one year – ஓரினம் https://new2.orinam.net வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Sat, 13 Dec 2014 16:46:17 +0000 ta-IN hourly 1 https://wordpress.org/?v=6.7 https://new2.orinam.net/wp-content/uploads/2024/03/cropped-imageedit_4_9441988906-32x32.png one year – ஓரினம் https://new2.orinam.net 32 32 கடந்த ஒரு வருடமாய் தமிழகத்தில் பிரிவு 377ஐ எதிர்த்து நடைபெற்றுள்ள நிகழ்வுகள் https://new2.orinam.net/ta/one-year-since-koushal-responses-tamilnadu/ https://new2.orinam.net/ta/one-year-since-koushal-responses-tamilnadu/#respond Fri, 12 Dec 2014 12:25:00 +0000 https://new2.orinam.net/?p=10883 கடந்த வருடம் டிசம்பர் மாதம் பதினோராம் நாள் அன்று அளிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சென்னையிலும், தமிழகத்திலும் நடைபெற்ற கலந்துரையாடல்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் பட்டியல் பின்வருமாறு:

11 டிசம்பர் 2013

உச்சநீதிமன்றத் தீர்ப்பு அளிக்கப்பட்ட தினம்.

இதைக் கண்டித்து சென்னை செய்தியாளர் சங்கம் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பிரிவு 377 பற்றிய அனைத்து தகவல்களுக்கும் காப்பகமாக திகழ நிறுவப்பட்ட http://377.orinam.net/ என்னும் இணையதளம் இந்த வழக்கு சார்ந்த உச்சநீதிமன்ற ஆவணங்கள், ஊடக வெளியீடுகள், சட்டபூர்வமான ஆலோசனைகள், சமுதாயத்திலிருந்து வந்துக்கொண்டிருந்த பகுப்பாய்வுகள் போன்றவற்றை ஒன்று திரட்ட தொடங்கியது.

15 டிசம்பர் 2013

இந்த நாள் ‘Global Day of Rage’, அதாவது ‘உலகந்தழுவிய வெஞ்சின தினம்’ஆக அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு இந்த நாளில் சென்னை செய்தியாளர் சங்கத்தில் ஒரு சந்திப்பு நடைபெற்றது.

21 டிசம்பர் 2013

SIAAP/Pehchan நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் சென்னை வானவில் கூட்டணி உறுப்பினர்கள் தமிழக மாநிலத்தில் மற்ற மாவட்டங்களில் உள்ள பாலியல்/பாலின சிறுபான்மயினருடனும், பாலியல்/பாலின சிறுபான்மையினருக்காக பணிபுரியும் அமைப்புகளுடனும் தொடர்பு கொண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஒருங்கிணைந்து செய்ய வேண்டிய நடவடிக்கைகளை பற்றி கலந்து ஆலோசித்தனர். இந்த சந்திப்பின் விளைவாக இந்த நாளில் தமிழ்நாடு வானவில் கூட்டணி உருவானது.

22 டிசம்பர் 2013

சென்னை வானவில் கூட்டணி உறுப்பினர்கள் SAATHII அலுவலகத்தில் கூடி தில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான strategy (யுக்திகள்) திட்டமிடல் ஆலோசனை சந்திப்பை skype மூலமாக கண்டனர். பின்னர் தங்கள் சிந்தனைகளை வானவில் உறுப்பினர்கள் இடையே பகிர்ந்துகொண்டனர்.

1 ஜனவரி 2014

தீர்ப்பு வந்த ஒரு மாத நிறைவை முன்னிட்டு செய்யவேண்டிய ஆர்ப்பாட்டத்தை பற்றியும் ‘ஒர்பாலீர்ப்பை எதிர்க்கும் கிறுத்துவர்கள்’ (‘Christians against Homosexuality’; CAH-) என்று சென்னையில் புதிதாக தோன்றியிருக்கும் குழுவின் நடவடிக்கைகளை எதிர்த்து செய்யவேண்டிய ஆர்ப்பாட்டத்தை பற்றியும் சென்னை வானவில் கூட்டணி ஒன்று கூடி சந்தித்து ஆலோசித்து.

4 ஜனவரி 2014

சென்னை வானவில் கூட்டணியை சேர்ந்த உறுப்பினர்களும், கிறுத்துவ மதத்தைச் சார்ந்த பாலியல்/பாலின சிறுபான்மையினரும் இணைந்து   மத வெறியால் பரப்பப்படும் வெறுப்பை எதிர்த்து போராட ‘ஒர்பாலீர்ப்பாலர்களை வெறுக்கும் நபர்களுக்கு எதிரான கிறுத்துவர்கள்’ (‘Christians against Homophobia’; CAH+) என்ற குழுவை நிறுவினர்.

5 ஜனவரி 2014

CAH+ குழு சகோதரன் (Sahodaran) அலுவலகத்தில் அன்று காலை CAH- குழு நடத்திய ஆர்ப்பாட்டத்தை கண்டித்து செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். இந்த சந்திப்பின் விளைவாக ‘Christians against Homophobia’ என்ற ஒரு மின்னஞ்சல் பட்டியல் தொடங்கப்பட்டது. இந்த பட்டியல் பல்வேறு கிறுத்துவ மத போதகர்களை இணைத்து அவர்களது சமூகங்களை பாலியல்/பாலின  சிறுபான்மையினரையும் கொண்டு செயல்படும் சமூகங்களாக ஆக்க முயன்று வருகிறது.

Catalyst என்கிற சென்னையை சார்ந்த மாணவர் கூட்டணி பாலியல்/பாலின சிறுபான்மையினரின் பிரச்சனைகளை பற்றி ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சி பிரிவு 377 ஏன் மாற்றியமைக்கப்படவேண்டும்  என்ற கேள்வியை மையப்படுத்தி அமைக்கப்பட்டிருந்தது.

9 ஜனவரி 2014

சென்னையைச் சார்ந்த ஓரினம்/ Orinam என்ற கூட்டத்தின் துணையோடு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதுதல் என்னும் தேசிய அளவிலான ஒரு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் விளைவாக திரண்டுவந்த கடிதங்கள் என்ற இணையதளத்தில் காப்பகப்படுத்தபட்டுள்ளது.

11 ஜனவரி 2014

தீர்ப்பு வழங்கப்பட்டு ஒரு மாதம் முடிந்ததை முன்னிட்டு இந்த நாளில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தை ஆதரித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் (Tamil Nadu Progressive Writers’ Association), Save the Tamils என்னும் ஈழ தமிழர்களின் உரிமைகளுக்காக போராடும் குழு மற்றும் பல மாணவர் குழுக்கள் பங்கேற்றன.

ஜனவரி 2014

11.12.13 தீர்ப்பை மறுபடி பரிசீலனை செய்ய கோரி உச்சநீதிமன்றத்திடம் அளிக்கப்படவேண்டிய மனுவுடன் சேர்த்து சமர்ப்பிக்க affidavits (அப்பிடவிட்) எனப்படும் சத்திய கடிதாசிகள் சென்னையிலிருந்து தொகுத்து அனுப்பிவைக்க பட்டன.

23 பெப்ரவரி 2014

Nirmukta (Chennai FreeThinkers) எனப்படும் மதச்சார்பற்ற ஒரு மனிதநேய குழு பாலியல்/பாலின சிறுபான்மையினருக்கான உரிமைகள் பற்றியும், தவறான அபிப்ராயங்களுக்கு ஆளாகப்படும் நிலை பற்றியும், இவைகளை தவிர்க்க தேவையான சிந்தனைகளை பற்றியும் கலந்து உரையாட ஒரு பொது நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சி சட்ட நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் பாலியல்/பாலின சிறுபான்மையினரை ஒன்று திரட்டி 377 ஏன் சீரமைக்க படவேண்டும் என்பதை பற்றி ஆலோசிக்கும் வாய்ப்பாக இருந்தது.

28 மார்ச் 2014

பிரிவு 377 பற்றி மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் ஒன்றை SIAAP/Pehchan ‘377ஐ எதிர்த்து 207’ (‘207 against 377’) என்ற குழுவின் மூலமாக நடத்தியது.

ஏப்ரல் – மே – ஜூன் – ஜூலை 2014

NALSA வழக்கில் திருநங்கை மற்றும் திருநம்பியினர் உரிமைகளை உறுதிப்படுத்தி வந்திருந்த தீர்ப்பை பற்றி பல கலந்துரையாடல்கள் இந்த இரு மாதங்களில் நடைபெற்றன. இந்த சந்திப்புகளில் NALSA தீர்ப்பும் 11.12.13 தீர்ப்பும் எந்தெந்த வகைகளில் முரண்பட்டிருக்கின்றன என்பதும் பதிவு செய்யப்பட்டது.

சென்னை வானவில் சுயமரியாதை மாதம் ஜூன் மாதம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த மாதத்தில் பல்வேறு கலை நிகழ்சிகளும், pride walk எனப்படும் சுயமரியாதை நடை பவனியும் பிரிவு 377ஐ எதிர்த்து மேற்கொள்ளப்பட்டன.

Reel Desires எனப்படும் பாலியல்/பாலின சிறுபான்மையினரின் அனுபவங்களை மையப்படுத்திய சர்வதேச திரைப்பட விழா சென்னையில் 24–26 ஜூலை நாட்களில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பல திரைப்படங்களும் கலந்துரையாடலும் பிரிவு 377ஐ பற்றி அமைக்கபட்டிருந்தது.

13 செப்டம்பர் 2014

மாநில அளவில் சட்டபூர்வமாக பிரிவு 377இல் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற போராட்டத்தை நிறங்கள் (Nirangal) என்ற அமைப்பு தமிழ்நாடு வானவில் கூட்டணியின் துணையோடு நடத்தியது,

8 டிசம்பர் 2014

‘377ஐ எதிர்த்து 207’ என்ற குழுவின் மூலமாக பொதுமக்களுக்கான open hearing எனப்படும் பிரச்சனைகளை கேட்கும் நிகழ்ச்சியை SIAAP/Pehchan நடத்தியது. இதில் சென்னையை சார்ந்த பெண்கள் வழக்கறிஞர் சங்கம் இந்த இயக்கத்திற்காக ஆதரவும், மாநில அளவில் 377ஐ எதிர்த்து மேற்கொள்ளப்படவேண்டிய சட்ட பூர்வமான நடவடிக்கைகளுக்காக தங்கள் ஒத்துழைப்பையும் தெரிவித்தனர்.

 


This timeline was compiled by volunteers from Orinam and Nirangal. If we have inadvertantly left out any events, please let us know and we will add them.

rainbow fist image

]]>
https://new2.orinam.net/ta/one-year-since-koushal-responses-tamilnadu/feed/ 0