நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் கடிதம்
மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களின்** குடும்பத்தினர் மற்றும் நண்பர்களாகிய நாங்கள் அவர்களின் மேல் உள்ள எங்கள் அன்பையும் ஆதரவையும் இந்த கடிதத்தின் மூலமாக உலகிற்கு அறிவிக்கிறோம். கண்ணியத்தோடும் கவுரவத்தோடும் எல்லோருக்கும் சமமாக வாழ வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்திற்கு எங்களது முழு ஆதரவு என்றும் உண்டு.
நிபந்தனையற்ற எங்களது இந்த அன்பும் ஆதரவும், வாழகையின் மேடு பள்ளங்களையும், சமுதாயம் அவர்கள் மேல் காட்டும் வெறுப்பையும் கசப்பையும் சமாளித்து எழ அவர்களுக்கு உதவுகிறது. எங்களை போல் இந்த சமூதாயமும் அவர்களை முழு மனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டும், ஆதரிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுகொள்கிறோம். மேலும் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்கள் மீதான வெறுப்பை இந்த சமுதாயம் கைவிட வேண்டும் , அடியோடு வேர்அறுக்க வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கூற்றிக்கிணங்க முன்பின் தெரியாதவரை கூட அன்போடு ஏற்றுகொள்வது நம் பாரம்பரியம். அனால் நம்மில் ஒருவரான மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டர்வகளை ஒதுக்குவதும், வேற்றுமைபடுத்துவதும் , உதாசீனபடுதுவதும் இன்றைய வழக்காகி விட்டது. இதுவல்ல நம் பாரம்பரியம்.
இவர்கள் மேல் காட்டப்படும் வெறுப்பையும், கசப்பையும், அவர்களின் மரியாதையை மற்றும் கண்ணியத்திற்கு பங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் வன்முறையையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் உண்மைக்கு புறம்பாக சில மருத்துவ வல்லுனர்கள் இப்படி மாறுபட்ட பாலீர்ப்பு கொண்டவர்களை தங்களால் மற்ற முடியும் என்று கூறுவதையும், அதற்காக வின்ஞயானமற்ற மிகவும் ஆபத்தான மருத்துவ முறைகளை கையாளுவதையும் உடனடியாக கைவிட வேண்டும் என்று நாங்கள் கேட்டுகொள்கிறோம்.
இதுபோன்ற செயல்கள் அறிந்தே செய்யபடுவதில்லை.அறியாமையும் பாலீர்ப்பு, பால் அடையாளம் இவைகளை பற்றி போதிய தகவல்கள் இல்லாததுமே இது போன்ற செயல்களுக்கு காரணம் என்று நாங்கள் நினைக்கிறோம். பாலீர்ப்பு என்பது பண்மைபட்டது. இப்படி மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்கள் எப்பொழுதும் நம் சமுதாயத்தில் இருந்திருக்கிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. அவர்களை நம் சமுதாயத்தில் ஒரு அங்கமாக நாம் ஏற்றுகொண்டிருக்கிறோம் என்பதும் உண்மையே.
ஒரு மகன், ஒரு மகள், ஒரு நண்பன், நண்பி என்று இப்படி எங்கள் உறவுகளில் சிலர் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இது எங்களுக்கு இந்த வித்தியாசத்தை புரிந்துகொள்ள ஒரு மனித உருவை குடுக்கிறது. இது எங்கள் அறியாமையை களைந்து மனிதநேயத்துடன் வேற்றுமையில் ஒற்றுமையை காண எங்களுக்கு பேருதவியாக இருக்கிறது.
‘வேர்ல்ட் ஹெல்த் ஆர்க்னைசேசன்’ தன் பாலீர்ப்பு ஒரு நோயல்ல என்று அறிவித்திருந்தாலும், பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளங்கள் அடிபட மனித உரிமை என்று அங்கீகரிக்கப்பட்டாலும், இன்றும் இந்திய உட்பட உலகில் பல இடங்களில் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களின் மீது காட்டப்படும் வெறுப்பு வியாப்பித்து இருப்பது வருந்தகூடிய விஷயம்.
சமீபத்தில் தில்லி உயர்நீதி மன்றம் “வயந்துவந்த இருவருக்கிடையே தனிமையில் நடக்கும் எந்த பால் உறவும்” குற்றமல்ல என்ற தீர்ப்பை வழங்கியது ஒரு வரவேற்கதக்க விஷயம். இதை ஒரு முன்னுதாரணமாக கொண்டு சமுதயாமும் அரசாங்கமும் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை சமமாகவும் கண்ணியத்தோடும் மரியாதையோடும் நடத்துவது மட்டுமில்லாமல் அவர்களுக்கு தரப்பட வேண்டிய அரசியல்சாசன அடிப்படை உரிமைகளையும் தரவேண்டும் என்பது எங்கள் அழுத்தம் திருத்தமான கோரிக்கை. சமுதாயத்தின் வெவ்வேறு அங்கங்களை சேர்த்த பலர் இன்று மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்கள் மீதான வெறுப்பை கண்டித்திருகிறார்கள், புகழ்பெற்ற எழுத்தாளர் விக்ரம் சேத்திலிருந்து நோபெல் பரிசு பெற்ற அமிர்தயா சென் வரை. இவர்களுடன் நாங்களும் இணைந்து இன்று குரல்கொடுக்கிறோம்.
மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களாகிய நாங்கள் இந்த கடிதத்தில் கையெழுத்திடுவத்தின் மூலமாக கிழ்கண்டவைகளை எல்லோருக்கும் அறிவிக்கிறோம்
- மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை அன்போடும் பாசத்தோடும் என்றும் ஆதரிப்போம். அவர்களை புரிந்துகொள்வதன் மூலமாக அவர்கள் எப்படி இருகிறார்களோ அப்படியே அவர்களை ஏற்றுகொள்வோம்.
- அவர்களுக்கு உதவ, தேவையான ஆதரவை தர, பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளங்களை பற்றிய வின்ஞயான தகவல்களை அறிந்து மற்றும் புரிந்துகொள்வோம்.
- அவர்களை அவர்கள் விருப்பத்திற்கு எதிராக திருமணத்திற்கு வற்புறுத்த மாட்டோம்.
- பொதுவாக காணப்படும் எதிர் பாலீர்ப்பிர்க்கும், பொதுவாக காணப்படும் பால் அடையாளங்களுக்கும் அவர்களை கட்டாயமாக மாற்ற முயல மாட்டோம்.
- இது சமந்தமான முறையற்ற மருத்துவ முறைகளை தீவீரமாக எதிர்போம்.
- மீடியாவில் அவர்களை பற்றிய பொய்யான, வேற்றுமைபடுத்துகிற மற்று கிழ்த்தரமான கிளர்சியுட்டும் செய்திகளை எதிர்போம்.
அவர்களுக்கான உரிமையும், மரியாதையையும் இந்த சமுதாயம் மற்றும் அரசாங்கம் வழங்க வேண்டும் என்றும் நாங்கள் தொடர்ந்து வாதிடுவோம்
ஆங்கில மூலம் கீழே. பக்கத்தின் இறுதியில் உள்ள படிவத்தில் கையெழுத்திடவும். எங்கள் மனமார்ந்த நன்றி!