளவர்கள். இது என்னுடன் பிறந்த ஒரு விஷயம். குணப்படுத்த வேண்டிய நோயோ அல்லது கைவிடவேண்டிய பழக்கமோ அல்ல. இது முற்றிலும் இயற்கையான ஒரு விஷயம், என்னை மாற்ற வேண்டும் என்று நினைப்பது தான் இயற்கைக்கு எதிரானது. என்னால் கண்டிப்பாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடியாது.

சிறிய வயதில் இதை பற்றி எனக்கு தெரிந்த பொழுது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. யாரிடமும் இதை பற்றி மனம் விட்டு என்னால் பேச முடியவில்லை. இது போன்ற விஷயங்களை நண்பர்களிடம் கூட பேசமுடியாது. நான் வளர வளர, இந்த ஈர்ப்பு மறைந்து விடும், நானும் மற்றவர்களை போல இருப்பேன் என்று நினைத்தேன்…. அனால் அது நடக்கவில்லை. வெட்கமும், பயமும் ஒரு புறம்,குழப்பமும்,  குற்றவுணர்ச்சியும இன்னொரு புறம். எதாவது செய்து என்னை மாற்றிவிடு என்று தினமும் கடவுளிடம் மன்றாடிஇருக்கிறேன்.

நான் வளர்ந்து மனப்பக்குவம் அடைதபிறகுதான், என்னை போல பலர் இந்த உலகில் இருகிறார்கள், தன் பால் ஈர்ப்பு என்பது இயற்கையான, சாதரணமான விஷயம் என்பது எனக்கு புரிந்தது. இது ஒரு குற்றமோ பாவமோ அல்ல என்பதயும் என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்தது.

நான் என்றும் உங்கள் மகன். உங்கள் இருவரின் மேல் உள்ள பாசமும், மரியாதையும் என்றும் என்னை விட்டு போகாது. நான் சொன்னவுடன் நீங்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும், ஏற்று கொள்ள வேண்டும் என்று நான் கட்டாயப் படுத்தவில்லை. உங்களை என்றும் சந்தோஷமாக வைத்து கொள்ளவேண்டும் என்பது தான் என் ஆசை. இந்த விஷயம் உங்கள் சந்தோசத்தை பாதித்தால்  அதற்காக என்னை மன்னிக்கவும். உங்களிடம் இந்த உண்மையை சொல்வதை தவிர, எனக்கு வேறு வழி தெரியவில்லை.

நம் குடும்பத்தில் நான் எல்லோருக்கும் செல்லம் என்று எனக்கு தெரியும், அப்படியே இருக்கவே நான் விரும்புகிறேன்.
என்னுடைய இந்த தன்பால் ஈர்ப்பினால்  நான் மற்றவர்களால் நிராகரிக்கபடுவேனோ என்ற கவலை எனக்கு எப்பொழுதும் உண்டு.

நண்பர்கள், உறவினர்கள் பற்றி எனக்கு தெரியாது, அனால் என் குடும்பமே என்னை நிராகரித்துவிட்டால் என்னால் அதை தாங்க முடியாது. உங்கள் எல்லோர் மனதிலும் ஒரு இடம் தான் எனக்கு வேண்டும், அது இல்லாமல் என்னால் வாழ முடியாது.

இதை பற்றி தங்கையிடம் நான் சொல்லி இருக்கிறேன். அவளும் எனக்கு ஆதரவாக இருக்கிறாள். தன்பால் ஈர்ப்புடையவர்களின் வாழ்கை எளிதல்ல என்று எனக்கு தெரியும், அதை எதிர்கொள்ளும் தைரியத்தை எனக்கு தருமாறு கடவுளிடம் வேண்டுகிறேன்.

அதைவிட உங்கள் இருவரின் அன்பும் ஆசிர்வாதமும் தான் எனக்கு முக்கியம்.

கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்,

ஸ்ரீ

 


பதில்:

உன் கடிதத்தை வாசித்து நீ சொன்ன விஷயத்தை புரிந்துகொண்டோம். உனக்கு ஏன் கல்யாணத்தில் நாட்டம் இல்லை என்பது இப்பொழுது எங்களுக்கு புரிகிறது. எங்களிடம் இதை பற்றி பேச முடியாமல் இத்தனை  நாளும் நீ தனியாக தவித்துஇருக்கிறாய் என்பதை நினைக்கும்பொழுது மிகவும் வேதனையாக உள்ளது. உன் வாழ்க்கையை பற்றி நீ எந்த முடிவெடுத்தாலும், பெற்றோர்களாகிய நாங்கள் என்றும் உனக்கு ஆதரவாக இருப்போம்.

எல்லோருக்கும் இந்த விஷயம் புரியும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. அதனால் எல்லோரிடமும் இதை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. யோசித்து பார்த்தால் நமது உறவினர்களின் குடும்பங்களிலும் பலர் திருமணம் செய்யாமல் இருகிறார்கள், நமக்கு அதை பற்றிய காரணம் தெரியாது. அதை போல் தனியாக இருக்கும் நண்பர்களும் நமக்கு நிறைய பேரை தெரியும் (ஆண் / பெண் ). அது மட்டுமல்ல, எல்லா திருமணமும் வெற்றியில் முடிவதில்லை. அதனால் இதை பற்றி யோசித்து வேதனை படாதே. அது தான் எங்களை கவலை படுத்தும், நீ தன்பால் ஈர்ப்புடன் இருபது அல்ல.

எப்பொழுதும் இதை நினைவில் வை – நீ சந்தோஷமாக இருந்தால் நாங்களும் சந்தோஷமாக இருப்போம். நீ கவலை பட்டால், அது எங்களையும் கவலை படுத்தும்.

என்றும் சந்தோஷமாகவும், சிரித்து கொண்டும் இரு – அது தான் நீ.
எங்களுடைய  கடைசி மூச்சு வரை, உன்னை ஆதரிப்போம் , ஊக்கப்படுத்துவோம், உன்னுடன் இருப்போம். இது சத்தியம்.

அன்புடன்,

அப்பா & அம்மா.

]]>
https://new2.orinam.net/ta/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/feed/ 3