கவிதை: காதலின் ஆற்றலால் (Tamil translation of Vikram Seth’s Through love’s great power)
Image courtesy: Huffington Post
ஆங்கில மூலம்: விக்ரம் சேத்
தமிழாக்கம்: அரவிந்த்
பிழை, நயம், சீர் திருத்தம்: பூங்கோதை
ஓலி வடிவம்: பிரவீன் ராஜேந்திரன்
காதலதன் ஆற்றலில் பன்மையிழந்து,
உடல், பொருள் ஆவியும் பின்னிப்பிணைந்து,
ஒருமையாய் காதலுற் றுணையிருந்து,
சுதந்திர ஆழியில் மூழ்கித்திளைத்து,
அல்ல(து)திளைப்பாலேயே தடைதகர்த்து,
இன்புறுதலே இயல்பான நற்செயல்!
முன்பளித்த நீதியை உடைத்தெறிந்து,
நலிந்தோரை வீதியில் துகிலுரித்து,
இணைந்திட்ட ஈருயிர் பறித்தெரித்து,
விலங்கிட்டு ஈனமாய்க் கதறவைத்து,
நயமின்றி கீழ்த்தரமும் கொண்டிசைந்து,
வதைத்தலே இயல்பிலிலாத் தீஞ்செயல்!
ஒலி வடிவில் – Audio version
அருமையான மொழிபெயர்ப்பு. மனிதர்களை இனம், மொழி, சாதி, சமயம், நிறம், பாலினம், பாலீர்ப்பு போன்றவற்றால் பாரபட்சம் செய்வதே இயல்பிலிலாத் தீஞ்செயல் என்பதை ஆங்கில மூல கவிதையை விட தமிழாக்கம் அழகாய் தெளிவுபடுத்தியுள்ளது. வாழ்த்துக்கள்.
பிரவீன் இராஜேந்திரன் அவர்களின் உச்சரிப்பு தமிழும் காதலும் துளிர் விட்டு வளரும் நம்பிக்கையை தருகிறது. நன்றி தோழரே!
Ungal paaratukkum, ookathirkum mikka nanri, Kannagi Ilamalar.
Awesome translation of Vikram Seth’s poem by Aravind and narration by Praveen! Sincere thanks to all of those involved in this labour of love…